Posts Tagged ‘பெருவை பார்த்தசாரதி’

Page 1 of 612345...Last »

என் முதல் கனவு..!

என் முதல் கனவு..!
    பெருவை பார்த்தசாரதி               ஒருமுறைதான் உனைநான் நினைத்தேன் நீயோ.. ..........ஓராயிரமுறை வந்தாயென் கனவில்!....நீயாரோ.! பருவமெய்திய நாள் முதல்கனவு கண்டபின்.. ..........புரண்டு புரண்டு படுத்தாலும் நித்திரையில்லை.! ஒருநாள் விடாமலென் உறக்கத்தைக் கெடுத்தவன்.. ..........ஊர்புகழும் அன்னவன் வாள்சுழற்றும் வீரன-வன்.! தருமின்ப மதிமயக்கமும் தழுவுமினிய சுகம்தனில்.. ..........தழைந்துவந்த கனவிதுவேதான் என் முதல்கனவு.!     கொல்லும் காதலெனும் பெருந்தீயை மூட்டிவிட்டு.. ..........கண்ணைக்கட்டி காட்டில் விட்டகன்ற கட்டழகன்.! இல்லற சொர்க்கத்தை இயக்கிக் கொண்டிருக்கும்.. ..........இன்ப அதிர்வலையில் திக்குமுக்காட வைத்தவன்.! கொல்லும் பகைகிழிக்கும் வீரமுடன் வேகமாகச்.. ..........செல்லும் குதிரைஏறி வாளுடனெங்கு சென்றான்.! மெல்லமெல்ல நானுமெனை மறந்தேன் இதுதான்.. ..........மென்மை நிலவொளியில் கண்டயென் முதல்கனவு.!     பட்டகாலிலே படும் கெட்டகுடியே கெடுமென்பார்.. ..........படாதபாடு படுத்துமாம் ... Full story

யாருமில்லாத மேடையில்..!

யாருமில்லாத மேடையில்..!
  பெருவை பார்த்தசாரதி           பாருக்கு பாரதியும் பகன்றபல நற்கருத்தையெலாம்.. ..........படித்துப் புரிந்துகொண்டோர் எத்துணை பேராவார்.! ஆருடம் சொல்லும் இடமங்கேதான் கூட்டமதிகமாம்.. ..........அருந்தலைவர்கள் ஆற்றுவதைக் கேட்க ஆளில்லை.? ஊருடன் ஒத்துவாழ உலகமக்களுக்கு அறிவுறுத்திய.. ..........ஒருமித்த கருத்துள்ள உத்தமரோயிரம் உண்டிங்கே.! யாருமில்லாத மேடையில்நான் கூச்சல் போடுகிறேன்.. ..........வாருங்களய்யா!..வந்துஅவர் பேச்சைக் கேளுமென்று.!     ஊருக்குள் இருப்பவருக்கு எங்கிருக்கிறது அக்கரை.. ..........உலகில் யாவர்குமெளிதாய் வருமோ?...நாட்டுப்பற்று.! நேருவும் காந்தியும் நேத்தாஜியும் வ.உ.சிதம்பரமும்.. ..........நெறிதவறி வருமானம்பெற வழிதவறிப் போகவில்லை.! ஆருமே அறியாதபல அற்புத வாழ்வியல்கல்வியை.. ..........அய்யன் வள்ளுவனும் வாழ்வினுக்கு வழங்கினான்..! பெருமதிப்பு கொண்ட பெரியோர்களின் நல்லுரையை.. ..........பெறமறவாதீர்! என்கிறேன் யாருமில்லா மேடையில்.!   கம்பனும் இளங்கோவனும் காப்பியம் ... Full story

உன் குரல் கேட்டால்..!

