Posts Tagged ‘மலர் சபா’

Page 1 of 1512345...10...Last »

 நான் அறிந்த சிலம்பு – 242

-மலர் சபா மதுரைக் காண்டம் - கட்டுரை காதை சோதிட வார்த்தை ஆடிமாதத்தின் கிருஷ்ண பட்சத்து அஷ்டமியும் கார்த்திகையின் குறையும் சேர்ந்த வெள்ளிக் கிழமையில், தெளிவாக அமைந்த தீக்கதுவினாலே, புகழில் சிறந்த மதுரை நகரத்துடன் சேர்ந்து மன்னனும் கேடு வாய்க்கப் பெறுவான் என்ற வாக்கு உண்டானது. பாண்டியன் முறைபிழைத்த காரணம் கோவலனின் முற்பிறப்பு வரலாறு மணம் மிக்க சோலைகள் சூழ்ந்த கலிங்க நாட்டில் இனிமையான நீர் நிறைந்த மருதநிலம் அமைந்த சிங்கபுரத்திலும் மூங்கில் காடுகள் நிறைந்த கபிலபுரத்திலும் அரசை ஆள்கின்ற செல்வம் உடைய நேர்த்தியான மாலையணிந்த அரசனாகிய திருவேலினை ஏந்திய பெரிய கையை உடைய வசு என்பவனும் குமரன் என்பவனும் என்றும் அழியாத செல்வமுடைய சிறந்த குடியில் தோன்றிய இந்த ... Full story

நான் அறிந்த சிலம்பு – 240

நான் அறிந்த சிலம்பு - 240
-மலர் சபா மதுரைக் காண்டம் - கட்டுரை காதை வார்த்திகனைச் சிறைவிடுத்து, அவனுக்கு இரண்டு ஊர்களை அளித்தல் திறக்க இயலாதபடி மூடிக்கொண்ட கோவில் கதவின் உறுதியான நிலையறிந்து, வீரம் மிக்க வேலை உடைய பாண்டிய நெடுஞ்செழியன் மயங்கினான். "என் ஆட்சி கொடுங்கோல் ஆட்சியானதா? கொற்றவைக்கு நேர்ந்த வருத்தம் என்ன?" இதை ஆராய்ந்துவந்து என்னிடம் கூறுங்கள்… என மன்னன் கட்டளையிட்டான். இளமையான அந்தச் சேவகர், மன்னனை வணங்கிச் சென்றனர். உளவுகண்டு செய்தி அறிந்து, வார்த்திகனைச் சிறையிலிருந்து அழைத்துவந்து மன்னன்முன் நிறுத்தினர். உணமையை எடுத்துரைத்தனர். உண்மையறிந்து மனம் வருந்தினான் மன்னன். வார்த்திகனிடம் பேசலானான். "பெரியவரே! உம்மைச் சிறையில் அடைத்தது செங்கோன்மைக்குப் பொருத்தமான செயல் ... Full story

நான் அறிந்த சிலம்பு – 239

நான் அறிந்த சிலம்பு - 239
-மலர் சபா மதுரைக் காண்டம் - கட்டுரை காதை வார்த்திகனைச் சிறையிட, ஐயை கோயிலின் கதவம் திறவாமை  தட்சணாமூர்த்தி அணிந்த அணிகலன்களைப் பார்த்துப் பொறாமையுற்ற அரசுப் பணியாளர்கள் சிலர் "இவன் புதையலைக் கவர்ந்த பார்ப்பனன்" என்றே கூறிக் கள்வரை அடைக்கும் சிறையில் அவனை அடைத்தனர். அங்ஙனம் சிறையுற்ற வார்த்திகனின் மனைவி கார்த்திகை அம்முறையற்ற செயலால் பெரிதும் வருந்தினாள் மயங்கி நிலத்தில் விழுந்து புலம்பினாள். ஒரு பாவமும் செய்யாத தன் கணவனுக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி இறைவன் மீது கோபம் கொண்டாள். அவளின் இந்தச் செயல் கண்டு குற்றமேதும் இல்லாத சிறப்பினை உடைய சிற்ப வேலைகள் அமைந்த கொற்றவைக் கோயிலின் கதவு மூடிக் கொண்டது.       Full story

