Posts Tagged ‘திவாகர்’

திவாகரின் இமாலயன் – நூல் விமர்சனம்

திவாகரின் இமாலயன் - நூல் விமர்சனம்
அண்ணாகண்ணன் Himalayan இந்தோ சீன எல்லையில் உள்ள புலிக்குன்று (டைகர் ஹில்ஸ்) என்ற இடத்திற்கு ஒரு முறை, சுற்றுலா நிமித்தம் சென்றேன். எங்கும் பனி, எதிலும் குளிர். உச்சி முதல் உள்ளங்கால் வரை மூடிக்கொண்டுதான் சில மணி நேரங்கள் அங்கே செலவிட்டேன். அதற்குள் உடல் வெடவெடத்தது. சிறிது நேரம் இருந்த எனக்கே இப்படி இருந்தால், அங்கேயே காலம் முழுவதும் நின்று காவல் காக்கும் வீரர்களின் நிலையை என்னவென்று சொல்வது? அந்தப் ... Full story

இந்திரனும் சந்திரனும்

இந்திரனும் சந்திரனும்
  திவாகர்   என்னன்புக் கண்மணியே பதில்சொல்வாயே இன்னமும்ஏன் தயக்கமும் தாமதமும் உனக்கொரு மணாளனென ஒருவனை உனக்களித்த உரிமையில் தேர்ந்தெடுப்பாய் இந்திரனென ஒருவன் வந்தானேகண்டாயோ சந்திரனென இன்னொருவனும் வந்தான்... Full story

தித்திக்குதே திருக்குறள் – 8

தித்திக்குதே திருக்குறள் - 8
  அன்பே தெய்வம்   திவாகர்   உயிர்களிடத்தே அன்புசெய்ய வேணுமாய் ஆயிரம் முறைசொன்னாலும் கேளாமல் உந்தன் நலமொன்றையே கருத்தில்கொண்டு எந்தநாளும் உன்காரியம் செய்கின்றாய் பயன்பிறர்க்கும் அதன்பலனில் உண்டெனில்; சுயநலம் பேணுவதால் குறையில்லைதான் அறியவேணும் தம்பி நன்றாய்புரியவேணும் குறுகியயெண்ணங்கள் என்றும் துணைவாரா; உன்மீதே உனக்கன்பு என்றல்லாமல் அனைவர்மீதும் செலுத்துமன்பே உத்தமாம் உள்ளம்சிறிது உயிர்பெரிது என்றிருப்போர்... Full story

பிரியே சகியே அன்பே ஆருயிரே

பிரியே சகியே அன்பே ஆருயிரே
திவாகர் அன்புள்ள ராகி’, பிரியே சகியே அன்பே ஆருயிரே என்றெல்லாம் இந்தக் கடிதத்தைத் தொடங்கலாமே என்று யோசித்துப் பார்த்தேன். ஆனால் ஒருவேளை அது உனக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம் என்ற ஒரு சந்தேகமும் கூடவே ஒட்டிக்கொண்டு வந்ததால் இப்படிப்பட்ட ஃபார்மாலிடிக்குள் நுழையாமல் நேரடியாகவே சப்ஜெக்ட்’டுக்கு வரப் பார்க்கிறேன். மூன்று மணி நேரமாக மண்டையைப் போட்டுக் குழப்பிக்கொள்கிறேன். நீ கடைசியாக ராத்திரி மொபைலில் பேசும்போது உன்னிடம் ஏதோ சொல்லவேண்டும் என்று சொன்னேன் ... Full story

இந்த வார வல்லமையாளர்!

