Posts Tagged ‘தி. சுபாஷிணி’

ஓர் அந்தியின் சந்திப்பில்…

ஓர் அந்தியின் சந்திப்பில்...
தி.சுபாஷிணி வழக்கத்திற்கு மாறாக, வாசற்படிகள் உயரமாய்த் தோன்றின. கால்களின் கனமும், மனத்தின் கனமும் அழுத்த ஏறுவதில் மயக்கதயக்கங்கள் ஏற்பட்டன. சில நிமிடங்கள் அவற்றைப் பார்த்ததில் கழிந்தன. “அம்மா! ஏதாவது பிரச்சினையா? நான் உதவட்டுமா?” என-, என்னை இறக்கிவிட்ட ஆட்டோக்காரர் வினவினார். “இல்லைங்க” என தலையசைத்தேன். மனமில்லாதுதான் ஆட்டோ நகன்றது. எப்படியோ படிகளில் ஏறி, வீட்டிற்குள் நுழைந்துவிட்டேன். நீண்ட குறுகிய பாதை, என்மேல் ஒரு இறுக்கத்தைப் பாய்ச்சியது. இதன் முடிவில் ஒரு உயரமான படி. அதில் தடுக்கி, தடுமாறி விழப்போனேன்! “அடவந்துவிட்டாயா? ... Full story

வாசிப்புகளின் வாசலிலே… (3)

வாசிப்புகளின் வாசலிலே... (3)
தி.சுபாஷிணி நம்மோடுதான் பேசுகிறார்கள் சீனிவாசன் & பாலசுப்ரமணியன்                 சென்ற ஆண்டு (2013) இறுதியில் டிசம்பர் 28 ஆம் நாள் தமிழூரில், பேராசிரியர் ச.வே.சுப்ரமண்யம் அவர்கள் நடத்திய கம்பன் கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு மறுநாள் டிசம்பர் 29 ஆம் நாள் திருநெல்வேலி வந்தேன். அங்கு இடையறா இலக்கிய வேளாண்மை செய்து கொண்டிருக்கும், பொருணை இலக்கிய வட்டத்தின் ஆண்டுவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். ஆயிரத்து 550 வாரங்களுக்கும் மேலாக, ... Full story

தி.க.சி. 90

தி.க.சி. 90
தி. சுபாஷிணி அந்த இளம் காலை நேரத்தில், நெல்லை எக்பிரஸ் தட,தட என திருநெல்வேலி ஜங்ஷன் இரயில் நிலையத்தில் நுழைந்து கடக் என்று நிற்கின்றது. என் நெஞ்சில் ஒரே பட படக்கின்றது. என்னவென்று தெரியவில்லை மெதுவாக ரயிலிலிருந்து இறங்குகின்றேன். ரயில் நிலையத்திலிருந்து வெளிவந்து, ஆட்டோவில் அமர்கின்றேன்.  ஆட்டோ ‘திருநெல்வேலி டவுன் நோக்கிளல செல்கின்றது.  வழியில் சந்திக்கும் ஆட்டோகள ஏதோ ‘போஸ்டர்’ ஒட்டியிருக்கின்றது.  ஒரு ஆட்டோ எங்கள் ஆட்டோவைக் கடக்கும் போது, அது என்னவெனப் பார்த்தேன். ஆச்சர்யப்பட்டுப் போனேன். “ஆம் நம்ம தி.க.சி. அய்யாவின் படம்.  அதன் கீழ் ... Full story

