Posts Tagged ‘பவள சங்கரி திருநாவுக்கரசு’

Page 1 of 4312345...102030...Last »

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
பவள சங்கரி அந்நிய ஆதிக்கத்திலிருந்து நம் இந்தியத் திருநாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவுற்று இன்று 71 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இனிய தருணத்தில் நம் சுதந்திரத்திற்காக பாடுபட்டு இன்னுயிரையும் ஈந்துள்ள தியாகச் செம்மல்களை நினைவுகூர்வோமாக! நம் நாட்டின் முன்னேற்றத்தில் மகளிரின் பங்கு குறிப்பிடும் வகையில் அமைந்திருப்பதும் மகிழ்வான செய்தி. சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்கு! ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது தனிமனிதர்கள் ... Full story

A Ruby – மாணிக்கம்

A Ruby -  மாணிக்கம்
    கொரிய மூலம் : கிம் யாங் - ஷிக் ஆங்கில மூலம் : கிம் ஜின்மன் தமிழாக்கம் : பவள சங்கரி   மலையுச்சியில் கருகுமொரு மலரது, நொறுங்கியதொரு இருதயத்தின்  வழியுமொருத்துளிக் குருதி, வெள்ளியாய் ஒளிரும் ஆழ்கடலினூடே எவருமறியா, தூய்மையானதோர் நிர்வாணத்துளி மர்மமிகு காலைக் கடலினூடே புதைந்து கிடக்கிறது. இரவின் பின் இரவாக... Full story

முதியோர் வைப்புத்தொகையின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது நியாயமா?

பவள சங்கரி தலையங்கம் முதியோர் வைப்புத்தொகையின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது நியாயமா? தொழில் முனைவோர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுப்பதற்காக முதியோர் சிறுசேமிப்பு செய்த பணத்தை டெபாசிட் செய்கிறவர்களின் தலையில் கை வைப்பது நியாயமா? முதியோரின் மன நிலையை ஆட்சியாளர்கள் அவசியம் உணர வேண்டும்.. இறுதிக் காலத்தில் யாரிடமும், பெற்ற பிள்ளைகளாக இருந்தாலும், கையேந்தாமல் தன்னிறைவு பெறவேண்டும் என்ற முனைப்பில் அரும்பாடுபட்டு சேமித்து வைத்து அதை அரசு வங்கிகளை மட்டும் நம்பி வைப்புத்தொகையாக வைத்து, வட்டியை மட்டும் வாங்கி செலவு செய்துகொண்டிருக்கும் முதியவர்களின் நிலை ... Full story

Elegy – இரங்கற்பா

Elegy  - இரங்கற்பா
    கொரிய மூலம் : கிம் யாங் - ஷிக் ஆங்கில மூலம் : கிம் ஜெய்ஹியூன் தமிழாக்கம் : பவள சங்கரி   இரங்கற்பா உன்னால்தான் உயிரோடிருக்கிறேன். உனதழைப்பினால் உயிர் வாழ்கிறேன் நான். ஓ எனதன்பே. குரலற்ற எமது இரைச்சல் விண்ணையே குத்திக் கிழித்தாலும் உன்னை மட்டும் அடைவதேயில்லையது எனினும் பனியாய் ... Full story

தானத்திலே சிறந்த தானம்!

தானத்திலே சிறந்த தானம்!
பவள சங்கரி மனிதர்களின் ஐம்புலன்களின் ஆகச்சிறந்த புலன் கண்கள்தான். கண்கள் இல்லையென்றால் ஏற்படும் இழப்பு ஈடுசெய்ய இயலாததொன்று. உலகில் கிட்டத்தட்ட  3 கோடியே 70 இலட்சம் பேரின் பொழுதுகள் இருண்டே கிடக்கின்றன. பிறவியிலேயே பார்வையின்றி பிறந்தவர்கள், இடையில் நோய் அல்லது ஊட்டச்சத்து குறைபாடுகளால் பார்வையிழந்தவர்கள் போன்றவர்கள் இதில் அடக்கம். நம் இந்தியாவில் சுமாராக, 27 மில்லியன் பேர்கள் மித பார்வை கோளாறுகளாலும், 9 மில்லியன் பேர்கள் இருகண் பார்வையின்மையாலும், 2,60,000 ... Full story

’யங் இந்தியா’!!

’யங் இந்தியா’!!
பவள சங்கரி HATS OFF 'YOUNG INDIA' GUYS!! ‘யங் இந்தியா’ என்ற அமைப்பினர் ஈரோடு நகரை அழகுபடுத்த ஆரம்பித்துள்ளனர். இந்த ... Full story

Encounter With A Difference – வேறுபாட்டுடன் ஓர் சந்திப்பு

Encounter With A Difference - வேறுபாட்டுடன் ஓர் சந்திப்பு
    கொரிய மூலம் : கிம் யாங் - ஷிக் ஆங்கில மூலம் : கிம் ஜின் - மன் தமிழாக்கம் : பவள சங்கரி எனக்காகக் காத்திருக்கிறாய் நீ, உனக்காகக் காத்திருக்கிறேன் நான். ஒரே மனமுள்ள நீயும் நானும் காத்திருக்கிறோம். நீ என்னிடம் வருவதில்லை, நான் உன்னிடம் வருவதில்லை. ஒரே மனமுள்ள நீயும் நானும் வருவதில்லை. ஒருநாள் நான் ... Full story

Early Spring – வசந்த விடியல்

Early Spring -  வசந்த விடியல்
  கொரிய மூலம் : கிம் யாங் - ஷிக் ஆங்கில மூலம் : சோ.ஊஞ்சை தமிழாக்கம் : பவள சங்கரி பனிபடர் காலையில் பொறாமையில் கருகும் பைன்கள் மஞ்சள் பச்சை தீப்பிழம்புகள், விழுங்கலைப் போன்று உனது முகத்தைக் கழுவிக்கொண்டாய் நீரில் மூழ்கி,... Full story