உன் குரல் கேட்டால்..!
பெருவை பார்த்தசாரதி                    அத்தானென அழகாயுன்குரல் கேட்டால் போதும்.. ..........அன்பின் உச்சத்துக்கு அச்சொல்லே பிரதானமாகும்.! முத்தான கனிச்சொல் பலவுண்டாம் தாய்மொழியில்.. ..........முத்தமிழில் “என்அத்தான்” எனும்சொல் இனிக்கும்.! இத்துணையினால் பெறும் பேரின்பக் கிளர்ச்சியே.. ..........இயக்கும்நம் பெரும்சக்திக்கு ஈடாகும் பாலமாகும்.! எத்தனை போராட்டங்கள் புவியில்பல நடந்தாலும்.. ..........இத்“தஞ்சம்” எனும்முடிவு காதலிலே மட்டுமெழும்.!   காதல் இயல்பாக எழவேண்டுமதில் எப்போதுமே.. ..........கனலிருக்கும்!உரசிக்கொண்டால் பற்றிக் கொள்ளும்.! மோதலென்பது காதலில் வந்தாலது முற்றியவுடன்.. ..........முடிவில் சரணாகதி என்பதேயதன் தத்துவமாகும்.! காதலியே!“காதலிக்கிறேன்”எனஉன்குரல் கேட்டால்.. ..........காலத்திற்கும் அடிமையாவது காதலின் பண்பாகும்.! காதல் கைகூடாமல் மாந்தரழிந்தாலும் இவ்வுலகில்.. ..........காலத்தால் அழியாதென்பது உண்மைக் காதலாகும்.!   கவர்ச்சியென்பது காதலுக்கு முக்கிய இலக்கணமாம்.. ..........காணும் பார்வையாலே யாவரையும் கவர்ந்திழுக்கும்.! கவண்கல்போல் ... Full story

மேகத்தில் கரைந்த நிலா..!

மேகத்தில் கரைந்த நிலா..!
பெருவை பார்த்தசாரதி                  மேகத்தினுள் கரைகின்ற வெண்ணிலவே உன்னை.. ..........மென்மையென மேன்மையாகப் பாடாதவர் உளரோ.? மோகத்தில் திளைத்திருக்கும் இளைஞரும் உன்னை.. ..........மனம்நாடும் மங்கையொடு ஒப்பிட்டே அழைப்பர்.! போகத்தில் கட்டுண்ட காளையரோ தன்கன்னியரைப்.. ..........போற்றிக் கொஞ்சும்போது கண்ணே நிலவேயென்பர்.! தேகத்தின் அழகைவருணிக்கப் பெண்ணே நிலவுக்கு.. ..........தகுதியான உவமையென..பாவலரும் பாப்புனைவர்.!   காகமொன்று கரைந்தாலன்று விருந்தாளி வருவாராம்.. ..........கன்னியொருத்தி நிலவுபோல வருவாளென் கனவில்.! மேகமீதமர்ந்து நானவள் மேனியழகை ரசிக்கையில்.. ..........முகத்தைக் காட்டாமல் மறைத்தே வைத்திருப்பாள்.! யாகத்தீயின் வேதவொலியில் எழும் தேவதைபோல்.. ..........யோகமிருந்தால் மட்டுமே மேகம்கிழித்து வருவாள்.! வேகமாய் விரைவாக விண்ணிலே கலந்துவிடுவாள்.. ..........வெண்மேகத்தில் கரையும் விண்நிலவைப் போல்.!   நிலவு ஒருபெண்ணாகி நீந்துகின்ற அழகோவெனும்.. ..........நினைவில் ... Full story

தீ தின்ற உயிர்..!

