Posts Tagged ‘சற்குணா பாக்கியராஜ்’

Page 1 of 212

கம்புள்

கம்புள்
சற்குணா பாக்கியராஜ்   “வெண் நுதல் கம்புள் அரிக் குரல் பேடை தண் நறும் பழனத்துக் கிளையோடு ஆலும்’” ஓரம்போகியார், ஐங்குறு நூறு, 85: 1-2 சுருக்கமான உரை: வெண்மையான நெற்றியையும் விட்டு விட்டு ஓசை எழுப்பும் குரலையும் உடைய பெண் கம்புள், தன் சுற்றத்தோடு குளிர்ந்த பொய்கையிலிருந்து மகிழ்ந்து விளையாடும்.. நாமக் கோழிகள் கூட்டம் சங்க இலக்கியத்தில் "கம்புள்" என்ற பறவையின் பெயர் நான்கு பாடல்களில் காணப்படுகிறது ... Full story

ஹம்மிங் பறவைகள் (Hummingbirds)

ஹம்மிங் பறவைகள் (Hummingbirds)
-சற்குணா பாக்கியராஜ் உலகத்தில் 330 வகை ஹம்மிங் பறவைகள் உண்டு. இவை வட அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் வாழ்கின்றன. இவைகளில் ஐந்து சதவிகிதம் மெக்ஸிக்கோவின் வட பகுதியில் காணப்படுகின்றன. இந்தப் பறவைகள் பறக்கும் போது சிறகுகள் "ஹம்" என்ற ஒலியை எழுப்புவதால் "Hummingbirds” என்ற பெயரைப் பெற்றுள்ளன. உலகத்திலுள்ள மிகவும் சிறிய பறவை, கியூபாவில் காணப்படும் Bee Hummingbird.  இதன் எடை: 1/15 of an ounce நீளம்: அலகிலிருந்து வால் வரை- 1”. இதன் முட்டை ... Full story

மீன் கொடுத்துப் பெண் தேடுதலும் உணவு ஊட்டுதலும்

மீன் கொடுத்துப் பெண் தேடுதலும் உணவு ஊட்டுதலும்
சற்குணா பாக்கியராஜ் இனப் பெருக்கக் காலத்தில் பல ஆண் பறவைகள் தங்கள் துணைப் பறவைகளுக்கு உணவு ஊட்டிப் பராமரிப்பதை நம்மில் பலரும் பார்த்திருக்கலாம் அல்லது கேள்விப்பட்டிருக்கலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்கக் காலப் புலவர் முக்கல் ஆசான் நல்வெள்ளையார் சிவந்த வாயையுடைய ஆண் கடல் காகம் தன்னுடைய கடுஞ் சூல் பேடைக்காக அயிரை மீனைக் கழியில் தேடுவதைக் கீழ்க் கண்டவாறு வர்ணிக்கிறார். "கடல்அம் காக்கைச் செவ் வாய்ச் சேவல் படிவ மகளிர் கொடி கொய்து அழித்த பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒருசிறை ... Full story

மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) 12

லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்   அவன் பேசி முடித்த போது அவன் உடல் மாறி வெளிச்சத்தால் நிரம்பியது. அவனுடைய குரல் வானிலிருந்து வருவதைப் போல் உரத்த சத்தத்தோடு கேட்டது. “எல்லா மனிதர்களும் தங்கள் தேவைகளைத் தாங்கள் பூர்த்தி செய்து கொள்வதால் மட்டும் வாழ்வதில்லை, அன்பினால் வாழ்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். “அந்தச் சிறுமிகளின் தாய்க்குத் தன் குழந்தைகளுக்கு எது தேவை என்பது தெரிவிக்கப் படவில்லை. அது போல் அந்தச் செல்வந்தனுக்கும் எது தேவை என்று அறிய முடியவில்லை. ... Full story

இந்த வார வல்லமையாளர் (268)

இந்த வார வல்லமையாளர்!    இவ்வார வல்லமையாளராக எழுத்தாளர் சற்குணா பாக்கியராஜ் அவர்களை தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். மொழியியல் மற்றும் பறவைகள் ஆய்வில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள இவரது கட்டுரைகள் மிகுந்த வரவேற்பை வல்லமை வாசகர்களிடம் பெற்றுள்ளன. இவரை வாழ்த்திய முனைவர் ராஜம் "இவருடைய கட்டுரைகளின் தனித்தன்மை என்னவென்றால் … 'சங்கப்பாடல்களில் பறவைகள்' என்று வெறும் விவரிப்புக் கட்டுரையாக (descriptive essay) எழுதாமல் … அந்தப் பாடல்களில் காணும் செய்திகளுக்கும் பறவையியலில் கூறப்படும் செய்திகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அலசி எழுதுவது. இவருடைய கட்டுரைகளை ஊன்றிப்படித்தால் சங்கப்பாடல்களில் வலம்வரும் ... Full story

