Posts Tagged ‘தமிழ்த்தேனீ’

Page 1 of 1312345...10...Last »

கோதை ஆண்டாள் – 2

-தமிழ்த்தேனீ பாகம் 7 "நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் என்னும் பத்தாவது பாசுரத்திலே நாற்றத்துழாய் முடி நாராயணன் என்கிறாள். நாற்றம் என்றாலே நாம் மூக்கைப் பொத்திக் கொள்கிறோம்  தமிழைச் சரியாக அறியாமல். நாற்றம் என்றால் மணம்; துர்நாற்றம் என்றால்தான் மூக்கை மூடிக்கொள்ளவேண்டும். துழாய்முடி என்கிறாள் துளசியின் வாசனை கொண்ட  நாராயணன் என்கிறாள் அவனைப் போற்றினால் ஸ்வர்கம் நிச்சயம் அப்படி இருக்க கும்பகர்ணன் போல் தூங்கலாமோ என்கிறாள். ஆச்சரியமாக இருக்கிறது இருக்கும் இடத்திலே இருந்து கொண்டு நாராயணனின்  சுருள் கேசம் துளசி வாசம் என்று எப்படிக் கண்டுகொண்டாள் இந்த ஆண்டாள்? கும்பகர்ணனைப் பற்றிச் ... Full story

கோதை ஆண்டாள் – 1

-தமிழ்த்தேனீ "திருவாடிப்பூர நாயகி" ஆண்டாள் நினைவு ஶ்ரீவில்லி புத்தூர் திருவண்ணாமலை ஶ்ரீனிவாசன் திருக்கோயில் காண https://www.youtube.com/watch?v=6UWnTvJWtvc நானே எடுத்த காணொளி. ******** என் சொந்த  ஊர்  ஶ்ரீவில்லிபுத்தூர். ஶ்ரீவில்லிபுத்தூரில் முதல் வக்கீல் என்னும் பெருமை கொண்ட என் பாட்டனார்  என்  தந்தை திரு ஆர்  ரங்கசாமி  அவர்களின்  தகப்பனார் அங்கே ஆண்டாள் கோயிலில் நிர்வாகியாகக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த திரு ராமபத்ரன்அவர்கள். அவர்  செய்த  புண்ணியத்தாலோ  அல்லது என் முன்னோர்கள் செய்த புண்ணியத்தாலோ என் பெற்றோர் ஆண்டாளைப் பற்றி என் மனதில் விதைத்த நல்ல சிந்தனைகளை  ... Full story

நேரம் பொன்னானது!

நேரம் பொன்னானது!
-தமிழ்த்தேனீ அன்பு நண்பர்களே! உலகத்திலே நாம் எதை இழந்தாலும் மீண்டும் கிடைக்காதுதான். நல்ல உறவுகள், நல்ல நட்பு, நல்ல சிந்தனைகள், நல்ல நேரங்கள், நல்ல வாய்ப்புகள், ஆகிய எதை இழந்தாலும் மீண்டும் கிடைப்பது கடினம். அப்படிப்பட்ட வாழ்க்கையில் இறைவன் நம்மைப் பிறக்க வைக்கிறான் மீண்டும் அழைத்துக் கொள்கிறான். இந்த இடைப்பட்ட காலத்திலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் “நேரம் இருக்கிறதே” அதன் ஒவ்வொரு மணித்துளியும் பொன்னானது இழக்கக் கூடாதது. ... Full story

மரமேறிகள்!

-தமிழ்த்தேனீ தென்னை மரம் ஏறுபரை அழைத்தேன் தேங்காய்ப் பறிக்க. ஐந்து முறை அழைத்தும் வருகிறேன்...வருகிறேன் என்று சொல்லியே ஏமாற்றிக் கொண்டிருந்தார். ஆறாவது முறையாக வந்தார். ஏம்பா வரேன்னு சொல்லிட்டு வரமாட்டேங்கற, அதனாலே உனக்காகக் காத்திருந்து காத்திருந்து என் வேலையெல்லாம் தள்ளிப் போயிட்டே இருக்கே, ஏன் இப்பிடி செய்யறீங்க, இன்னிக்கு வரேன் அல்லது இன்னிக்கு முடியாது நாளைக்கு வரேன்னு சொன்னா நாங்களும் எங்க வேலையைப் பாப்போமில்ல, உனக்கு நான் கொடுக்கும் பணத்தில் ஏதேனும் குறை இருந்தா சொல்லு என்றேன். அதெல்லாம் இல்லே சார். நீங்க பணமும் குடுக்கறீங்க ... Full story