தீ தின்ற உயிர்..!
 பெருவை பார்த்தசாரதி               விந்தையாய் அனைத்தும் மாறுகின்ற வியனுலகில்.. ..........வியக்கும் வகையில் வீண்செயல்களும் உண்டாம்.! கந்தைத்துணியுடன் கடுமுழைத்து வாழும் வர்க்கம்.. ..........காலம்தள்ளக் கந்துவட்டிக் கடனால் தத்தளிப்பார்.! சிந்தை கலக்கும்வட்டியும்.!அசலையே விழுங்கிவிட.. ..........     சீர்கெடும் தம்வாழ்வைத் தடுக்கமுயன்று தோற்பார்.! தந்தையும்தாயும் எடுக்கும் தவறான கொடுமுடிவால்.. ..........தளிர்க்குழந்தையும் தீக்குளிப்பது கொடுமை யன்றோ.!   உள்ளத்தில் நல்லுள்ளம் கொண்டே பெற்றோர்தன் ..........பிள்ளையின் படிப்பினிலே  பெருமிதம் கொள்வார்கள்.! பள்ளிக்குச் செல்வார்கள்! சிறப்பாகப் படிப்பார்கள்! ..........போற்றும் வித்தகனாவார்! என்றேதான் எண்ணுவர்.! கள்ளமற்ற உள்ளத்தை உறவாய்க் கொண்டுவளர்ந்த ..........கபடமறியாப் பருவமதை யாரிழக்க நினைப்பார்கள்.! பள்ளியினுள் பாலகர்கள் கவனம் பாடத்திலிருக்க ..........பற்றியதீ தின்றது பச்சிளங்குழந்தைகளை உயிரோடு.!   மேற்படிப்பு என்பது கனவாகுமெனும் ... Full story

வான வேடிக்கை..!

வான வேடிக்கை..!
பெருவை பார்த்தசாரதி               நானிலத்தில் நலமுடனே வாழும்நன் மக்களுக்கு.. ..........நேரும் துன்பம்போக்க அவதரிப்பான் இறைவன்.! மனிதனாக மண்ணுலகில் மறைமுகமாய்ப் பிறந்து.. ..........மக்களின் பக்திநலத்தை தன்னுள்ளே பேணுவான்.! புனிதனாமவன் பிறக்குமுன் அதிசயங்கள் நிகழவே.. ..........புதியஜீவன் பூவுலகில் பிறக்குமென பெருங்குரலில்.. தொனிக்குமொரு அசரீரிச்சொல் எழுமாம்..? அப்போது.. ..........வானவேடிக்கை பலவுமங்கே விண்ணிலே நிகழும்.! இதிகாச மன்னரான இராமனையும் கண்ணனையும்.. ..........இன்றுமென்றும் துதிக்கிறோம் இறையவன் ஆனதாலே.! அதிசயமாம் மனிதருக்கு அவர்களின் அருஞ்செயல்.. ..........ஆகையாலதை விழாவாகக் கொண்டாடி மகிழ்வோம்.! மதியிலா அரக்கர் தம்மக்களையே துன்புறுத்தியதால்.. ..........மானுடனாய் அவதரித்து அவர்களையே அழித்தான்.! மதிப்பில்லா அரக்கரழிந்ததை தீமையொழிந்த தினமாக.. ..........மாபெரும் விழாவாக மண்ணுலகில் நடத்துகின்றோம்.! மதிக்கத்தக்க நம்பண்பாட்டில் ... Full story

நிசப்த வெளியில்..!

நிசப்த வெளியில்..!
பெருவை பார்த்தசாரதி                  எத்தனையோ எண்ணங்கள் எழுகிறது ஏட்டிலெழுத.. ..........ஏனைய கவிஞர்பாவலரின் எழுச்சிமிகு சிந்தனையால்.! புத்தகத்தைப் புரட்டிப்பார்த்து வித்தகனாய் வலம்வந்து.. ..........பூவுலகில் வாழ்வோருக்கு புதியசெய்தி சொல்லவேணும்.! சொத்தாவதெலாம் எழுதிச்சேர்க்கும் வரிகளொன்றே..நாம்.. ..........செத்தபிறகும் நிலைத்திருக்கும் எழுதிய எழுத்தேயாம்.! முத்தானக் கவிதைவரிகள் மூளையிலே முளைப்பதற்கு.. ..........முனையும் எண்ணமும் நிசப்தமுமங்கே நிலவவேண்டும்.!   காலத்தால் அழியாத காப்பியத்தைக் கவிச்சக்கரவர்த்தி.. ..........கம்பனும் வடிவமைத்தான் கடவுளிடம் பெற்றருளாலே.! ஞாலத்தில் நிலைபெற்ற எழுச்சிதரும் கவிதையையே.. ..........மணக்குள விநாயகனின்முன் புனைந்தான் மஹாகவியும்.! காலத்துக்கும் பொருந்துகின்ற கவிதையைக் கொடுத்தான்.. ..........கவியரசன் கண்ணதாசன் தன்கையில் கோப்பை ஏந்தி.! நீலவானும் விண்வெளியும் கவியெழுதக் கைகொடுக்க.. ..........நிசப்த வெளியிலமர்ந்து இயற்கையை நானெழுதுவேன்.!   கண்ணில் தோன்றுமியற்கைக் காட்சிகளுக் ... Full story