இந்த வார வல்லமையாளர்!
அக்டோபர்  27, 2014 இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு  திரு. வெ. திவாகர் அவர்கள் இந்த மாதம் அக்டோபர் 11, 2014 அன்று 195 கி.மீ. வேகத்தில் வீசிய 'ஹூட் ஹூட்' புயல், ஆந்திர மாநிலத்தின் துறைமுக நகரமான விசாகப்பட்டினத்தில் கரையைக் கடந்து நகரை சூறையாடியதுடனல்லாமல் அதன் காரணமாக ஆறு பேர் உயிரிழக்கவும் நேரிட்டது. இவ்வாறு அடுத்த வீட்டு ஆந்திராவை அலங்கோலமாக்கிய ... Full story

சரிகமபத நீ..கல்யாணி

திவாகர் ஸார்.. எதுக்கு இந்த விஷப்பரீட்சை.. சொன்னாக் கேளுங்க.. எனக்கு ஒரு ஞானமும் இல்லே.. கர்நாடக சங்கீதத்துக்கும் எனக்கும் காத தூரம்..இல்லே இல்லே டெல்லி தூரம்.. அத்தோட ஏழு மணிக்கு ரிலையன்ஸ் க்ரூப் பார்ட்டி இருக்கு.. போகணும்..வுட்டுடுங்க ஸார்..” ”என்னப்பா.. என்ன சொல்லிட்டேனு இப்படிப் பெரீசா கத்தறே.. ரொம்ப முக்கியமான கச்சேரிய்யா.. இந்தம்மா ஏறத்தாழ ஒரு வருஷமா எந்தக் கச்சேரியும் பண்ணலே.ரொம்ப ஃபேமஸ்.. ஆர்கனைஸர்ஸ் எப்படியோ கஷ்டப்பட்டு இந்த அம்மாவின் அனுமதி வாங்கியிருக்காங்களாம்.. நானே போகணும்.. ஆனா ... Full story

இந்த வார வல்லமையாளர்!

இந்த வார வல்லமையாளர்!
திவாகர் திரைப்படப் பாடல்கள் எனும்போதே உடனடியாக நம் கவனத்தில் வருபவர்கள் கவியரசு கண்ணதாசனும் கவிஞர் வாலியும்தான். கவியரசை நாம் எல்லோருமே உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருக்கிறோம் என்பது வாஸ்தவம்தான் என்றாலும் வாலியார் கூட எந்தவிதக் குறைவுமில்லாமல் நம் மனதில் நிறைந்தவர் என்பதில் எள்ளளவு சந்தேகமுமில்லை. பொதுவாக மக்களை நல்வழிப்படுத்தும் பாடல்களை எழுதுவதில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் வாலியாரும் சற்று அதிகமாகவே பிரபலமடைந்திருந்தார்கள். அதிலும் வாலியார் மக்கள் நலப் பாடல்களை எழுதிய விதமும், அதைத் திரைப்படம் மூலமாக சொல்லும் விதமும் அந்தத் தமிழானது தமிழர்கள் நெஞ்சத்தில் எந்நாளும் பதியும் விதமும் எத்துணை ... Full story

இந்த வார வல்லமையாளர்

இந்த வார வல்லமையாளர்
சென்னை ராமகிருஷ்ணா பள்ளியில் என்னுடன் படித்த மாணவ நண்பனை சமீபத்தில் நான் பார்க்க நேர்ந்தது. நரை திரையாக பெரிய மீசை வைத்து பயங்கரமாக என் கண்களுக்குக் காட்சியளித்தான். இத்தனைக்கும் நான் அவனை ஐந்து வருடங்களுக்கு முன்பு கூட சந்தித்திருந்தேன். என்னடா உனக்கு இப்படி வயசாகிவிட்டதே என்று அவனை கிண்டலடித்ததற்கு, ஆமாம்.. இவர் என்றும் மார்க்கண்டேயராக்கும்’ என்று பதிலடி கொடுத்தான்.. கூடவே என்னை அருகேயே இருந்த அவன் வீட்டுக்கும் அழைத்துப்போய் தூசி தட்டப்பட்டு அலமாரியில் வைத்திருந்த என் ... Full story

தக்காளி சட்னி!