ஏவுகணைகள் – சிஏஜி அறிக்கை

பவள சங்கரி தலையங்கம் சிஏஜி யின் அறிக்கையின்படி நமது ஏவுகணைகள் எட்டுவித காரணங்களால் தரம் தாழ்ந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகளைக்கொண்டு சீனாவோடு போர் மூண்டால் அதிக காலம் போரில் நிலைத்து நிற்பது சிரமம் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இன்று பாகிசுதானில் அந்நாட்டு பிரதமர் தவறு செய்துள்ளார் என்று கண்டுபிடிக்கப்பட்டு பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளதோடு இனி வாழ்நாள் முழுவதும் அரசு மற்றும் அரசியலில் பங்குகொள்ள இயலாதவாறு செயல்படுத்தப்படுகிறது. இந்த வழக்கைப் பொறுத்தவரை குறுகிய காலம் நிர்ணயிக்கப்பட்டு ... Full story

வளமான பாரதம் எப்போது?

பவள சங்கரி தலையங்கம் இந்தியாவில் 89% அதிகப்படியான மழையோ, பெய்யவேண்டிய அளவான மழையோ பெய்துள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 600 பேர் பெரும்மழையினால் உயிரிழந்துள்ளனர். இரண்டு இலட்சத்து இருபதினாயிரம் மக்கள் தங்கும் வீடுகள் இழந்து பாதுகாப்புப் பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அசாமில் மட்டும் 1 இலட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். வடக்கே கங்கை, பிரம்மபுத்ரா ஆகிய நதிகளிலும் பெரும் வெள்ளம். இந்த வெள்ளம் ஒரிசாவையே புரட்டிப் போட்டுள்ளது. குஜராத் மக்களும் தாங்கொணாத் துயரில் உள்ளனர். ஆனால் தமிழகத்தில் குடி நீர் கூட இல்லாமல் மக்கள் அல்லலுற்று ... Full story

மீண்டும் முதல்வராகிறார்!

பவள சங்கரி பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தமது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். பிரதமர் அவரைப்பாராட்டி தமது சுற்றுரையில் இனி ஊழலை ஒழிப்பதில் இருவரும் இணைந்து பாடுபடுவோம் என்று கூறியுள்ளார்! நிதிஷ்குமார் மீண்டும் பீகார் மாநில முதல்வராக உறுதிமொழி எடுக்கிறார். பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த சுசில் மோடி அவர்கள் துணை முதல்வராகிறார். நடு இரவில் ஆளுநரைச் சந்தித்து நிதிஷ்குமார் அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்க அழைக்குமாறு கோரினார். அவருடைய கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது! Full story

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்!

பவள சங்கரி பயங்கரவாதிகள் பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகளை நீக்கி ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் நிதி ஆதாரங்களை முடக்கி வைத்ததை இரத்து செய்தும் அறிவிப்பு வந்துள்ளது. இதன் மூலமாக விடுதலைப் புலிகளின் அமைப்பின் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வு கிடைத்திருக்கிறது. Full story

Today II

Today II
  கொரிய மூலம் : கிம் யாங் - ஷிக் ஆங்கில மூலம் : கிம் ஜின்மன் தமிழாக்கம் : பவள சங்கரி   இன்று II ஆகா ஆன்மா, எல்லையற்ற வெளியில் ஓர் ஊதா எம் ஆன்மா, வேதனையிலும், தனிமையிலும்! இன்றோர் பனித்துகளாய் இருந்துவிடு அந்த பாறையில் மோதி துகள்களாய் பறந்துவிடு.     Full story

INDIA / X – Fleeting thoughts

  விரைந்தோடும் எண்ணங்கள்   கொரிய மூலம் : கிம் யாங் - ஷிக் ஆங்கில மூலம் : கிம்ன் ஜின் - சுப் தமிழாக்கம் : பவள சங்கரி சூரியனும் சந்திரனும் அன்றாடம் தோன்றியும் மறைந்தாலும் அவையிரண்டும் என்றும் ஒன்றுபோலில்லை - அனைத்தும் மாறுநிலையில் உள்ளவை. இப்புவியில் வாழ்தல் பொருட்டு தோன்றியவை அனைத்தும் மறைந்துவிடுகின்றன. எவ்வாழ்வும் நித்தியமில்லை - அனைத்தும் மாறுநிலையில் உள்ளவை. நான் நிற்கும் இடத்திலிருந்து காற்று உயர்ந்து மேகச் சில்லொன்றை... Full story

சிறுவர் இலக்கியம் படைப்பது எப்படி? (10)

சிறுவர் இலக்கியம் படைப்பது எப்படி? (10)
பவள சங்கரி ஒரு கதையை சுவைபடச் சொல்வதற்கு பல வழிமுறைகள் உள்ளன. ஒரு பயிற்சி முயற்சியாக கொண்டு அதை பல்வேறு முறைகளில் மாற்றி எழுத முயற்சிக்கலாம். ஐந்து அல்லது ஆறு பக்கங்கள் ஒவ்வொரு முறையிலும் எழுதிப்பார்க்கலாம். இதனால் எழுத்து நடையில் ஒரு இலகுவான தன்மையும், தெளிவும் ஏற்படுவதோடு பல சவால்களையும் எதிர்கொள்ள இயலும். இவையனைத்திலும் முக்கியமாக நினைவில் கொள்ளவேண்டியது வாசகர்களை அடுத்து என்ன ... Full story
Page 1 of 4312345...102030...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.