Posts Tagged ‘தேமொழி’

Page 1 of 1712345...10...Last »

பறவைகளுக்கு எந்த வண்ணப் பூக்கள் பிடிக்கும்?

பறவைகளுக்கு எந்த வண்ணப் பூக்கள் பிடிக்கும்?
-- தேமொழி என் வாசல் தேடியே வந்தது வசந்தம் வண்ண நறுமலர்கள் அழகாய்ப் பூத்தன எண்ணம் போல் எங்கும் வண்ணமயம் இளங்கதிர் கண்டு மனதிலோ இன்பமயம் தோட்டத்துக் கற்பாதையின் ஓரம் வரிசையாக நீலவண்ண மலர்ச்சரம் கொல்லைப்புறத்து மதில் சுவரோரம் மஞ்சள் வண்ணப் பூக்களின் கூட்டம் துணையாகவே வந்திறங்கின இணையான வெண்புறாக்கள் குதிகால் உயர்த்தி குதிநடைபோடும் நடைமேடை உடையலங்கார நங்கைகளின் நடைபோலவே முன்னும் பின்னும் நடந்தன கல்பாவிய பாதையில் ஒயிலுடன் கண்ணைக் கவர்ந்திடும் எழிலுடன் மலர்ந்திருந்த மலர்களை நோக்கின திரும்பி என்னை ஒருமுறை நோக்கின மலர்களை மறுமுறையும் நோக்கின தங்களுக்குள் பார்வை பரிமாறிக்கொண்டன புரியவில்லை அப்பறவைகளின் பார்வைமொழி பிடிக்கவில்லையோ இப்பூக்களின் நிறம் மதிக்கவில்லை அவை என் மனக்கவலையை தங்கவுமில்லை என் தோட்டத்தில் புறாக்கள்... Full story

வாக்குரிமைக்காகப் போராடிய இளவரசி (தொடர்ச்சி …)

வாக்குரிமைக்காகப் போராடிய இளவரசி (தொடர்ச்சி ...)
-- தேமொழி. இந்தியாவிலிருந்து புரட்சி மனப்பான்மையுடன் இங்கிலாந்து திரும்பிய இளவரசி சோஃபியா துலிப் சிங்கிற்கு அவரது சகோதரிகளின் வாழ்க்கையே பெண்களுக்கான சமத்துவம் கிடைக்கத் தேவை இருப்பதற்கான காரணங்களைச் சுட்டிக் காட்டியது. சோஃபியாவின் சகோதரி பம்பா மருத்துவம் படிக்க விரும்பி அமெரிக்க சிக்காகோ நகரின் மருத்துவக் கல்லூரியில் கல்வியைத் துவக்கினார். அவர் கல்வி முற்றுப்பெறுவதற்குள், பல்கலைக்கழகம் பெண்கள் அறுவை சிகிச்சை செய்யத் திறன் கொண்டவர்கள் அல்ல என்ற காரணத்தைக் கற்பித்து அவரை வெளியேற்றியது. மற்றொரு சகோதரி கேத்தரின் ஒரு பெண்ணை தனது வாழ்க்கைத்துணையாக ஏற்றார். அவருக்கும் சமுதாயத்தின் புறக்கணிப்பே ... Full story

வாக்குரிமைக்காகப் போராடிய இளவரசி

வாக்குரிமைக்காகப் போராடிய இளவரசி
-- தேமொழி. "நாட்டின் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் முடிவுகளை எடுக்கும் செல்வாக்கு எனக்கு இல்லாததால் முழுமனதுடன் வரி செலுத்த என்னால் இயலவில்லை. நான் அளிக்கும் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவும் எனக்கு வாய்ப்பில்லை. இது சற்றும் முறையன்று. இங்கிலாந்து என்று மகளிருக்கு வாக்குரிமை அளித்து, என்று எனது குடியுரிமைக்கு மதிப்பு கொடுக்கிறதோ அன்று நிச்சயமாக முழு விருப்பத்துடன் நான் நாட்டின் பராமரிப்பிற்காக வரி அளிப்பேன். நாட்டின் நலத்தில் எனக்கு சார்பாண்மை தகுதி இல்லாதபொழுது, நாட்டிற்கு வரி செலுத்தும் தகுதியை மட்டும் நான் பெற்றுள்ளதாக ... Full story

