Posts Tagged ‘திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி’

சேக்கிழார் பா நயம் 34

திருச்சி  புலவர் இரா. இராமமூர்த்தி சுந்தரமூர்த்தியாரை, இறைவன்  திருவருட்டுறையமைந்த  திருவெண்ணை நல்லூரில் ஓர் அந்தணராக வந்து  ஆட்கொண்டருளியபின்    இறைவன் மேல்  அருச்சனை யாகிய சொற்றமிழ்ப் பதிகம்  பாடினார்!  பின்னர் அங்கிருந்து  புறப்பட்டுத் திருநாவலூர் கடந்து  திருத்துறையூரில்  தவநெறி தந்தருள வேண்டிப்   பாடினார். பின்னர் பெண்ணை  யாற்றைக்   கடந்து திருத்தில்லையில்  நடமாடும் கூத்தப் பிரானின்   திருப்பாதம்  பணிய   எண்ணினார்.  தில்லை  செல்லும் ... Full story

சேக்கிழார்  பா நயம் – 33 (அயலோர்)

சேக்கிழார்  பா நயம் - 33 (அயலோர்)
 திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி சேக்கிழார்  பா நயம் - 33 (அயலோர்) சேக்கிழார்  அருளிய திருத்தொண்டர் புராணத்தைக்  கற்போருக்கு  ஐயங்கள் ஓரிரண்டு தோன்றலாம். அவ்வையங்கள் எல்லாருக்கும் தோன்றுவனவே! கயிலையிலிருந்து  தென்திசையில்  தோன்றி வளர்ந்த சுந்தரரும், அங்கு  மலர்த்தொண்டு புரிந்த  கமலினியாரும்  அநிந்ததையாரும், தமிழகத்தில் பரவையாரும்  சங்கிலியாருமாய்த் தோன்றி, சிவத்தொண்டு  புரிந்து மீண்டும் சிவலோகம்   எய்தினர்.   இறைவனால்  தடுத்தாட்கொள்ளப்பெற்ற சுந்தரரோ, சடங்கவியார் மகளை விட்டு  நீங்கித்  தலந்தோறும்    பதிகப்  பாடல்கள் பாடியவாறே  சென்றார்! ... Full story

சேக்கிழார் பா நயம் (32)

-திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி திருத்தொண்டர் புராணத்துக்குத், திருத்தொண்டத்  தொகை   முதல் நூல்; திருத்தொண்டர் திருவந்தாதி   வழிநூல்!  இவ்வாறு சேக்கிழார்    இறைத் தொண்டர்  பலரின் வரலாற்றைக் கூறினாலும் , சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளின்  வரலாற்றின்  வழியிலேயே  ஏனையோர் அருள்   வரலாறுகளையும் கூறுகிறார். அவ்வகையில் இந்நூலின் கதைத்தலைவர்  சுந்தரமூர்த்தியே ஆவார்! கைலையில்  தொடங்கித்  தென்னாட்டில்  தொடர்ந்து மீண்டும் கைலையிலேயே நிறைவுறும்  சுந்தரரின்  அருள்வரலாற்றின் இடையே  அறுபத்துமூவர் அருள்வரலாறும்   அமைந்துள்ளன! அவ்வரலாறுகளில்  தம் ... Full story

