Posts Tagged ‘பிச்சினிக்காடு இளங்கோ’

Page 1 of 512345

மூதறிஞர் இராஜாஜியின் “அன்னையும் பிதாவும்” கதை

--  பிச்சினிக்காடு இளங்கோ. அண்மையில் என் கைக்கு ஒரு கனமான கதை கிடைத்தது. நான் படித்ததும் என்னை அழவைத்த கதை அது. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற ஒளவையின் வாய்மொழியில் கதையின் தலைப்பைக்கொடுத்தது நுண்ணறிவின் எடுத்துக்காட்டு. அப்பொழுதுதான் அதன் கனத்தை, உட்பொருளை உணர உணர வலி அதிகமானது. சாதி என்னும் பேய் இன்னும் நம்மை விடுதலைசெய்யவில்லை. நாமும் விடுதலைபெறவில்லை. ஆனால் அன்றைக்கு அதற்கு விடுதலை தேடிய காலகட்டத்தில் ஒரு கருவியாக இந்தக்கதை அமைந்திருக்கிறது. மனதைப்பரிமாறிப் பழகும் நெஞ்சங்கள் சாதியைப்பார்ப்பதில்லை. இதைத்தான் கண்ணதாசன் மிக எளிதாக ... Full story

நாணயமானவளே…!

நாணயமானவளே…!
-பிச்சினிக்காடு இளங்கோ நீ துணையிருந்தால் எனக்கு யானைபலம் அன்றாடம் எல்லாம் எளிதாகிவிடுகிறது                     இல்லையேல் அரிதாகிவிடுகிறது துக்கம்கூடத் துக்கமாயில்லை கைகுலுக்கக் காத்திருக்கிறார்கள் இல்லையேல் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள் நீ இல்லாதபோதும் நிம்மதி இருக்கிறது கூட இருந்தால் அது கூடிவிடுகிறது நீ இல்லாதபோதும் எனக்கு முகவரியிருக்கிறது என் முகவரி என்னால் ... Full story

சொல்லின் செல்வன்

-பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) அவை மூலதனம் முகவரியும்கூட! ஆத்திரத்திலும் அரிதாரத்திற்காகவும் செலவு செய்ததில்லை செலவு செய்வதில்லை அனைத்திற்கும் முதலீடுசெய்வதில்லை செலவுகள் தீர்க்கமானவை தெளிவானவை அவற்றிற்குத் திசைகளுமுண்டு இலக்குகளுமுண்டு பரிணாமத்தின் கிடங்காகி அடர்த்தியாகச் சேமிக்கப்பட்டிருக்கிறது பரிமாணத்தின் அடையாளமாக அவ்வப்போது வழங்கப்படுகிறது வெளிச்சமேடையில் விரயம் செய்வதில்லை விதைத்தவை விளைந்தவை அறுவடையாகவேண்டுமென்பதிலேயே கவலையும்... Full story

கர்ணனுக்காக ஒரு கேள்வி !

  கர்ணனுக்காக ஒரு கேள்வி !
  பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)   பாண்டவர் கெளரவர் நூற்றி ஐந்துபேருக்குக் குரு துரோணர்   ஏகலைவனிடம் கட்டைவிரல்வாங்கிய காரியவாதி   நிழலைவணங்கி நேர்மையாய் ... Full story

பகல் நீ!

பகல் நீ!
-பிச்சினிக்காடு இளங்கோ    அறுபதைத் தொடும்போதுதான்                                                          உன்னைத் தொட்டேன் மன்னிக்கவும்! செவிவழியாய்ச் சேர்த்தவை ஏராளம் எனினும் கண்வழியாய் நீ என்மனம் புகக் கவிஞர் மலர்மகனே காரணம்! பொருளே வாழ்க்கையென வாழுவோர்க்கிடையில் பொருளுடையதாக வாழ்க்கையை ஆக்கப் பார்க்கிறேன்... அறுபதை நெருங்கியும்கூட ஆகவில்லை அந்தக்கனவு!... Full story

அபினென்று அழைக்க முடிகிறது எனக்கு!

