Posts Tagged ‘திருச்சி புலவர் இராமமூர்த்தி’

சேக்கிழார் பா நயம் – 30

- திருச்சி புலவர் இராமமூர்த்தி சுந்தரரைத்  திருமணத்தின் போது  தடுத்தாட்கொண்ட  முதிய அந்தணர்  வேடத்தில்   வந்த   இறைவன் தம்  வழக்கில்  வென்றார்! அவர் சுந்தரரின் தந்தைக்குத்  தந்தையின் அடிமை  என்றும் , தம் திருப்பெயர்  ஆரூரன்  என்றும் கூறி, அதற்குரிய  ஆவணங்களை  வழங்கினார். அவரை அறியாத சபையினர் அவர் வாழுமிடத்தைக் காட்டுமாறு வேண்டினர்! அவரோ நேராக அவ்வூர்க்  கோயிலாகிய  திருவருட்டுறையுள்  அந்தணர்களை சுந்தரரையும் அழைத்துச் சென்று  மறைந்தார்.   திருவருட்டுறை - திருவெண்ணெய்நல்லூர்க்கோயிலின் பெயர். திருப்பெண்ணா கடத்திலே திருத்தூங்கானைமாடம் என்பதும், திருச்சாத்த மங்கையிலே அயவந்தி என்பதும் ... Full story

சேக்கிழார் பா நயம் -19

-திருச்சி புலவர் இராமமூர்த்தி கைலை மலையிலிருந்து தமிழகத்துக்கு இறைவனால் அனுப்பப் பெற்ற சுந்தரர், அவதாரம் செய்த திருமுனைப்பாடி நாட்டினைப்பற்றி கடந்த கட்டுரையில் பார்த்தோம். இப்போது அவர் திருஅவதாரம் செய்த சிறப்பைக் குறித்துக் காண்போம்! தமிழ்நாட்டின் வேதியர் குலத்தின் வகைகள் உண்டு! நால்வேதங்களையும் ஓதி அவை கூறும் நன்னெறியில் வாழ்ந்து வரும் வேதியர் ஒருவகை! வேதம் வேதியர்கள் பிரமனது முகத்தில் தோன்றியவர்கள் என்று கூறுகிறது! அவ்வகையில் பிரமன் முகத்திலும், தோளிலும், வயிற்றிலும், தொடையிலும் வேதியர், அரசர், வணிகர், வேளாளர் ஆகியோர் தோன்றினர். இவை பிறந்த ... Full story

சேக்கிழார் பா நயம் – 15 

-திருச்சி புலவர் இராமமூர்த்தி முன்னர் ‘வளவ நின் புதல்வன் ‘ என்ற பாடலில் கொலைக் குற்றம் செய்தவனுக்கு ஆதரவான நீதி மன்ற வாதங்களை எடுத்துரைத்த அமைச்சரின் தொகுப்புரையைக் கண்டோம். அதனைப் போலவே கொலை செய்யப்பட்ட ஆன்கன்றுக்கு ஆதரவாக அரசன் கூறிய சட்டம் மற்றும் நீதி சான்ற நுட்பம் மிக்க வாதங்களைச் சேக்கிழார் பாடிய சிறப்பை இக்கட்டுரையில் காணலாம். மனுநீதிச் சோழன் அமர்ந்திருந்த அறைக்குள் எந்த  அவலவோசையும், இதுவரை கேட்டதில்லை. புதிதாக அரசன் செவியில் விழுந்த ஆராய்ச்சிமணி யோசை அரசனை, திடுக்கிடச் செய்தது. இந்த ஓசை, அரசனுக்குப் ... Full story

சேக்கிழார் பா நயம் – 9

புலவர் இராமமூர்த்தி   திருவாரூரில் வாழ்ந்த வேளாண்  குடியினரைப் பற்றிச் சேக்கிழார்  இப்பாடலில் கூறுகிறார்!  அவர்கள்தம்  நிலத்தில் விளைந்த பயிர்களில் ஆறில் ஒரு பங்கினை உடனே அரசுக்குச்  செலுத்திவிடுவர். அதன் பின்னர் எஞ்சிய விளை பொருளைக் கொண்டு ஐவகைக் கடமைகளை செய்தனர். ஐவகைக் கடமைகள் யாவை? அவை முன்னரே திருவள்ளுவரால் கூறப்பெற்றன. அவை, ‘’தென்புலத்தார்,    தெய்வம்,   விருந்து, ஒக்கல்,   தான் என்றாங்கு   ஐம்புலத்தார்   ஓம்பல்  கடன்!’’... Full story

சேக்கிழார்  பா நயம் – 5

====================== திருச்சி புலவர் இராமமூர்த்தி -------------------------------------------------   தென்னாட்டின்  தனிச் சிறப்பு இங்கே காவிரி பாய்ந்து வளந்தருவதே! இக்காவிரி பாயும் நாட்டில் தான் சுந்தரரின் அவதாரமும், சைவப் பணிகளும்  வளர்ந்தன! கங்கைக்கு நிகரான காவிரி பாயும் சோழநாடே  சுந்தரரின் வாழ்விடமாகும். ‘’சோழநாடு சோறுடைத்து‘’ என்ற அனுபவ மொழி, சித்தாந்த நெறியில்  ஆன்மலாபத்தையும்  குறிக்கும். குடகு நாட்டில் தோன்றி தமிழ்நாட்டில் பாய்ந்து சோழநாட்டை வளங்கொ ழிக்கும்  பூமியாய் மாற்றும் காவிரி,  பெரியபுராணத்தில் திருநாட்டுச்  சிறப்பில்  பாடப் பெறுகிறது.... Full story

சேக்கிழார் பா நயம் – 4 

==================== திருச்சி புலவர் இராமமூர்த்தி. -------------------------------------------------   கைலையில் தொடங்கிய வரலாறே  பெரிய புராணம். கைலை மலையில் சிவபிரான் ஒருநாள், தம்  அழகிய திருமேனியைக் கண்ணாடியில்  கண்டு மகிழ்ந்தார். எல்லாரும் காண இயலாத வகையில் அருவமாக இருந்த பெருமான்,மலையுருவிலும், சிவலிங்கத் திருமேனியிலும் தம்முருவைக் காட்டிய  பின், நாம் காணத்தக்க மனித வடிவில் தம்மையே கண்ணாடியில் கண்டார். இந்த வடிவமே உலகோர் கண்டு மகிழும் நடராசத் திருமேனியாகத்  திருவாலங்காட்டிலும்,சிதம்பரத்திலும்,மதுரையிலும்,நெல்லையிலும், குற்றாலத் திலும், விளங்கின! கைலையில் கண்ணாடியில் கண்ட வடிவம் மிகவும் அழகாகத்  தோன்றியமையால், அதனைச் ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.