Posts Tagged ‘நாகேஸ்வரி அண்ணாமலை’

Page 1 of 1512345...10...Last »

அமெரிக்க ஜனநாயகத்தின் வலிமை

-நாகேஸ்வரி அண்ணாமலை அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே அமெரிக்கச் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் பிளவு வெளிப்படையாகத் தெரிய வந்திருக்கிறது. எல்லாச் சமூகங்களிலும்போல் அமெரிக்காவிலும் இடதுசாரிகள், வலதுசாரிகள், பழமை விரும்பிகள், புதுமைவாதிகள் என்று பல பிரிவுகள் உண்டு. ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அதுவரை அரசல் புரசலாக இருந்த இந்தப் பிளவுகள் இப்போது வெளிப்படையாகத் தோன்றியிருக்கின்றன. வெள்ளை இனவாதிகளின் கை மிகவும் ஓங்கியிருப்பதாகத் தெரிகிறது. இவர் சொல்லும் பொய்களுக்கு அளவேயில்லை. தினமும் பொய்களாகக் கூறிக்கொண்டு நடுநிலை வகிக்கும் பத்திரிக்கைகளை மக்களின் எதிரிகள் என்கிறார். நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிக்கைகள் அடிக்கடி ... Full story

எங்கள் தோட்டிச்சியைப் பற்றிய ஒரு குமுறல்

எங்கள் தோட்டிச்சியைப் பற்றிய ஒரு குமுறல்
நாகேஸ்வரி அண்ணாமலை இந்தியாவில் மேட்டுக்குடி மக்களும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் பல வகையான உணவை உண்ணும் பாக்கியம் பெற்றவர்களாக இருக்கிறோம். இந்த வகுப்பைச் சேர்ந்த நாங்களும் அமெரிக்கா வந்த பிறகு எங்களுக்கு இன்னும் அதிகமாகப் பல வகையான உணவுகளை உண்ணும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தினமும் காலையில் அமெரிக்காவில்கூட இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்று இதில் எதையாவது ஒன்றைச் சாப்பிடுகிறோம். மதியம் சோறு, சாம்பார், ரசம், இரண்டு பொரியல்கள், தயிர் இத்யாதி. இரவு மறுபடி சோறு அல்லது சப்பாத்தி, தொட்டுக்கொள்ளப் பல வகையான துணைக்கறிகள். இடையில் சாயந்திரம் ஏதாவது தின்பண்டங்கள் மற்றும் ... Full story

அழியாத பிளாஸ்டிக்

அழியாத பிளாஸ்டிக்
-நாகேஸ்வரி அண்ணாமலை   அடுத்த அறுபது நொடிகளில், அதாவது ஒரு நிமிடத்தில் உலகம் முழுவதுமுள்ள மக்கள் பத்து லட்சம் பிளாஸ்டிக் பாட்டில்களையும் இருபது லட்சம் பிளாஸ்டிக் பைகளையும் வாங்குவார்களாம். இவையெல்லாம் முற்றிலும் அழிந்து போவதற்கு ஆயிரம் வருஷங்களுக்கு மேல் ஆகுமாம். இது இப்படி நடந்துகொண்டிருக்க அவற்றில் சில மிகவும் நுண்ணிய துகள்களாக உடைந்து எண்ணிலடங்காத அளவில் கடலில் கலந்துவிடுகின்றன. இவை கடல் நீரிலும் குடிநீரிலும் நாம் தினமும் உபயோகிக்கும் உப்பிலும் காணப்படுகின்றன. மேலே குறிப்பிட்டவற்றோடு ... Full story