நான் அறிந்த சிலம்பு – 238

நான் அறிந்த சிலம்பு - 238
-மலர் சபா மதுரைக் காண்டம் - கட்டுரை காதை தம் சுற்றத்தினரையும் விட்டுநீங்கி குழலையும் குடுமியையும் மழலைப்பேச்சுடைய சிவந்த வாயையும் தளர்வான நடையும் உடைய கூட்டத்துடன் விளையாடும் சிறுவர்கள் அனைவரும்   அந்த அந்தணனைச் சூழ்ந்து கொள்ள, பராசரன் பேசலானான்: "அந்தணச் சிறுவர்களே! என்னுடன் சேர்ந்து மறைதனை ஓதி... Full story

நான் அறிந்த சிலம்பு – 237

-மலர் சபா மதுரைக் காண்டம் - கட்டுரை காதை திருத்தங்காலில் பராசரன் தங்கிய காலத்து நிகழ்ந்தவை செங்கோல் கொண்ட பாண்டியனின் திருந்திய செயல் உடைய அந்தணர்கள் வசிக்கும் ஊர் திருத்தங்கால்… அவ்வூரில் உள்ள பசுமையான தழைகளால் நிறைந்த அரசமரத்தின் கீழ்த் தண்டையும் கமண்டலத்தையும் வெண்குடையையும் பண்டங்கள் உடைய சிறிய பொதியையும் மிதியடியையும் வைத்திருப்பவன் அவன்… குடிமக்களைக் காக்கும் வெண்கொற்றக் குடையும் அறநெறியால் கொண்ட வெற்றியும் உடைய மேலானவன் வாழ்க… கடலின்கண் பகைவர் தம்மை அழித்த மன்னவன் வாழ்க… இமயமலையில் வில்லெழுதிய காவலன் வாழ்க… பொலிவும் குளிர்ச்சியும் பொருந்திய பொருநையாற்றினையுடைய பொறையன் வாழ்க...!     Full story

நான் அறிந்த சிலம்பு – 235

நான் அறிந்த சிலம்பு – 235
-மலர் சபா  மதுரைக் காண்டம் - கட்டுரை காதை வார்த்திகனுக்கு நீதி செய்த வரலாறு பராசரன் சேரனைக் காணச் சென்று பார்ப்பன வாகை சூடி மீளுதல் அறத்தின் தன்மையை நூல்களின் மூலம் அறிந்து அதையொற்றிச் செங்கோல் முறையில் ஆட்சி செய்பவர்கள் பாண்டவர்கள். அதற்குத் தகுந்தது போல் நெடிய வாளையும் உடையவர்கள். அவர் குடி பற்றிய பெரிய உண்மைகளை  நான் சொல்வதன் மூலம் கேட்டறிவாயாக… தஞ்சமாக வந்த ஒரு புறாவுக்காக அதன் எடைக்கு எடை தன் தசை வைத்து அது போதாமல் போகவே தானும் துலாம் ஏறியவன் சிபி ... Full story

நான் அறிந்த சிலம்பு – 234

நான் அறிந்த சிலம்பு - 234
-மலர் சபா மதுரைக் காண்டம் - கட்டுரை காதை கை குறைத்த கொற்றவன் இப்பாண்டிய மன்னனின் சிறப்புக் குறித்து இன்னமும் கூறுவேன் கேட்பாயாக! பிறர்க்கு உதவி செய்ய இயலாத வறுமையில் வாழ்ந்து கொண்டிருந்தனன் கீரந்தன் எனும் அந்தணன். பொருள்தேட முற்பட்டு அவன்    ... Full story

