Posts Tagged ‘சேசாத்ரி பாஸ்கர்’

பசும் தெய்வம்

பாஸ்கர்   மரங்கள் அலறுவதில்லை மரணம் கண்டு  இல்லை எனக்கென அது ஓர் நாளும் புலம்பாது  பக்கத்தில் கதை பேசி பல்லிளித்து நில்லாது கால் வலி கை வலி என ஓர் நாளும் சொல்லாது  அள்ளி வழங்க அது ஓர் நாளும் தயங்காது  இல்லை என சொல்லாது நிழல் பூமி தந்தருளும்  கிடக்குமது தெருவோரம் அலட்சியமாய் தனை மறந்து  கனி கொடுக்க கேட்காது காசும் பணமும்  மண் வாசம் வீச நோக்காது நாளும் கிழமையும் ... Full story

பூமியின் புதல்வர்கள்

பூமியின் புதல்வர்கள்
சேசாத்ரி பாஸ்கர் இந்த வெயில் என்றில்லை.நமக்கு எப்போதும் தேவை பச்சை மரங்கள்.அவை பூமியின் புதல்வர்கள். குளிர்விக்க வந்த குட்டி தேவதைகள்.நம்மால் இயன்ற வரை மரங்களை பேண வேண்டும்.அவை நமக்கு என்றும் ஆதரவு.- மரங்கள் அடர்த்தியானால் சூரியன் உக்கிரம் குறையும்-.வாட்டும் வெயில் பூமியில் படர திணற வேண்டும். தனி நபர் முயற்சி, குழுக்களின் முயற்சி தாண்டி அரசு சட்ட ரீதியாக மரம் நடுதலை ஊக்குவித்தால் மனங்கள் குளிரும்.-மனம் குளிர்ந்தால் பதட்டமும் ... Full story

பச்சை புதிர்

பச்சை புதிர்
சேசாத்ரி பாஸ்கர் இந்த மரம் ஒரு பச்சை புதிர் . ஆள்வார்பேட் தேசிகா சாலையில் உள்ளது .நல்ல தடிமனான அதன் அடிபாகம் ஒரு பெருத்த மரக்கல்.ஆனால் அதன் கிளைகளும் இலைகளும் ஒல்லியாக சின்னதாக இருப்பது ஆச்சரியம்.இந்த படைப்பு பற்றிய வியப்பு எந்த விடைக்கும் வழி சொல்லவில்லை.பாஷை புரியாதவன் பேந்த விழிப்பது போல நிற்க வேண்டியது தான்.வியப்புக்கு மேல் செல்ல முடியுமா தெரியவில்லை. என்னதான் விபத்தின் வடிவம் இதன் பிறப்பு ... Full story

’நான்’

சேசாத்ரி பாஸ்கர் என்னுள் இருக்கும் "நான்" போக வேண்டும்.சரி.அதை சொல்வது யார்.இந்த நான் தான். சரி நான் போய் விட்டது எனில் மிச்சமிருப்பது என்ன ? அதுவும் நான் தான்.போக சொல்வதும் அது தான்.போவதும் அது தான் எனில் விஞ்சியிருப்பது என்ன ? நானற்ற பெருநிலை எனில் அது போனதை மனதுக்கு உணர்த்தியது யார்? நான் வெளியே செல்லும் சுவாசம் அன்று.அது உணர்தல்.-உணர்தலில் வண்ணம் இல்லை. கசடு இல்லை. நினவு தகட்டின் கீறல் இல்லை.அப்படியே அது இருப்பினும் பெரு உணர்தலில் அது கரைசலுக்கு உட்பட்டது.நான் அகற்றும் புத்தி ... Full story

எங்கே போச்சு அந்தப் பலப்பம்?

