Posts Tagged ‘சுரேஜமீ’

Page 1 of 512345

தாயே….தமிழகமே!

தாயே....தமிழகமே!
உயிர் மெய்யைப் பிரிந்தாலும் தமிழர்கள் உயிரோடு கலந்த ஒரு உறவுச் சொல்! அம்மா........... வாழ்வின் அரும்பில் உயிர் கொடுத்த தந்தையை இழந்தாய்! வாழ்வின் வசந்தத்தில் உயிர் சுமந்த தாயை இழந்தாய்! உறவின்றித் தவித்த உள்ளத்தில் குடிகொண்ட உலகத் தமிழர்களின் ... Full story

திருப்பாதிரிப்புலியூர் பதிகம்

திருப்பாதிரிப்புலியூர் பதிகம்
--சுரேஜமீ  ​ இறைவன்: பாடலீஸ்வரர் இறைவி:   கோதைநாயகி   காப்பு நம்பினார்ப் பாடிடுவர் இப்பதிகம் தோன்றிநாதர் கும்பிட்டு மகிழ்வர் நிறை! தடையறு பதிகம் திருஞான சம்பந்தர் தேவாரம் பாடியுந்தன் பெருமை பறைசாற்றிப் பாதம் பணிந்திட்டார் திருப்பா திரிப்புலி யூருறை மன்னவனே ஒருபா உனைப்பாட வைத்திட்டாய் என்னை! (1)... Full story

தோழா…….விமர்சனம்! (திரை)

தோழா.......விமர்சனம்! (திரை)
சுரேஜமீ எப்படி இருக்கீங்க? இந்த ஒரு சொல் நம் இதயத்தைச் சட்டெனத் தொட்டுவிடும் அன்பின் வெளிப்பாடு என்பது அனைவருக்கும் தெரிந்ததே! ஏதோ காரணங்களால், இன்று நாம் அதைத் தொலைத்துவிட்டோமோ என ஏங்கும் நேரத்தில், அந்த ஒரு சொல்லை வைத்து, தொலைத்த இடத்தில் நம்மைத் தேட வைத்திருக்கிறார் இயக்குனர் வசி அவர்கள்! மாற்றான் தோட்டத்து மல்லிகையானாலும் (The Intouchables), கதையின் கருவை உலகிற்கு அறிமுகம் செய்த பெருமை நம்முடையதன்றோ!... Full story

மகாகவி பிறந்த நாள்!

மகாகவி பிறந்த நாள்!
- சுரேஜமீ கம்பனும் வள்ளுவனும்                                                    இளங்கோவும் கலந்து பேசி தமிழ்த் தாயின் முன்தோன்றி ஒரு வரம் ... Full story

சிகரம் நோக்கி …. (28)

சிகரம் நோக்கி ....  (28)
சுரேஜமீ நிறைவு எளிதில் நிலைகொள்ளாத மனத்தில் எதிலும் நிறைவு என்பது இயலாத காரியம்தான். ஆனாலும், தேவைகளில் தெரிவும், உபயோகத்தின் தன்மையும், எண்ணங்களில் திண்மையும் இருந்தால், நிறைவு என்பது நிச்சயம் குடியிருக்கும் ஒரு கோயிலாக உங்கள் இதயம் இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை! உலகத்தில் இன்னமும் சரிபாதி மக்களின் சராசரி வருவாய், நாள் ஒன்றுக்கு ரூபாய் 200க்கும் குறைவாகத்தான் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. என்றாவது ஒரு ... Full story

சிகரம் நோக்கி – 27

சிகரம் நோக்கி - 27
சுரேஜமீ புகழ்   உலகின் முதல் வெளிச்சம் தன்னில் பட்டபோது அழுதவன், தன்னை அடையாளப்படுத்த அடுத்தடுத்து வெளிச்சத்தை நோக்கியே நகர்கிறான் என்று சொன்னால் மறுப்பதற்கில்லை; கதிரொளிக்கும், மின்னொளிக்கும் உள்ள வித்தியாசம்தான் எது நிலையானது என்பதைத் தீர்மானிக்கிறது. ஒரு சொல்லைப் பொருள் கொள்வதில், இக்காலத்து இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் தவறு நேர்ந்துவிடக் கூடாது என்பதுதான் இன்றைய பதிவின் நோக்கம்! புகழுக்கு மயங்காதவர்தான் எவருளர் என்பர்? எளிதில் காரியம் சாதிக்க விரும்பும் நபர் செய்யக் ... Full story

