Posts Tagged ‘மறவன்புலவு க. சச்சிதானந்தன்’

இலங்கையில் வன்முறையின் கோரத் தாண்டவம் – Ugly face of terror in Srilanka

இலங்கையில் வன்முறையின் கோரத் தாண்டவம் - Ugly face of terror in Srilanka
(இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பையும் இதற்குக் காரணமானவர்களையும் வல்லமை கனத்த இதயத்துடன் கண்டிக்கிறது. - அண்ணாகண்ணன், முதன்மை ஆசிரியர், வல்லமை) (St.Sebastian's Church,Katuwapitiya,Negombo,Sri Lanka) சிவசேனை, மறவன்புலவு க. சச்சிதானந்தன் கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆய நகரங்களில் நடைபெற்ற வன்முறைத் தாக்குதல்களைச் சைவ சமயத்தோர் ஏற்கார், கண்டிப்பர், புறந்தள்ளுவர். வழிபாட்டிடங்களில் ... Full story

செம்மாந்த நோக்கர் சிலம்பொலி செல்லப்பனார்

செம்மாந்த நோக்கர் சிலம்பொலி செல்லப்பனார்
மறவன்புலவு க. சச்சிதானந்தன் கற்றிலனாயினும் கேட்க என்றார் வள்ளுவர். தாம் கற்றவற்றை மற்றவர்களுக்குச் சொல்பவர் கேள்வி ஞானத்தை வளர்க்கிறார். கல்வியைப் பரப்புவதற்காகவே மேடைப் பேச்சாற்றல். நுணுகித் தேடல், தேடியதைத் தொகுத்தல், கேட்பார் வேட்கை தணிக்கச் சுவையுடன் ஒழுங்கு செய்தல், வேட்ப மொழிதல் யாவும் மேடைப் பேச்சாளரின் இயல்புகள். பேச்சு உள்ளத்தில் இருந்த வரவேண்டுமடா. உள்ள உணர்வுகளையும் அறிவையும் சரி சமமாகக் கலந்து பேசுபவனே கேட்பவனுக்குக் கற்பிக்கிறான் என என்னிடம் சொன்னவர் பேரா. அ. ச. ஞானசம்பந்தன்.... Full story

ஜார்ஜ் பெர்னாண்டஸ் (1930-2019)

ஜார்ஜ் பெர்னாண்டஸ் (1930-2019)
-மறவன்புலவு க. சச்சிதானந்தன் இலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின் தாக்குதலில் 64 தமிழ்ப் பொது மக்கள் இறந்தனர். வியத்நாமில் மைலாய் நகரில் 1968 மார்ச்சு 16இல் அமெரிக்கப் படைகள் தாக்குதலில் 300-500 வியத்நாமியப் பொதுமக்கள் இறந்தனர். வியத்நாமில் அமெரிக்கப் படைகள் செய்ததையே வல்வெட்டித்துறையில் இந்தியப் படைகள் செய்ததாகக் குற்றம் சாட்டிய ஜார்ஜ் பெர்னாண்டஸ், வல்வெட்டித்துறையை இந்தியாவின் மைலாய் என அறிவித்தார். ஜார்ஜ் பெர்னாண்டஸ், கொங்கணக் ... Full story

அடிமைத் தளைகளை அகற்ற உறுதிபூணும் நாள்

அடிமைத் தளைகளை அகற்ற உறுதிபூணும் நாள்
-மறவன்புலவு க. சச்சிதானந்தன்  இலங்கையில் யாழ்ப்பாணத்தில் நல்லூரைத் தலைமை இடமாகக் கொண்டு அமைந்த சைவத்தமிழ் அரசானது 400 ஆண்டுகளாகச் சங்கிலித் தொடர்ச்சியாக அமைந்த அரசு.தென்மேற்கே 'வாய்க்கால் ஆறு' அதன் எல்லை.தென்கிழக்கே 'கொம்புக்கல் ஆறு' அதன் எல்லை. சில காலங்களில் 'மாணிக்கக் கங்கை' வரை அதன் எல்லை விரிந்து இருந்ததாம். அந்த 400 ஆண்டுகளில் தமிழீழ அரசின் ஆட்சியில் சைவ சமயமும் தமிழ் மொழியும் மட்டுமே பண்பாட்டு நெறிகள்.புத்த சமயமும் சிங்கள மொழியும் தெற்கே கண்டியைத் தலைநகராகக் கொண்ட ஆட்சியாலும் தென்மேற்கே கோட்டையை தலைநகராக கொண்ட ... Full story

