Posts Tagged ‘திருச்சி  புலவர் இராமமூர்த்தி’

சேக்கிழார் பா நயம் – 29

-திருச்சி புலவர் இராமமூர்த்தி திருக்கைலாயத்தில்  அருளிய வாக்கின் வண்ணம் , சுந்தரமூர்த்தி  ஸ்வாமிகளை  உரிய காலத்தில் தடுத்தாட் கொள்ளவே , அவர் திருமணநாளில்  சிவபிரான்  முதிய  அந்தணராக எழுந்தருளினார்! அங்கே சுந்தரர்  தம் வழிவழி  அடிமை  என்ற பழைய மூல ஓலை ஒன்றைக் காட்டி  அவையோரிடம்  வாதிட்டு வென்றார்! அவர்,  ‘’சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் ஆரூர்ப்பித்தனாகிய தமக்கு வழிவழிஅடிமை!’’ என்று  எழுதப்பெற்ற மூலஓலையைக்   காட்டி வழக்கில்  வென்றார். அவ்வாறு தம்  அகடிதகடனா சாமர்த்தியத்தால்    காட்டிய  மூலஓலை, முன்னோர்  எழுத்துடன்  ஒப்பிட்டுப்பார்க்கப்    பெற்றது. எதையும்  சாதித்  தருளும் இறைவன்  செயலை  மீண்டும்   ... Full story

சேக்கிழார் பா நயம் – 28

- திருச்சி  புலவர் இரா.  இராமமூர்த்தி  சுந்தரரைத்  தடுத்தாட்  கொள்ள இறைவன் செய்த திருவிளையாடல் நிகழ்ச்சி, பொது மன்றில்  ஆவணம் எதையும் சரியான வகையில் பணிந்திடுதல்  வேண்டும் என்ற வழக்கு மன்ற நடைமுறையை  உறுதி படுத்துகிறது. வழக்கில் ஈடுபட்ட வாதியாக சிவபெருமான், வழக்கின் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் பிரதிவாதியாக  சுந்தரர், வழக்கை நடத்தும் ஊர்ச்சபையோராக வெண்ணைநல்லூர் அந்தணர்  என்ற மூவகையினருக்குள் இந்த வழக்கு நடைபெற்றது. அந்த வழக்கில், சேக்கிழார் வழங்கும்  இப்பெரிய புராணத்தைப் படிப்போர் அனைவரும்  மறைமுகமாகப் பங்கேற்றுள்ளனர்! இந்த வழக்கைக் கொண்டுவந்த சிவபெருமான் தம்மை மறைத்துக் ... Full story

சேக்கிழார் பா நயம் – 26

-திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி . ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள் காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் என்ன "முன்னே மூட்சியிற் கிழித்த ஓலை படியோஓலை மூல ஓலை மாட்சியில் காட்ட வைத்தேன்" என்றனன் மாயை வல்லான். அடிமை ஓலை உண்டு என்று முதிய அந்தணர் கூறக் கேட்ட  சுந்தரர்  ‘’ஆளோலை உண்டு!’’  என்று கூறிய  இவ்வந்தணர் மொழியின் உண்மையை அறிந்து கொள்ளும் அவாவினராய் அவரைநோக்கி `ஐயா! அடிமை ஓலை இருக்கிறதென்று கூறினீரே. அதனைக் காட்டுக! உண்மையை அறிவேன்` என்றார். `நீ அவ்வோலையைக் காணுதற்குத் தகுதி ... Full story

சேக்கிழார் பா நயம் – 23

-திருச்சி புலவர் இரா,இராமமூர்த்தி சடையனார் மாதினியர் மைந்தராகத் தோன்றி, நரசிங்க முனையரையர் வளர்ப்பு மகனாகத் திகழ்ந்த சுந்தரர் மணப்பருவம் அடைந்தார். அவர்தம் பெற்றோர் விருப்பத்தின் வண்ணம் புத்தூர் சடங்கவி சிவாச்சாரியார் திருமகளை மணம் பேசினர். அவ்வாறே திருமண ஏற்பாடுகளை அரசரும் செய்தார்! முன்பே திருக்கயிலையில் சுந்தரர் இறைவனுக்கு மலர்கள் பறிக்க நந்தவனம் வந்தபோது, அங்கு வந்த அம்மையின் தோழியர் இருவர்பால் மனம்போக்கினார்! அதனால் அவர்களை இறைவன் தென்திசையில் பிறந்து, இல்லற இன்பம் துய்த்து, பின்னர் கைலை வந்தடையுமாறு அருள் புரிந்தார்! திருக்கயிலை மலை வாழ்வை இழந்து , மானுடராகி ... Full story