மீண்டும் போப் பிரான்சிஸின் பெருமை

நாகேஸ்வரி அண்ணாமலை இந்து மதத்தில் பிறந்ததால் மட்டுமே (இந்து மதச் சம்பிரதாயங்கள் எதையும் நான் பின்பற்றுவதில்லை) இந்து என்று கணிக்கப்படும் நான் ஏன் போப் பிரான்சிஸ் பற்றி ஒரு புத்தகம் எழுதினேன் என்று பலர் வியக்கிறார்கள். நான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டேனோ என்றும் பலர் நினைக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் ஒரு விளக்கம் தரக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் போப் பிரான்சிஸ் பற்றி எழுதியது, நான் இதுவரை அறிந்திராத ஒரு மதத் தலைவர் அவர் என்பதால். ... Full story

படித்த, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் செய்யும் மோசடி

-நாகேஸ்வரி அண்ணாமலை மைக்கேல் கோகென் என்பவர் ஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞர். இவர் இவ்வளவு நாட்களாக ட்ரம்ப் செய்த சில தவறுகளை மூடிமறைத்து வந்தார். இப்போது வேறு வழியில்லாமல் தான் அமெரிக்கப் பாராளுமன்ற கமிட்டியின் முன்னால் பொய் கூறியதாக ஒப்புக்கொண்டார். இதற்கு அவருக்கு மூன்று ஆண்டு ஜெயில் தண்டனை விதித்திருக்கிறார்கள். இந்தியாவில் இம்மாதிரிக் குற்றங்கள் எல்லாம் – அதுவும் மேல் மட்டத்தில் நடந்தால் – கண்டுகொள்ளப்படாமலே போய்விடும். என்ன இருந்தாலும் கோகெனும் ட்ரம்பும் அமெரிக்காவில் இருப்பவர்கள் அல்லவா? அமெரிக்கா இன்னும் இந்தியா அளவுக்குத் தாழ்ந்து ... Full story

‘ஜோக்கர்’ இயக்குநருக்கு மனமார்ந்த பாராட்டுகள்

‘ஜோக்கர்’ இயக்குநருக்கு மனமார்ந்த பாராட்டுகள்
-நாகேஸ்வரி அண்ணாமலை சர்கார் படத்தைப் பார்த்து மிகவும் ஏமாற்றமடைந்திருந்த எனக்கு சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ‘ஜோக்கர்’படம் மிகுந்த மன நிறைவைத் தந்தது. அதன் விமர்சனத்தைப் படித்திருந்த எனக்கு அதைப் பார்க்கும் வாய்ப்பு இப்போதுதான் – அதாவது சர்கார் படத்தைப் பார்த்த பிறகுதான்– கிடைத்தது. இந்தப் படம் அமெரிக்காவில் திரையிடப்படவில்லை என்று நினைக்கிறேன். எல்லா வகையிலும் சர்கார் படத்திற்கு நேர் மாறு ஜோக்கர் படம். முதலில் விஜய்யின் சண்டை போடும் திறனையும் ... Full story

திரு ஏ.ஆர். முருகதாஸ் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்

நாகேஸ்வரி அண்ணாமலை நான் இப்போதெல்லாம் சினிமாவுக்குப் போவதே இல்லை.  இதற்கு வயது ஒரு காரணம்.  இப்போதைய விருப்பங்கள், ஆசைகள் வேறு விதமாக இருக்கின்றன.  நடிக, நடிகைகள் அடிக்கும் கூத்துக்களைப் பார்த்துப் பரவசப்பட்டது ஒரு காலம்.  இப்போது அவை எல்லாம் அறியாமையில் செய்த காரியங்கள் என்று புரிகிறது.  மேலும் வருஷத்தில் ஒன்பது மாதங்களை அமெரிக்காவில் கழிக்க ஆரம்பித்த பிறகு ரசிப்பதற்கு வேறு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன என்பது புரிகிறது. இருந்தாலும் தமிழக அரசியலில் ... Full story

நீங்கள் Mr. ஆ? Ms. ஆ?  அல்லது Mx. ஆ ? 