சங்க இலக்கியத்தில் ஒளவையார் வர்ணித்திருக்கும் “குரீஇயினம்”

சங்க இலக்கியத்தில் ஒளவையார் வர்ணித்திருக்கும் “குரீஇயினம்”
-சற்குணா பாக்கியராஜ்                “------------------------------------பாரி பறம்பின் நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி, முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு இரை தேர் கொட்பின ஆகி, பொழுது படப் படர் கொள் மாலை படர்தந்தாங்கு” (ஒளவையார், அகநானூறு: 303: 10-15) இந்தப் பாடலில் ஒளவையார், “பாரியின் பறம்பு மலையிலிருந்து காலை நேரத்தில் குருவிக்கூட்டம் வரிசையாகப் பறந்து, மடிந்திருக்கும் பின்பகுதியை உடைய செந்நெல்லைக் கொண்டுவருவதற்காக இரைதேடி ஒன்று சேர்ந்து இங்கும் அங்குமாகச் சுற்றி, வருத்தம் கொள்ளும் மாலை நேரத்தில், திரும்பிவந்து படர்ந்து நிற்கின்றன” என்கிறார். மேற்கண்ட பாடலில் புலவர் பறவைகள் இரைதேடும் முறையை மட்டும் வர்ணித்துள்ளார். பறவைகளின் ... Full story

மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) 12

 லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ் அவன் பேசி முடித்த போது அவன் உடல் மாறி வெளிச்சத்தால் நிரம்பியது. அவனுடைய குரல் வானிலிருந்து வருவதைப் போல் உரத்த சத்தத்தோடு கேட்டது. “எல்லா மனிதர்களும் தங்கள் தேவைகளைத் தாங்கள் பூர்த்தி செய்து கொள்வதால் மட்டும் வாழ்வதில்லை, அன்பினால் வாழ்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். “அந்தச் சிறுமிகளின் தாய்க்குத் தன் குழந்தைகளுக்கு எது தேவை என்பது தெரிவிக்கப் படவில்லை. அது போல் அந்தச் செல்வந்தனுக்கும் எது தேவை என்று அறிய முடியவில்லை. ஒருவருக்கும் மாலை வரும் ... Full story

மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) 11

லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்   சைமனும், மெட்ரீனாவும் தாங்கள் இதுவரையிலும் யாருக்கு உணவும், உடையும், அடைக்கலமும் கொடுத்திருந்தனர் என்று உணர்ந்த போது அளவில்லாத ஆச்சரியமும், மகிழ்ச்சியுமடைந்து கண்ணீர் விட்டனர். மைக்கேல் மேலும் தொடர்ந்து “நான் மனிதனாகித் தனியாகவும் நிர்வாணமாகவும் விடப்பட்டேன். அது வரையிலும் மனிதனுடைய தேவைகளும், பசி பட்டினி, குளிர் ஒன்றும் அறியாதவனாக இருந்தேன். நான் குளிரில் உறைந்து அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்ற போது எதிரில் ஒரு சிறிய தேவாலயத்தைக் கண்டேன். அங்குச் சென்ற போது ... Full story

மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) 10

  லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்   அந்தப் பெண்ணும் சிறுமிகளும் போன பின்பு மைக்கேல் தன் இருப்பிடத்திலிருந்து எழும்பி சைமனையும், மெட்ரீனாவையும் வணங்கி, “நான் இப்போது உங்களிடமிருந்து விடை பெறுகிறேன். இறைவன் என்னை மன்னித்து விட்டார். இத்தனை ஆண்டுகளும் எனக்கு உணவு, உடை, தங்க இடம் கொடுத்ததற்காக மிகவும் நன்றி. நான் ஏதாவது தவறுகள் செய்திருந்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்” என்றான். மைக்கேல் மேலிருந்து வெளிச்சம் பிரகாசிப்பதை கண்ட சைமன் தன் இருப்பிடத்திலிருந்து எழும்பி, “மைக்கேல், நீ சாதாரண மனிதனல்ல. இங்கு உன்னைத் தங்க ... Full story

மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) 9

By லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்   அந்தப் பெண், தன்னிடம் சிறுமிகள் வந்து சேர்ந்ததை விவரித்தாள். “ஆறு வருடங்களுக்கு முன்பு, ஒரே வாரத்தில் இவர்கள் பெற்றோர் இறந்து விட்டனர். தந்தை மரம் வெட்டுபவன். ஒரு நாள் மரம் வெட்டும் போது அவன் மேல் மரம் விழுந்து வயிறு நசுங்கி விட்டது. உடலை வீட்டிற்க்குக் கொண்டு வரும் முன்பே அவன் உயிர் பிரிந்து விட்டது. ஊரார் அவனை அடக்கம் பண்ணினர். மூன்று நாட்களுக்குப் பின் அவன் மனைவி இந்த இரட்டைக் குழந்தைகளைப் பெற்றாள். அவள் மிகவும் ஏழை. அவளுக்கு உற்றார், ... Full story

மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) (8)

லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ் வருடங்கள் வந்து மறைந்தன. மைக்கேல், சைமன் வீட்டிற்கு வந்து ஆறு வருடங்களாகி விட்டன. மைக்கேலின் வாழ்க்கையில் ஒரு மாற்றமும் இல்லை. அவசியத்திற்கு மாத்திரம் பேசினான். இந்த ஆறு வருடங்களில் இரண்டு முறைதான் புன்னகைத்திருந்தான். முதல் முறை மெட்ரீனா உணவு கொடுத்த போதும், இரண்டாவது செல்வந்தர் பூட்ஸ் தைக்க வந்த போதும்தான். சைமன் மைக்கேலிடம் எங்கிருந்து வந்தாயென்று கேட்பதேயில்லை. அவன் தன் வீட்டிலிருந்து போய் விடக்கூடாதே என்றுதான் கவலைப்பட்டான். ஒரு நாள் ... Full story

மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) (7)

லியோ டால்ஸ்டாய்  (Leo Tolstoy)  தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ் சைமன், மைக்கேலிடம் அந்தச் செல்வந்தர் கொடுத்த விலையுயர்ந்த தோலைக் கொடுத்துக் கவனமாகப் பூட்ஸ்கள் தைக்கச் சொல்லிவிட்டுத் தன்னுடைய வேலையில் ஆழ்ந்தான். மைக்கேல், தோலை மேசையில் விரித்து வெட்டத் தொடங்கினான். மெட்ரீனா, மைக்கேல் எப்படிப் பூட்ஸ்க்கு வெட்டுகிறான் என்று பார்க்க விரும்பி மேசை அருகில் வந்தாள். அவளுக்கும் பூட்ஸ், செருப்புகள் தைப்பது பற்றிக் கொஞ்சம் தெரியும். மைக்கேல், தோலைப் பூட்ஸ்க்கு வெட்டாமல் வேறு விதமாக வெட்டுவதைப் பார்த்து திகிலடைந்தாள். அவனுக்குத் தன்னைவிட ... Full story

மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) (6)

லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ் மைக்கேல், சைமனின் வீட்டிற்கு வந்து ஒரு வருடமாகி விட்டது. மைக்கேல் காலை முதல் மாலை வரை செருப்புகள் தைத்தான். வேலை இல்லாத போது மெளனமாகக் கூரையைப் பார்த்துக் கொண்டிருப்பான். வீட்டை விட்டு வெளியே போவதோ பிறரிடம் பேசுவதோ கிடையாது. சைமன் வீட்டிற்கு வந்த முதல் இரவு மெட்டரீனா உணவு கொடுத்த போது அவன் புன்னகை செய்தது போல் மறுபடி ஒரு தடவையும் புன்னகை புரியவில்லை. ஒரு நாள் காலை ... Full story

மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) By லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) 4

தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்  மெட்ரீனா கதவருகில் நின்று சைமனைப் பார்த்து, “அவன் நல்லவனாக இருந்தால் நிர்வாணமாக இருக்க மாட்டான். அவன் மீது ஒரு சட்டை கூட இல்லை. அவன் நல்லவனானால், நீ அவனை, எங்கே, எப்படிக் கண்டாயென்று சொல்லியிருப்பாய்” என்றாள். அதற்கு சைமன் “நானும் அதைச் சொல்வதற்குப் பல முறை முயற்சித்தேன், நீ இடங்கொடுக்கவில்லை” என்றான். “நான் ஆலயத்தின் அருகே வந்த போது, இவன் நிர்வாணமாகக் குளிரில் உறைந்திருந்தான். இந்தக் கடுமையான குளிரில் எப்படி நிர்வாணமாக இருக்க முடியும்? இறைவன்தான் என்னை அங்கு ... Full story

மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) By லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) 3

மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) By லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) 3
தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ் வீட்டில் சைமன் மனைவி, மெட்டீரினா, குழந்தைகளுக்கு ஆகாரம் கொடுத்துப் படுக்க வைத்து விட்டு, சைமன் அதிகமாக வெளியே உண்டிருப்பானென்று நினைத்துத் தானும் உண்ட பின் மீதியிருந்த ரொட்டியை மறு நாளுக்காகச் சேமித்து வைத்தாள். பின், சைமனின் பழைய கிழிந்த கோட்டை எடுத்துத் தைக்க ஆரம்பித்தாள். சைமன் அதிகாலையில் போனவன் இன்னும் திரும்பவில்லையே, அவன் புது கோட்டுத் தைக்கத் தோல் ... Full story
Page 1 of 212
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.