Posts Tagged ‘தி.இரா.மீனா’

ஒவ்வொரு நாளும் நல்ல நாளே

ஒவ்வொரு நாளும் நல்ல நாளே
-தி.இரா.மீனா  கர்நாடக இசைக்கும்,கன்னட மொழிக்கும் பெருமை சேர்ப்பதான தாச இலக்கியம் இறைவனை அடைய இசை ஓர் எளிய வழி என்பதை குறிக்கோளாகக் கொண்டது. சாதாரண மனிதனும் விரும்பி ஏற்கும் வகையில் பண்பாடு மற்றும் சமய மேன்மை சார்ந்த கருத்துக்களை தாசர்கள் கீர்த்தனைகளாக்கி தங்கள் பக்தியை வளப்படுத்தினர். ’நாதோபாசனா ’என்ற பெயரில் அமையும் இது இசை,பக்தி,இலக்கியம் என்ற மூன்றையும் உள்ளடக்கியது என்றாலும் ஒவ்வொன்றையும் தனித்தனியாக இனம் கண்டறிய முடியாத அளவுக்குத் தமக்குள் இணைந்துள்ளது. ஹரிதாசர்களின் இலக்கியத்தைப் ... Full story

மகாகவி பாசாவின் ’பிரதிமா’ நாடகக் களன்

மகாகவி பாசாவின் ’பிரதிமா’ நாடகக் களன்
-தி.இரா.மீனா வடமொழி இலக்கிய உலகில் நாடகம் என்ற சொல்லைக் கேட்ட அளவில் நினைவில் நிற்கும் பாசாவின் பதிமூன்று நாடகங்கள் இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில்  கேரளத்தைச் சேர்ந்த கணபதி சாஸ்திரியால் கண்டு பிடிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டன. பாசாவின் காலத்தைப் பற்றிய கணிப்புகள் பலவாக இருந்தாலும் சாகுந்தல காளி தாசனுக்கு முற்பட்டவர் என்பதில் இரண்டாவது கருத்து  கிடையாது. மாளவிகாகினி மித்திரத்தில்“ பாசா, கவிபுத்ரா போன்ற மிகச் சிறந்தவர்களைக் குறிப்பிடாமல் இருக்க முடியுமா" என்று காளிதாசன் எழுதியுள்ள குறிப்பு, இதை உறுதி செய்கிறது. காளிதாசன் தன் படைப்புகளில் பாசாவின் ... Full story

புகையை அறிந்தவன், அக்னியை அறிந்தவனா?

புகையை அறிந்தவன், அக்னியை அறிந்தவனா?
-தி.இரா.மீனா ஆத்மாவிற்கும் தனிப்பட்ட மனிதர் மற்றும் பொருட்களுக்கும் இடையிலான அன்பின் முக்கியத்துவத்தைச் செவ்வியலாக விரித்துரைக்கும் மிக உயர்ந்த நிலை கொண்டதாக பிரஹதாரண்ய உபநிடதத்தில் யாக்ஞவல்கியருக்கும் மைத்ரேயிக்கும் இடையில் நடக்கும் உரையாடல் அமைகிறது. இதை ’பிரம்மத்தை ‘அறிவதான உரையாடல்’ என்று வேத உலகமும் அறிவுசார் ஆராய்ச்சியாளர்களும் காலந்தோறும் போற்றி வருகின்றனர். வைசம்பாயனரின் மாணவரான யாக்ஞவல்க்கியர் வேதங்கள் சாஸ்திரங்கள் ஆகியவற்றில் ஆழமான அறிவுடையவர். யஜுர் வேதத்தில் தன் குரு புகுத்திய ... Full story

பெண் வசனக்காரர்கள்

பெண் வசனக்காரர்கள்
தி.இரா.மீனா பெண் வசனக்காரர்கள் :  நான் நான்  என்பதே  ஆன்மாவின்   மறுப்புதானே? சாதிகளற்ற சமுதாயம், வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் இருபாலாரும் சமம் என்ற கருத்து நிலைப்பாடு பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவ சாரணர்களின் விருப்பமாக இருந்து அது செயல்படுத்தவும்பட்டது என்பதற்குச் சான்றாக பெண் வசனக் காரர்களின் பங்கையும் வெளிப்பாட்டையும் காட்ட முடியும். சமுதாய நலன் மற்றும் வேதாந்த நிலைகளில் பெண் தன் சிறப்பை வெளிப்படுத்த முடிந்தது பெண் வசனக்காரர்களின் மிகப் பெரிய வெற்றியாகும். கன்னட இலக்கிய, பக்தியுலகில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்த ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.