சிகரம் நோக்கி … 26

சிகரம் நோக்கி  ...   26
சுரேஜமீ ஆளுமை வாழ்க்கை ஒவ்வொரு நிலையிலும், நம்மை மெருகேற்றி, உரு மாற்றி, இன்னும் செல்லவேண்டும் தூரத்திற்குச் சற்றும் தோய்ந்து விடாது உற்சாகத்துடனும், உறுதியுடனும், இதோ ஒரு கை பார்த்து விடலாம் என அழைத்துச் செல்லும் ஒரு பண்புக்குப் பெயர்தான் 'ஆளுமை' என்றால் மிகையாகாது. ஆளுமைப் பண்பு என்பது அடிதொட்டு வரலாம்; அறிவு கற்று வரலாம்;ஆனால் அவையெல்லாம் அனுபவம் என்ற ஆசானுக்கு இணையாகாது என்பதைக் கற்றவர்கள் ... Full story

சிகரம் நோக்கி – 25

சிகரம் நோக்கி - 25
சுரேஜமீ வாய்மை ஒரு துறவி தன்னுடைய இறை முடித்துக் கொண்டு தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அப்போது தெருவில் வந்து கொண்டிருந்த ஒருவனைக் காவலர்கள் துரத்தி வர, அவன் நேராக ஆசிரமத்தில் நுழைந்து, துறவியிடம் அடைக்கலம் கேட்டான். அவரும் ஒரு மறைவிடத்தைக் காட்டி, அங்கு சென்று ஒளிந்து கொள் என்றார். அவனைத் துரத்தி வந்த காவலர்களும், ஆசிரமத்தில் நுழைந்து, இப்பக்கம் ஒரு திருடன் வந்ததாகவும், அவனைப் பார்த்தீர்களா என்றும் வினவ, துறவி ... Full story

சிகரம் நோக்கி ….. (24)

சிகரம் நோக்கி .....   (24)
சுரேஜமீ   திறமை   உலகில் அறிவும், திறமையும் ஒருங்கே அமையப் பெற்றவர்கள் வெற்றி காண்பது என்பது மிகவும் வாடிக்கையான ஒன்றுதான். ஆனால், திறமையால் மட்டுமே வென்றவர்கள்தான், வரலாறு படைக்கிறார்கள். அப்படியென்றால், வாழ்வின் வெற்றிக்கு அறிவு தேவையில்லையா எனும் கேள்வி எழலாம். அதற்கு பதில் காண்பதற்கு முன், ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அனைத்து வெற்றிக்கும் அடிப்படையாக இருப்பது அறிவுதான்! ஆனால், அந்த அறிவை ஒவ்வொரு மனிதனும், ... Full story

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்

-சுரேஜமீ  பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பப் பாரறிவான் பகன்றது விளம்பிப் பேருலகில் யாவரும் விளங்கப் போற்றுமொரு பெருநாள் இதுவே! பொங்கிவரும் அன்பின் உணர்வைப் பகிர்ந்து வளம்பெருக வாழ வருடம் ஒருமுறை வருமே வாழுலகில் உறவைப் போற்ற! ஈகைத் திருநாள் இன்று ஈரத்தை நெஞ்சில் வைத்து ஈந்து உலகில் வாழ்கவெனும் ஈத்-அல்-அதாத் திருநாள்! வாழட்டும் மனிதம் என்றும் வாழ்த்துக்கள் எட்டுத் திக்கும்! வாழ்த்துக்கள் உறவுகளே வாழி நல்வாழ்த்துக்களுடன்!!   Full story

சிகரம் நோக்கி (23)

சிகரம் நோக்கி  (23)
சுரேஜமீ பொறுமை காலம் செல்லச் செல்ல மனிதன் எதையுமே அவசர கதியில் கையாளவே எண்ணுகிறான்; எடுத்த செயலை எப்படியேனும் ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதில்தான் எண்ணம் மேலோங்கியிருக்கிறதே ஒழிய, எப்படி ஒரு செயலைச் செம்மையாகச் செய்யவேண்டும் என்பதில்அக்கறை மிகச் சிலருக்கே இருக்கிறது என்பதே இன்றைய நிலை! எதற்காக அவசரப்படுகிறோம் என்பதை உணர்வதன் அடையாளம்தான் 'பொறுமை'! பொறுத்தார் பூமி ஆள்வார் எனச் சும்மாவா சொன்னார்கள்? பொறுமையின் ... Full story