தக்காளி சட்னி!
திவாகர் அன்புள்ள ராகிக்கு (ராகி எனப் பெயரைக் கூப்பிடுவதை விட எழுதும்போது அவ்வளவு நன்றாக இல்லையென்று நன்றாகவே தெரிகிறது என்றாலும் ராகினி என்று உன் முழுப்பெயரையும் எழுதினால் எங்கே நீ கோபித்துக் கொள்வாயோ என்றுதான் நான் வீட்டில் உன்னை சாதாரணமாகக் கூப்பிடுவது போலவே எழுதிவிட்டேன்) அது சரி, இருக்கட்டும், அடடா..கோபித்துக் கொள்ளாதே.. இதோ கடிதம்.. இனிமேல்தான் ஆரம்பிக்கிறேன். உபயக்ஷேமம். (இப்படித்தான் என் தாத்தா எனக்கு ‘கார்டு’ போடும்போது எழுதுவார், என்ன அர்த்தம் என்று கேட்காதே) இப்பவும் உன் நலத்துக்கு அடிக்கடி கடிதம் எழுது ... Full story

இந்த வார வல்லமையாளர்

வெ.திவாகர்  ஆதி காலத்திலிருந்து பார்க்கிறோம்.. பெண்கள் என்றால் பொதுவாக போகப் பொருளாகத்தான் சமூகத்தில் சிற்சில ஆண்களின் கண்களுக்குத் தெரிகின்றார்களோ என்னவோ,. பெண்களின் அழகை வர்ணிப்பதென்றால் போதும்.. இந்தக் கவிஞர்களுக்குக் கற்பனா சக்தி விண்ணைத் தொடும் அளவுக்கு பறக்கும். பூ என்பார்கள், பூவினும் மெல்லிய இதழென்பார்கள்.. மென்மைக்கு மறுபெயரே பெண்மை என்பார்கள்.. ஆனால் பெண்கள் வன்கொடுமை என வரும்போது இவர்கள் வர்ணனைக்கு நேர்மாறாக நடக்கும்போது நல்நெஞ்சம் கொண்டோர் அவர் ஆணாயினும் பெண்ணாயினும் நெஞ்சம் பதறத்தானே செய்வர். பெண்கள் வன்கொடுமை இந்தியாவில் இப்போது அதிகம் நடப்பதாகச் செய்திகள், தொலைக்காட்சிகள் ... Full story

இந்த வார வல்லமையாளர்!

இந்த வார வல்லமையாளர்!
திவாகர் நமது பாரதம் வாத விவாதங்களுக்குப் பெயர் போனது. அந்தக் காலங்களில் செய்யப்பட்ட விவாதங்கள் அனைத்துமே நல்ல நெறிக்கே இறுதியில் அழைத்துச் சென்றன என்பதை சமயம் சம்பந்தப்பட்ட வரலாறு படித்தோருக்கு நிச்சயமாகப் புரியும். மாணிக்கவாசகரின் புத்தபிட்சுக்களுடனான வாதம் அப்படியே எழுத்து வடிவில் நமக்குக் கிடைத்துள்ளது. ஆதி சங்கரராகட்டும் ராமானுஜராகட்டும், விவாதங்களில் மிகப் பெரிய அளவில் பங்கு கொண்டிருந்தனர். பண்டிதர்கள், ஆழ்ந்த அறிவுடையவர்கள், வெற்றி தோல்விகளை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பது மட்டுமல்லாமல் வெற்றி பெற்றவரின் சீடர்களாகவும் ஆனது பற்றிய செய்தியும் அவர்களது வரலாற்றிலிருந்து தெரிய வரும். இந்த ... Full story