காந்திக்கு ஒரு கடிதம்..!

காந்திக்கு ஒரு கடிதம்..!
பெருவை பார்த்தசாரதி                 தந்தையாய் ஆசானாய் ஈடில்லாத் தலைவனாயிருந்து வந்தனை செய்யும்படி வையமுழுதும் அறிந்தோனே.!   நிந்தனை செய்தவர்கூட நிழல்போலுமைத் தொடர்ந்து சிந்தனையில் தெளிவுற்றடிமை வாழ்வினைத் துறந்தார்.!   வாள்பிடித்து வெற்றிகண்ட மன்னர் பலருக்கிடையே தாள்பணிந்து அகிம்சையை தரணிக் குணர்த்தியவனே.!   எழுபது ஆண்டுகள்பல ஆனபின்னும் இன்னுமேனோ எழவில்லை எம்நாட்டுப் பற்றெனுமரிய சுயசிந்தனை.!   அகத்தினில் தீயவஞ்சகம் கொண்டோர் நாளும்பெருகி ஜகத்தினில் பெற்றசுதந்திரத்தைத் தாழ்வுறச் செய்கிறார்.!   இப்பாரிலெவரும் எவர்க்கும் அடிமையிலை என்பதை தப்பாக விடுதலையைப் தவறாகப் புரிந்துகொண்டார்.!   சுகங்கள் பலவாம் சுதந்திரத்தைப் பெற்றுவிட்டாலென அகத்தில் தெளிவுற்றன்றே அறப்போரில் ஈடுபட்டோம்.!   மண்ணில்பல வளமுண்டிதை அயலார் அபகரிக்காமல் திண்ணிய எண்ணமுடன் ஒன்றாகத்தான் போரிட்டோம்.!   வானிலெழும் ஏவுகணைபோல் ... Full story

புதிய ஓட்டம்..!

புதிய ஓட்டம்..!
பெருவை பார்த்தசாரதி   புதியபழைய ஓட்டமெலாம் மனிதருக்கே உண்டு புவிக்கது உண்டென்றால் பூலோகம் நிலைக்காது! போதிய ஊதியம் கிட்டாமல் பூவுலகிலுழல்பவர் புதிய ஓட்டமெடுக்க நினைப்பது இயற்கைவிதியே.! விதிவழியே செல்கின்ற வாழ்க்கையில் எதுவுமே விளங்காமல் ஓடுமானுடக் கூட்டம்தான் அதிகம்! நாதியற்ற ஏழைக்கிது நன்றாகவே பொருந்தும்.. நாட்டில் பாதியிதுவென கணக்கிலிது விளங்கும்! சின்னஞ்சிறிய எறும்பும் கரையானும் தரையினில் சீராகப்பரவி ஓடிக்கொண்டே இருப்பது எதற்காக?... Full story

பறவையின் மனசு..!

