Posts Tagged ‘நிர்மலா ராகவன்’

Page 1 of 1212345...10...Last »

நலம் .. நலமறிய ஆவல் (60)

நலம் .. நலமறிய ஆவல் (60)
நிர்மலா ராகவன் பள்ளியில் BULLY நான் மலேசியாவிற்கு வந்தபின் ஒரு புதிய ஆங்கில வார்த்தையைக் கற்றேன்: BULLY. அப்படியென்றால், ஒருவரை மிரட்டியோ, அச்சுறுத்தியோ, கட்டாயப்படுத்தியோ அவருக்கு இணக்கமில்லாத காரியத்தைச் செய்யவைப்பது. இதனால் பாதிக்கப்பட்டவர் மனம் நோகும். பல சந்தர்ப்பங்களில், உடல் நிலையும் நீண்ட காலம் பாதிக்கப்படலாம். ஏன், மரணத்தில்கூட முடியலாம். உண்மைக் கதை (ஆதாரம்:THE STAR, ஜூன், 2017)... Full story

நிம்மதியை நாடி

நிர்மலா ராகவன் ஃபெர்ரி படகு தன் சக்திக்கு மீறிய கனத்தைச் சுமந்து, மெல்ல நகர்ந்துகொண்டிருந்தது. உள்ளே ஒரே துர்வாடை. அதெல்லாம் ரம்லிக்குத் தெரியவில்லை. அவன் மனம் கனவுகளால் நிறைந்திருந்தது. பெயருக்கு வீடு என்றிருந்த ஒன்றை எரிமலைக்கு -- மீண்டும் -- பறிகொடுத்துவிட்டு, இனி என்ன செய்வது என்று புரியாது நின்றிருந்தபோதுதான் ஆதான் கூறினான்: “என்னோட மலேசியா வந்துடேன். போன தடவைதான் ஒங்கப்பா, அம்மா ரெண்டு பேரையும் பலிகுடுத்தாச்சு. நீயும் இங்கேயே கிடந்து சாகப்போறியா?” சுமத்ராவில் இருந்த ஸினபோங் மலை நானுறு ஆண்டுகளாக, ... Full story

நலம் .. நலமறிய ஆவல் (59)

நலம் .. நலமறிய ஆவல்  (59)
நிர்மலா ராகவன் ஆண்-பெண்-பள்ளி பெண்களும் பையன்களும் சேர்ந்து படிக்கும் இடைநிலைப்பள்ளி அது. ஆரம்பப் பள்ளியிலிருந்தே அப்படித்தான் என்றாலும், இந்த வயதிலேயே அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற துடிப்பு உயர்பதவியிலிருந்த சில ஆசிரியைகளுக்கு வந்தது. அதன் பலனாக, கோலாலம்பூருக்கு அருகிலிருந்த அப்பள்ளியில் ஒரு புதிய விதி அமலுக்கு வந்தது. எல்லா வகுப்பறைகளிலும் ஆண்கள்தாம் முதல் வரிசைகளில் அமர வேண்டும். காரணம்: பெண்கள் முன்னிருக்கைகளில் உட்கார்ந்தால், ... Full story

நலம் .. நலமறிய ஆவல் (58)

நலம் .. நலமறிய ஆவல் (58)
நிர்மலா ராகவன் வெற்றியால்தான் மகிழ்ச்சியா? “எனக்கு வாழ்க்கையில் சந்தோஷமே இல்லை. எதிலும் வெற்றி பெற முடியவில்லை!” இப்படிக் கூறுபவருக்கு முக்கியமான ஒன்று புரியவில்லை. மகிழ்ச்சி என்பது வெற்றியால் வருவதில்லை. நமக்குப் பிடித்ததை செய்தாலே போதும். பிடித்த காரியத்தை நாம் எதிர்பார்த்ததைவிடச் செம்மையாகச் செய்தால் கிடைப்பது மகிழ்ச்சி. தோல்வி ஏன்? `தோல்விக்குமேல் தோல்வி வருகிறதே!’ என்று மனமுடைபவர்கள் தங்கள் ஆற்றலுக்குட்பட்ட செயல்களைச் செய்யாமலிருக்கலாம். அல்லது, தவறுகளை மறக்கமுடியாது, ... Full story

நலம் .. நலமறிய ஆவல் – (57)

நலம் .. நலமறிய ஆவல் - (57)
நிர்மலா ராகவன் விடு, விட்டுத்தள்ளு! ஒரு குழந்தை பலூனைப் பிடித்திருந்தது. கையை லேசாகத் திறக்க, பலூன் பறந்தே போய்விட்டது. பறிபோன பலூனையே நினைத்து அக்குழந்தை கதறிக்கொண்டிருந்தது -- இன்னொன்று கையில் கிடைக்கும்வரை. அந்த நிலையில்தான் நம்மில் பலரும் இருக்கிறோம், வளர்ந்தபின்னரும். பலூனுக்குப் பதில் நினைவுகள். அவை இன்பம் அளிப்பனவாக இல்லாவிட்டாலும், கைவிட்டுப் போகாமல் அவைகளை கெட்டியாகப் பிடித்து வைத்துக்கொள்ள முயற்சிக்கிறோம். ... Full story

