Posts Tagged ‘செண்பக ஜெகதீசன்’

Page 1 of 2612345...1020...Last »

குறளின் கதிர்களாய்…(249)

-செண்பக ஜெகதீசன் தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை. -திருக்குறள் -672(வினைசெயல் வகை) புதுக் கவிதையில்... செயல்படும்போது காலம் கடத்திச் செய்யவேண்டியதை, அவசரப்படாமல் காலம் கடத்தி உரிய தருணத்தில் செய்யவேண்டும்.. காலம் கடத்தாமல் உடனடியாகச் செய்யவேண்டியதைச் செய்வதற்குக் காலம் கடத்தித் தூங்கிடாதே...! குறும்பாவில்... வினைசெய்யக் காலதாமதமாய்ச் செய்யவேண்டியதைத் தாமதித்து உரிய காலத்தில் செய்யவேண்டும், தாமதிக்காது செய்யவேண்டியதை உடனே செய்யவேண்டும்...! மரபுக் கவிதையில்... செயல்கள் செய்யும் வேளையிலே செய்யக் காலம் தாழ்த்தியேதான் செயல்பட வேண்டிய வினைகளிலே செய்யத் தாமதம் காட்டிவிடு, பயனது பெற்றிட உடனடியாய்ப் பணியது செய்திட வேண்டியதில் துயிலது கொள்ளும் தடையின்றி தொடங்கிடு வினையை உடனடியே...! லிமரைக்கூ.. செயல்படுவதில் வேண்டும் தூக்கம், செயலதற்குத் தாமதம் வேண்டுமெனில், இல்லையேல் உடனேசெய் பெற்றிடவே ஆக்கம்...! கிராமிய பாணியில்... காலநேரம் பாத்துத்தான் எந்த காரியத்தயும் செய்யணும், கவனமாத்தான் செய்யணும்.. காலங்கடத்திச் செய்யவேண்டியத அவசரப்படாம காலங்கடத்திதான் செய்யணும்.. காலங்கடத்தாம ஒடனே செய்யவேண்டியதுல காலங்கடத்திடாத, ஒடனே செய்யி... தெரிஞ்சிக்கோ, காலநேரம் பாத்துத்தான் எந்த காரியத்தயும் செய்யணும், கவனமாத்தான் செய்யணும்...!   Full story

குறளின் கதிர்களாய்…(248)

-செண்பக ஜெகதீசன் கூறாமை நோக்கிக் குறிப்பறிவா னெஞ்ஞான்றும் மாறாநீர் வையக் கணி. -திருக்குறள் -701(குறிப்பறிதல்) புதுக் கவிதையில்... மன்னன் மனத்திலுள்ளதை அவன் கூறாமலே முகம் அல்லது கண்ணை நோக்கியே கருத்தறிந்துகொள்ளும் அமைச்சன், என்றும் வற்றா நீர்நிறை கடல்சூழ் உலகினுக்கோர் அணிகலன் ஆவான்...! குறும்பாவில்... கூறாமலே பிறர் உளக்குறிப்பறியும் ஆற்றல்மிகு அமைச்சன் ஆவான், ஆழிசூழ் உலகிற்கு அணியாய்...! மரபுக் கவிதையில்... மன்னன் மனதில் உள்ளதையே மனமது திறந்து சொல்லாமலே, அன்னான் முகத்தைக் கண்பார்த்தே அறிந்து கொள்ளும் ஆற்றலதைத் தன்னால் கொண்டே செயலாற்றும் தன்மை மிக்க அமைச்சனவன், என்றும் வற்றா கடல்சூழ்ந்த எழிலாம் உலகினுக் கணியாமே...! லிமரைக்கூ.. கருத்தறிவான் அரசனவன் கண்ணில், சொல்லாமலறிந்து செயல்படும் அமைச்சன் அணிகலனாவான் கடல்சூழ் மண்ணில்...! கிராமிய பாணியில்... செயல்படு செயல்படு கொறயில்லாம செயல்படு, குறிப்பறிஞ்சி செயல்படு.. வாயத்தொறந்து ராசா சொல்லாமலே அவரோட மொகத்தப் பாத்து கண்ணப்பாத்து குறிப்பறிஞ்சி வேலசெய்யிற மந்திரி கெடச்சா அவுரு கடலுசூழ்ந்த ஒலகத்துக்கே ஒரு ஒசந்த ஆபரணந்தான்.. அதால செயல்படு செயல்படு கொறயில்லாம செயல்படு, குறிப்பறிஞ்சி செயல்படு...!     Full story