பெருவை பார்த்தசாரதி   கற்றால்தான் உலகுபயன் மிகுமென்பதை மக்களும்.. ..........கற்றபின்தான் உணர்ந்தறிய முடிகிறது.!...ஆனால் கற்காமலேயுலகில் வாழுமரிய உயிரினங்கள் பலவும்.. ..........கற்றவருக்கு தன்செயலால் மேலும்கற்க வைக்கிறது.!   பரந்துதிரியும் பறவைமனசை ஆராய்ந்து பார்த்தால்.. ..........பாடம்பல சொல்லுமது...ஆறறிவுபெற்ற மனிதனுக்கே.! பரபரப்பான இயற்கைச் சூழலில் அழகுகொஞ்சும்.. ..........பறவைக் கூட்டத்தைக் கண்டால்மனம் அமைதியுறும்.!   பெற்றவள் ஒருவளிருக்க மற்றொரு பறவையதற்கு.. ..........பெருமையுடன் உணவீந்தும் உயர்ந்த குணமுண்டு.! வேற்றுமை நிறமிலிருப்பினுமது ஒற்றுமையாகக் கூடிப்.. ..........பற்றுடன் வாழ்வதற்கு பறவையெங்கே கற்றனவோ.!   பகுத்துண்ணும் குணம்கொண்ட பறவையைப் பார்த்து.. ..........படித்த மாந்தர்கள் கற்கவேண்டியது பலவுண்டாமதை.. தொகுத்துப் பார்க்கின் புரியாதபல ஆச்சரியங்களதில்.. ..........தொக்கி நிற்குமது மனிதனுக்குச் சாத்தியமில்லையாம்.!   உச்சாணி மரக்கிளையிலோரம் ஒடிந்துவிழும் நிலையில்.. ..........உறுதியுடன் தொங்கியாடும் தூக்கணாங் குருவிக்கூடும்.! பச்சிலையைச்சேர்த்து பசையிலாமலே இலைக்கூட்டை.. ..........பசுஞ்சிட்டால் கட்டுமாற்றலு மிவைநமக்குச் சாத்தியமா.?   உண்ணாமல் வெகுதூரம் பறக்கும் தன்னினத்துடன்சேர.. ..........ஓராயிரம் மைல்கடக்கு மபாரசக்தி அதனிடமுண்டு.! உண்ணத்துடிக்கும் ... Full story

குழந்தையின் குரல்

குழந்தையின் குரல்
 பெருவை பார்த்தசாரதி                     கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாமென்பர் குழந்தையில்லா வீட்டில் குதூகல இருக்காதெனலாம்..!   குடும்பமொன்றில் குழந்தையின் குரலொன்று கேட்கநீ கோடி புண்ணியம் செய்திருத்தல் வேண்டுமம்மா..!   பெருஞ்செல்வ மெளிதில் கிடைக்கும் குழந்தையெனும் அருஞ்செல்வம் இறையருளால் மட்டுமே கிட்டும்..!   மண்டியிட்டு மண்சோறு உண்டபல நாட்கள்.. வேண்டியவரம் கேட்டு கும்பிட்டபல கோவில்கள்..   உள்ளம்குளிர நீராடிய புண்ணிய திருக்குளங்கள்.. பிள்ளை வரம்வேண்டி பித்தாக அலைந்த நாட்கள்..   இவை யனைத்தும் வீணாகவில்லை யொருநாள்.. அவை யனைத்துப் பலனுமுடன் பலித்தது..!   கும்பிடவந்த சாமியிடம் குழந்தைவரம் கேட்கும்போது.. குழந்தையின் குரல்கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினேன்..   வேண்டுவோர்க்கு வானத்தில் எழும் அசரீரிபோல.. வேண்டாமென வீசிச்சென்ற குழந்தையினழு குரலொடு..   அரும்புமலர் சோலைதனில் இறையருட் கொடையால்.. ஆதரவின்றிக் கிடந்தன்று பிறந்த குழந்தையொன்று..!   பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளைபோல்.. பெரிதாக அரியசெல்வமென கிட்டிய தெனக்கும்..!   அன்னையின் பிரசவலிகூட மறக்கும்...குழந்தையின் அழுகுரல் கேட்டவுடன்..பட்டதனைத்தும் மறந்தேன்..!   குறையேதும் வலியேதும் இல்லாமல் குழந்தையொன்று.. இறையருளால் பெற்றதுபெரும் பேறென்றன் பாக்கியமே..!   கூப்பிடும் குரல் கேட்டு கண்ணன் வந்ததுபோலென் குழந்தையின் குரல்கேட்டால் ஓடோடி வருவேன்நான்   குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் . . . .எனும்   ஐயன் வள்ளுவன் கூற்றுக் கிணையாக ஐயமுற வலிமை சேர்த்தோர் ஆருமில்லை   இவ்வுலகில்..! ==================================================   தினமணி கவிதைமணி தந்த தலைப்பு:: “குழந்தையின் குரல்”   நன்றி கவிதைமணி வெளியீடு::22-05-17   படஉதவி:: கூகிள் இமேஜ்   Full story