பெண்ணின் பணி – கவிதை

பெண்ணின் பணி – கவிதை
–தேமொழி   பெண்ணின் பணி கவிதை  மூலம் – மாயா ஆஞ்சலூ மொழிபெயர்ப்பு – தேமொழி   என் குழந்தைகளைக் கவனிக்க வேண்டும் துணியின் கிழிசல்களைத் தைக்க வேண்டும் தரையை மெழுகி சுத்தமாக்க வேண்டும் சமைப்பதற்காகக் கடையில் வாங்க வேண்டும் பிறகு கோழியை வறுக்க வேண்டும் குழந்தைக்குத் துவட்டிவிட வேண்டும் விருந்தினருக்கு உணவளிக்க வேண்டும் தோட்டத்தில் களையெடுக்க வேண்டும் சட்டைகளுக்கு பெட்டிபோட்டு மடிக்க வேண்டும் சிறுவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும் தகர உணவுப்பெட்டி மூடியைத் திறக்க வேண்டும் வீட்டை கூட்டிப் பெருக்க வேண்டும் நோயாளியைக் கவனிக்க வேண்டும் காட்டில் பருத்தி எடுக்க வேண்டும் சூரியனே, என் மீது உன் ஒளியை வீசிவிடு மழையே, ... Full story

பழமொழி கூறும் பாடம்

– தேமொழி.   பழமொழி: சான்றவர் கையுண்டும் கூறுவர் மெய் மொய்கொண் டெழுந்த அமரகத்து மாற்றார்வாய்ப் பொய்கொண் டறைபோய்த் திரிபவர்க் கென்கொலோ? மையுண் டமர்ந்தகண் மாணிழாய்! சான்றவர் கையுண்டும் கூறுவர் மெய். (முன்றுறையரையனார், பழமொழி நானூறு) பதம் பிரித்து: மொய்கொண்டு எழுந்த அமரகத்து, மாற்றார் வாய்ப் பொய் கொண்டு, அறைபோய்த் திரிபவர்க்கு என்கொலோ?- மை உண்டு அமர்த்த கண் மாணிழாய்!-சான்றவர், கை உண்டும், கூறுவர் மெய். பொருள் விளக்கம்: ஒருவருக்கொருவர் கொண்ட பகையினால் தோன்றிய போரில், எதிரி வழங்கும் பொய்யான உறுதிமொழியில் மயங்கி, ... Full story

பழமொழி கூறும் பாடம்

– தேமொழி.   பழமொழி: ஈடில்லதற்குப் பாடில்லை   மாட மழிந்தக்கான் மற்று மெடுப்பதோர் கூட மரத்திற்குத் துப்பாகு மஃதேபோற் பீடில்லாக் கண்ணும் பெரியார் பெருந்தகைய ரீடில்லதற் கில்லைப் பாடு. (முன்றுறையரையனார், பழமொழி நானூறு) பதம் பிரித்து: மாடம் அழிந்தக்கால், மற்றும் எடுப்பது ஓர் கூடம் மரத்திற்குத் துப்பு ஆகும்; அஃதேபோல், பீடு இல்லாக்கண்ணும், பெரியார் பெருந் தகையர்; ஈடு இல்லதற்கு இல்லை, பாடு. பொருள் விளக்கம்: உயர்ந்த மாடங்களைக் கொண்ட ஒரு மாளிகை சிதைந்துவிட்டால், (இடிபாடுகளைக் கொண்டு) மற்றொரு வீட்டின் கூடம் கட்டுவதற்கு அதன் மரங்கள் ... Full story

பழமொழி கூறும் பாடம்

– தேமொழி.   பழமொழி: அடுப்பின் கடைமுடங்கும் நாயைப் புலியாம் எனல்   தாயானும் தந்தையா லானும் மிகவின்றி வாயின்மீக் கூறு மவர்களை ஏத்துதல் நோயின் றெனினும் அடுப்பின் கடைமுடங்கும் நாயைப் புலியா மெனல். (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)   பதம் பிரித்து: தாயானும், தந்தையாலானும், மிகவு இன்றி, வாயின் மீக்கூறுமவர்களை ஏத்துதல்- நோய் இன்று எனினும், அடுப்பின் கடை முடங்கும் நாயைப் புலியாம் எனல். பொருள் விளக்கம்: (காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்ற மனநிலையைக் கொண்டவர்களான) பெற்ற தாயும் தந்தையும் கூட பெருமையுடன் கூறவழியற்ற பண்புகளின் ... Full story