நலம் .. நலமறிய ஆவல் (56)

நலம் .. நலமறிய ஆவல்  (56)
நிர்மலா ராகவன் என்னைப்போல் உண்டா! இரண்டே வயதான குழந்தை அவள். எந்த ஒரு புதிய உடையையோ, சட்டையையோ அணிந்தபின், ஓடிப்போய் கண்ணாடிமுன் நின்று அழகு பார்த்துக்கொள்வாள். இன்னொரு குழந்தை, ஒரு முறை தலைமயிரை வெட்டிக்கொண்டு வந்ததும், `அழகா இருக்கியே!’ என்று எல்லாரும் பாராட்ட, தினசரி தானே வெட்டிக்கொள்ள ஆரம்பித்தாள்! வீட்டிலிருந்த கத்தரிக்கோல்கள் எல்லாவற்றையும் ஒளித்துவைக்க நேர்ந்தது! பண்டைக்காலத்தில் கிரேக்க நாட்டில் வாழ்ந்த ... Full story

நலம் .. நலமறிய ஆவல் (55)

நலம் .. நலமறிய ஆவல் (55)
நிர்மலா ராகவன் வாழ்க்கை எனும் பாதை திருமணமான பத்து வருடங்களில் மகிழ்ச்சியாக இருந்ததாகவே ரத்னாவிற்கு நினைவில்லை. சர்வாதிகாரியான மாமனார், `இது என் ராஜ்யம்!’ என்பதுபோல் அவளை சமையலறைப்பக்கமே விடாத மாமியார், வாயில்லாப்பூச்சியான கணவன் -- இவர்களைப் பொறுத்துப் போக வேண்டிய கடமை. தனிக்குடித்தனம் போகலாம் என்றாலோ, `பெரியவர்களை விட்டுவிட்டு உனக்கென்னடி வாழ்வு!’ என்று பிறந்தவீட்டினர் பழிப்பார்களே என்ற தீராத ... Full story

நலம் .. நலமறிய ஆவல் (54)

நலம் .. நலமறிய ஆவல் (54)
நிர்மலா ராகவன் தலைமைத்துவமும் பணிவும் ஒரு சிற்றூரிலிருந்து மேற்பயிற்சிக்கு வந்திருந்த ஓர் ஆசிரியை, “பிரபலமாக இருப்பவர்களெல்லாம் கர்விகளாக இருக்கிறார்கள்!” மூக்கைச் சுளித்தபடி கூறினாள். தான் எதிலும் புகழ் பெறும் தகுதியற்றவள் என்று அவள் தன்னைத்தானே மதிப்பிட்டுக்கொண்டதுதான் அவளைப்போல் இல்லாத பிறரைப் பழிக்கக் காரணமாக இருந்திருக்குமோ? ஒரு சிறுகதைப் போட்டியில், முதல் பரிசு தாராவிற்குத்தான். அதை வெளிப்படையாகச் சொன்னால், தன்னைக் கர்வி என்று நினைத்துவிடுவார்களோ என்று `அடக்கத்துடன்’ என்னிடம் ... Full story

நலம் .. நலமறிய ஆவல் – (53)

நலம் .. நலமறிய ஆவல் - (53)
நிர்மலா ராகவன் சுய விமரிசனம் அபய முத்திரை இந்துக்கோயில் சிலைகளில் இந்த முத்திரையைப் பார்த்திருப்பீர்கள். பக்கவாட்டில் இருக்கும் வலது உள்ளங்கை வெளியில் தெரிய, விரல்கள் மேல் நோக்கி அமைந்திருக்கும். பயம் என்ற வார்த்தைக்கு எதிர்ப்பதம் அபயம். அதாவது, `பயமின்றி இரு, உன்னைத் தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றுகிறேன்!’ என்று ஒருவருக்கு உணர்த்தி, அவரை அமைதிப்படுத்துவது இந்த அபய ... Full story

நலம் .. நலமறிய ஆவல் – (52)

நலம் .. நலமறிய ஆவல் - (52)
நிர்மலா ராகவன் சவாலைச் சமாளி! சுவரும் சித்திரமும் அமெரிக்க பல்கலைக்கழகமொன்றில், முனைவர் பட்டப்படிப்புக்கு பத்துபேர் சேர்ந்திருந்தனர். இறுதியில் இருவர் மட்டுமே நிலைக்க, மற்றவர்கள், `மிகக் கடினம்!’ என்று பாதியிலேயே விட்டுவிட்டுப் போய்விட்டார்களாம். `ஏன் அப்படி நம்மைவிட்டுப் போய்விட்டார்கள்? என்று எதிர்மறையாகச் சிந்திக்காது, `நம்மிருவருக்குள் என்ன ஒற்றுமை?’ என்று ஆராய்ந்தபோது, எவ்வளவு வேலைகள் இருந்தாலும் அடிக்கடி உணவு உட்கொள்ளும் பழக்கம் ... Full story

ஏனிந்த முடிவு?