எங்கே போச்சு அந்தப் பலப்பம்?
-சேசாத்ரி பாஸ்கர் எல்லோரும் பார்த்ததுதான் எல்லோரும் உடைத்ததுதான் எல்லோரும் முகர்ந்ததுதான்!                             அது தனி உலகம் தலைகுனிந்து கருப்புச் சட்டத்தைக் காதல் செய்த காலம்! வெண்மைப்புரட்சி வியாபித்த நாட்கள் தொலைத்துத் தேடுவது பிறப்பு சுகம் கிடைத்தது உடைந்தாலும் உடையாதது மனம்! அது எங்கெங்கும் வியாபித்திருக்கும் காலடியில் மேஜையில் ஜேபியில் சில நேரம் தூங்கும் சிறுமி கையில் கைக் கொள்ளுதல் அழகு! தேடிப் பாரும் ஓர் நாள் உம் வீட்டை எங்காகிலும் அது கிடக்கும் இருப்பின் அதுவே பொக்கிஷம்! எங்கே போச்சு அந்தப் பலப்பம்?   Full story

இன்று வெட்டப்படாத ஆடுகள்!

-சேசாத்ரி பாஸ்கர் எதுவும் கட்டப்படவில்லை எல்லாம் அடர்த்தியாய் நின்றுகொண்டு முட்டிமோதிக் கொண்டு செந்நிறத்தில் ஆறு கன்னங்கரேலாய் நான்கு, கழுத்துக் கீற்று வெண்மை வெள்ளை நிறத்தில் ஒன்று நசுங்கிக் கொண்டு ஈரமாய்ப் போன உடல்கள்! தொட்டால் சிலிர்க்கும், உயிர்ப் பயம் தொடுதலில் உதறல் , என் கை நடுக்கம் எல்லாக் கண்களிலும் மிரட்சி கண்கள் அரளும் பச்சை பயத்திலும் புழுக்கை பார்த்து மீண்டும் ஒன்று மேல் ஒன்று மோதி நிராயுத பாணி நான்- கண்களால் நன்றி சொன்னது! குட்டி ஒன்று இரண்டின் காலடியில் சீரிய கொம்புகள், குத்தினால் குடல் சரியும் பாய்ச்சலாய்க் குதித்து ஓடும் பிறவிக் குணம் மரண பயம் -எல்லாம் மறந்தன இன்று வெட்டப்படாத ஆடுகள்!   Full story

யாக்கோபும் தூக்குதண்டனையும்!

-சேசாத்திரி பாஸ்கர் யாக்கோப் தூக்கில் இட்டதற்கு எல்லோரும் எம்பி குதிக்கிறார்கள். சரி, இவர்களின் ஹுமன் ரைட்ஸ் இத்தனை வருஷம் என்ன செய்தது ? வன்முறையைத் தடுக்க முடிந்ததா ? இவர்கள் வன்மம் ஒரு பக்கம், இவர்கள் கோபம் ஒரு பக்கம். இத்தனை உயிர்களைப் பிரித்த இவர்களுக்கு மன்னிப்பு கொடுத்தால் மக்கள் அவனைக் கல்லடித்து கொன்று விடுவார்கள். நம் ’செகுலர்’ என்ற அன்புப் போர்வை இவர்கள் துப்பாக்கி வைத்து கொள்ளும் மறைவிடமா? சட்டத்திற்கு என்ன மரியாதை?தூக்கில் போட மாட்டார்கள் என்ற தைர்யம் தானே இவர்களை மேலும் மேலும் தப்பு செய்யச்சொல்கிறது?... Full story

பொதுவுடைமை!

பொதுவுடைமை!
-சேசாத்ரி பாஸ்கர் அந்த வயதில் எல்லோரையும் ஈர்த்த வஸ்து ஆண் பெண் பேதமில்லை யாருக்கு அதிகம் என்பதில் போட்டி…                    எல்லோரும் காத்திருக்கும் இரவு! வாசம் மூக்கைத் துளைக்கும் சாப்பிடலாமா? ரப்பர் பந்துபோல் அம்மா உருட்டும் லாவகம் யாருக்கு வரும்? வட்டமாய் அமர்வது வாகு பங்கு குறையாது தள்ளி நின்றால் சுண்டக்காய் மிஞ்சும் கூச்சம் இங்கு அகௌரவம்! முதல் குப்பி கட்டை விரலுக்கு பின்னர் எல்லா மந்திரிகளுக்கு எல்லோர் மனசும் நெருக்கம் விரல்கள் மட்டும் விலக்கு! சண்டை போட்ட அக்கா தம்பிக்கு மூக்கில் சொறியும் அன்பு அமெரிக்கா அறியுமா? தனித்தனி கனவுகள் ஆனாலும் எல்லோரும் கூட்டமாய் அதில்தான் வருவர் வறண்ட  குப்பியை விலக்கி நீர் நனைத்து சிவப்பை நோக்கும் கண்கள்…ஆணாவது ... Full story

கேள்வி பிறந்தது அன்று!