குறளின் கதிர்களாய்…(247)

-செண்பக ஜெகதீசன் பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார். -திருக்குறள் -728(அவை அஞ்சாமை) புதுக் கவிதையில்... நல்லோர் அவையில் பல்லோர்க்கும் புரியும்படி நல்ல நூலின் பொருளை, அச்சத்தால் எடுத்துரைக்க இயலாதவர் எத்தனை நூல் கற்றிருந்தாலும், அவரால் எந்தப் பயனுமில்லை இந்த உலகத்துக்கே...! குறும்பாவில்... அச்சத்தால் நல்ல அவையினர்முன் அவரறிய நூற்பொருள் எடுத்துரைக்கத் தெரியாதவன் பலநூல் கற்றிருந்தும் பயனிலை அவனிக்கே...! மரபுக் கவிதையில்... நல்லோர் நிறைந்த அவைதனிலே நல்ல நூலதன் பொருளதுதான் எல்லோ ருக்கும் புரிந்திடவே எடுத்து ரைக்க அஞ்சிநிற்கும் வல்லமை யில்லா ஒருவர்தான், வகைகள் பலவாய் நூற்களையே கல்வி யென்றே கற்றிருந்தும் காசினிக் கவரால் பயனிலையே...! லிமரைக்கூ.. அதுவேயவன் திறமையின் எல்லை, அவையஞ்சி நூற்பொருளுரைக்கத் திறனில்லை, பலநூல் கற்றுமவனால் பயனே இல்லை...! கிராமிய பாணியில்... பயப்படாத பயப்படாத பேசுறதுக்குப் பயப்படாத, படிச்சத எடுத்துச்சொல்லி சபயில பேசுறதுக்குப் பயப்படாத.. நல்லவுங்க சபயில எல்லாருக்கும் புரியிறாப்புல படிச்ச பொத்தகத்தில ... Full story

குறளின் கதிர்களாய்…(246)

- செண்பக ஜெகதீசன் அழிவி னவைநீக்கி யாறுய்த் தழிவின்க ணல்ல லுழப்பதாம் நட்பு.        -திருக்குறள் -787(நட்பு)   புதுக் கவிதையில்... அழிவுதரும் தீவழிச் செல்கையில் தடுத்து நிறுத்தி, ஆக்கந்தரும் நல்வழி செல்லாதபோது செல்லவைத்து, அழிவு வரும்போது கைவிட்டு அகன்றிடாமல், உடனிருந்து துன்பம் அனுபவிப்பதே தூய நட்பு...!   குறும்பாவில்... தீயவழி செல்லாமல் தடுத்து நிறுத்தி, நல்வழியில் நடக்கவைத்து, அழிவுவந்தால் உடனிருந்து துன்புறுதலே நட்பு...!   மரபுக் கவிதையில்... அழிவைத் தந்திடும் தீவழியில் ஆசையில் செல்கையில் தடுத்தேதான் வழியது நல்லதாய்க் காட்டியதன் வழியே நம்மைச் செல்லவைத்து, அழிவது வாழ்வில் வரும்பொழுதில் அகன்றே நம்மைக் கைவிட்டிடும் பழியதைப் பெறாமல் இடரிலும்நம் பக்க மிருப்பதே நட்பாமே...!   லிமரைக்கூ.. தீயவழியில் நாம்செல்வதைத் தடுத்து நல்வழியில் நமைச்செலுத்தி, நல்லநண்பர், நம்துன்பத்திலும் துணையிருப்பார் அடுத்து...!   கிராமிய பாணியில்... நட்பிதுதான் நட்பிதுதான் நல்ல நட்பிதுதான், துன்பத்திலயும் தொணயிருக்கும் நல்ல நட்பிதுதான்..   கெட்டவழியில நாமபோனா கேடுவராமத் தடுத்துநெறுத்தி நல்லவழியில நம்ம நடக்கவச்சி, கேடுவாற காலத்தில ஓடாம கூடயிருந்தே துன்பப்படுறதுதான் கொறயில்லாத நட்பாவும்..   அதால நட்பிதுதான் நட்பிதுதான் நல்ல நட்பிதுதான், துன்பத்திலயும் தொணயிருக்கும் நல்ல நட்பிதுதான்...!       Full story