நான் அறிந்த சிலம்பு – 233

நான் அறிந்த சிலம்பு – 233
-மலர் சபா மதுரைக் காண்டம் - கட்டுரை காதை பாண்டியர் குலத்தின் இயல்பு உரைத்தல் அந்தணர் தம் வாயால் ஓதுகின்ற வேதங்களின் ஓசை கேட்டவனே அல்லாது,                   ஒருபோதும் குறைகூறும் ஆராய்ச்சி மணியின் நாவோசையைக் கேட்காதவன் மன்னன்; அவன் தாள் பணிந்து வணங்காத,  கைகூப்பாத பகையரசர்கள் வேண்டுமெனில்... Full story

நான் அறிந்த சிலம்பு – 232

நான் அறிந்த சிலம்பு - 232
-மலர் சபா மதுரைக் காண்டம் - கட்டுரைக் காதை கண்ணகியின் வினா மதுராபதி தெய்வம் கூறியதைக் கேட்ட கண்ணகி, துன்பத்தால் வாடியிருந்த தன் முகத்தை வலப்புறம் திருப்பி, அத்தெய்வத்தை நோக்கி, "என் பின்னால்  வருபவளே, நீ யார்? பொறுப்பதற்கு இய்லாத என் துன்பம்   எப்படிப்பட்டதென்று நீ அறிவாயோ?" எனக் கேட்டாள். மதுராபதி சொல்லிய செய்திகள் தீவினை வந்த வகையைக் ... Full story

நான் அறிந்த சிலம்பு – 231

நான் அறிந்த சிலம்பு – 231
-மலர் சபா மதுரைக் காண்டம் - கட்டுரைக் காதை மதுராபதித் தெய்வம் கண்ணகியின் பின்புறம் தோன்றிப் பேசுதல் சடையில் இளம்பிறை நிலவைத் தாங்கிய தலை உடையவள்; குவளை மலரைப் போன்ற மைதீட்டிய கண்கள் உடையவள்;       வெள்ளிய ஒளிபொருந்திய முத்தைப் போன்ற முகம் உடையவள்; கடைப்பல் வெளியே தோன்றும் பவளம் போன்ற சிவந்த வாய் உடையவள்; அந்த வாயினில் நிலவினைப் போல் ஒளிரும் முத்துப்பல் வரிசை உடையவள்; இடப்பாகம் இருளைப்போல் நீலநிறம் என்றாலும் வலப்பாகம் தங்கம் போன்று ஒளிரும் மேனியுடையாள்; இடக்கையில் பொன்னிறமான தாமரையையும் வலக்கையில் கொடிய வாளையும் தாங்கியவள்; வலக்காலில் வீரமான கழலும் இடக்காலில் சிலம்பும் பூண்டவள்; இத்தகைய ... Full story

நான் அறிந்த சிலம்பு – 230

நான் அறிந்த சிலம்பு - 230
 -மலர் சபா மதுரைக் காண்டம் - அழற்படு காதை நித்திய கருமம் நடைபெறாது ஒழிதல் மாலைதோறும் நடைபெறும் விழாக்களும், வேத முழக்கங்களும், தீயின்முன் செய்யும் வேள்வியும், கோவில்களுக்குச் சென்று மக்கள் தெய்வங்களைக் கும்பிடுவதும், மனையில் பெண்கள் விளக்கேற்றுதலும், மாலையில் விளையாடுதலும் முரசின் முழக்கமும்... இவை எல்லாம் மதுரை மாநகரில் இல்லாது ஒழிந்தன. கண்ணகியின் முன் ... Full story

