Posts Tagged ‘சங்க இலக்கியம்’

(Peer Reviewed) சங்க இலக்கியத்தில் மணச் சடங்குகள்

முனைவர் க. இராஜா இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி காட்டேரி, ஊத்தங்கரை, கிருட்டிணகிரி (மா.) சங்க இலக்கியத்தில் மணச் சடங்குகள் சடங்கு நிகழ்த்தப்படும் இடம், காலம், சூழல், தேவை, நோக்கம் போன்ற காரணங்களை முன்வைத்து அவற்றின் தன்மைகள் வேறுபடுகின்றன. சடங்குகள் செயல், நிகழ்த்துதல், நனவு, தன்னார்வம், கருவி, பகுத்தறிவு, கூட்டுத்தன்மை, சமூகம், சமூக உறவுகள், புனைவு, குறியீடு, வெளிப்பாடு, நடத்தை, அழகியல், புனிதம் ஆகியவற்றோடு தொடர்புடையதாக அமைகின்றது. சடங்குகள் வாழ்க்கை வட்டச் சடங்குகள், வளமைச் சடங்குகள், வழிபாட்டுச் சடங்குகள், திருவிழாச் சடங்குகள், மந்திரச் சடங்குகள், பிற சடங்குகள் என ... Full story

சங்ககால சமுதாய ஆதிக்கப் போக்கும்….சித்தரிப்பும்…..

முனைவர் செ. பொன்மலர், உதவிப்பேராசிரியர், விவேகானந்தா கல்லூரி, அகஸ்திஸ்வரம், அறிமுகம் "பெண்மையிலும் மென்மையுண்டு மென்மையிலும் மேன்மையுண்டு கண்டிடுவார் யாரோ கண்கலங்க வைப்பது கண்ணீரோ...." மாதர் தம்மை  இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்று முழங்கினார் நம் தேசக்கவி பாரதியார். பெண்ணுக்கு உரிமைகள் தரப்பட வேண்டும் என்ற குரலை ஓங்கி ஒலிக்கச் செய்தார் பெரியார். பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில் மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற் கொம்பே என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா என்று பெண்பிறப்பின் மகத்துவம் பேசினார் கவிமணி. இன்னும் பலரும் பெண்ணின் பெருமை குறித்துப் பேசியுள்ளனர். நாகரிகம் தோன்றிய காலத்தில் ... Full story

கலித்தொகை

எஸ். கருணானந்தராஜா (யுகசாரதி)-பாரதிஇலக்கியச்செல்வர். சங்க நூல்களில் நற்றிணை, குறுந்தொகை, அகநாநூறு, புறநாநூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை ஆகியவற்றை எட்டுத்;தொகை நூல்களுள் அடக்குவர். அகவற்பா, விருத்தப்பா(ஆசிரியம்), வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பாவென்னும் ஐந்து பாவினங்களுள் கலிப்பாவென்னும் பாவகையைச் சார்ந்து பல புலவர்களால் இயற்றப்பட்ட செய்யுள்களின்; தொகுப்பாயமைந்தது கலித்தொகையாகும். கலித்தொகையும் பரிபாடலும் இசைகலந்து எடுத்துப் பாடப்படக்கூடிய இன்னிசைப் பழம்பாட்டுவகையினவென்று இசைவல்லார் கூறுவர். கலித்தொகை பண்டைய தமிழரின் அகவாழ்வைப் படம்பிடித்துக் காட்டும் அகத்திணைநூலாகும். பாலை, குறிஞ்சி, மருதம் முல்லை, நெய்தல் ஆகிய ஐவகை நிலங்களிலும் வாழ்ந்த பண்டைத்தமிழரின் காதல் வாழ்வுபற்றிய ... Full story