குறளின் கதிர்களாய்…(245)

 - செண்பக ஜெகதீசன் உள்ளற்க வுள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க அல்லற்க ணாற்றறுப்பார் நட்பு (குறள் - 798) (நட்பாராய்தல்)   புதுக் கவிதையில்...   ஊக்கம் குறையவைக்கும் செயல் பற்றி உள்ளுதலே வேண்டாம்.. அதுபோல துன்பம் வரும்போது துணை வராமல் கைவிட்டு, தூர விலகிடுவார் நட்பையும் ஏற்றிடவே வேண்டாம்...!   குறும்பாவில்...   ஊக்கம் குறைக்கும் செயலையென்றும் நினைக்காதே, உறுதுணையாயின்றி துன்பம் வரும்போது விட்டுச்செல்லும் நட்பினை ஏற்காமல் தவிர்த்திடுக...!   மரபுக் கவிதையில்...   ஊக்கம் குறைய வகைசெய்யும் உதவாச் செயலது வாழ்வினிலே ஆக்கம் எதையும் தருவதில்லை அதனால் வேண்டாம் அதன்நினைவே, தாக்கும் துன்பம் வரும்போது துணையாய் நின்றே உதவாமல் போக்குக் காட்டியே ஓடிவிடும் புல்லர் நட்பினை ஏற்காதே...!   லிமரைக்கூ..   வேண்டாம் ஊக்கந்தரா செயலின் எண்ணம், ஏற்றிடாதே துன்பத்தில்நமைக் கைவிட்டோர் நட்பை, இனியுமவர் நமைத்தொடரா வண்ணம்...!   கிராமிய பாணியில்...   நட்புகொள்ளு நட்புகொள்ளு நல்லவனாப் பாத்து நட்புகொள்ளு, நல்லா ஆராஞ்சி நட்புகொள்ளு..   நெனைக்கவேண்டாம் நெனைக்கவேண்டாம் நமக்கு ஊக்கந்தராத செயலெதயும் நெனைக்கவேண்டாம் ... Full story

குறளின் கதிர்களாய்…(244)

-செண்பக ஜெகதீசன் எனைத்துங் குறுகுத லோம்பல் மனைக்கெழீஇ மன்றிற் பழிப்பார் தொடர்பு. -திருக்குறள் -820(தீ நட்பு)   புதுக் கவிதையில்...   தனியே வீட்டிலிருக்கையில் தணியாத நட்புடன் இருப்பதாய்க் காட்டி, பலரோடு அவையிலிருக்கையில் பழித்துப் பேசுவோர் நட்பு, கொஞ்சமும் நம்மை அணுகவிடவே கூடாது...!   குறும்பாவில்...   வீட்டிலே நட்புடையோர்போல நடித்து மன்றத்திலே பழித்துப்பேசுவோர் தொடர்பு, மிகச்சிறிதாயினும் தவிர்த்திடுக...!   மரபுக் கவிதையில்...   வீட்டில் தனியே இருக்கையிலே வேண்டிய நண்பராய்ப் பழகியபின், கூட்டமாய் அவைதனில் உளநேரம் குறைகள் பலவும் கூறியேதான் காட்டமாய்ப் பழித்துப் பேசுவோர்தம் கூட்டு யென்றும் வேண்டாமே, காட்டும் நட்பு சிறிதெனிலும் கொள்ளா ததனைத் தவிர்ப்பீரே...!   லிமரைக்கூ…   நட்பாவார் வீட்டில் தனியே, மன்றினில் பழிப்பார், அவர்தம் நட்பு சிறிதெனிலும் வேண்டாம் இனியே...!   கிராமிய பாணியில்...   வேண்டாம் வேண்டாம் கெட்டவுங்க நட்பு, வேதனதரும் கெட்டநட்பு வேண்டவே வேண்டாம்..   தனியா வீட்டில இருக்கயில தொணயா நல்ல நண்பனா நடிச்சவந்தான், சபயில கூட்டமா இருக்கயில பழிச்சி நம்மப் பேசுனாண்ணா, இனிமேலும் அவன்தொடர்பு கொஞ்சங்கூட வேண்டாமே..   அதால வேண்டாம் ... Full story

குறளின் கதிர்களாய்…(243)