வல்லமையாளர் விருது பொறுப்பேற்கும் செ.இரா. செல்வக்குமார்

வல்லமையாளர் விருது பொறுப்பேற்கும் செ.இரா. செல்வக்குமார்
பவள சங்கரி அன்பினிய நண்பர்களுக்கு, வணக்கம். கடந்த 200 வாரங்களாக வல்லமையாளர் தேர்வை மிகச் சிறந்த முறையில் நடத்தியுள்ள நம் வல்லமை ஆலோசனைக் குழு உறுப்பினர் திரு.திவாகர், வல்லமை ஆசிரியர் குழு உறுப்பினர் முனைவர் தேமொழி அவர்களையும் மனமார வாழ்த்தி, அடுத்து உயர்திரு செ.இரா. செல்வக்குமார் அவர்களை இப்பொறுப்பை ஏற்று நடத்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். மேலும் இப்பணியில் உதவிய திரு. இன்னம்பூரான்,  பேராசிரியர் நாகராசன் அவர்களையும் பாராட்டி மகிழ்கிறோம். இதுவரை ... Full story

பழமொழி கூறும் பாடம்

– தேமொழி.   பழமொழி: எருக்கு மறைந்து யானை பாய்ச்சிவிடல்   எல்லாத் திறத்தும்இறப்பப் பெரியாரைக் கல்லாத் துணையார்தாம் கைப்பித்தல் சொல்லின் நிறைந்தார் வளையினாய்! அஃதால் எருக்கு மறைந்துதியானை பாய்ச்சி விடல். (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)   பதம் பிரித்து: எல்லாத் திறத்தும், இறப்பப் பெரியாரை, கல்லாத் துணையார் தாம் கைப்பித்தல் சொல்லின்,- நிறைந்து ஆர் வளையினாய்!-அஃதால், எருக்கு மறைந்து, யானை பாய்ச்சிவிடல். பொருள் விளக்கம்: எல்லா வகைத் திறனும் கொண்ட மேன்மை பொருந்திய அறிஞர்களை, கல்லாமையைத் துணையாகக் கொண்ட கற்றறியாதோர், தங்கள் அறிவின்மையில் மூழ்கி மறைந்து கொண்டு, ... Full story

பழமொழி கூறும் பாடம்

– தேமொழி. பழமொழி: நெடும்பகை தன்செய்யத் தானே கெடும்   உற்றதற் கெல்லா முரஞ்செய்ய வேண்டுமோ? கற்றறிந்தார் தம்மை வெகுளாமைக் காப்பமையும் நெற்செய்யப் புற்றேய்ந்தாற் போல நெடும்பகை தற்செய்யத் தானே கெடும். (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)   பதம் பிரித்து: உற்றதற்கு எல்லாம் உரம் செய்ய வேண்டுமோ? கற்று அறிந்தார் தம்மை வெகுளாமைக் காப்பு அமையும்; நெல் செய்யப் புல் தேய்ந்தாற்போல, நெடும் பகை, தன் செய்ய, தானே கெடும். பொருள் விளக்கம்: எதிர்கொள்ளும் இடர் ஒவ்வொன்றுக்கும் தன்னை வலிமை படுத்திக் ... Full story

பழமொழி கூறும் பாடம்

– தேமொழி. பழமொழி: போற்றான் கடையடைத்துப் புடைத்தக்கால் நாயும் உடையானைக் கௌவி விடும் ஆற்றா ரிவரென் றடைந்த தமரையும் தோற்றத்தா மெள்ளி நலியற்க - போற்றான் கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும் உடையானைக் கௌவி விடும். (முன்றுறையரையனார், பழமொழி நானூறு) பதம் பிரித்து: ‘ஆற்றார் இவர்’ என்று, அடைந்த தமரையும், தோற்ற தாம் எள்ளி நலியற்க!-போற்றான், கடை அடைத்து வைத்து, புடைத்தக்கால், நாயும் உடையானைக் கௌவி விடும். பொருள் விளக்கம்: எதிர்ப்புக் குரல் எழுப்பும் ஆற்றலற்றவர் ... Full story

