Posts Tagged ‘சக்தி சக்திதாசன்’

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (294)

அன்பினியவர்களே ! அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் உங்களோடு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்கிறேன். தேர்தல் ! ஜனநாயகக் கோட்பாடுகளின் அடித்தளம் தேர்தல் என்றால் அது மிகையில்லை. ஆனால் இந்தக் கருத்துக்கு வலுச்சேர்ப்பது அத்தேர்தலின் நடைமுறைப்படுத்தலே. நான் ஈழத்தை விட்டுப் புலம் பெயர்ந்த போது எனக்கு வயது 18 இன்றோ 62 எனும் முதுமையின் வாசலில் நுழைந்து விட்டேன். நான் ஈழத்தில் அன்று பார்த்த தேர்தல்களுக்கும், இன்று இங்கிலாந்திலே பார்க்கும் தேர்தல்களுக்கும் பல வேறுபாடுகள் உண்டு. அன்றைய எனக்கு தேர்தல் என்பது ஒரு ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (293)

சக்தி சக்திதாசன் அன்புள்ளம் கொண்டவர்களே ! அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்வடைக்கிறேன். இதோ 2019ஆம் ஆண்டு சித்திரைத் திருநாள் வந்துவிட்டது.  தமிழ்ப் புத்தாண்டு பிறந்துவிட்டது என்று குதூகலமாக வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்பவர்கள் ஒரு புறமும், இது தமிழர்களின் புத்தாண்டேயல்ல. தமிழர்களின் புத்தாண்டு தை முதல் நாளே. வேண்டுமானால் இதைச் சித்திரைத் திருநாள் என்று கொண்டாடுங்கள். ஆனால் இது தமிழர்களின் புத்தாண்டு அல்ல என்று வாதிடுவோர் ஒருபுறமாகவும் நின்று வாதாடும் ஒரு காலக் கட்டத்தில் நாம் இந்த நாளைக் கடந்து செல்கிறோம். நான் எனது பால்ய பருவத்தைப் பின்னோக்கிப் பார்க்கிறேன். அப்போது ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (292)

-சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே அன்பான வணக்கங்கள். இம்மடலை வரைந்து கொண்டிருக்கும் இந்நாள் ஏப்பிரல் முதலாம் திகதி. ஆம் "முட்டாள்கள் தினம் அல்லது ஏப்பிரல் பூல்ஸ் டே " ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (291)

அன்பினியவர்களே ! மிகவும் நீண்ட ஒரு இடைவேளைக்குப் பின்னால் உங்களுடன் மடல் மூலம் உறவாட விழைகிறேன். காலம் என்பது கண்மூடித் திறப்பதற்குள் கனவேகத்தில் ஓடி மறைகிறது . எதற்காக இந்த நீண்ட இடைவேளை ? எங்கே சக்தி சென்றிருப்பார் ? என்று உங்களில் சிலர் எண்ணியிருக்கலாம் , ஓ ! அதுகூட எனது நப்பாசையோ ? இருந்தாலும் இடைவெளிக்கு ஒரு விளக்கம் கொடுக்க விரும்புகிறேன். பெப்பிரவரி 4ம் தேதி முதல் மார்ச் 5ம் தேதி வரை எனது வருடாந்த சென்னை விஜயத்திலிருந்தேன். மார்ச் 5ம் தேதி திரும்பியதும் ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (290)

-சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே! அன்பான வணக்கங்களுடன் இவ்வார மடலுடன் உங்களிடையே மனந்திறக்கிறேன். நாளொரு மேடை பொழுதொரு வண்ணமாக இங்கிலாந்து அரசியல் மேடையில் பல நிகழ்வுகள் நாள்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இவ்வரசியல் நிகழ்வுகளில் பார்வையாளர்களாக மர்ந்திருக்கும் மக்களின் வாழ்வில் இவைகள் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தப் போகின்றன என்பதை அனைவரும் புரிந்து கொண்டிருக்கிறார்களா? என்பது கேள்விக்குறியே! நடைபெறும் நிகழ்வுகள் அதனால் ஏற்படப் போகும் தாக்கங்கள் இங்கிலாந்தின் அரசியல் வரலாற்றுப் புத்தகத்தில் சரித்திர முக்கியத்துவம் நிறைந்த அத்தியாயமாக எழுதப்படப் போகிறது என்பதுவே உண்மை. ஜக்கிய இராச்சியம் ஜரோப்பிய ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (288)

அன்பினியவர்களே ! இந்தப் புத்தம் புதிய 2019ம் வருடத்தில் உங்களுடன் கலந்துரையாட விழையும் முதலாவது மடலிது. 2018 அவசரமாக ஓடி தன்னை சரித்திரப் புத்தகத்தில் மூடப்பட்ட அத்தியாயம் ஆக்கிக் கொண்டது. 2019 புதிதாகப் பிறந்ததோர் குழந்தை போன்று எம்மிடையே தவழத் தொடங்கியுள்ளது. 2018 தன்னோடு முடிக்காமல் மூடிக் கொண்ட பல விடுகதைகளுக்கான விடைகளை இந்த 2019ல் கண்டெடுக்கும் ஆவலுடன் நாம் பலரும் மிகவும் முனைப்புடன் இயங்க ஆரம்பித்துள்ளோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்றார்கள் எம் முன்னோர்கள். இந்த வழிதான் என்ன ? இதுவரை அப்படிக் கண்டுபிடிக்க ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (288)

-சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே ! அன்பான வணக்கங்கள். இங்கிலாந்தின் அரசியல் மேடையில் தினமொரு நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கும் இவ்வாரத்தில் உங்களுடன் கருத்தாட விழைகிறேன். கடந்த சுமார் இரண்டரை வருடங்களாக பலதடவைகள் உங்களுடன் ப்றெக்ஸிட் எனும் நிகழ்வைப் பற்றிக் கருத்தாடியிருக்கிறேன். இந்நிகழ்வு மெதுவாக உருண்டு. உருண்டு இன்று இங்கிலாந்தின் அரசியல் சதுரங்கப்பலகையில் மிகவும் முக்கியமான ஒரு கட்டத்துக்குள் நுழைந்திருக்கின்றது. இங்கிலாந்தின் எதிர்கால சுபீட்சத்தையே நிர்ணயிக்கும் ஒரு முக்கிய கேந்திர நிலையை வந்தடைந்திருக்கின்றது. இங்கிலாந்துப் பிரதமரான தெரேசா மே அவர்களின் ரசியல் வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைத்து விடுமோ எனும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (287)

அன்பினியவர்களே! அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு வாரத்தில் மற்றொரு மடலுடன் அன்பு வாசகர்களுடன் கருத்தாட விழைகிறேன். காலம் காற்றாகக் கரைந்து 2018ஆம் ஆண்டு இறுதியை நோக்கி அவசரமாய் ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த இரண்டரை வருடங்களாக இங்கிலாந்து முழுமையாகத் தன்னை "ப்ரெக்ஸிட்" எனும் புதை சேற்றுக்குள் புதைத்துக் கொண்டு செல்கிறது. இந்த "ப்ரெக்ஸிட்" எனும் சொல்லின் பின்னால் இங்கிலாந்து நாட்டில் ஏற்படப்போகும் சிக்கல்களின் ஆழத்தை"ப்ரெக்ஸிட்" தேவை என்று வாக்களித்த மக்கள் முழுமையாக அறிந்து கொண்டிருக்கிறார்களா? என்பது சந்தேகமே! 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி ஐக்கிய இராச்சியம் உத்தியோகபூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது என்பது தவிர்க்கப்படமுடியாத உண்மை. மிக விரைவாக அக்காலக்கெடுவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் இங்கிலாந்தின் முன்னால் ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . .(286)

அன்பினியவர்களே! அன்பான வணக்கங்கள். இந்த இனிமையான தீபாவளித் திருநாளைக் கொண்ட இவ்வினிய வாரத்தில் உங்களிடையே இம்மடல் மூலம் உறவாட விழைவதில் மகிழ்கிறேன். எத்தனையோ எதிர்பார்ப்புகளில் தீபாவளியும் ஒரு மகிழ்ச்சியான எதிர்பார்ப்பே. வாழ்வின் அனைத்து இடர்களும் நீங்கி மகிழ்வான வாழ்வை நோக்கிப் போகப்போகிறோம் எனும் நம்பிக்கை இத்தகைய திருநாட்களில் மக்களுக்கு ஏற்படுவது சகஜம். புத்தாடைகள் வாங்கிப் பட்டாசுகள் வெடித்து ஆடம்பரமான கேளிக்கைகள் இடம்பெறும் அதேசமயத்தில் நாட்டில் நிலவும் சமகால நிகழ்வுகளையும் நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய தேவையிருக்கிறது. விரும்பியோ, விரும்பாமலோ நாட்டில் நடக்கும் பல நிகழ்வுகளுக்கு நாம் முகம்கொடுக்க வேண்டிய தேவையிருக்கிறது. இங்கிலாந்தில் இவ்வாரம் ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (285)

அன்பினியவர்களே! அன்பினுமினிய வணக்கங்கள். காலத்தின் ஓட்டத்தோடு போட்டி போட்டுக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் எமக்கு வாரங்கள் அவசரமாய்ப் புரண்டு கொண்டு ஓடுவது தெரிவதில்லை/ இதோ மற்றொரு மடலில் உங்களுடன் உறவாட விழைந்து இம்மடல் வரைகின்றேன். இந்த ஒரு வாரத்தில் இங்கிலாந்தில் எத்தனையோ நிகழ்வுகள் நிகழ்ந்து விட்டன. சில அனைவராலும் வரவேற்கப்பட்டவை, மற்றும் சில அனைவராலும் வெறுக்கப்பட்டவை வேறு சிலவோ கலவையான உணர்வுகளைக் கொண்டவை. முதலாவதாக இங்கிலாந்தின் பிரதமர் திரேசா மே அவர்களின் நிலையை எடுத்துப் பார்த்தோமானால் அவரது எதிர்காலம் சிக்கல் மிக்க கேள்வியாகவே இருக்கிறது. “ப்ரெக்ஸிட்" எனும் ஒரு பெரிய சுமையை எப்போது ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (284)