-செண்பக ஜெகதீசன்   பகையென்னும் பண்பி லதனை யொருவ னகையேயும் வேண்டற்பாற் றன்று. -திருக்குறள் -871(பகைத்திறம் தெரிதல்)   புதுக் கவிதையில்... சிரித்து மகிழ்ந்து விளையாட்டாகக் கூட விரும்பிடவேண்டாம் வாழ்வில், பகையாகிய பண்பற்ற ஒன்றை...! குறும்பாவில்... பகையென்கிற பண்பற்ற ஒன்றை, சிரித்து மகிழ்ந்திடும் விளையாட்டாய்க்கூட விரும்பிட வேண்டாம்...! மரபுக் கவிதையில்... அகில வாழ்வில் ஆபத்தாம் அடுத்தவ ருடனே பகையென்னும் வகைக்கே உதவா ஒன்றாலே வருவ தில்லை நற்பயனே, அகத்தில் தோன்றி வாழ்வழிக்கும் ஆற்றல் மிகுந்த பண்பிலாத பகையினை மகிழும் விளையாட்டெனப் பார்த்தும் விரும்பிட வேண்டாமே...! லிமரைக்கூ.. பகையென்பது பண்பற்ற ஒன்று, அழிக்குமதனை மகிழும் விளையாட்டாய்க்கூட விரும்பாமல் தவிர்ப்பதே நன்று...! கிராமிய பாணியில்... வேண்டாம் வேண்டாம் பகவேண்டாம் வெறுத்தே ஒதுக்கும் பகவேண்டாம், வாழ்க்கயில யாரோடும் பகவேண்டாம்.. பண்பேயில்லாத பகயதால கேடுதான்வரும் வாழ்க்கயில, அதுனால சந்தோசமான வெளயாட்டாக்கூட விரும்பிடாத பகயதயே.. எப்பவும் வேண்டாம் வேண்டாம் பகவேண்டாம் வெறுத்தே ஒதுக்கும் பகவேண்டாம், வாழ்க்கயில யாரோடும் பகவேண்டாம்...!   Full story

குறளின் கதிர்களாய்…(242)

-செண்பக ஜெகதீசன்   உட்கப் படாஅ ரொளியிழப்ப ரெஞ்ஞான்றுங் கட்காதல் கொண்டொழுகு வார். -திருக்குறள் -921(கள்ளுண்ணாமை)   புதுக் கவிதையில்..   கள்மீது பற்றுற்றே என்றும் குடிக்கு அடிமையான காவலன்முன் பகைவன்கூடப் பயப்படமாட்டான், பெற்ற புகழும் நிலைப்பதில்லை...!   குறும்பாவில்...   கள்ளிற்கு அடிமையாகி அதன்மேல் அன்புற்றொழுகுவோக்கு எதிரியும் அஞ்சான், நில்லாதே எல்லாப் புகழும்...!   மரபுக் கவிதையில்...   குடிக்கும் கள்ளுக் கடிமையாகி கூற்றா மதன்மீ தன்புகொண்டு தொடர்ந்தே யொழுகும் மன்னவரும் தீதாம் குடியின் சேர்க்கையாலே தொடரும் பகைவரும் அஞ்சிடாத தன்மை தன்னைப் பெறுவதுடன், கிடைத்த புகழையும் தானிழந்து கீழ்நிலை யதனை அடைவாரே...!   லிமரைக்கூ.. கள்ளிற்கு அடிமையரசனை இகழும் நாட்டில் எதிரியும் அவனுக்கு அஞ்சுவதில்லை, போய்விடுமே சேர்த்துவைத்த புகழும்...!   கிராமிய பாணியில்...   குடிக்காதே குடிக்காதே கள்ளு குடிக்காதே, குடியக் கெடுக்கிற கள்ளக் குடிக்காதே..   கள்ளுகுடிக்கு அடிமயாகி கண்டபடி வாழுறவன் ராசாண்ணாலும் எதிரிகூட மதிக்கமாட்டான், அவனுக்கு எள்ளளவும் பயப்படமாட்டான்..   சேத்துவச்ச செல்வாக்கு பெருமயெல்லாம் சேந்தாலப் போயிடுமே..   அதால குடிக்காதே குடிக்காதே கள்ளு குடிக்காதே, குடியக் கெடுக்கிற கள்ளக் குடிக்காதே...!     Full story

குறளின் கதிர்களாய்…(241)