நாகேஸ்வரி அண்ணாமலை அமெரிக்காவில் நடக்கும் பல வித்தியாசமான விஷயங்களில் இதுவும் ஒன்று.  ஆணிலும் சேராத, பெண்ணிலும் சேராத திருநங்கைகளுக்கும் திருநம்பிகளுக்கும் (transgender) ஏன் தாங்கள் Mr. என்றோ அல்லது Mrs. என்றோ அல்லது Ms. என்றோ அழைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது.  அதனால் தங்களுடைய பிறப்புச் சான்றிதழ்களில் M என்றோ F என்றோ போட்டுக்கொள்ளாமல் இரண்டிலும் சேராமல் X என்று போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் வைக்கப் போகிறார்கள். ஆரோவுட் என்னும் திருநம்பி ... Full story

அமெரிக்காவில் ஓரின ஈர்ப்பாளர்களின் நீண்ட பயணம்

நாகேஸ்வரி அண்ணாமலை அமெரிக்காவில் ஓரின ஈர்ப்பாளர்களின் உரிமைகளுக்கான நீண்ட பயணம் இன்னும் முற்றுப்பெறவில்லை என்றாலும் இப்போது எவ்வளவோ முன்னேறியிருக்கிறது.  இருபது வருஷங்களுக்கு முன்புகூட இவர்கள் பலரால் நிந்திக்கப்பட்டார்கள்.  (இன்னும் சில சமூகங்களில் இவர்களுக்கு மரண தண்டனைகூடக் கொடுக்கப்படுகிறது என்பது வேதனைக்குரிய விஷயம்.) 1998-இல் வயோமிங் என்னும் மாநிலத்தைச் சேர்ந்த லாரமீ என்னும் ஊரில் ஒரு ஓரின ஈர்ப்பாளனை இரண்டு திருடர்கள் கடத்திக்கொண்டுபோய் துன்புறுத்திப் பின் ஒரு வேலியில் தொங்கவிட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.  அந்தப் ... Full story

இந்திய ஜனநாயகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?

நாகேஸ்வரி அண்ணாமலை   இன்றைய தேதியிட்ட (செப்டம்பர் 18) ‘இந்து’வில் ஒரு அதிர்ச்சி தரும் தகவல் வெளிவந்திருக்கிறது.  இந்தச் செய்தி வேறு எந்த இடத்திலிருந்து வந்திருந்தாலும் நான் நம்பியிருக்க மாட்டேன்; ஒரு பொறுப்பான பத்திரிக்கையான இந்துவிலிருந்து வந்தது என்ற ஒரே காரணத்திற்காக அதை நம்பித் தொலைக்க வேண்டியிருக்கிறது. பீகார் மாநில ஜார்கன்டில் உள்ள கோத்தா மாவட்டத்தில் நடந்த ஒரு செயலை நினைத்துப் பார்க்கவே குமட்டுகிறது.  கோத்தா மாவட்ட, பி.ஜே.பி.யைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் துபே அங்கு ஒரு பாலம் கட்டுவதற்கு அடிக்கல் ... Full story

பாலஸ்தீனம்: அநீதியின் உச்சக் கட்டம்

நாகேஸ்வரி அண்ணாமலை   இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காண ட்ரம்ப் ஜனாதிபதியானவுடன் தன் சொந்த மருமகன் ஜேரட் குஷ்னரை நியமித்தார்.  இவர் யூத மதத்தைச் சேர்ந்தவர் என்பதைத் தவிர பாலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்த்துவைக்க வேறு எந்த தகுதியும் இல்லாதவர்.  ஆனால் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைக்க அவரால் முடியும் என்று ட்ரம்ப் உளறிக்கொண்டிருந்தார்.  எத்தனையோ முறை இஸ்ரேலுக்குச் சென்றுவந்த குஷ்னர் எதையும் பெரிதாகச் சாதிக்கவில்லை.  இப்போது இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதாகக் கூறிக்கொண்டு பெரிய குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டிருக்கிறார். லட்சக்கணக்கான பாலஸ்தீன அகதிகளுக்கு ... Full story