தாய்நாடு

-தமிழ்த்தேனீ “உலகத்தில் உள்ள அனைவரின் தாயையும் அம்மா என்று அழைக்கலாம் ஆனால் நம் தாயை அம்மாவென்று அழைக்காமல் பாசத்தோடு அன்போடு கவனியாமல் இருந்தால் அது நியாயமா? ----தமிழ்த்தேனீ. *** 102 வயதான ஒருவரைப் பேட்டிகாண ஒரு இளவயது நிருபர் செல்கிறார். நிருபர் : ஐயா உங்களை வணங்குகிறேன். இந்த வயதிலும் நீங்கள் இளமைத் துள்ளலோடு இருக்கிறீர்களே அதன் ரகசியம் என்ன? முதியவர்: நான் சிறு வயதிலிருந்தே மது, மாது, புகைப்பிடித்தல் போன்ற எந்தக் கெட்ட வழக்கமும் இல்லாதவன். அதுதான் காரணம் என் இளமைக்கும் ஆரோக்கியத்துக்கும்.... Full story

ஜாம்பவான்

ஜாம்பவான்
-தமிழ்த்தேனீ இன்று ஶ்ரீராம நவமி! ராமனின் கதை  அல்லது நினைவு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் ஹனுமான் இருப்பான்  என்பது ஐதீகம்.  அதனால் ராமாயணத்தை சொல்லும் பௌராணிகர்கள்  ஶ்ரீராமனின் படத்தின்  அருகே   ஹனுமனுக்கு  ஒரு மணை போட்டு  வைப்பார்கள். ஹனுமன் அங்கே வந்து அந்த  மணையில் உட்கார்ந்து ரசிப்பாராம். நாம் ஹனுமன் போல் அப்படிப்பட்ட மஹான் இல்லையென்றாலும் சாதாரண பாமரனாக பக்தி கொண்ட பாமரனாக ஶ்ரீராமனைப் பற்றிய நினைவுகளுடன் இருக்கும்போது நாமும் கூடவே இருப்போமா?  கூடியிருப்போமா  அப்படிக் கூடினால்  அது சத்சங்கம். அதனால்தான்  நான் சத்சங்கம் அமைவது  பாக்கியம்  என்பேன். விஸ்வாமித்ரர் ... Full story

பரிபூரணம்

-தமிழ்த்தேனீ 1. “காலடிகள்“ ஒருவர் எப்போதும் ராமநாம  ஸ்மரணையிலேயே இருப்பார்.  சிறந்த  ராமபக்தர்   அவர்  எப்போதுமே இறைவனை  வேண்டுவதால்   இறைவனும் அவரைக் காக்க  அவர்  கூடவே  நடந்து வருவாராம்.  அப்போது பின்னால் பார்த்தால் இரு காலடிகள் கூடவே வருவது  தெரியுமாம் அந்த  பக்தருக்கு. ஒரு நாள்  அவர்   காலில்  அடிபட்டு  நடக்க  ஸ்ரமப்பட்டுக் கொண்டிருக்கையில்  பின்னால் திரும்பி இறைவன் வருகிறானா  என்று பார்த்தாராம்.  அங்கே இறைவனின் திருவடிகளின்  தடம் காணவில்லை.   ஒரே ஒரு ஜோடிக் கால்தடங்கள் மட்டுமே  தெரிந்ததைப் பார்த்து  இறைவா என்னைக்  கைவிட்டு விட்டாயா   உன் காலடித் தடம் காணோமே  ... Full story

குருவும் சீடனும்!