பிரியமான மணிமொழிக்கு

தி. சுபாஷிணி  பிரியமான மகளுக்கு! மணியின் மொழி அதன் நாதம்! "ஓம் " எனும் அந்நாதத்தின் பிறப்பு மணியின் நா அசைவினிலே! மொழி பிறத்தலும் மனிதரின் நா அசைவில்தான்! அண்டத்தின் ஆதாரம் ஓங்கார நாதமென்பார். ஒளியும், ஒலியும் வாழ்வின் ஆதாரங்கள்! இரண்டுள்ளும் ஒலியின் சிறப்பு ஒளியைவிட மேலானது! ஒலியுடன் இணைந்திடாது ஒளிமட்டுமே ஏற்படுத்தும் உணர்வு பாதிப்புகள் ஒரு பிரம்மாண்டத்தை உண்டாக்குவதில்லை! "இடி " தொடரா மின்னல்வெட்டுகள் தங்களின் மிரட்டும் தன்மையை வெகுவாகவே இழக்கின்றன! உணர்ச்சிகளின் முழுமையான வெளிப்பாடு ஒலியின்றி சாத்தியமாவதில்லை! ஆதலால்தான் ஒலியின் பெருமை, ஆதாரத்தன்மை ஒளியினும் விஞ்சுகிறது!! ஒலிகளே இல்லாத சூழல் வாழ்வினையே சூன்யமாக்கிவிடும்! தன்னைத்தான் அறிதலே ஒலிவழிதான் நிகழ்கிறது. தனது பெயர் பிறர் கூறக்கேட்டு, அழைக்கப்படுவது தானேயென அறிந்து, ஒரு குழந்தை திரும்பிப்பார்ப்பதே ஒலி ... Full story

தி.க.சியின் நாட்குறிப்புகள்

தி.க.சியின் நாட்குறிப்புகள்
வாசிப்புகளின் வாசலிலே - தி.சுபாஷிணி தொகுப்பு: வே.முத்துக்குமார் இந்நூலின் தொகுப்பாசிரியரான வே.முத்துக்குமார் சிறந்த இலக்கியவாதியும் படைப்பாளியும் ஆவார். பிரபல நாளிதழ்களில் கவிதைகளும் கதைகளும் எழுதிவருபவர். இவர் தி.க.சி.யின் ஆத்மார்த்த சீடர். வெளிஉலகத்திற்குத் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளாது, தி.க.சி. அவர்கள்பால் அன்பு கொண்டு, அவருக்குத் தொண்டு புரியும் நெல்லைப் பண்பாளர். தி.க.சியின் இலக்கியப் பொக்கிஷங்களைத் தூசிதட்டி அடுக்கு ம்போது கிடைத்த நல்முத்து ... Full story

இந்த வார வல்லமையாளர்!

இந்த வார வல்லமையாளர்!
திவாகர் இந்த வாரம் வல்லமையில் வந்த கட்டுரைகளில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது எழுத்தாளர் தி.சுபாஷிணியின் ‘வாசிப்புகளின் வாசல்’ கட்டுரை என்று சொல்லவேண்டும்தான். வித்தியாசத்துக்குக் காரணம் எழுத்தாளர் கோவை ஞானியின் ஒரு புத்தகத்தைக் குறிப்பிடும்போது - ”(கோவை ஞானி) தமிழ் நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம்’ என்னும் அவரது புத்தகத்தை அளித்தார். வாங்கி வந்து விட்டேனேயொழிய படிக்கக் காலதாமதமாகிவிட்டது. முதற்காரணம் என் அருமைப் பேரன். இரண்டாவது அவர் மார்க்ஸிஸ்ட். அந்த ... Full story

வாசிப்புகளின் வாசலில்… (2)

தி. சுபாஷிணி தமிழர் நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம்? கோவை ஞானி New Doc 1 (1) சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தின் 15 ஆம் நாள், கோவையில் ஆறு தமிழ்ச்சங்கங்கள் கூடின. புவனேஷ்வர் தமிழ்ச்சங்கம், ஷிமோகா தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், கல்லிடக்குறிச்சி தமிழ்ச் சங்கம், விசாகப்பட்டினத் தமிழ்ச்சங்கம் மற்றும் திருச்சியிலுள்ள செண்பகராமன் இலக்கிய சங்கம், கோயம்புத்தூரிலுள்ள சிற்றிதழ்களின் சங்கம், மேலும் ஓர் இலக்கிய வட்டம் என, ஹிந்துஸ்தான் கலையியல் கல்லூரியில் கூடி, ஒருவொருக்கொருவர் அறிமுகமாகி தங்கள் படைப்புகளையும், சங்கங்களின் ... Full story