-செண்பக ஜெகதீசன் ஓன்றெய்தி நூறிழக்குஞ் சூதர்க்கு முண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோ ராறு. -திருக்குறள் -932(சூது) புதுக் கவிதையில்... வெற்றி வரவாய் ஒன்றினைப் பெற்று, தோல்வியில் நூறு மடங்கு இழக்கும் சூதாடுபவர்க்கு, அப்பொருளால் வாழ்வில் அறமும் இன்பமும் பெற்று வாழ்வதாகிய நல்வழி என்றுமே இல்லை...! குறும்பாவில்... வென்று ஒன்று பெற்று, தோல்வியில் நூறிழக்கும் சூதாடுபவர்க்கு என்றுமுண்டோ நன்மைபெற்று வாழும் வழி...! மரபுக் கவிதையில்... வரவாய் வெற்றியில் ஒன்றுபெற்று, வந்திடும் தொடர்ந்த தோல்வியது தருமே யிழப்பாய் நூறாகத் தீயதாம் சூதினை ஆடுபவர்க்கே, தரமிலாச் செயலிதால் வருகின்ற தனமது யென்றும் இவர்தமக்குத் தருவதே யில்லை வாழ்வினிலே தீதே யில்லா நல்வழியே...! லிமரைக்கூ.. வரவொன்று, தோல்வியில் நூறு இழப்புதரும் சூதாட்டம் ஆடுவோர்க்கு உண்டோ நலவாழ்வுக்கு நல்லவழி வேறு...! கிராமிய பாணியில்... ஆடாதே ஆடதே சூதாட்டம் ஆடாதே எப்பவுமே ஆடாதே, வாழ்க்கயில கேடுதரும் சூதாட்டம் ஆடாதே.. ஒருமடங்கு செயிச்சா சூதாட்டத் தோல்வியில நூறுமடங்காப் போயிடுமே.. இதால சூதாடுறவனுக்கு நல்ல ... Full story

குறளின் கதிர்களாய்….(240)

செண்பக ஜெகதீசன்... உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க பண்பொத்த லொப்பதா மொப்பு. -திருக்குறள் -993(பண்புடைமை)   புதுக் கவிதையில்...   உடலுறுப்பால் ஒத்திருத்தல் உலகத்து மக்களோடு ஒத்திருத்தலன்று.. பொருந்தத் தக்கது, பண்பால் ஒத்திருத்தலே...! குறும்பாவில்... உறுப்பால் ஒத்திருப்பதன்று மக்களோடு ஒத்திருத்தல் என்பது, உண்மையிலது பண்பால் ஒத்திருத்தலே...!   மரபுக் கவிதையில்...   உடலி லுள்ள உறுப்புகளால் ஒன்றோ டொன்றுபோல் ஒத்திருத்தல், கடல்சூழ் உலக மக்களோடு கருதப் படாதே ஒத்திருத்தலாய், நடைமுறை தன்னில் பொருந்துவதாய் நல்ல பண்பால் ஒத்திருத்தலே தொடரும் உலக வாழ்வினிலே தெரிந்த உண்மை ஒத்திருத்தலே...!   லிமரைக்கூ.. உண்மையில் ஒத்திருத்தலே இல்லை உறுப்புகளால் மக்களோடு ஒத்திருத்தலென்பது, பண்பால் ஒத்திருத்தலே உண்மையின் எல்லை...! கிராமிய பாணியில்... பெருசுபெருசு உண்மயில பெருசு ஒலகத்திலயே ரெம்பப் பெருசு, ஒசந்த பண்புதான்.. ஒடம்பிலவுள்ள உறுப்புகளால மக்களோட ஒத்திருக்கிறது உண்மயான ஒத்திருத்தலில்ல, ஒசந்த பண்பால ஒத்திருக்கதுதான் ஒசத்தி அதுதான் உண்மயான ஒத்திருத்தலே.. அதால பெருசுபெருசு உண்மயில பெருசு ஒலகத்திலயே ரெம்பப் பெருசு, ஒசந்த பண்புதான்...!   Full story

குறளின் கதிர்களாய்…(239)