அபினென்று அழைக்க முடிகிறது எனக்கு!
-பிச்சினிக்காடு இளங்கோ இப்போது பிடிக்கிறது உன்னை                                                                                                              ஒவ்வொருவருக்கும் ஒரு குடும்பப் பெயருண்டு என் குடும்பத்திற்கு என்னால் பெயர்வர எண்ணியிருக்கும்போது என்னை உன் குடும்பத்தில் சேர்த்துவிட்டார்கள் உண்மையில் நான் உன்குடும்பத்தைச் சேர்ந்தவனல்ல ஆதியில் என்குடும்பத்தின் பெயர் வேறு வரலாற்றுச் சதியில்; சகதியில் ... Full story

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்
-பிச்சினிக்காடு இளங்கோ அவர் ஒரு தயாரிப்பாளர்! இவர் ஒரு                                                                                                 தயாரிப்பாளர்! நீங்கள் ஒரு தயாரிப்பாளர்! அவரவர் திறமைக்கேற்பத் தயாரிப்பு நடக்கிறது! அவரவர் விருப்பப்படியும் தயாரிக்கப்படுகிறது! தயாரிப்பு யாருக்காக? என்ற கேள்வியும் எழுகிறது!... Full story

பொம்மைகள்!

பொம்மைகள்!
பிச்சினிக்காடு இளங்கோ      நாங்கள் பொம்மைகள் அல்ல… உங்கள் பிள்ளைகளின் மகிழ்ச்சி! பிள்ளைகளைப் பெற்றதால்                                                                      உங்களுக்கு மகிழ்ச்சி! எங்களைப் பெற்றால் உங்கள் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி! எங்களை வாங்காமலிருந்தால் உங்களுக்கு நட்டமில்லை! பிள்ளைகளின் முகத்தில் மகிழ்ச்சியைக் காணாமலிருந்தால் உங்களுக்கு லாபமில்லையே! நினைவில் வையுங்கள்... உங்களைப்போலவே   நாங்களும் உங்கள் பிள்ளைகளுக்காகவே இருக்கிறோம்! நீங்கள் உங்கள் பிள்ளைகளுடன் விளையாடுகிறீர்கள்! உங்கள் பிள்ளைகள் எங்களுடன் விளையாடுகிறார்கள்! உங்கள் கைகளில் பிள்ளைகள்! பிள்ளைகளின் கைகளில் நாங்கள்! மீண்டும் நினைவுபடுத்துகிறேன்... நாங்கள் பொம்மைகள் அல்ல… உங்கள் பிள்ளைகளின் மகிழ்ச்சி! மகிழ்ச்சியை வாங்குங்கள்! மகிழ்ச்சியாய் வாங்குங்கள்! (சிராங்கூன் சாலையில் ஒரு பொம்மைக்கடைக்குப் போனபோது ஒரு கவிதை எழுதுங்களேன் என்றார்கள். விளைவு இந்தக் கவிதை!) Full story

பூமரம்

பூமரம்
  பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) அடுக்குமாடி கட்டடத்தின் கீழேதான் அந்த இடம் அமைதியைத்தரும் அந்த இடத்தில் கவிதையைத்தேடித்தான் தினமும் வருகிறேன் முதியோர் அமரும் மூலையிலிருந்து படித்துவிட்டுத்திரும்புவது வழக்கம் உடற்பயிற்சிக்காக முதியவர்கள் வந்து பேசாமலிருப்பதும் பேசிக்கழிப்பதும் வழக்கம் வீட்டிலே ... Full story