வாசிப்புகளின் வாசலில்…. (1)

வாசிப்புகளின் வாசலில்.... (1)
தி.சுபாஷிணி வாசிக்கப்படாத நூல் வாழுமா? ஒரேர் உழவன் கணபதியா பிள்ளை மகனார் நாஞ்சில் நாடன். தலைவி தலைவன்பால் காதல்வயப்பட்டு, தன்மனம் முழுவதும் அவனை அமர்த்திப் பரவசப்பட்டுக் கொண்டிருக்குங்காலை, தலைவனே அவள் எதிரே தோன்றிவிடுகின்றான். தன் காதலைத் தானே ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு, எங்கிருந்துதான் நாணம் வந்துவிடுகின்றதோ, தன்னையறியாது தன் கரங்களால் கண்கள் இரண்டையும் பொத்தி மறைத்துக் கொள்கிறாள். நாணத்தின் செம்மை முகத்தில் பரவ, முகம் பொன்னாலான தாமரையாய் ... Full story

மகளிர் தின வேண்டுகோள்

  தி. சுபாஷிணி    சமம் வேண்டாமே! சஹிரிதயர்களாய் இருப்போமே! போற்ற வேண்டாமே - என் சுற்றம் தவிக்கும்போது எங்களைப் போகவிடலாமே வலியும் வாதையும் ஒன்றுதானே பெருமைப்பட வேண்டாம் பெருமிதம் கொள்ளலாமே முப்போதும் நீங்கள் நீங்களாய் இருப்பதுபோல் நாங்கள் நாங்களாய் இருக்க விரும்புவோம்தானே!   Full story

தங்கக் குணத்தான்!

தங்கக் குணத்தான்!
தி. சுபாஷிணி ரஸிகமணி டி.கே. சி. அவர்களின் 60 வது நினைவு நாளை ஒட்டிய சிறப்புக் கட்டுரை.                             அன்னைபோல் என்னை                                   அருவியில் நீராட்டி                                இன்னமுதும் பக்கத்(து)                                   இருந்தூட்டி--தன்னொடு                                தங்கு தங்கு என்று சொன்ன... Full story

ரசனையின் சிலிர்ப்பு!…

ரசனையின் சிலிர்ப்பு!...
தி. சுபாஷிணி 1881 ஆம் ஆண்டு, ஆவணித் திங்களில், ரோகிணி நட்சத்திரத்தில் பூ ஒன்று தோன்றியது. இப்பூ பூத்து, தமிழ்க்கவியின்பத்தில் திளைத்து, எது கவியென கண்டுகொண்டு களித்தது. கம்பனைக்கண்டு குதூகளித்தது. கும்மாளம் போட்டது. கம்பனின் இதயம் புகுந்து கம்பனாகவே மாறிவிட்டது. பழந்தமிழ் பாடல்களையெல்லாம் வெளிக்கொணர்ந்து, படித்து படித்து ரசித்து சிலிர்த்தது. அச்சிலிர்ப்பில் தமிழ்ப்பண்பாடு மலர்ந்தது. சமயம், தமிழிசை, நாடகம், நடனம், ஓவியம், சிற்பம், கோயில், பக்தி என அனைத்து விடியல்களையும் அறிந்து பாராட்டியது. பாராட்டப் பாராட்ட ஆனந்தம் ... Full story

பெயரற்ற பிரியம்

தி. சுபாஷிணி வழக்கத்திற்கு மாறாக சுந்தரம் பெரியப்பாவின் வீடு மிகவும் சுத்தமாக, பிரகாசமாகத் தெரிந்தது சுப்ரமணியத்திற்கு. பெரியப்பாவின் வீடு இரு வாசல்களுடன், மூன்றடி உயரத்தில் காம்பவுண்ட் சுவர் கொண்ட வீடு.  வீட்டின் முன்னும் பின்னும் மரங்களும் செடிகளும் சுதந்திரமாய் வளர்ந்திருக்கும்.  கொடுக்காய்ப் புளி மரத்தின் இளஞ்சிவப்புக் காய்களுக்காக வரும் கிளிகள் சந்தோஷமாய் வந்து போகும். வாதாமரங்களில் அணில்கள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்கும். காகங்களின் கூட்டங்கள் பெரியப்பாவிற்கு காலத்தைக் கூறிக் கொண்டிருக்கும்.  வீடு சுற்றிலும் பழுப்பு இலைகளும் காய்ந்த பூக்களும், கனிகளும் கலந்து கிடந்து ஒரு தனி அழகை அளித்துக் கொண்டிருக்கும். ஆனால் இன்று...! இருவாசல்களும் ... Full story