சேக்கிழார் பா நயம் 20

- திருச்சி புலவர் இராமமூர்த்தி இறைவன் திருவருள் விருப்பத்தால் மாதவம் செய்த தென்திசையில், திருமுனைப்பாடி நாட்டில், திருநாவலூரில்  சடையனார்க்கும் இசைஞானியார்க்கும்  மைந்தராக,  சுந்தரர் திருவவதாரம் செய்தார். அவர் அவதாரம் செய்த நாடு  தனிச் சிறப்புப் பெற்றது. இந்நாட்டில்தான் அப்பரடிகள் அவதரித்தார். இந்நாட்டில்தான் சைவ சமய சந்தானாசாரியார்களாகிய ஸ்ரீ மெய்கண்டாரும் ஸ்ரீ அருள்நந்தி சிவாச்சாரியாரும்  அவதாரம் செய்தனர்! இந்தச் சுந்தரர் சிறு குழந்தையாகத் தெருவில் விளையாடிய போது , நகர்வலம் வந்த அரசராகிய நரசிங்க முனையரையர், அக்குழந்தையின் ... Full story

சேக்கிழார் பா நயம் – 18

-திருச்சி புலவர் இரா இராமமூர்த்தி கைலையில் இறைவன் சுந்தரமூர்த்தி சுவாமிகளை, அவர் மாதர்களுடன் கலந்து வாழும் பொருட்டுத் தென்பாரதத்தை நோக்கிச் செல் என்று ஆணையிட்டார்! அவ்வகையில் சுந்தரர் திருமுனைப்பாடி நாட்டில் அவதரித்தார்!அந்த நாட்டின் சிறப்பை சேக்கிழார் பெருந்தகை பாடுகிறார்! சிவபிரான் தம் முடிமேல் கங்கை, பிறை, பாம்பு, கொன்றை மலர் ஆகியவற்றைத் தாங்கியவர்! இத்தொடரால் சிவபெருமானின் அருஞ்செயல்கள் கூறப்பெறுகின்றன! வானிலிருந்து விரைந்து ஓடிப்பாய்ந்த கங்கையின் வேகத்தைத் தடுத்துத் தம் சடையின் சிறுபகுதியில் தாங்கி,வழிந்து நாடெங்கும்ஓட விட்டார்! இது குறிப்பாக கைலை மலையிலிருந்து கீழிறங்கித் ... Full story

சேக்கிழார் பா நயம் – 14 

======================= திருச்சி புலவர் இராமமூர்த்தி --------------------------------------------------   திருவாரூரில் மனுநீதிச் சோழன் மைந்தன் ஏறிச்  சென்ற தேர்க்காலில் அடிபட்டு மரணமடைந்த கன்றுக்காக அரசன் மனம் கலங்குகிறான். அப்போது மறையோர் இதற்குப் பிராயச்சித்தம் என்ற கழுவாயை மறைநூலில் சொன்னபடியம், மனுநீதி முறைப்படியும் செய்தால் அரசன் மைந்தன் செய்த தவறுக்குக்  கழுவாய்  தேடலாம் என்கிறார்கள். மறைநூலையும் மனுநீதியையும் நன்கறிந்த மன்னன், அமைச்சர்களும் வேதியர்களும் கூறியதை ‘ வழக்கு’என்றே ஒத்துக்கொள்ள வில்லை! அதனைச் சழக்கு என்று இகழ்கிறான். ‘’நான் மைந்தனை ... Full story

சேக்கிழார்  பா நயம் – 8

======================= திருச்சி  புலவர் இராமமூர்த்தி --------------------------------------------------   நம்  நாட்டு வயல்களில் எரு விட்டு, நெல்நாற்றை நட்டு , நீர்பாய்ச்சி வளர்க்கிறோம். அந்த நாற்றுக்களில் பால் பிடித்து உயர்ந்து ,நெல் காய்த்து   முற்றிக்  கதிர்கள்  பெருத்து விளங்கும். பால் பிடித்த காலத்தில் நெற்பயிர் தலை நிமிர்ந்து நிற்கும். நெல் முற்ற, முற்றப்  பெரிய கதிர்கள் உருவாகும். அப்போது நெற்கதிரின் கனம் தாங்காமல்  பயிரே  தலை  சாய்ந்துத்  தரையை நோக்கும்.இதனைத்   திரைப்படங்களில்,... Full story