 நிர்மலா ராகவன் தொலைபேசியைக் கையில் எடுத்தவுடனேயே அம்மா கூறினாள், முகமன்கூட இல்லாமல்: “திவா போயிட்டான்”. அக்குரலிலிருந்த தீர்மானம், இனி அவன் எங்கேயும் போகமுடியாது என்று ஒலிப்பதுபோலிருந்தது. “அண்ணன் குடும்பத்தோட சண்டையோ, பூசலோ, இந்தச் சமயத்தில விட்டுக்குடுக்கலாமா? நான் போய் பார்த்தேன். உடம்பெல்லாம் நீலம் பாரிச்சு..!” அதற்குமேல் கேட்க முடியவில்லை சுதாவால். இயற்கையான சாவு நேர்ந்தால் உடலில் உடனே நிறமாற்றம் உண்டாகுமா? `இது தற்கொலைதான்!’ என்று அவளது அந்தராத்மா கூவியது. ஏனெனில், இது திவாகரின் முதல் ... Full story

நலம் .. நலமறிய ஆவல் – (51)

நலம் .. நலமறிய ஆவல் - (51)
நிர்மலா ராகவன் கர்வமும் காலணியும் கேள்வி: குள்ளமான ஒருவர் குதிகால் மிக உயரமாக அமைந்த காலணியை அணிந்தால் என்ன ஆகும்? பதில்: எல்லாரையும்விட உயர்ந்திருக்கிறோம் என்ற பெருமை எழும். ஆனால் அது நிலைக்காது. அவர் சீக்கிரமே விழக்கூடும். அந்தக் காலணியைப்போல்தான் கர்வமும். பதவியால் வரும் கர்வம் தாழ்மையான நிலைமையில் இருந்த ஒருவருக்கு எப்படியாவது ... Full story

நலம் .. நலமறிய ஆவல் – (50)

நலம் .. நலமறிய ஆவல் - (50)
நிர்மலா ராகவன் மகிழ்ந்திருங்கள் `நான்கு வயதிலிருந்தே எல்லா பாட்டுப் போட்டிகளிலும் நான்தான் முதல்! எனக்குப் பாடகராக வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் என் பெற்றோர் என்னைக் கலந்து பேசாமல், இஞ்சினீயராக ஆக்கிவிட்டார்கள்!’ நாற்பது வயதாகிவிட்ட ஒருவரின் ரகசியப் புலம்பல் இது. தனக்குப் பிடித்த துறையை பெற்றோர்களுடன் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு அவருக்குச் சுதந்திரம் அளிக்கப்படவில்லை. `மகனுக்கு நல்லதுதானே செய்கிறோம்!’ என்று நினைத்து அவர்கள் ... Full story

நலம் .. நலமறிய ஆவல் – (49)

நலம் .. நலமறிய ஆவல்  - (49)
நிர்மலா ராகவன் உறவுகளும் நட்பும் உறவுகளை நாம் தேர்ந்தெடுக்க முடியாவிட்டாலும், நல்ல நண்பர்களையாவது பெறும் பாக்கியம் இருக்கிறது என்பது ஆறுதலளிக்கும் விஷயம். `குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை’ என்கிறார்கள். ஆனால், நம்மிடம் என்னென்ன குறைகள் இருக்கின்றன என்றே ஆராய்பவர்களிடம் போலியாகப் பழகினால்தான் அவர்களுடைய மதிப்பைப் பெறமுடியும். அப்போது நாம் நமக்கே உண்மையாக இருப்பது எப்படி நடக்கும்? நிறைவுதான் கிட்டுமா? உறவினரோ, நண்பர்களோ ... Full story

நலம் .. நலமறிய ஆவல் (48)

நலம் .. நலமறிய ஆவல்  (48)
நிர்மலா ராகவன் பொறுமை எதுவரை? ஒரு மலேசியப் பத்திரிகையில் வந்த கேள்வி: `திருமணமான முப்பது வருடங்களில் என்னை என் கணவர் அடிக்காத நாளே கிடையாது! எலும்புகள் நொறுங்கி, மருத்துவச் சிகிச்சைக்கு அடிக்கடி போனதும் உண்டு. இதற்கு நான் என்னதான் செய்வது?’ பதில்: உங்கள் பொறுமைக்கு நல்ல பயன் கிடைக்கும். சம்பந்தப்பட்ட பெண்ணைப்போல் என்ன விளைந்தாலும் பொறுமை ... Full story
Page 1 of 1212345...10...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.