பிரிவு ஒரு தொடர்கதையோ

திவாகர் சென்னை ஏர்போர்ட் பகல் நேரத்தை இந்திய பிரயாணிகளுக்கும் இரவு நேரத்தை வெளிநாட்டுப் பிரயாணிகளுக்கும் பிரித்துக் கொடுத்துத் தன்னைத் தானே தியாகம் செய்து கொண்டதாக அதற்கு ஒரு நினைப்போ என்னவோ. அதுவும் பகலை விட ராத்திரி நேரம்தான் ரொம்ப பிஸி போலும்.. ஒருவேளை சென்னையில் உள்ள மக்கள் ஏதோ பொருட்காட்சியைப் பார்ப்பது போல பார்க்க வருகிறார்களா இல்லை மெய்யாகவே இத்தனை பேரும் பிரயாணிகளா என்று ஆச்சரியப்படவைக்கும்தான். அதுவும் அந்த பல்நாட்டு விமானநிலையம் இருக்கிறதே அது அந்த இரவு நேரத்தில் சந்தைக் கூடம்தான். எத்தனை விமானங்கள்.. எத்தனை அலுவலர்கள்.. ... Full story

இந்த வார வல்லமையாளர்

இந்த வார வல்லமையாளர்
வெ.திவாகர் மனிதனும் இயற்கையும் ஒன்று. நம் உடல் பஞ்ச பூதத்தினால் ஆனது. மண், ஆகாயம், நீர், காற்று, அனல் இவற்றுடன் சம்பந்தப்படுத்தியே மனிதன் படைக்கப்பட்டான். அதனால் மனிதன் இயற்கையோடு ஒன்றிச் செயல்பட வேண்டும் என்பதற்காகப் படைக்கப்பட்டவன்.. ஆனால் மனிதனே மனிதனை அதாவது இயற்கையை அழிக்கலாமா.. ஆண்டாண்டுக் காலமாக இந்த விழிப்புணர்ச்சி இல்லாமல் இயற்கையை அழிப்பது இந்த மனித குலம்தான். மனிதர்களின் சின்னச் சின்ன சுகங்களுக்காக இயற்கையை அதிகம் சீண்டி விளையாடியதால்தான் சமீபத்திய கேதார்நாத், பத்ரிநாத் இழப்புகள் என்கிறார்கள் சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள். இயற்கைச் சீற்றங்களினால் மனித அழிவு ஏற்படும்போதும் அந்த அழிவில் நமக்கு நெருங்கியவர்களில் ... Full story

இந்த வார வல்லமையாளர்

இந்த வார வல்லமையாளர்
வெ.திவாகர் “முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே” என்பார் மாணிக்கவாசகர். இறைவன் என்பான் பழமை நாம் என நினைக்கும் அந்தப் பழமைக்கும் பழமையானவன் என்ற அதே சமயத்தில் புதுமைக்குப் பின் வரும் புதுமைகளையும் புகுத்தி வருவன் அவனே என்பதாகப் பொருள் வரும். இந்தப் பதிவு எழுதும்போது இந்தப் பாடல் ஞாபகம் வந்தது. இருக்கட்டும். சென்ற ஞாயிறு, சென்னையில் ஒரு பயிற்சி வகுப்பு. இந்தப் பயிற்சி வகுப்பு என்பது எப்படி ஒரு புத்தகத்தை எளிய முறையில் மின்னாக்கம் செய்வது என்பது. ... Full story

இந்த வார வல்லமையாளர்

இந்த வார வல்லமையாளர்
வெ.திவாகர் சென்ற வாரம்  ஹைதராபாதில் மணமான ஒரு பெண், தன் கணவனின் கொடுமை தாங்காமல் திடீரென மூன்றாவது மாடியில் இருந்து குதித்து, 'தம்'மெனப் பெரிய சப்தத்துடன் கீழே விழுந்து மரணித்துப் போன காட்சி.. நாங்கள் அப்போது ஒன்றாவது மாடியில் இருந்து இந்தப் பெரிய சப்தத்தைக் கேட்டு ஓடிப் பார்ப்பதற்குள் கூட்டை விட்டு அவள் உயிர் போய்விட்டது என்றுதான் நினைத்தேன். நமக்கு சம்பந்தமில்லாதவள்தான்.. இருந்தாலும் அந்தக் குடும்பத்தில் ஏதோ தகராறு போல.. தாங்க முடியாமல் அந்தப் பெண் தன் உயிரைத் ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.