-செண்பக ஜெகதீசன்... சுழன்றுமேர்ப் பின்ன துலக மதனா லுழந்து முழவே தலை. -திருக்குறள் -1031(உழவு) புதுக் கவிதையில்... உழவில் வரும் உடலுழைப்பின் வருத்தம் கண்டு, வேறுபல தொழில்கள் செய்து வீணாய் அலைந்தாலும், முடிவில் உழவின் பின்னதாகிறது உலகம்.. அதனால், அலைந்து வருந்தினாலும் உயர்வானது உழவே...! குறும்பாவில்... உழவைவிட்டு வேறுதொழில் செய்தலைந்தாலும், உழவின் பின்னதாகும் உலகமென்பதால் அலைந்திடரிலும் உயர்வானது உழவே...! மரபுக் கவிதையில்... உடலு ழைப்பின் துன்பமதால் உழவை விட்டு வேறுதொழில் தொடர்ந்த லைந்தும் தரணியது தொடருமே உழவதன் பின்னேதான், இடரதில் அலைந்திட வைத்தாலும் இவ்வுல கதிலே மிகவுயர்ந்த இடமதி லென்றும் இருந்திடுமே இணையிலா உழவுத் தொழிலதுவே...! லிமரைக்கூ.. வேறுதொழில் பார்த்தாலும் உழவினை விட்டு, உலகம் செல்வது உழவதன் பின்னேயென்பதால் உழவே வென்றிடும் உயர்நிலையைத் தொட்டு...! கிராமிய பாணியில்... ஒசந்தது ஒசந்தது ஒலகத்தில ஒசந்தது, ஒழவுத்தொழிலே ஒசந்தது.. ஒடம்பு நோவுதுண்ணு ஒழவுத்தொழில வுட்டு வேற தொழிலத் தேடுனாலும், ஒலகம் போறது ஒழவுத்தொழில் பின்னாலதான்.. அதுனால அலஞ்சி திரிஞ்சி பாத்தாலும் ஒலகத்துல ... Full story

குறளின் கதிர்களாய்…(238)

-செண்பக ஜெகதீசன்... இற்பிறந்தார் கண்ணேயு மின்மை யிளிவந்த சொற்பிறக்குஞ் சோர்வு தரும்.                                              -திருக்குறள் -1044(நல்குரவு) புதுக் கவிதையில்... புகழ்ந்து சொல்லத் தகுதிமிக்க உயர்குடிப் பிறந்தோரிடத்தும், இழிசொல் பிறப்பதற்கு ஏதுவாகிய சோர்வினை உண்டாக்கிவிடும் வாழ்வில் வறுமை என்பது...! குறும்பாவில்... புகழ்ச்சிக்குரிய உயர்குடிப் பிறந்தோரையும் இழிசொல் பேசவைக்கும் சோர்வினை வரவைத்துவிடும் வறுமை...! மரபுக் கவிதையில்... வாழ்வில் யாரும் விரும்பாத வறுமை யென்பது வந்துவிட்டால், வாழ்த்திச் சொல்லத் தகுதியுள்ள வளமிகு உயர்குடிப் பிறந்தோரையும், தாழ்ந்தே நிலையில் கீழிறங்கித் தரமிலா இழிசொல் பேசவைக்கும் சூழ்நிலை கொணரும் சோர்வினையே சேர வைத்திடும் வறுமையதே...! லிமரைக்கூ.. வந்துவிட்டால் வாழ்வில் வறுமை, வந்துவிடும் வளமிகு உயர்குடிப் பிறந்தோர்க்கும் வெந்திட இழிசொல்பேசும் சிறுமை...! கிராமிய பாணியில்... பொல்லாதது பொல்லாதது வறும பொல்லாதது, வாழ்க்கயில வறும பொல்லாதது.. வாழ்த்திப் பேசத் தகுதியுள்ள ஒசந்த குடும்பத்தில உள்ளவனயும், வறுமவந்து சோர்வத் தந்து வகைக்கு ஒதவாத தரங்கொறஞ்ச கெட்டவார்த்த பேசுற கீழ்நெலக்கிக் கொண்டுவந்திடுமே.. அதால பொல்லாதது பொல்லாதது வறும பொல்லாதது, வாழ்க்கயில ... Full story

குறளின் கதிர்களாய்…(237)