சங்க இலக்கியங்களில் எதிரொலி

  செ. முத்துமாரி,முனைவர் பட்ட ஆய்வாளர்,தமிழ் உயராய்வு மையம், ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி – 8. முன்னுரை மாறாத சுவையும் தோய்ந்த இன்பமும் அளவின்றிச் சுறப்பன சங்கப் பாடல்கள். அவை பழந்தமிழர் வாழ்வை படம் பிடித்தாற் போல் கண்ணெதிரில் நிறுத்தி காட்டும் காலக்கண்ணாடியாக அமைத்துள்ளது. உற்றுநோக்கி, அதன் சிறப்பை, ஆற்றலை, நுட்பமான நிகழ்வுகளைத் தம் இலக்கியங்களில்  பதிவு செய்தனர். சங்கப் புலவர்களின் கூர்மையான  கவனத்திற்கு உட்பட்டு பதிவு செய்யப்பட்ட ஒலி வகையுள் ஒன்றான எதிரொலிக்கும் மனித குரல் வழி எழும் எதிரொலி பற்றி ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது. எதிரொலி “echo  என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழில்       ... Full story

திருமுருகாற்றுப்படையில் முருகனின் சிறப்பும் ஆறுபடை வீடுகளும்

அ.சரண்யா, முனைவர்பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி,தமிழ்ப் பல்கலைக்கழகம், முனைவர் ச.கவிதா, பேராசிரியர்  & நெறியாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி,தமிழ்ப் பல்கலைக்கழகம், முன்னுரை பத்துப்பாட்டில் முதலாவதாகச் சிறப்பிக்கப்படுவது திருமுருகாற்றுப்படை. திருமுருகு என்ற சொல் முருகப்பெருமானை உணர்த்தும். முருகன் என்ற சொல்லுக்கு அழகு, இளமை, மணம் எனப் பொருள் பல உண்டு. ஆற்றுப்படை என்பது வழிப்படுத்துவது அல்லது வழிகாட்டல் என்பர். முருகப்பெருமான் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் தலங்களுக்குச் சென்று அப்பெருமானின் அருள்பெற்ற பக்தன் முருகப் பெருமானின் அருள் வேண்டி நின்ற ஒருவனுக்கு வேலன் வீற்றிருக்கும் இடங்களைக் கூறி முருகனின் பேரருளினையும் அழகு திருமேனிப் பொலிவினைச் ... Full story

தொல்தமிழர் கொடையும் மடமும்

முனைவர் ம. தமிழ்வாணன்,முதுநிலை ஆய்வு வல்லுநர்,செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்,தரமணி, சென்னை – 113 செவ்விலக்கியங்களில் பல வள்ளல்கள் பற்றிய குறிப்புகள் பரந்த அளவில் இடம் பெற்றுள்ளன. அவர்கள் வாழ்ந்த காலத்தைக் கணக்கில் கொண்டு வள்ளல்கள் முதலேழு, இடையேழு, கடையேழு என்று பகுத்துள்ளனர். ஆனால் முதலேழு மற்றும் இடையேழு வள்ளல்களுடைய பெயர்கள் அவ்வளவு எளிதாக யாருக்கும் தெரிந்திருப்பதில்லை, கர்ணனை தவிர்த்து. அவர்களைப் பற்றியத் தரவுகள் கூட மிகவும் அரிதாக இருக்கின்றன. பழங்காலத்தில் ஈகையையும் கொடையையும் ஒன்றாகப் பார்த்தனர். உண்டாட்டுக் கொடையென (தொல். பொ 58). இல்லான் கொடையே கொடைப்பயன் (நாலடி,65). என்கிறது பாடல். ... Full story

பேராசிரியர் ச. அகத்தியலிங்கனாரின் “சாகாவரம் பெற்ற சங்கப் பாடல்கள்”

முனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர்  - தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். பேராசிரியர் ச. அகத்தியலிங்கனார் தமிழ்மொழிக்குச் செய்துள்ள பணிகள் ஏராளமானதாகும். மொழியியல் ஆய்வுகளில் தன்னிகரற்று விளங்கினாலும். மொழியியல் நோக்கில் சங்க இலக்கியத்தையும் அணுகி, உலக இலக்கியங்களில் மிக உன்னதமான நிலையினைத் தமிழ்மொழி இலக்கிய, இலக்கணங்கள் பெற்றுள்ளதனை ஆய்வுவழி வெளிப்படுத்தியுள்ளார். பேராசிரியர் அகத்தியலிங்கனார் சங்க இலக்கியங்களின் செவ்வியல் தன்மைகள் குறித்துப் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டுள்ளார். அவற்றுள், “சாகா வரம் பெற்ற சங்கப் பாடல்கள்” என்னும் ஆய்வுநூலில் பின்பற்றியுள்ள ஆய்வு நெறிகள் குறித்து இவண் விளக்கப்படுகின்றது. தமிழ் மொழியில் இடம்பெற்றுள்ள இலக்கியங்களுள் சங்க இலக்கியங்கள் தனித்திறம் பெற்றவையாகும். மூவாயிரம் ... Full story