மதுரையில் ஆட்டோக்காரர்கள் படுத்தும் பாடு

நாகேஸ்வரி அண்ணாமலை   இரண்டு வாரங்களுக்கு முன்னால் மதுரைக்குச் சென்றிருந்தேன்.  தமிழ்நாட்டில் எங்கிருந்து மதுரைக்குச் சென்றாலும் பேருந்திலோ ரயிலிலோதான் செல்வோம்.  அங்கும் எங்கு செல்ல வேண்டுமென்றாலும் ஆட்டோவில்தான் போவது வழக்கம்.  இதற்கு முன் எத்தனையோ முறை மதுரைக்குச் சென்றிருந்தாலும் அங்கு ஓடும் ஆட்டோக்களில் மீட்டர் இல்லை என்பதைக் கவனிக்கத் தவறிவிட்டிருக்கிறேன்.  மதுரையில் பேருந்திலிருந்து கோரிப்பாளையம் திறுத்தத்தில் இறங்கி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு ஓட்டலுக்குப் போகச் சொன்னோம்.  அறுபது ரூபாய் வேண்டும் என்றார் ஆட்டோ டிரைவர்.  “ஒரு கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்கவா ... Full story

ஒரு மத நல்லிணக்கக் கூட்டத்தில்  .  .  .   .

நாகேஸ்வரி அண்ணாமலை   சமீபத்தில் நான் எழுதிய போப் பிரான்சிஸ்: நம்பிக்கையின் புதிய பரிமாணம் என்ற புத்தக அறிமுகம் பற்றிய நிகழ்ச்சியை சென்னையிலும் மதுரையிலும் நடத்தினோம்.  போப்பின் செய்தியை எத்தனை  பேரிடம் கொண்டுசேர்க்க முடியுமோ அத்தனை பேரிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்பது எனது ஆசை, குறிக்கோள்.  இதனால்தான் இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்தோம். மதுரையில் புத்தக அறிமுக நிகழ்ச்சிக்குப் பிறகு பல மதத்தலைவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி ஒன்றிற்கு நண்பர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்தார்.   போப் பிரான்சிஸின் உயர்ந்த குணங்களை எடுத்துச் ... Full story

போப் பிரான்சிஸ்: நம்பிக்கையின் புதிய பரிமாணம்- புத்தக அறிமுகம்

அழைப்பு புத்தக அறிமுகம் போப் பிரான்சிஸ்: நம்பிக்கையின் புதிய பரிமாணம் (அடையாளம் வெளியீடு) ஆசிரியர்: நாகேஸ்வரி அண்ணாமலை நிகழ்ச்சித் தலைமை: சமஸ் துணை ஆசிரியர், த இந்து (தமிழ்) நாள்: ஜூலை 07 (சனிக்கிழமை) மாலை 6.00 மணி இடம்: பனுவல் 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை, 600041 கைபேசி, வாட்ஸப் 9789009666 பங்கு பெறுக... Full story

எங்கே இருக்கிறது ஜனநாயகம்?

நாகேஸ்வரி அண்ணாமலை   கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது.  எல்லாக் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்திருக்கின்றன.  முதல் அமைச்சர் பதவிக்கு பா.ஜ.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருப்பவர் எடியூரப்பா.  இவர் ஊழலிலே திளைத்து ஊறிப்போனவர்; சிறைக்குச் சென்றவர்.  ஊழலற்ற இந்தியாவை உருவாக்கப் போகிறோம் என்று சொன்ன பா.ஜ.க.வின் வேட்பாளர். மோதி இவரை வெகுவாகப் புகழ்ந்து பேசி, மக்களுக்கு அறிமுகப்படுத்தும் படம் தினசரிகளில் வெளியானது.   ஜி.எஸ்.டி.., பணமதிப்பிழப்பு, நீட் தேர்வு என்று பல திட்டங்களை அறிவித்து நாட்டில் கள்ளப் பணத்தை ஒழித்து, ஊழலே இல்லாத நாடாக ஆக்கப் போவதாக அறிவித்த மோதியின் கையாலேயே ... Full story
Page 1 of 1512345...10...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.