பிஞ்சு மனங்களும் செல்ல மழையும்..!

பிஞ்சு மனங்களும் செல்ல மழையும்..!
பெருவை பார்த்தசாரதி                     நஞ்சுக்கொடி மூலம்தான் பிள்ளையும் தாயுமோர்.. ..........நல்லுறவுக்கு மேன்மையாய் உலகுக் குதாரணமாம்.! அஞ்சு விரலாலவள் தானீன்றமகவை அனுதினமும்.. ..........ஆரத்தழுவி முத்தம் கொடுக்கும் அன்புத்தாயாம்.! விஞ்சி நிற்குமன்பைதன் பிஞ்சுமனங்களில் தேக்கி.. ..........வெள்ளை மனதுடன் வெளிப்படுத்துவாள் அன்னை.! பிஞ்சுக்குழவிக்கு கொஞ்சி அமுதூட்ட!...அழைப்பாள்.. ..........ஓடும்பிறை நிலவையும்! தூவும்செல்ல மழையையும்.!   துஞ்சும் குழவியழகைத் தன்கருப்பையுள் உணர்ந்து.. ..........தாலாட்டுப் பாடுபவள்தான் தாயெனும் தெய்வமாம்.! மிஞ்சுகின்ற துன்பமும் கவலையுமவள் மனதில்.. ..........மறைந்தோடும்...நொடியில் தன்மகவை ஈன்றவுடன்.! அஞ்சும் குழந்தையை அரவணைக்க அவளழைத்தால்.. ..........ஆவலோடு ஆவின் கன்றுபோலத் தவழ்ந்தோடிவரும்.! பிஞ்சுமனங்கள் பெரிதே மகிழ்ச்சியுற!..வான்முகிலும்.. ..........பிறைநிலவும் மழைத்துளியும் அழையாமலே வருமாம்.!   அழுமுன்னே குழந்தையின் தேவையெது வெனவறிந்து ..........அமுதூட்டும் செய்கையால் அவனியிலோங்கி நிற்பாள்.! தழுதழுக்கு மன்பைதன் தொண்டையுள் அடக்கும்.. ..........தாய்காட்டும் அன்பைவிட மேலாகும் அன்பிலையாம்.! முழுநிலவை ... Full story

சேர்த்து வைத்த கனவு..!

சேர்த்து வைத்த கனவு..!
பெருவை பார்த்தசாரதி பார்த்தமுதல் நாளிரவுமுதல் கனவில்வந்த நீதானெனக்கு ..........பத்தினியாய் ஆவாயென தினமும்நான் கனவுகண்டேன்.! ஊர்கூடி தேரிழுக்கும் வழக்கம்போல் உன்னைநானும்.. ..........உற்றாறுறவினரொடு ஊரறியமணப்பது போல் கனவுவரும்.! கோர்க்கின்ற பூக்களெல்லாம் நாருடன் இணைவதுபோல் ..........கொண்டாடி மகிழத்தான் தினமும்நான் கனவுகண்டேன்.! சேர்த்துவைத்த கனவெலாம் சிலநாளில் நனவாகுமெனச்.. ..........சென்றயிரவுகள்.....உறங்காததாக ஓராயிர மானதம்மா.!   உருவத்தில் பெண்ணாய் உலகழகியாய்நீ வலம்வரவேணும்.. ..........உனைப்படைத்திட்ட பிரம்மனே பெருமூச்சு விடவேணும்.! பருவநிலா புருவமுடன் படைத்திவளைப் படைத்தவனும்.. ..........பாவலன்நானும்..கண்ட கனவுக்காட்சி நனவாகவேணும்.! ஒரு எண்ணிக்கையில் கண்டகனவுகள் கோடியானாலும்.. ..........ஓரிரவுசேர்த்து வைத்தகனவுமொரு நொடியில் மறையும்..! வருத்தமுடன் குமுறுகிறேன்.!..வருவாயாநீ நிஜத்துடன்.. ..........வாஞ்சையொடு வேண்டுகிறேன் இறைவாநீ அருள்வாயா.!   எண்ணத்தில் தோன்றுவதில் ... Full story