அகநானூறும் பாலையின் முப்பொருளும்

முனைவர் ம. தமிழ்வாணன் உலகில் செம்மொழிகளாகக் கருதப்படும் மொழிகளில் முதன்மையானது தமிழ். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம், சீனம், ஹீப்ரு போன்ற பிற செம்மொழிகளும் போற்றத்தக்கன. இருப்பினும் தமிழ்மொழியே தனித்துவம் மிக்கது. மிக நீண்ட காலத்திற்கு முன்பே தரப்படுத்தப்பட்டது. எந்தமொழியிலிருந்தும் கடன் வாங்காத வேர்ச்சொற்களின் வளமுடையது. எக்காலத்தும் உயிர்த்துடிப்புடைய இளமைக்குன்றாத இலக்கிய வளம் கொண்டது. தமிழ்மொழி உலகிற்கு அளித்தக் கொடைகள் ஏராளம் எனலாம். அந்த வகையில் தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் பேறுபெற்றுத் திகழ்கின்றன. பண்டைத் தமிழர் வாழ்க்கையை திணையின் அடிப்படையில் பிரித்துக் கொண்டனர். இவர்களிம் வாழ்வு அகம், புறம் சார்ந்த வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு ... Full story

சங்க இலக்கியத்தில் அறிவியல் செய்திகள்

 முனைவர் ப. ஜெயகிருஷ்ணன், பேராசிரியர், தமிழ்த்துறை, கேரளப் பல்கலைக்கழகம், காரியவட்டம், திருவனந்தபுரம், 695 581. முன்னுரை சங்க இலக்கியம் சங்க காலத் தமிழர்களின் வாழ்வியல் முறைகளையும் அவர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த வாழ்க்கை முறையினையும் எடுத்துரைக்கும் காலக் கண்ணாடியாகவும் அழியாச்சான்றாகவும் விளங்குகின்றது. பழந்தமிழர் வாழ்வில் இடம் பெற்ற காதல் , மறம், புகழ் ஆகிய மூன்றும் ஆராயப்பட்ட அளவிற்கு அறிவியல் செய்திகள் ஆராயப்படவில்லை. அவை அறிவியல்  பூர்வமகாக ஆரயப்பட்டால் பழந்தமிழரின் ஆழமான அறிவியல் அறிவை அறிந்து கொள்ள  முடியும். சங்க இலக்கியத்தில் தாவரங்கள் பற்றி ஆராய்ந்த அறிஞர் ... Full story

கவனம் பெறாத உ.வே.சா. வின் பாடத்திட்ட விளக்கவுரை

கவனம் பெறாத உ.வே.சா.வின் பாடத்திட்ட விளக்கவுரை முனைவர் இரா.வெங்கடேசன் , இணைப்பேராசிரியர், இந்திய மொழிகள் மற்றும்  ஒப்பிலக்கியப் பள்ளி , தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 10. 1937 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த பாரதீய சாகித்திய பரிஷத்தின் மாநாட்டில் மகாத்மா காந்தி அவர்கள் தலைமை வகித்தபோது உ.வே.சாமிநாதையர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அதைக் கேட்டு மகிழ்ந்த காந்தியடிகள் தமிழின் வடிவமாகவே இருக்கும் இவர்கள் திருவடியில் இருந்து தமிழ் பயில வேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டாகிறது. அந்த வாய்ப்பு எப்போது கிடைக்குமோ என்று சொன்னாராம். தமிழ் படித்த கற்றோரையும் மற்றோரையும் ஈர்த்தவர் உ.வே.சாமிநாதையர் அவர்கள். ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.