அன்பினியவர்களே! அன்பான வணக்கங்கள். இதோ மற்றொரு வாரத்தில் உங்களுடன் மடல் மூலம் மனந்திறக்க விழைகிறேன். காலத்தின் வேகம் சூறாவளிக் காற்றின் வேகத்தைப் போல அதிவேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் வேகத்திற்கேற்ப நாடுகளின் அரசியல் நிலைப்பாடுகளும் மாற்றமடைந்து கொண்டிருக்கின்றன. அன்றைய நாட்டின் நடப்புகள் இன்றைய நாட்டின் நடப்புக்கு ஏற்றதாகக் கருதப்படாததால் சமுதாய நிலைப்பாடுகளும் காலத்திற்கேற்பத் தமது போக்குகளை மாற்றிக் கொண்டே செல்கின்றன. இது நாட்டிற்கு நாடு அந்தந்த நாட்டின் கலாசார நிலைப்பாடுகளை ஒட்டி வேறுபடுகின்றதேயொழிய அடிப்படையில் அனைத்தும் காலத்தின் மாற்றங்களே! இங்கிலாந்தில் இன்று அரசியல்களம் மிகவும் ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (283)

சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே ! அன்பான வணக்கங்கள். சில வார இடைவெளியின் பின்னால் மீண்டும் உங்களுடன் மடல் மூலம் உறவாட விழைகின்றேன். சிறிய விதையாக மண்ணில் விழும் விதை சீறிய செடியாக, பெரும் செடியாக , மரமாக பல கிளைகளுடன் வளர்ந்து விடுகிறது. அம்மரக்கிளைகளில் இருக்கும் இலையொன்று தான் உருவாகக் காரணமாக இருந்த வேர்களைத் தேடி ஒரு பயணம் மேற்கொண்டால் எப்படி இருக்கும்? அது போன்றதொரு அனுபவத்துடன் கூடிய ஒரு பயணத்தை நான் மேற்கொண்டதே எமது சில வார இடைவெளிக்குக் காரணம். ஆமாம் நான் பிறந்து தவழ்ந்து ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (282)

சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே ! அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு வாரத்தில், அடுத்தொரு மடலுடன் உங்களிடையே உலவ வருகிறேன். ஓடி,ஓடிக் களைக்கவில்லை உலகம், பாடிப் பாடிச் சலிக்கவில்லை குயில், பேசிப் பேசி ஓயவில்லை கிளி, வீசி, வீசி ஓயவில்லை காற்று, பொழிந்து, பொழிந்து வற்றவில்லை மழை, ஒளிர்ந்து, ஒளிர்ந்து அழியவில்லை ஆதவன், தேய்ந்து, தேய்ந்து தன்னை முழுவதுமாய் முடிக்கவில்லை நிலா. ஆம் இவையெல்லாம் எமக்கு இயற்கையன்னை தந்த பரிசு. இவைகளெல்லாம் தமக்களிக்கப்பட்ட கடமைகளை காலத்தோடு நிறைவேற்றிக் கொண்டேயிருக்கின்றன. யாருக்கு தம்முடைய தேவை இருக்கிறதோ? அன்றி ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (281)

சக்தி சக்திதாசன்   அன்பினியவர்களே ! அன்பான வணக்கங்களுடன் மீண்டுமொரு வாரத்தில் மடல் வரைய விழைகின்றேன். இம்மடல் வரையும் நாளான 14ம் திகதி செவ்வாய்க்கிழமை இங்கிலாந்தில் காலையில் மீண்டும் ஒரு பரபரப்பு, பதைபதைப்பு. காலைவேளையில் தமது கடமைகளைச் செய்யச் சென்று கொண்டிருந்த ஏதுமறியா அப்பாவி மக்கள் காயப்பட்ட ஒரு கனத்த காலையாகி விட்டது . மனதை ஆணவத்திற்கும், மிருக உணர்ச்சிக்கும் விலையாக்கி விட்ட மிலேச்சத்தனம் கொண்ட சிலருள் ஒரு கயவன் தான் மோட்டார் கார் கொண்டு நடைபாதையில் சென்று கொண்டிருந்தோரின் மீது மோதியதில் அப்பாவியான சைக்கிள் பிரயாணிகள் ... Full story

கலைஞர் அஞ்சலி

கலைஞர் அஞ்சலி
கலைஞர் என்றோர் ஓவியம் கலைந்தது இன்று அறிவீரோ ? கண்ணீர் சுரக்கும் வேளையிலே கவிதை வழியுது உள்ளத்திலே தமிழகம் தவிக்குது துயரிலே தமிழன்னை மைந்தன் மண்ணிலே குறளமுதம் தந்த தமிழ்த் தலைவன் குரல் இன்னும் மனதிலே மறையாமல் அரசியல் பார்வையில் பார்க்கவில்லை அன்னைத் தமிழைத் தாலாட்டிய தமிழுக்குச் சொந்தக்காரனாய் இந்தத் தனயன் எத்தனை அழகுற மொழி செய்தான் தமிழை ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.