மலையாளத்தில் ஒன்பதாம் திருமுறை முதன்முறையாக

மலையாளத்தில் ஒன்பதாம் திருமுறை முதன்முறையாக
புரட்டாதி 10, 2049 (26.09.2018) இந்தியா கேரளம் திருவனந்தபுரம் ஊடக நடுவம். என் செயலால் ஆவதொன்றில்லை எனினும் இறைவன் அருளால் என் கனவுகளில் ஒன்று நனவாய நாளும் இடமும். ஒன்பதாம் திருமுறை மலையாள மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழா. 301 பாடல்களையும் மொழிபெயர்த்தவர், இசையுடன் பாடுமாறு நான் கேட்டு மொழிபெயர்த்தவர் என் மதிப்புக்குரிய அன்பர் திரு. சந்சிரசேகரன் நாயர் அவர்கள். முன்பு ... Full story

சிதம்பரத்துக்குக் கப்பல் திருவாதிரை 02.01.2018

சிதம்பரத்துக்குக் கப்பல் திருவாதிரை 02.01.2018
திருவாதிரைக்குச் சிதம்பரம் அருள்மிகு நடராசப் பெருமான் கோயிலுக்கு ஈழத்துச் சைவர்கள் காங்கேயன்துறைத் துறைமுகத்திலிருந்து அண்மையில் உள்ள தமிழகத் துறைகளுக்குக் கப்பல் வழி செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு 2016 மார்கழியில் யாழ்ப்பாணம் நல்லூர் நாவலர் விழாவில் வடமாகாண ஆளுநர் மேதகு ரெஜினால்டு கூரே அவர்களிடம் கேட்டுக்கொண்டேன். மிக ஆர்வத்துடன் வடமாகாண ஆளுநர் மேதகு ரெஜினால்டு கூரே அவர்கள் என் வேண்டுகோள ஏற்றார்கள். இலங்கை ... Full story

சைவ சமய வரலாற்றில் காதக்கல் Today is a milestone day in the annals of Saiva religion

சைவ சமய வரலாற்றில் காதக்கல் Today is a milestone day in the annals of Saiva religion
சைவ சமய வரலாற்றில் காதக்கல் Today is a milestone day in the annals of Saiva religion. ஐப்பசி 13, 2048 திங்கள் (30.10.2017) திருப்பதி வேங்கடவன் பல்கலைக் கழக மேனாள் தமிழ்த்துறைப் பேராசிரியர், மதுரை காமராசர் பல்கலைக்கழக மேனாள் தெலுங்குப் பேராசிரியர், சங்க இலக்கியங்களைத் தெலுங்குக்கு மொழிபெயர்க்கும் செம்மொழி நிறுவனக் குழுத் தலைவர், பேராசிரியர் சிறீபாத செயப்பிரகாசர். 03.03.2011இல் முதன் முதலாகத் திருப்பதியில் ... Full story

குயிலி, உன்றன் திருநடம் கண்டிடப் பெற்றேன்

குயிலி, உன்றன் திருநடம் கண்டிடப் பெற்றேன்
மறவன்புலவு க. சச்சிதானந்தன் யாழ் மகள் அழுதாள், விடுதலை பெறுவாள் என்ற வரிகளை வண்ணமாக்கியவர் குயிலி. வரிகளை எழுதியவர் அருள்மொழி. ஈழத் துயரத்தைக் காட்ட அழுதேன், விடிவு வரும் எனக் கண்டும் கேட்டும் மகிழ்நீர் சொரிந்தேன். பெண் எனும் பேராற்றல் எனும் எண்ணம் தந்தவர் அருள் மொழி, வண்ணம் தந்தவர் நர்த்தகி நடராசர், நடனம் தந்தவர் ... Full story

169 இராகங்களில் திருக்குறள் முழுவதும்

169 இராகங்களில் திருக்குறள் முழுவதும்
மறவன்புலவு க. சச்சிதானந்தன் சந்தம் இல்லாமல் பாடல் இல்லை. பாடுவதால் பாடல்கள், குறட்பாக்கள். திருக்குறள் பாடல்களுக்கு இசை அமைத்தல் எளிதல்ல என்பார் எதுகைச் சீர் தரும் சந்தத்துள் மூழ்குக, அளவெடுக்கும் நெடிலின் இசைக்குள் நனைக, தமிழ் வேர்ப் பொருளைத் தேர்க, தேனாகக் குரலில் ஏற்றுக, அலைகளாய்க் காற்றில் தவழவிடுக, திருக்குறள் இனிமையாய் இசையாகும். இனிமையாக இசைப்பதற்காகவே ஏழு சீர்களில் எதுகை மோனையுடன் எழுதிய பண்வழிப் பாடல்கள் அவை. ... Full story

வாழ்த்துகள், ஈழத் தமிழருக்கு அரணாகத் தொடர்வீர்களாக.

