Posts Tagged ‘பேரா. நாகராசன்’

பழந்தமிழரின் உலகளாவிய கடல் வணிகம்

பழந்தமிழரின் உலகளாவிய கடல் வணிகம்
திரைகடலோடித் திரவியம் தேடிய தமிழ் வணிகரின் கடல்வழிப் பாதை தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ள எண்ணிம வளங்களைப் பயன்படுத்த வேண்டும். கடல் வழியை அடிப்படையாகக் கொண்டால் உலகை வடக்கும் தெற்குமாகப் பிரிக்கும் இடம் பண்டைய எகிப்து எனக் கருதலாம். பழந்தமிழர்களுக்கு எகிப்துடன் நெடுங்கால வணிக உறவு இருந்ததை வரலாற்றுக் குறிப்புகள் சுட்டும். தரைவழிப் பாதையாக உலக வணிகர்கள் பயன்படுத்திய ... Full story

எண்ணிம தமிழர் வாழ்வியல் ஆய்வுப் புலம்

பேரா. நாகராசன்   கணினிப் புரட்சியும் இணைய வளர்ச்சியும் எண்ணற்ற கருத்து வளங்களை இணையத்தில் தொடர்ந்து உருவாக்கி வருகின்றது. தமிழின் இலக்கிய வளங்கள் இன்று இணையத்தில் அனைவரும் படிக்கும் வகையில் எண்ணிம நூலகங்களில் கிடைக்கின்றன. இணையத்தின் நுட்பம் அறிந்தவர்கள் வலைத்தளம் மூலமாகவும் மடலாடல் குழு மூலமாகவும் தமிழர் வாழ்வியல் தொடர்பான கருதுகோள்களைத் தொடர்ந்து வெளியிட்டுவருகின்றனர். சமூக ஊடகங்கள் தங்கள் பங்குக்கு தமிழர் வாழ்வியல் தொடர்பான எண்ணற்ற வளங்களை பல்லூடக வடிவில் வெளியிடுகின்றனர். தமிழ்ப் புலவர்களும் தமிழ் ஆய்வாளர்களும் தங்களின் கட்டுக்குள் வைத்திருந்த தமிழர் வாழ்வியல் இன்று இணையவெளியில் ... Full story

ஆய்வுகளும் – ஆய்வறிஞர்களும் 13

பேரா. நாகராசன் கற்பனையும் அனுமானமும்   உள்ளத்தில் உருவாகும் மனப்படங்களுக்கு எழுத்து வடிவம் தருவது கற்பனை. ஒரு எழுத்தாளன் தன் உள்ளத்தில் உருவான காட்சியை எழுத்து மூலம், படிப்பவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் காட்சியாகப் படைக்கிறான். தமிழர் மனிதவியலில் தொன்மை மிக்க இலக்கியங்கள் கற்பனை வழியாகவே சமுதாயத்தில் பரவியது. கற்பனை படைப்பாற்றலை வளர்த்து படைப்புகளை உருவாக்கத் தூண்டுகோலாக அமைவது. தற்கால ஊடகமான வெள்ளித்திரை கனவுத் தொழிற்சாலையாக விளங்கி கற்பனையை ஒளி ஒலியுடன் பார்ப்போரைக் கண்ணைத் திறந்துகொண்டு கனவு காணச் செய்கின்றது. கணினியும் தொலைக் காட்சிப் ... Full story

ஆய்வுகளும் – ஆய்வறிஞர்களும்! (12)

எண்ணிம எழுத்தும் தரவும்   மின்னியலில் எழுத்தும் தரவும் எண்ணிம வடிவில் ஒரு சீரான அடிப்படையில் அமைந்து விளங்கும். எழுத்துக்கள் சேர்ந்து சொல்லாகவும் சொற்கள் சேர்ந்து வரிகளாகவும் வரிகள் சேர்ந்து பத்தியாகவும் பத்திகள் பக்கங்களாகவும் பக்கங்கள் சேர்ந்து நூலாகவும் உருவாகும். எண்ணிம வடிவில் ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதும்போது சொல்லுக்கும் சொல்லுக்கும் இடையில் ஒரு எழுத்தளவு இடைவெளி இருக்க வேண்டும். வரிக்கும் வரிக்கும் இடையில் இரண்டு எழுத்தளவு இடைவெளி இருக்க வேண்டும். பத்திக்கும் பத்திக்கும் இடையில் மூன்றெழுத்து இடைவெளி இருத்தல் ... Full story

ஆய்வுகளும் – ஆய்வறிஞர்களும்! (11)

பேரா. நாகராசன்   படியெடுத்தலும் குறிப்பெடுத்தலும்   ஒரு மூல ஆவணத்திலிருந்து படியெடுப்பது தவறான செயல் என்பது எழுதுவோர் மாணவப் பருவத்திலேயே அறிவர். படியெடுப்பதன் மூலம் எழுதுவோர் தங்களின் இயல்பான எழுத்து நடையில் எழுதுவதைத் தவிர்ப்பதால் அவர்கள் நகலெடுக்கும் கருவியாக மாறி தங்களின் தனித்தன்மையுள்ள எழுத்தாற்றலை இழந்துவிடுவர். ஒரு கருத்துரு தொடர்பான தகவலைத் திரட்டும் நிலையில் மூல ஆவணங்களை நகலெடுக்கலாம். ஆனாலும் ஆய்வுக் கட்டுரைக்குப் பயன்படுத்தும்போது மேற்கோள் காட்டவேண்டியிருந்தால் படைப்பாளரின் வார்த்தைகளை பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தியவர்கள் எந்த ஆவணத்தில் இருந்து எடுக்கப்பட்டது, அதன் ஆசிரியர், ... Full story

ஆய்வுகளும் – ஆய்வறிஞர்களும்! – சிறப்புக் கட்டுரை!