சேக்கிழார் பா நயம் – 31

- திருச்சி   புலவர் இரா. இராமமூர்த்தி இறைவன்   திருவருள்  நிகழ்ச்சிகள்  உலகில்  நிகழும்போது,  இயற்கையாகவே இசைக்கருவிகள்  ஆர்த்து ஒலிக்கும். திருஞான  சம்பந்தர்  அவதரித்த    நேரத்தில், மங்கல முழக்காகிய தோற்கருவியும் , தாளமாகிய கஞ்சுகக்கருவியும், சங்கு, படகம், தாரை முதலான காற்றுக் கருவிகளும்  இசைப்பார்  இல்லாமல்  தாமாகவே   வானில்  எழுந்து  ஒலித்தன! இதனை,  ‘சங்கபட கங்கருவி தாரைமுதலான, எங்கணுமி யற்றுபவரின்றியு மியம்பும்,  மங்கல முழக்கொலி'’  என்று  சேக்கிழார் பாடுவார்.   முன்னரே  , ’மாதவம் புரி  தென்திசை  வாழ்ந்திடத்  தீதிலாத்திருத்  தொண்டத்தொகைதர   வந்த  சுந்தரரைத்  தடுத்தாட்கொண்ட ... Full story

சேக்கிழார் பா நயம் – 25

 திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி சிவபிரான் முதிய அந்தணனாகி ,சுந்தரர் திருமணம் நடந்த  புத்தூர்  நோக்கி  வந்த சிறப்பை முன்பு கண்டோம்!  இங்கே அவர் சுந்தரரைத் தடுத்தாட்கொள்ள ஆடிய அழகிய நாடகத்தின் தொடக்கத்தைக் காண்போம்.  சுந்தரர் புத்தூர் சிவவேதியர் சடங்கவியார் மகளைத் திருமணம் செய்துகொள்ள  வந்த திருமண மண்டபத்தில் எழுந்தருளிய முதிய அந்தணர், ‘’யாவரும் கேளுங்கள்! இங்கே திருமணம் புரிந்துகொள்ளும்  நாவலூரருக்கும் எனக்கும் இடையே ஒருவழக்கு உள்ளது! அதனை முடித்துக்கொண்டு இவர்  திருமணம் புரிந்துகொள்ளட்டும்’’    என்றார்! இதைக்கேட்ட அந்தமண்டபத்தில்  கூடியிருந்த சான்றோர்கள் மிகவும் வியப்படைந்தனர். ‘’அந்தணர்  ... Full story

சேக்கிழார் பா நயம் – 24

-திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி கயிலாயத்தில் சுந்தரருக்கு வரமளித்தவாறே தென் திசையில் தமிழ்நாட்டில் மையல் மானுடமாய் மயங்கும்போது தடுத்தாட் கொள்ள , சிவபெருமான் புத்தூரில் எழுந்தருளினார். அப்போது   ஒரு மூத்த அந்தணர் வடிவு  கொண்டு சுந்தரர் திருமணம் நடைபெறும் இடத்தில் தோன்றினார்!  அவ்வாறு தோன்றும்  பொழுது, மேலே மிகவுயர்ந்து , கீழே மிகவும் தாழ்ந்து  பிரமனும் திருமாலும் மிக முயன்றும் அடி  முடி  தேடவரிய,  மிகப்பெரிய அனல் உருவத்துடன் வந்த சிவபிரான்,எளிய அந்தக் கோலத்தில் தம்மை ஒடுக்கிக் கொண்டு தோன்றினார். மிகப்பெரிய படைப்புக் கடவுளும், காக்கும் கடவுளும் ... Full story

சேக்கிழார் பா நயம் – 22

-திருச்சி புலவர். இரா. இராமமூர்த்தி சுந்தரருக்குத் திருமணக்கோலம் புனைவித்து, உயர்ந்த குதிரையின் மேலேற்றி ஊர்வலம் வந்தார்கள்! அந்த ஊர்வலத்தில் உறவினரும், நட்பினராகிய அரசரைச் சார்ந்தோரும் தொடர்ந்து வந்தனர்! அவ்வாறு வந்தோர் தத்தமக்கு உரிய தேர், யானை, குதிரை முதலிய வாகனங்க ளிலும், வண்டிகளிலும் வந்தார்கள்! சிறந்த திருமணக் கோலத்துடன் திருமணம், நிகழும் புத்தூரை நோக்கி அனைவரும் வந்தனர்! புத்தூர், மணமகளின் தந்தை சடங்கவி சிவாசாரியாரின் ஊர் ஆதலால் அங்கேதான் திருமணம் புரிவித்தனர்! இங்கே சேக்கிழார் ஒருகுறிப்பைத் தருகிறார்! அன்றுமுதல் புத்தூரின் பெயர்’’மணம் வந்த புத்தூர் ‘’ ... Full story