வாழ்த்துகள், ஈழத் தமிழருக்கு அரணாகத் தொடர்வீர்களாக.
மறவன்புலவு க.சச்சிதானந்தன் மாண்புமிகு புரட்சித் தலைவி ஜெ ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கு, வணக்கம்.   வரலாறு காணாத வெற்றியைச் சுமந்து பூரிக்கும உங்களுக்கும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேறக் கட்சிக்கும் தொண்டர்களுக்கும் வாக்காளர்களுக்கும் ஈழத் தமிழரின் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் நெஞ்சாரத் தெரிவிக்கிறோம். தமிழகத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் எதிர்காலம் யாவும் உங்கள் தலைமையில் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் தொடரும் என்பதில் ஈழத் தமிழருக்கு என்றும் ... Full story

வட்டுக்கோட்டைத் தீர்மான நினைவு நாள்

வட்டுக்கோட்டைத் தீர்மான நினைவு நாள்
மறவன்புலவு க. சச்சிதானந்தன் இன்றுடன் 40 நெடிய ஆண்டுகள். 1976 மே 14இல் வட்டுக்கோட்டைத் தீர்மானம் இயற்றிய நாள். ஈழத் தமிழர் வாழ்வில் வரலாற்றுத் திருப்புமுனை நாள். தமிழரசுக் கட்சியின் மூதறிஞர் சா ஜே வே செல்வநாயகம் அங்கிருந்தார். தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜீ ஜீ பொன்னம்பலம் அங்கிருந்தார். மலையகத்தின் மாபெரும் தலைவர் சௌ. தொண்டமான் அங்கிருந்தார். மூவர் தலைமையிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை ... Full story

மறுமலரச்சிக்கு மறுமலச்சி

மறுமலரச்சிக்கு மறுமலச்சி
மறவன்புலவு க. சச்சிதானந்தன் மாசி 19 2047 (02.03.2016) புதன் காலை மின்னஞ்சலாக வந்த மீட்டுருவாக்கச் செய்தி. அஃது அழைப்பிதழல்ல. கண்ணுக்கு விருந்து, செவிக்குத் தேன், மனத்துக்கு ஒத்தடம், புண்ணுக்கு மருந்து. ... Full story

மகா மகம் என்றால் என்ன? – மகாமகத்தின் அறிவியல் நோக்கு!

மகா மகம் என்றால் என்ன? - மகாமகத்தின் அறிவியல் நோக்கு!
மறவன்புலவு க. சச்சிதானந்தம் Dr.P.H.Anand, Professor Emeritus, ​ Government College (Autonomous)/ Bharathidasan University, Kumbakonam-612 001, INDIA WEB: www.sitdm.com   ... Full story

பசு வழிபாடு

மறவன்புலவு க. சச்சிதானந்தன் திருக்கோயில்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் சைவ சமயத்தவர்களாகிய நாம் பசுக்களை வழிபடுகிறோம். நாளாந்தம் வழிபடுகிறோம். எனினும் தைப்பொங்கலுக்கு அடுத்த நாளான பட்டிப் பொங்கல் நாளே சிறப்பாகப் பசுக்களின் திரு நாள். சைவ சமயத்தவருக்கு மட்டுமான விழா நாள், திரு நாள். திருக்கோயில்களில் ஆண்டுக்கு ஒரு நாளில் அடியார்கள் சார்பில் பசுக்களை வழிபட்டு, போற்றி, வாழ்த்தும் வழமை ஈழத்தில் இல்லை. திருக்கோயில்களில் நமதில்லப் பசுக்களை அழைத்துச் சென்று பூசை செய்வோம். போற்றுவோம், வழிபடுவோம். ஒரே நாளில் அனைத்துத் திருக்கோயில்களிலும் ... Full story

கலைச் சாகரம் (கலைக் கடல்) விருது பெற்றமைக்கு வல்லமையின் வாழ்த்துகள் ஐயா!

கலைச் சாகரம் (கலைக் கடல்) விருது பெற்றமைக்கு வல்லமையின் வாழ்த்துகள் ஐயா!
30.12.2015 புதன்கிழமை பிற்பகல் 1330 மணி சாவகச்சேரி, ஒல்லாந்தர் வீதி, ஐங்கரன் மண்டபம். தென்மராட்சிக் கலாச்சாரப் பேரவை, தென்மராட்சிப் பிரதேச சபை இணைந்து வழங்கிய பண்பாட்டுப் பெருவிழா. தலைவர் பிரதேசச் செயலர், அஞ்சலிதேவி சாந்தசீலன். முதன்மை விருந்தினர் செ. சீனிவாசன், தலைவர் கூட்டுறவு ஊழியர் ஆணக்குழு. தென்பொழில் ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.