சொல் ஒன்று வேண்டும்!

தி. சுபாஷிணி அது ஒரு குக்கிராமம். அங்கு செல்லவே இரண்டாம் ஜாமம் ஆயிற்று. நேராக அந்தக் கோயிலுக்குத்தான் சென்றோம். என்னுடன் மன்னிக்கவும் என்னைக் கூட்டி வந்தவர்கள் என் மாமியார், அவரது தம்பி, தங்கை ஆவார்கள். இரவை அங்குதான் கழிக்க வேண்டும். கோயிலில் சுற்றி ஓலைக் கூரை வேய்ந்த பிரகாரம். அதில்தான் அனைவரும் படுத்துறங்க வேண்டும். எங்களைப் போல் இன்னும் பத்து இருபது பேர் உறங்கிக் கொண்டிருந்தார்கள். என்னுடன் வந்தவர்கள் அப்படியே படுத்தனர். அவர்கள் உறங்கினார்களா? உறங்கியதுபோல் விழித்திருந்தார்களா என்பதை நான் கவனிக்கவில்லை. அதில் என் மனமும் செல்லவில்லை. நான் முற்றிலும் என்னைச் சுற்றியிருந்த ... Full story

ஓடிப் போன புத்தர்

தி.சுபாஷிணி பள்ளி கொண்டிருந்த அந்த புத்தர் சிலையைக் சென்ற வருடம் மைசூர் தசராவிற்கு சென்றபோது வாங்கி வந்தது. அதில் செரியால் ஓவியத்தின் அழகு படிந்து இருந்தது. முகத்தின் அமைதியில் அன்பான ஆக்கிரமிப்பு தெரிந்தது. குவிந்த உதடு உமிழ்ந்த சிரிப்பில் புத்தர் ஓவியத்தை நினைவூட்டியது. வந்தவுடன் அதை மிகவும் பத்திரமாக எடுத்து தொலைக்காட்சிப் பெட்டியின் மேல் வைத்தேன். அப்படி வைத்த சில நிமிடங்களில் அந்த அறையே சாந்தத்தின் அழகில் மிளிரத் தொடங்கி விட்டது. பக்கத்துவிட்டு சாரதாம்மா வந்திருந்தாங்க. அவங்களையும் அந்த ... Full story

“பத்ரமா இருங்கப்பா!”

தி.சுபாஷிணி ‘அப்பா’ என்று கூப்பிட்டவாறே அப்பாவின் வீட்டினுள் செல்கின்றேன். முன் வீட்டில் அப்பா இல்லை. காலையில் படித்த செய்தித்தாட்கள் பெஞ்சில் இருக்கின்றன. எப்பவும் யாராவது ஒரு நண்பர் அமர்ந்திருக்கும் நாற்காலி காலியாக இருக்கின்றது. அப்பாவின் நாற்காலியில் அவர் எப்பவுமே விரித்துப் போட்டிருக்கும் துண்டுதான் இருக்கின்றது. பக்கத்தில் இருக்கும் ஈஸிசேரைக் காணவில்லை. மேசையின் மேல் உள்ள திறக்கப்படாத கேரியர் என்னைப் பாவமாகப் பார்த்தது. தேவையில்லாமல் ஒரு நிசப்தம் என்னைச் சூழ்ந்து கொண்டது. அதை விரட்டித் தள்ளிக் கொண்டு உள் வீட்டில் நுழைந்தேன். அப்பா கட்டிலில் படுத்துக் கொண்டு இருக்கின்றார்-. ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.