-செண்பக ஜெகதீசன் உற்றநோய் நீக்கி யுறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல். -திருக்குறள் -442(பெரியாரைத் துணைக்கோடல்) புதுக் கவிதையில்... வந்த துன்பத்தைப் போகும் வழியில் போக்கி, அத்தகு துன்பம் அடுத்து வராதவாறு முன்னரே அறிந்து தடுத்திடும் ஆற்றல்மிக்க பெரியோர் துணையை, அவர் விரும்புவன செய்தாவது அரசன் பெறவேண்டும்...! குறும்பாவில்... துன்பமதைப் போக்கி மேலும்வராதவாறதன் வழியறிந்து தடுத்திடும் ஆற்றல்மிக்கோர் துணையை ஆதரித்துப் பெறவேண்டும் அரசன்...! மரபுக் கவிதையில்... துன்பம் வந்ததைப் போக்கியேபின் தொடர்ந்தது மேலும் வராவகையை முன்பே நன்றாய் ஆய்ந்தறிந்தே முழுதாய்த் தடுத்திடும் ஆற்றலுள்ளோர் என்றும் துணையாய் வேண்டுமென்றே எதையவர் விரும்பி வேண்டிடினும் நன்றெனக் கொடுத்தே அவர்தமையே நற்றுணை யாக்குவர் நல்லரசே...! லிமரைக்கூ.. வந்த துன்பத்தையவன் போக்கிடுவான் அது வருமுன் தெரிந்து தடுத்திடுவான், அவனையே துணையாயரசன் ஆக்கிடுவான்...! கிராமிய பாணியில்... தொணவேணும் தொணவேணும் நல்லதான தொணவேணும், நாலுந்தெரிஞ்ச பெரியவுங்க தொணவேணும்.. வந்த துன்பத்த ஒடனே போக்கி, வரப்போற துன்பத்த முன்னதாத் தெரிஞ்சி தடுக்கத் தெரிஞ்சவந்தான் தொணயா வேணும் ... Full story

குறளின் கதிர்களாய்…(236)

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு. -திருக்குறள் -465(தெரிந்து செயல்வகை) புதுக் கவிதையில்... பகைவரை அழிக்கும் செயல்வகையை நன்கு அறியாமல் செயலில் இறங்கினால், அது பகைவரை நிலைத்து நிலைபெற வழிவகுத்துவிடும்...! குறும்பாவில்... செயல்வகை தெரியாமல் பகையழிக்கும் செயலில் இறங்குவது, பகைவர் உறுதியாய் நிலைபெற வைத்துவிடும்...! மரபுக் கவிதையில்... தொடரும் பகையை அழித்திடவே தகுந்த செயல்வகை தெரியாமல் தொடங்கும் செயலில் பயனில்லை தேடித் தராது வெற்றியையே, மடமைச் செயலாய் மாறியேயது மாற்றான் வெல்ல வழிவகுத்தே இடரது நமக்குத் தரும்வகையில் எதிரியை நிலைக்க வைத்திடுமே...! லிமரைக்கூ.. தெரிந்து செயல்படு செயலின் வகை பகைவரையழிக்க, இல்லையேல் அவர் வலிமைபெற்று நிலைத்துவிடும் பகை...! கிராமிய பாணியில்... செயல்படு செயல்படு தெரிஞ்சி செயல்படு, எதயும் நல்லாவேத் தெரிஞ்சி செயல்படு.. எதிரிய எப்புடி அழிப்பதுங்கிற நடமொற தெரியாமலே தொடங்குனா செயல, கெடைக்காது எப்பவும் வெற்றி.. அது எதிராளிய செயிக்கவச்சி பகய நெரந்தரமா நெலைக்கவெச்சிடுமே.. அதால செயல்படு ... Full story

குறளின் கதிர்களாய்…(235)

      உளவரைத் தூக்காத வொப்புர வாண்மை       வளவரை வல்லைக் கெடும்.        -திருக்குறள் -480(வலியறிதல்)   புதுக் கவிதையில்...   அடுத்தவர்க்கு உதவிடல் எனிலும், தன் பொருளிருப்பின் அளவை ஆய்ந்திடாது மேற்கொண்டால், அவன் செல்வ வளம் அழியும் விரைவில்...!   குறும்பாவில்...   தன் கைப்பொருளிருப்பை ஆய்ந்திடாது                      அடுத்தவர்க்குதவிடும் அருஞ்செயல் மேற்கொண்டாலும்,     அழிந்திடும் அவன்செல்வம் விரைவில்...!   மரபுக் கவிதையில்...   அடுத்தவர்க் குதவி செய்கின்ற      அரிய செயலை மேற்கொளினும்,... Full story
Page 1 of 2612345...1020...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.