பிறவி வேண்டும்

    பிச்சினிக்காடு இளங்கோ இன்னொரு பிறவிவேண்டும் இழந்ததை ஈட்டவேண்டும் தூங்கித் தூங்கிக் கழித்த பொழுதைத் துடிப்பாய் விழித்துச் செயல்படவேண்டும் ஏங்கி ஏங்கிக் கரைந்த காதல் மீண்டும் பூக்க நீர்விட வேண்டும் குடித்துக் குடித்துக் களித்த பொழுதைப் படித்துப் படித்துப் பயனுற வேண்டும் எல்லாம் செய்யும் பொருளைச் செய்து ஏக்கம் இன்றி எல்லாம் செய்ய இன்னொரு பிறவிவேண்டும் இழந்ததை மீட்கவேண்டும்... Full story

ஒரே பாட்டு

  பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) அரவணைப்பில்லை என்பது பல்லவி அலட்சியம் அனுபல்லவி கையில்பணமிருந்தால் கவலையில்லை என்பது சரணம் இப்போது எல்லா இடத்திலும் இதுதான் ஒலிபரப்பாகிறது சகிப்புத்தன்மை சற்றுமில்லா மனசு வற்றிய குளமாய் ஈரமின்றி மனதில் ஏந்தி மனம்கரைய பழகுவது அத்திபூத்தாலும் ஆகாது ஆலமரமெனினும் காலம் கடந்தால் விழுதுகள் இல்லையேல் விழுந்துவிட வேண்டியதுதான் விழுதுகள் இருந்தும் விழுந்தால்... Full story

இந்த வார வல்லமையாளர்!

இந்த வார வல்லமையாளர்!
இந்த வார வல்லமையாளர்! ஏப்ரல் 28 , 2014 வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்ட….. ************************************************************************************** இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு திரு. பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் ************************************************************************************** ... Full story

என்னுயிர்த்தோழனே..!

  பிச்சினிக்காடு இளங்கோ     உதிரத்தை வியர்வையாய் மொழிபெயர்க்கத்தெரிந்தவனே வியர்வையை நதியாக்கி நாளும் குளிப்பவனே என்னுயிர்த்தோழனே உன் வியர்வைத்துளி ஒவ்வொன்றும் ரூபாயல்ல வெள்ளி…வெள்ளி அள்ளி ச்சேர்க்க வந்ததை மறந்து வெள்ளித்திரைமுன் விரயம் செய்வதா? வெள்ளி சலுகையில் கிடைத்ததல்ல உன்னையே நீ கசக்கிப்பிழிந்ததில் விளைந்தது அடகுவைத்த ... Full story

கர்ணனல்லன் விகர்ணனே ஆயிரத்தில் ஒருவன்

கர்ணனல்லன் விகர்ணனே ஆயிரத்தில் ஒருவன்
பிச்சினிக்காடு இளங்கோ   எல்லாரும் எல்லா இடத்திலும் கர்ணனையே வியக்கிறார்கள் நான் வேறுபடுகிறேன் உலகத்தோடு நான் ஒத்துப்போகவிரும்பவில்லை எல்லாரையும்போல ஓபோட விரும்பவில்லை துடுக்குத்தனமும் தோற்றப்பொலிவும் நடிகர்திலகம்போல் இருந்திருப்பானோ என்னவோ தெரியவில்லை கொடை கொடுக்கும் ... Full story

கவிஞனாகிறேன்

 கவிஞனாகிறேன்
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)   இதை இதை எழுதவேண்டுமென்று எண்ணியதில்லை எண்ணுவதுமில்லை அது அது வந்து நச்சரிப்பதால்தான் எனது எழுதுகோல் உச்சரிக்கிறது அதுவரை தெரியாதது அடுத்தடுத்து தெரிகிறது இருட்டுக்குள் வெளிச்சம் வழிகாட்டுகிறது சூத்திரம் இல்லாமல் சூட்சுமம் அவிழ்கிறது திறவுகோல் இல்லாமல்... Full story
Page 1 of 512345
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.