சேக்கிழார் பா நயம் – 7

====================== திருச்சி புலவர் இராமமூர்த்தி. ---------------------------------------------------   இதற்கு  முன் எழுதிய கட்டுரையில்  சேய்மையிலிருந்து அண்மைநோக்கி வரும் காட்சியின்  அழகு கூறப்பெற்றது. இனி, இக்கட்டுரையில்  அண்மையிலிருந்து  சேய்மையை  நோக்கும் காட்சி கூறப்பெறுகிறது.  திருக்குறளிலும் , இத்தகைய காட்சி உண்டு. ஒரு குளத்தில் மீன்கள் அங்குமிங்கும் நீந்துகின்றன. அந்தக் குளத்தருகே இரவுநேரத்தில் பெண்ணொருத்தி வருகிறாள். அக்காலத்து நீரினுள்  எட்டிப் பார்க்கிறாள். அந்தப் பெண்ணின் முகம் நீரில் தெரிகிறது. அருகில் வானத்து நிலவின் பிம்பமும் தெரிகிறது. அந்த நீரில் மீன்கள் அங்குமிங்கும் ... Full story

சேக்கிழார்  பா நயம் – 6

திருச்சி  புலவர் இரா.இராமமூர்த்தி ------------------------------------------------------------   திருக்குறளில் காமத்துப் பாலில் , பாடல் ஒன்றுண்டு! அக்குறட்பாவில் தலைவன் தலைவியை சற்றுத் தொலைவிலிருந்து பார்க்கிறான்! அங்கிருந்த உருவத்தை,  தெய்வத் தன்மை வாய்ந்த அணங்கோ? அழகிய மயிலோ? என்று காட்சி யளவில் கருதுகிறான். இதுவரை தான் கண்டறியாத கவர்ச்சியும், உருவும் கொண்டு தன்னை மயக்கும் உருவம் அணங்கோ?  என்று தொலைவிலிருந்து கண்ட அவன் எண்ணுகிறான்; பின்னர் இன்னும் நெருங்குகிறான்.  செடி கொடிகள் இடையே நிற்கும் அவள் உருவம் ஒயிலாக வளைந்து ... Full story

சேக்கிழார்  பா நயம் – 3

திருச்சி புலவர் இராமமூர்த்தி. --------------------------------------------------   திருத்தொண்டர் புராணம் சேக்கிழார் பெருந்தகையின் பேரறிவுத் திறனை  வெளிப்படுத்தும்  பேரிலக்கியமாகும். இந்நூலின்  பல பாடல்கள்  சேக்கிழாரின் கற்பனைத் திறனை நமக்கு அறிவிக்கின்றன. பெரிய புராண வரலாறு , கைலை மலையில் தொடங்கி கைலை மலையில் நிறைவுறும் காப்பியம் ஆகும். அக்கைலை மலையின் சிறப்பைத்  தொடக்கத்தில் பலவாறு உரைக்கிறார் புலவர். கைலை மலையைச் சென்று சேர்ந்த கரியநிறக்  காக்கையும் பொன்னிறம் பெற்றுப் பொலியும்  என்று யாப்பருங்கலக் காரிகை கூறும். ‘’ கனகமலை ... Full story

சேக்கிழார்  பா நயம் – 2

======================== திருச்சி புலவர்  இராமமூர்த்தி ----------------------------------------------------   சிவபெருமான்  என்ற பரம்பொருள்  சொரூபம் , தடத்தம்  என்ற இருநிலைகளில் இருப்பார். அவற்றுள்  சொரூபம்  என்பது  உலகத்தாரால்  உணர்ந்து  கொள்வதற்கு  அரிய உயர்நிலை.  அருவம்  உருவம்  அருவுருவம்  என்ற வடிவங்களுடன் எங்கும் நீங்காமல் உறைபவன் சிவன்.அவ்வாறு எங்கும்  உறைகின்றார்  சிவபெருமான்  என்று அனைவரும் வழி படும் போது, பெருமானே  நீ   ஒளித்திருமேனி  தாங்கி அருட்பெருஞ்ஜோதியாய் விளங்கி  அருவமும் ... Full story

சேக்கிழார் பாநயம்  -1

திருச்சி  புலவர் இராமமூர்த்தி -----------------------------------------------------     ''மலர் சிலம்படி ''    ********************                           சைவத்திருமுறைகள் பன்னிரண்டு. அவை மூவர் தேவாரமும் , திருவாசகமும்  ஒன்பதின்மர் பாடிய ஒன்பதாம் திருமுறையும், திருமந்திரமும் பன்னிருவர்  பாடிய பதினோராம் திருமுறையும் , சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்ற பன்னிரண்டாம் திருமுறையும் ஆகும். இவை  சிவபெருமானைத் தோத்திரம் செய்யும் பாடல்களும் ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.