சிகரம் நோக்கி – 22

சிகரம் நோக்கி – 22
 சுரேஜமீ எளிமை பிறக்கும் போது அனைவரும் வெறுமையாகத்தான் பிறக்கின்றோம் . ஆனால், அவரவர் வாழ்க்கைக்கு ஏற்ப வசதிகள், வாய்ப்பினை ஏற்படுத்த, சமூக மற்றும் பொருளாதார மாற்றங்கள் சில வேற்றுமைகளை விதைக்கிறது. இதன் விளைவாக ஒரு அந்நியப்படுதல் என்பது தெரிந்தோ தெரியாமலோ சிந்தையில் புகுந்து விடுகிறது. எப்பொழுது நாம் அன்னியப்படுகிறோம் என்ற உணர்வு மேலோங்குகிறதோ, எது நம்மைச் சாதாரண நிலையிலிருந்து சற்றே விலகி இருக்க ... Full story

சிகரம் நோக்கி – 21

சிகரம் நோக்கி - 21
சுரேஜமீ கடமை உலகமே ஒரு நாடக மேடை என்றார் ஷேக்ஸ்பியர்! இது எந்த அளவு உண்மை என்பதை நாம் ஒவ்வொருவரும் சற்று யோசித்தால் புலனாகும். காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை செய்யக்கூடிய பலவகையான பாத்திரங்கள், நமக்கு ஷேக்ஸ்பியர் ஒரு தீர்க்கதரிசி என்பதை விளக்கும். ஒரு தந்தையாக;; மகனாக; கணவனாக; சகோதரனாக; உறவினராக; நண்பனாக; பணியாளராக; மேலாளராக, சக மனிதனாக என்று பட்டியலிட்டுக் ... Full story

சிகரம் நோக்கி . . . . . (20)

சிகரம் நோக்கி . . . . . (20)
--சுரேஜமீ.   நேரம்   உழைப்பின் அருமையை அறிந்தவர்கள் நேரத்தின் தன்மையை உணர்ந்தவர்களாக இருப்பார்கள்! ஒவ்வொரு நிமிடமும் வாழ்வின் அர்த்தத்தை நமக்கு விளக்கிக்கொண்டு இருக்கிறது என்பதை ஒரு சிலர் மட்டுமே அறிய, அவர்கள் வாழ்வு மற்றவர்களுக்குப் பாடமாக அமைகிறது! எளிதில் எதை வேண்டுமானாலும் இவ்வுலகில் பெற்று விடலாம்; ஆனால், உலகையே கொடுத்தாலும் கிடைக்காத ஒன்று உண்டென்றால்; அதுதான் கடந்து சென்ற காலம்! மேல்நாட்டிலே நேரத்தின் அருமையைப் புரியவைக்க ஒரு கற்பனைக் கதை ஒன்றைச் சொல்வார்கள்;... Full story

வள்ளுவ மாலை

வள்ளுவ மாலை
-சுரேஜமீ​​ மழலைமுன் ஆற்றாமை காட்டல் அறிவன்று வாழ்வின் ஒளியாய் வந்தது - வள்ளுவம் சொல்தினம் பாடம் இயல்பு மாறிப்                     பழக்கிடும் உள்ளம் கனி! இலக்கு நோக்கும் நிறைமனம்; மாற்றாய் இருப்பு காக்கும் வழிச்செல் உண்டு! இராது புறம்பேசத் தங்கும் சிறுமையும் வள்ளுவம் தள்ளும் புறம்! தானேகி நிற்கின் தடுக்கும் வாழ்வொருநாள் தன்னைப் போக்கின் தமிழேகி - வள்ளுவம் வாக்கின் வழிநிற்கத் தன்னையும் தாங்கும் வளம்பெருகும் மண்ணில் உணர்! இன்முகம் சொல்நலம் பண்புடை நாளும் இறைசெவி செல்லும் நினைத்த நடக்க இல்லம் தழைத்து இன்பம் நிலைக்க நித்தம் திருக்குறள் சொல்! எண்ணத்தின் ஆழம் படைக்கும் வண்ணம் ஒருநாள் வந்திடும் வானவர் வையவர் வாழ்த்திட நிச்சயம் நம்பிடு ... Full story
Page 1 of 512345
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.