கேள்வி பிறந்தது அன்று!
-சேசாத்ரி பாஸ்கர்   எங்கோ பிறந்த தென்றல் எப்படி                            விரிக்க வைத்தது இதழை? என்றோ புதைந்த விதை எப்படியாயிற்று இங்கு மரமாய்? எங்கோ முகிழ்ந்த வானம் எங்ஙனம் கொண்டு வரும் மணத்தை? எங்கேயோ நீரை விழுங்கிய நிலம் எப்படிக் கொணர்ந்தது குளிர்ச்சி? என்றோ கரைந்த நினைவுகள் எங்ஙனம்... Full story

ஒரே திசை

-சேசாத்ரி பாஸ்கர் எல்லா இடத்திலும் உயிர் தாங்கும் மரத்தில் தூங்கும்  ஆந்தையில் கழுத்து நோக நிற்கும் பறவையில் கனம் தாங்காத  புல்லில் அந்த நீரின் ஓட்டத்தில் குதிக்கும் அலையின் ஆட்டத்தில் மிதிபடும் மணலில் மற்றும் என் மூச்சில் இந்தப் பிரபஞ்ச இயக்கத்தில் எல்லாம் ஒரே உயிர் உயிர்த்துக்கொண்டே மரிக்கும் பிறந்தோர் பயணிப்பர் திசை எல்லாம் ஒன்றே! Full story

பாத யாத்திரை!

பாத யாத்திரை!
-சேசாத்ரி பாஸ்கர் இந்த வகை ஓட்டத்தை நான் ரசிப்பேன் ஒரே சீராய் ஒரே கோட்டில் நேர்படும் நடை!    அங்கங்கே நின்று ஒரு சிறு முத்தம்! பின் அதனதன் ஒவ்வோர் வழி  கை மேல் நடந்தால் உடல் கூசும்! ஊதிவிட்டால் காணாமற் போகும்  என்றும் தரும் உற்சாகச் சிந்தனை  யார் அதன் ... Full story

சாம்பார் சாதம்

-சேசாத்ரி பாஸ்கர் அப்போது எனக்குச் சுமார் பதினைந்து வயது இருக்கலாம். வறுமை சூழ்ந்த காலம். பள்ளி செல்வதற்கு ஒரு அரைக்கை வெள்ளை சட்டை; ஒட்டுப்போட்ட காக்கி நிஜார். அந்தத் துணி என்னிடம் இருந்த நாட்களை விடத் தையல்காரனிடம் அதிகமாக இருந்தது; எங்கெல்லாமோ கிழிசல். போன வருஷம் யாரோ படித்த புத்தகம் இந்த வருஷம் என் கையில். புதுப் புத்தகத்தில் என் பெயர் போட்ட நினைவே இல்லை. இந்தச் சோகத்தை இன்று என்னால் தாங்க முடியாது. அன்று சிறு வயதில் அது உள்ளே போகவில்லையோ என நினைக்கிறேன். அப்போது அதுதான் முதிர்ச்சியா ... Full story

பட்டணம் போகணும்

சேசாத்ரி பாஸ்கர்   என் அப்பா காலமாவதற்கு முன் அவருக்கு எப்படியாவது பென்ஷன் வாங்க கடும் முயற்சி செய்தேன் . கலெக்டர் முதல் கடை ஊழியன் வரை எல்லாரிடம் சொல்லியாகிவிட்டது . அவர் பணத்தை அவர் காண வேண்டும் என்ற ஆசை . ஏகப்பட்ட கடிதம் , தனி கோப்பு என்று எல்லாம் செய்தாகி பலன் இல்லை . கட் ஆப் எண்பத்தி ரெண்டு . ஒரு வருஷம் கூட .. சாரி என்றார்கள் . சார் , நாற்பது வருஷ சர்வீஸ் .என்றேன் .... கேஸ் போடு .... ஜட்ஜு ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.