ஓர் அரசியின் கனவில் …

ஓர் அரசியின் கனவில் ...
-- தேமொழி.             கருவுற்றிருந்த அரசி திரிசலா தேவி (Queen Trishala), நள்ளிரவில் உறங்கும்பொழுது கீழ் காணும் 14 அழகிய மங்களகரமான பொருட்களைத் தனது கனவில் கண்டார், அவை: 1. வெள்ளையானை 2. வெண்ணிறக் காளை 3. சிங்கம் 4. லக்ஷ்மி தெய்வம் 5. மலர்மாலைகள் 6. முழுநிலவு 7. சூரியன் 8. பெரிய கொடி 9. வெள்ளிக்கலசம் 10. தாமரைத் தடாகம் 11. பாற்கடல் 12. வானுலகின் பறக்கும் தேர் 13. மணிக்கற்களின் குவியல் 14. புகையற்ற நெருப்பு... Full story

பழமொழி கூறும் பாடம்

– தேமொழி. பழமொழி: நாய் கொண்டால் பார்ப்பாரும் தின்பர் உடும்பு   கள்ளியகிலுங் கருங் காக்கைச் சொல்லும்போ லெள்ளல் கயவர்வா யின்னுரையைத் - தெள்ளிதி னார்க்கு மருவி மலைநாட! நாய்கொண்டாற் பார்ப்பாருந் தின்பா ருடும்பு. (முன்றுறையரையனார், பழமொழி நானூறு) பதம் பிரித்து: கள்ளி அகிலும், கருங் காக்கைச் சொல்லும்போல், எள்ளற்க, யார் வாயும் நல் உரை!-தெள்ளிதின் ஆர்க்கும் அருவி மலை நாட!-நாய் கொண்டால், பார்ப்பாரும் தின்பர், உடும்பு. பொருள் விளக்கம்: கள்ளியில் கிடைக்கும் அகிலையும் (அதன் மணத்திற்காகவும்), ... Full story

பேராசிரியர் தெ. முருகசாமி வழங்கிய ‘தொல்காப்பியம் ஓர் அறிமுகம்’ உரை

பேராசிரியர் தெ. முருகசாமி வழங்கிய 'தொல்காப்பியம் ஓர் அறிமுகம்' உரை
தொல்காப்பியம் ஓர் அறிமுகம் பேராசிரியர் தெ. முருகசாமி மேனாள் முதல்வர், இராமசாமி தமிழ்க் கல்லூரி, காரைக்குடி (குறிப்பு: பாரீசைத் தலைமையகமாகக் கொண்டு, கனடாவிலும், துபாயிலும், புதுச்சேரியிலும் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளைகள் துவக்கப்பட்டுள்ளன. 08.02.2016 அன்று புதுச்சேரியின் "உலகத் தொல்காப்பிய மன்றம்" கிளையின் சார்பாக, "தொல்காப்பியம் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பில் பேராசிரியர் தெ. முருகசாமி அவர்கள் "தொல்காப்பியத் தொடர்பொழிவு" நிகழ்ச்சிக்காக ஆற்றிய உரையின் சுருக்கம். மாதம் ஒரு தமிழறிஞர் உரை என்ற திட்டத்தில், தொல்காப்பியம் ... Full story

பழமொழி கூறும் பாடம்

– தேமொழி.   பழமொழி: இருள் நீக்கும் பல்மீனும் காய்கலாவாகும் நிலா   ஆயிரவ ரானு மறிவில்லார் தொக்கக்கான் மாயிரு ஞாலத்து மாண்பொருவன் போல்கலார் பாயிரு ணீக்கு மதியம்போற் பன்மீனுங் காய்கலா வாகு நிலா. (முன்றுறையரையனார், பழமொழி நானூறு) பதம் பிரித்து: ஆயிரவரானும் அறிவில்லார் தொக்கக்கால், மா இரு ஞாலத்து மாண்பு ஒருவன் போல்கலார்;- பாய் இருள் நீக்கும் மதியம்போல், பல் மீனும், காய்கலாவாகும் நிலா. பொருள் விளக்கம்: ஆயிரக்கணக்கான அறிவற்றவர் ஒன்று திரண்டாலும், பரந்து விரிந்திருக்கும் இப்பெரிய உலகில் மாட்சிமை பொருந்திய அறிவிற்சிறந்த ஒருவரைப் போல ... Full story
Page 1 of 1712345...10...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.