நிலைக்கும் என்றே..!

நிலைக்கும் என்றே..!
 பெருவை பார்த்தசாரதி                     நிலையில்லா உலகினிலே நீடித்து வாழ்வதற்கே.. ..........நில்லாமல் பெரும்பொருளீட்ட ஓயாமல் ஓடுவார்.! நிலையில்லாத உடல்தனையே நித்தம் ஓம்புவார்.. ..........நாறுகின்ற மெய்யுடலை நாளும்பேணிக் காப்பார்.! நிலத்தில் புதையும் பிணத்தை மெய்யெனநினைத்து.. ..........நெடுநாட்கள் வாழும்கனவில் தலைகீழாய் நிற்பார்.! நிலைக்கும் என்றே நினைப்பார்.!எதுவுமிவ்வுலகில்.. ..........நிலையிலை! என்பதைறியார் தம்வாழ்வு முடிவுவரை.!     மாறுகின்ற உலகினில் மாற்றமொன்றே நிரந்தரமாம்.. ..........மனதினிலிக் கருத்தை இறுத்தியே பழகவேணுமப்பா.! வீறுகொண்ட இளமைகூட சட்டெனக் கழிந்துவிடுமது.. ..........வீணாகமல் வாழ்க்கையில் கடமை யாற்றவேண்டும்.! வேறுலக்கு வெற்றுடனே போவோமென அறிந்தும்.. ..........ஊரையே விலைக்குவாங்க நினைப்பார்கள் மூடர்.! நீறாகு இவ்வுடலைநம்பி நிலையில்லாது மனம்தாவ.. ..........நினையாதீர்..! எதுவுமிவ்வுலகில் நிலைக்கும் என்றே.!     இனத்திலொற்றுமை ஓங்கவே இப்பிறவி எடுத்தோம்.. ..........எனுமுணர்வு நிலைக்கவே..இறைவனருள் வேண்டும்.! மனதிலிவ்வுறுதி ... Full story

திருவோணமெனும் பெருவிழா..!

திருவோணமெனும் பெருவிழா..!
ஆவணியஸ்தம் தொடங்கிய திருவோணத் திருவிழவில்.. ............அரியுருவாகி அரியைழிந்தவனுக்கோர் அற்புத விழாவாம்.! தாவணியில் பெண்கள்தனை பட்டாடையால் அலங்கரித்து.. ............மண்ணுக்குள் மாய்ந்த மாவலியையழைக்கும் விழாவாம்.! தாரணியெங்கும் தசநாட்கள் கொண்டாடும்...மாவலியாமவன்.. ............மூன்றாவதடிக்கு முன்னந்தலையைக் காட்டிய விழாவாம்..! பேரணியாய் மகிழ்வுடனே திரளுவாரங்கே மாவலிராஜாவின்.. ...........பெருவரவென்று..!பெருவிருந்தான “ஓணசத்யா” உணவுடன்.! காம்பொடுகூடிய கடிமலர்கள் எல்லாம் பெருங்கூட்டமாய்.. ............காரணத்தோடு...தோவாளை யெனுமிடத்திற்கு கடுகிவருமாம்.! கூம்பின்வடிவாய் ஆங்காங்கே வந்தமலர்க் கூட்டமெலாம்..... Full story
Page 1 of 612345...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.