நான் அறிந்த சிலம்பு – 229

நான் அறிந்த சிலம்பு - 229
-மலர் சபா மதுரைக் காண்டம் - அழற்படு காதை இல்லறம் வழுவாத மகளிர் தம் இல்லத்துக்கு வருகின்ற விருந்தினர்களைப் பேணி, ஒவ்வொரு நாளும் இல்லத்து அறங்கள் தவறாமல் செய்து வருகின்ற, பெரிய மனைகளில் வாழும் மகளிர்  மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, "அழகான அணிகள் அணிந்த மார்பினை உடைய, கணவனை இழந்த, அந்த இழப்புக்குக் காரணமாய் விளங்கிய பாண்டிய மன்னனை வென்ற, சிறப்பான அணிகளை அணிந்த கண்ணகி, தன் கொங்கையால் செய்த இந்தப்பூசல் முறையானது" எனக்கூறி அவர்களும் கோபப்பட்டு, பற்றி எரியும் தீக்கடவுளையும் கைதொழுது வணங்கி நின்றனர். நாடக மடந்தையர் ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் கற்றுத் தேர்வுபெற்ற இசையின் இயல்பறிந்து, அதற்கேற்ப நடனம் ஆடும் மகளிர் வாழ்கின்ற வீதிகளிலும் தீ பரவியது. மத்தளம், முழவு, ... Full story

நான் அறிந்த சிலம்பு – 228

நான் அறிந்த சிலம்பு – 228
-மலர்சபா மதுரைக் காண்டம் - அழற்படு காதை நெருப்பினால் நேர்ந்த துன்பம் மிருகங்களின் நிலை பசுக்களும் அவற்றின் கன்றுகளும் பரவுகின்ற நெருப்பில் அகப்படாமல், அறம் சார்ந்த வாழ்வு வாழும் அகன்ற தெருக்களை அடைந்தன. வீரம் மிக்க கொடிய ஆண் யானைகளும் இளம் பெண் யானைகளும் விரைந்து செல்லும் குதிரைகளும் மதிற்புறம் சென்றன. மடந்தையரின் நிலை சந்தனம் தோய்ந்த நிமிர்ந்த இளமையும் அழகும் உடைய மார்பையும் மைபூசிய பெரிய கண்களையும் உடைய மகளிர் செப்பின்கண் இடப்பட்ட தேன்மிக்க நல்ல மணம் கமழும் மொட்டவிழ்ந்த அழகிய மலர்கள் நெருங்கக் கட்டி மணம் கமழும் கூந்தலில் சூடும்போது அதிலிருந்து ... Full story

நான் அறிந்த சிலம்பு – 227

நான் அறிந்த சிலம்பு – 227
-மலர் சபா மதுரைக் காண்டம் - அழற்படு காதை நால்வகை வருணபூதமும் நீங்குதல் பாண்டிய மன்னன் நீதி தவறும் அந்த நாளில் இம்மதுரை நகர் தீக்கிரையாகும் செய்தி ஒன்றுண்டு என்பதனை அறிய வேண்டிய முறைப்படி முன்பே அறிவோம். அதனால் காவல் புரிவதை விடுத்து இவ்விடத்தை விட்டு நீங்குதல் இயல்பானதேயாகும். இங்ஙனம் பூதங்கள் நான்கும்             தமக்குள் பேசி முடிவுக்கு வந்தபின், தன் முலையாலே நகரைத் தீக்கிரையாக்கக் கருதிய வீரமங்கை கண்ணகி கண்முன் நகரத்தை விட்டு நீங்கின. மறவோர் சேரியில் எரி ... Full story

நான் அறிந்த சிலம்பு – 226

நான் அறிந்த சிலம்பு – 226
-மலர் சபா மதுரைக் காண்டம் - அழற்படு காதை கலப்பை துலாம் தால் யாழ் கையில் ஏந்தியவன்; விளைபொருட்கள் அதிகம் விளையச் செய்து விருந்தினர்களை இனிதாக உபசரித்து மலைபடு பொருட்கள், கடல்படு பொருட்கள் இவற்றைக் கொண்டு வந்து வேண்டுவோர்க்கு விலைக்கு அளித்து, உழவுத்தொழில் செய்து                                 நெல் முதலியன விளைவித்து உலக மக்களுக்கு உதவும் சிறந்த வாழ்க்கை நெறியை உடையவன். ஒளிபொருந்திய தலையில் இளம்பிறை அணிந்த கடவுளின் மேனியைப் போல ஒளிவீசும் ஒப்பற்ற ... Full story
Page 1 of 1512345...10...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.