குருவும் சீடனும்!
-தமிழ்த்தேனீ   சீடன்  : குருவே  நான்  என்னை உணர  என்ன செய்யவேண்டும்? குரு : நீ உன்னை உணர  உள்ளே பார்க்க வேண்டும். சீடன் :   உள்ளே பார்க்க  எப்படிப் பயிற்சி எடுக்க வேண்டும்? குரு : முதலில் வெளியே பார்க்கவேண்டும்  வெளியே பார்த்துப் பார்த்து  உள்வாங்கிக் கொண்டால் அதன் பிறகு உள்ளே பார்ப்பது சுலபமாகிவிடும். சீடன் :  அப்படியானால் ஆலயம் தொழவேண்டுமென்கிறீர்களா? குரு : ஆலயம் தொழலாம்  ஆனால்  ... Full story

“ கல்வி என்பது”

தமிழ்த்தேனீ மாணவர்களுக்கு முதலில் அவர்கள் மாணவர்கள் என்பதை வலியுறுத்தி அவர்கள் மனதில் ஒரு மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்றும், ஏற்கெனவே நம் முன்னோர்கள் கல்வி கற்க ஒரு மாணவன் எப்படி குருவை மதித்து ஒழுக்கமாக அடங்கி நடந்து கல்வியைக் கற்கவேண்டும் என்று முறையாக ஏற்படுத்தி வைத்திருந்ததை தெளிவாக எடுத்துச் சொல்லி ஒரு கட்டுப்பாடான கல்வி முறையை, ஒழுக்கத்தை போதிக்க வேண்டும். மாணவப் பருவம் என்பது குதூகலமான கள்ளமில்லாத குழந்தையைப் போன்றது அதிலே கவலைகளுக்கோ மன சஞலத்துக்கோ இடமில்லை நல்ல உணவு நல்ல ... Full story

“நளபாகம்”

-தமிழ்த்தேனீ இல்லத்தரசியை நாம் வாழ்க்கைத் துணை என்று கூறுகிறோம். ஆங்கிலத்திலே Better Half என்கிறார்கள். ஆக மொத்தம் கடைசிவரை நம்மோடு சுகதுக்கங்களில் பங்கு கொள்ளவேண்டும் என்னும் எண்ணத்தில் நாம் வாழ்க்கைத் துணை என்கிறோம். ஆங்கிலேயர்கள் வாழ்க்கையில் பாதி வரை வந்தாலே போதும் என்கிறார்கள் மீதியை நான் வேறு ஒரு Better Half ஓடு கழிக்கிறேன் என்கிறார்கள். நம் இந்து மதத்தில் நம் வீட்டு கிருஹ லக்ஷ்மி என்கிறோம்; மஹாலக்ஷ்மி என்கிறோம். ஆகவே கிருஹத்தையும் செல்வத்தையும் அவளிடம் கொடுத்துவிட்டு அவளிடம் கையேந்துவதையே பெருமையாக நினைக்கிறோம். என்ன செய்வது நாம் வாங்கி ... Full story

“உம்மாச்சி காப்பாத்து!”

“நமக்கு என்ன வேண்டும் என்றே அறியாத நாம் வரம் கேட்கிறோம்! என்ன வரம் கேட்பதென்றே தெரியாமல் வரம் கேட்கிறோம். நமக்கென்ன வேண்டுமென்று நம்மைவிட ஆண்டவன் நன்கறிவான். நமக்குக் கேட்கவும் தெரியவில்லை; இருப்பதன் அருமை தெரிந்து அனுபவிக்கவும் தெரியவில்லை. ஒன்றும் தெரியாத மானுடர் நாம் என்று சிந்தித்துக் கொண்டே இருந்தேன். அதன் விளைவாக எழுந்த ஒரு சிறுகதை இது.” - தமிழ்த்தேனீ *** "உம்மாச்சி காப்பாத்து!" எப்பவுமே குளிச்சிட்டு உம்மாச்சி படத்துகிட்டே போயி நெத்தியிலே குங்குமமோ திருநீறோ இட்டுண்டு கைகூப்பிண்டு என்ன சொல்லணும்னு தாத்தா சொல்லிக் குடுத்திருக்கேன் ... Full story

சைவமும் வைணவமும்!