சேக்கிழார் பா நயம் -21

-திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருமணத்துக்குப் புறப்பட்ட காட்சியை, சேக்கிழார் மிகவும் நயம்படப் பாடுகிறார்! சுந்தரர் அந்தணர் குலத்தில் அவதரித்தாலும், அரசரின் வளர்ப்பு மகனாக வளர்ந்தார்! அவருக்கு அந்தணர்குல வழக்கப்படி, ஜாதகரணம், நாமகரணம், உபநயனம் ஆகிய சடங்குகளை அவர் பெற்றோர் நிறைவேற்றினர். அதன் பின் அவர் திருமணத்துக்கு ஏற்ற பருவம் அடைந்த பின் அவருக்கு உரிய மணமகளாக புத்தூர்ச் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைக் குலம், கோத்திரம் ஆகியவற்றை ஆராய்ந்து பொருத்தம் பார்த்து, இருவருக்கும் பொருந்திய மணநாள், முகூர்த்த நேரம், இவற்றைக் ... Full story

சேக்கிழார் பா நயம் – 17

-திருச்சி புலவர் இரா இராமமூர்த்தி ======================= திருவாரூரில் தேவஆஸ்ரய மண்டபம் எனப்படும் தேவாசிரிய மண்டபம் உள்ளது.இறைவனை ஆஸ்ரயித்த அடியார்கள் நிறைந்த மண்டபம் ஒன்றுண்டு!அந்த மண்டபத்து அடியார்களின் அருளைப் பெற, சுந்தரர் விரும்பினார்!அதன் திருவாயிலில் தேவர்களும் முனிவர்களும் அடியார்களை வழிபடக் காத்திருப்பார்கள்!அங்கேதான் சுந்தரர் திருத்தொண்டத்தொகை என்ற,பெரியபுராணத்தின் வழிநூலைப் பாடினார்! அங்குள்ள அடியார்களின் சிறப்பினை சேக்கிழார் ஆறு திருப்பாடல்களால் விளக்குகிறார். இறைவனே விரும்பி யழைத்துப் பெருமைப் படுத்திய சிறப்பும்,சரியை நிலையில் இறைவனுக்குத் திருத்தொண்டு செய்யும் சிறப்பும் பெற்றவர். தம் திருநீறு பூசியே திருமேனியின் ஒளியால் எண்டிசையையும் ... Full story

சேக்கிழார் பா நயம் – 16 (அந்நிலையே)

-திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி உலகில் நிகழும் இயல்பான நிகழ்ச்சிக்கு மாறுபட்ட நிகழ்ச்சி திருவாரூரில் நிகழ்ந்தது! தொடக்கம் இயல்பான உலகியலாக இருந்தாலும் தொடர்ச்சி இயல்புக்கு மாறுபட்டதாக நிகழ்ந்து , இறையருள் நிகழ்ச்சியாக நிறைகிறது. ஆரூர்  மன்னன் வாழ்வில் கண்ட அதிசயம், அவனுக்கும் நமக்கும் இறையருளின் விளக்கமாக அமைந்தது என்பதை அடுத்து நிகழ்ந்த அதிசய நிகழ்ச்சி வழியே அறிந்து கொள்கிறோம்! ஆம், தேர்ச்சக்கரத்தில் அடிபட்டு இறந்த கன்று உயிர் பெற்று எழுகிறது! அப்போதே மன்னன் தேர்க்காலால் ஊரப்பட்ட   மகனும் உயிர்த்து எழுகின்றான்! தொடர்ந்து அமைச்சனும் உயிர் பெற்று ... Full story