ஆய்வுகளும் - ஆய்வறிஞர்களும்! - சிறப்புக் கட்டுரை!
கட்டுரையாளர், பேரா. நாகராசன் அவர்கள் சென்னைப் பல்கலைகழகத்தில் 30 ஆண்டுகளாக பல மாணவர்களை ஆய்வாளர்களாக உருவாக்கியுள்ள  ஆகச்சிறந்த ஆய்வறிஞர். தமது நீண்ட கால அனுபவத்தின் அடிப்படையில் இக்கட்டுரையை ஆய்வாளர்களின் தெளிவான சிந்தையை ஊக்குவிக்கும் வகையில் மிக செம்மையாக வழங்கியுள்ளார். பேராசிரியர் ஆழ்ந்த அனுபவ ஞானம் பெற்ற வரலாறை அவர்தம் மொழியாகவே இங்கு காணலாம்.. ஆசிரியர்   1. இணையமும் காப்புரிமையும்   காப்புரிமைச் சட்டம் என்பது அச்சு ஊடகப் படைப்புகளுக்காக, ... Full story

இந்த வார வல்லமையாளர்!

இந்த வார வல்லமையாளர்!
இந்த வார வல்லமையாளர்  பேரா.  நாகராசன் சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே என்ற கவிதை வரிக்கேற்ப மடலாடர்கள் மற்றும் படைப்பாளர்கள் தங்கள் சிந்தனை வளங்களைக் கருத்து வடிவில் வல்லமை மின் இதழிலும் மடலாடல் குழுவிலும் வெளியிடுவது நாம் அறிந்ததே தனித்திருப்பவன் தனியனல்ல ஒருவரின் தனித்தன்மை ஒரு குழுவில் இருக்கும்போதே வெளிப்படும். தனித்தன்மை மிளிரத் தங்களின் ஆற்றல் வெளிப்படும் வண்ணம் தெரிந்தெடுத்த புலத்தில் தங்கள் திறமையை வெளிப்படுத்துபவர்களே வல்லமையாளர்கள்... Full story

கனவுத் தொழிற்சாலையின் கன்சல்டன்டாக நான்

கனவுத் தொழிற்சாலையின் கன்சல்டன்டாக நான்
பேரா. நாகராசன் கன்சல்ட்டன்ட் என்று நான் என்னைச் சொல்லிக் கொண்டால் அது இன்சல்ட்தான் ஆனாலும் தொழிற்துறையில் அந்த வார்த்தை மட்டும்தான் அப்போது என் வேலையைக் குறிக்க ஓரளவு உதவி செய்தது. என் கல்வியும் நான் பெற்ற மதிப்பெண்களும் எனக்கு ஒரு சாதாரண வேலையைக்கூட வாங்கித் தராது என்பதை மற்றவர்களைவிட நான் தெளிவாக அறிந்திருந்தேன். ஆனாலும் சிவகாமிப்பாட்டி மட்டும் ஒரு மாற்றுக்கருத்தை எனனைப்பற்றி முன்மொழிந்து கொண்டிருந்தார்.  கண்ணில் பூவிழுந்து பார்வை சரியில்லாதபோதும் என் ... Full story

இன்னுயிர் ஈந்து மானம் காத்துக் காவல் செய்வோம்

இன்னுயிர் ஈந்து மானம் காத்துக் காவல் செய்வோம்
நாகராசன்  தமிழகத்தின் வரலாற்றில் தமிழ் நாட்டின் தென்பகுதி, வீர இலக்கியப் பதிவுகளில் மறவர் பூமி என்று அழைக்கப்படும் பூமி.  இங்கு வாழ்ந்த மறவர் குமுகம், குறிப்பிடத்தக்க பண்புக் கூறுகளான மானம், தன்மானம், முதல் மரியாதை, வாழ்வுப் பழக்கம், காவல் என்ற தமிழனின் அரும் பெரும் பண்புகளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் போற்றி காத்துவரும் தமிழ்க் குமுகப் பிரிவாகும். இலக்கியங்கள் குறிப்பிடும் வீரப் பண்புகளான செஞ்சோற்றுக்கடன், தலைவன் இறந்த செய்தி கேட்டால் தன் தலையைக் கொய்து ... Full story

ரோசாப்பூ துரை

ரோசாப்பூ துரை
    நாகராசன் தாழ்த்தப்பட்டவர்கள் அடக்கப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்குக் குரல் கொடுத்த அறிஞர், மற்றும் வழக்கறிஞர் 1970 1980களில் பாமரர் வரலாற்று ஆய்வாளர்கள் இந்திய தேசிய இயக்கங்களும் மார்க்சிய ஆங்கில ஆதிக்க வரலாறும் பாமரர் பற்றி அறியத் தடைக்கல்லாக இருந்தது என்ற மாபெரும் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.  ஆனால் தேசிய நீரோட்டத்திலும் பாமரர் பற்றிய உரிமைக்குரல் எழுப்பிய தீவுகளும் உண்டு என்பதற்கு உதாரணமாக விளங்கியவர் ரோசாப்பூத் துரை பாமரர்களுக்காகக் குரல்கொடுத்த ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.