-தமிழ்த்தேனீ  “ஜாதி  இருக்கிறது“ “சிலரை சீண்டினால் நாம் தாக்கப் படுவோம்  சீலரைச் சீண்டினால் நாம் ஆக்கப் படுவோம்”                    -தமிழ்த்தேனீ நிகமாந்த  மஹா தேசிகர்,  இராமானுஜர்  ஆகியோர் வைணவத்தையும்   வளர்க்க, பரப்ப  வந்த மகான்கள். ஆதி சங்கரர் சைவத்தைப் பரப்பவந்த மகான். இப்படிப் பல மஹான்கள் வாழ்ந்த  இந்தப் புனிதபூமியில்  இன்னமும்  சத்விஷயங்கள் எவை அசத் விஷயங்கள் எவை என்னும் ஞானத்  தெளிவில்லாமையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சற்றே ஞானத்தை நோக்கி நுகர்வோமா? “உறையின் அழகில் மயங்காது கத்தியின் கூர்மையை நோக்குவதுபோல் சான்றோரின் ... Full story

வயோதிக வரம்!

-தமிழ்த்தேனீ மிகவும் ப்ரயாசைப்பட்டு எழுந்து மெதுவே நடந்து  கண்ணாடி முன் நின்றார்  சபேசன். கண்ணாடியைப் பார்த்தவருக்கு  அதிர்ச்சி!  பத்து நாளைக்குள்ளே  இப்பிடியா மாறிப் போய்ட்டேன். கண்ணெல்லாம் குழி  விழுந்து ரப்பையெல்லாம் வீங்கிக்  கன்னம் ஒட்டிப் போய்  முகவாய்க்கட்டை  நீண்டு  முகமே சிறுத்து என்ன ஆச்சு! ஒரே ஒரு வைரல் இன்பெக்‌ஷன் காய்ச்சல் இப்படி ஆக்கிவிடுமா?  சரியான  நேரத்துக்கு மருத்துவரிடம் காட்டி வைத்தியம் செய்துகொண்டாயிற்று. எப்போதுமே  காய்ச்சல் வந்தால் ரெண்டே நாளிலே குணமாகி அவர் மீண்டும் தெளிந்துவிடுவாரே. ஓ வயோதிகம்!   அதிக வயதானாலே வயோதிகம்தானே!  இளமை அது போய் முதுமை ... Full story

ஜெயலலிதா

ஜெயலலிதா
-தமிழ்த்தேனீ இவரைப் போல் படித்த  தைரியமான  விவேகமுள்ள  நிர்வாகத்திறன் படைத்த   மனதிடமுள்ள ஆற்றல் நிறைந்த  முதல்வர் இனிக் கிடைப்பாரா  தமிழ் நாட்டுக்கு…?  இறைவன்  யோசித்திருக்க வேண்டும். இறைவன் எப்போதுமே நல்லவர்களைத்தான்  தேர்ந்தெடுத்து சீக்கிரம் அழைத்துக் கொள்கிறான். அவருக்கு நல்லதைச் செய்துவிட்டான் இறைவன்;   ஆனால் நாட்டுக்கு? வெற்றி மட்டுமே கண்டு வந்த   உண்மைக்கே  உண்மையான உன்னை  வெற்றி கொண்டது யார்? எதையும் தாங்கும் உன் இதயம் உன்னை ஜெயிக்க யாரால் முடியும் என்றெண்ணிப் பூரித்தோமே உன்னை ஜெயித்தது யாரென்று சொல்லாமல் உன் புன்னகையை உறைய வைத்தாயே! உண்மைக்கு உரைவடித்த நீ புன்னகையை ... Full story

இடைத் தரகர்!

-தமிழ்த்தேனீ எப்போதுமே நேரிடையான தொடர்பு நல்லது. இடைத் தரகர்களை நாடினால் அவர்கள் இஷ்டப்படி நம்மை ஆட்டுவிப்பார்களே தவிர நம் இஷ்டத்துக்கு எதுவும் அவர்கள் செய்ய மாட்டார்கள். இது அனுபவ பூர்வமான உண்மை. அதனால் எப்போதுமே நேரிடையான தொடர்புகளையே நான் கொண்டிருக்கிறேன். இப்போதைய நிலையில் சமீபத்தில் ஒரு இடத்துக்குச் சென்றிருந்தேன் அந்த இடத்தில் ஒரு பெரிய உயரமான பெட்டி வைத்திருந்தார்கள். அதிலே குறிப்பிட்ட காசைப் போட்டால் அதிலே இருக்கும் கோகா கோலாவோ, அல்லது பெப்சியோ நம் கைக்கு அளிக்கும். அந்த இயந்திரத்தில் காசைப் போட்டுவிட்டு என் பேரன் கேட்ட லிம்கா ... Full story
Page 1 of 1312345...10...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.