சேக்கிழார்   பா நயம் – 13  

திருச்சி புலவர்.இராமமூர்த்தி ======================== அடுத்து, திருவாரூரில் ஆண்ட மனுநீதிச் சோழனின் சிறப்பு கூறப்படுகிறது! திருவாரூர் நகர்ச் சிறப்பு  பெரியபுராணத்துக்கு எவ்வாறு துணை புரிகிறது என்பதைச் சில அகச்சான்றுகளால் விளங்கிக்  கொள்ளலாம்!  திருவாரூரின்  பெருமைக்கு   முதற்காரணம். அந்நகருக்குத்  திருமகளே வந்து சிவபெருமானை வழிபாடு செய்தருளினாள்  என்பதாம். அதற்கு ஆதாரம் திருவாரூரில் பெரிய திருக்கோயிலின்  பெயரே கமலாலயம் என்பதாம்!  இதனைச் சேக்கிழார், ‘’சொன்ன நாட்டிடைத்  தொன்மையின்  மிக்கது மன்னு  மாமல  ராள்வழி  பட்டது ‘’ என்று ... Full story

சேக்கிழார்  பாநயம் – 12

  ======================= திருச்சி  புலவர் இரா.இராமமூர்த்தி -----------------------------------------------------------   ஓரூரின் சிறப்பு அவ்வூர் மக்களின் நல்வாழ்வைப் பொறுத்தே அமையும்! ஒவ்வோர் ஊரிலும் அந்த ஊரில்  நெடுங்காலம் வாழ்வோரின் வரலாறு, எல்லா வகையிலும்  வெளிப்படும். தமிழ் நாட்டின் பழங்காலத்து நகரங்கள் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களின் வரலாற்றைப் புலப்படுத்தும்! பூம்புகார் சோழ நாட்டின் பழங்காலத்  துறைமுக நகரம்! அந்த நகரின் சிறப்பினைப் பற்றி சிலப்பதிகாரத்தின் தொடக்கத்திலேயே இளங்கோவடிகள் கூறுகிறார்! ‘’பொதியிலாயினும்  ... Full story

சேக்கிழார் பா  நயம் – 11 

======================= (திருச்சி புலவர் இராமமூர்த்தி) ---------------------------------------------------   திருவாரூர்  நகரத்தின் தோற்றம் இங்கே சிறப்பாகக் கூறப் பெறுகிறது. இப்பாடலில் உள்ள தொடர்கள் அடுத்தடுத்து வெவ்வேறு  பொருள்களைப்  புலப் படுத்துகின்றன. ஒரே தொடர் மீண்டும் வந்து , பொருள் நோக்கிப் பிரிந்து வெவ்வேறாகப் பொருள்தரப்   பாடுவது இரட்டுற மொழிதல் என்ற அணி என்பர். இந்த அணி இருவகைப் படும் , அவை செம்மொழிச் சிலேடை, பிரிமொழிச்  சிலேடை என்பனவாம். சேக்கிழார் பெருந்தகை ... Full story

சேக்கிழார் பா நயம் – 10

======================= திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி ----------------------------------------------------------   வேளாண்தொழிலில் நெற்பயிரோடு வாழை , கரும்பு ஆகியவை நன்செய் நிலப்பயிர்கள் ஆகும்.  விளைந்த கரும்புகள்  கமுக  மரங்களுக்கு  இணையாக விளங்கின என்று முன்னரே கண்டோம். அந்தக் கரும்புகளை வெட்டி, ஆலைகளில் இட்டுப் பிழிந்து, மிகப் பெரிய அண்டாக்களில் ஊற்றிக்  காய்ச்சுவார்கள். அவ்வாறு காய்ச்சும்போது எழும் கரும்புகை வானில் எங்கும் பரவும்.  அந்தப் புகையில் கரும்பின் இனிய மணம் கமழும். அந்நாட்டில் பெண்கள் நன்றாகக்  ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.