Posts Tagged ‘மீனாட்சி பாலகணேஷ்’

Page 1 of 612345...Last »

காழிப்பிள்ளைக்கு சேக்கிழார் பாடிய பிள்ளைத்தமிழ்!

மீனாட்சி பாலகணேஷ்             'தவம் பெருக்கும் சண்பையிலே தாவில்சரா சரங்களெல்லாம்           சிவம்பெருக்கும் பிள்ளையார் திருஅவதா ரஞ்செய்தார்,' என்பது ஆளுடைப்பிள்ளையாராகிய திருஞானசம்பந்தப் பெருமானின் அவதாரம் பற்றி சேக்கிழார் பெருமான் இயற்றியருளிய பெரியபுராணப் பாடல். பெரியபுராணத்தினூடே இழைந்திலங்கும் பிள்ளைத்தமிழ் போன்ற ஓரமைப்பையும் சேக்கிழார் பெருமான் படைத்திருக்கிறார்! அதனை ஒரு சிறிய பிள்ளைத்தமிழாகவே நாம் கருதவும் இடமிருக்கிறது. காப்பியத்துக்குள் ஒரு சிற்றிலக்கியம்!                                                             *****             அந்த இளங்காலைப் பொழுதில் சண்பை (சீர்காழி) எனப்படும் அவ்வூரில் பல நற்சகுனங்கள் தென்பட்டன. சிலுசிலுவென்ற ... Full story

பெட்டையும் முட்டையும்!

பெட்டையும் முட்டையும்!
மீனாட்சி பாலகணேஷ் முருகன் குறிஞ்சிமலையின் தலைவன்; அந்நிலத்துக்கு இறைவன். இருப்பினும் ஐவகை நிலங்களிலும் முருகப்பெருமான் செய்த விளையாடல்கள் பற்றிய அழகான பாடல்களைப் பிள்ளைத்தமிழ் நூல்களில் நாம் கண்டுகளிக்கலாம். முருகனின் திருவிளையாடலாகப் பாலைநிலத்தில் நடைபெற்ற ஒரு அழகான கதை! துறையூரைச் சேர்ந்த தமிழ்ப்புலவர் பொய்யாமொழியார்; இவர் பராசக்தி அன்னையையே பாடுபவர்; வேறு தெய்வங்களைப் பாடவே மாட்டார். முருகன் இவரிடம் தன்மீதும் தமிழ்க்கவிபாடும்படி கேட்க, "பெட்டையையும் பாடி முட்டையையும் ... Full story

ஆய்ச்சியர் மத்தொலி

ஆய்ச்சியர் மத்தொலி
-மீனாட்சி பாலகணேஷ் தொல்காப்பியம் மாயோனாகிய திருமால், சேயோன் எனப்படும் முருகன், வேந்தன் எனப்படும் இந்திரன், வருணன் ஆகியோரை நானிலத் தெய்வங்களாகக் காட்டுகின்றது. 'மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும், வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்'  (தொல்காப்பியம்- அகத்திணையியல் -  பொருளதிகாரம்) பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களையும் அவை பற்றிய செய்திகளையும் பாடல்களில் இணைத்துக் கூறுவதுண்டு என முன்பு கண்டோம். முருகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட பிள்ளைத்தமிழ் நூல்களில் குறிஞ்சிநிலம் பற்றிய செய்திகள் ... Full story

அளறுபட்ட மகரப்பரவை

அளறுபட்ட மகரப்பரவை
மீனாட்சி பாலகணேஷ் இன்று கந்தசஷ்டி தினம். முருகப்பிரான், அன்னை பராசக்தி (வேல்நெடுங்கண்ணி) ஆசிர்வதித்து தனக்களித்த கூரிய வடிவேலினால் அரக்கர்களைக் கொன்று தேவர்களைக் காத்தான். குழந்தை குமரன்; அவன் தன் சின்னஞ்சிறு கைகளால் சப்பாணி கொட்டுமாறு அன்னையும் பிறரும் வேண்டுகின்றனர். சப்பாணிப்பருவத்தின் பாடுபொருளாவன குழந்தையின் கைகளே! இங்கு குமரனின் குட்டிக்கரங்கள் எத்துணை அரும்பெரும் செயல்களைச் செய்தன என்பதனைக் காண்போமா? திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழில் ... Full story

சித்ரா-5 ( கடைசி பாகம்)

சித்ரா-5 ( கடைசி பாகம்)
(காதலின் புதியதொரு பரிமாணம்) மூலம்: வங்கமொழி: ரவீந்திரநாத் தாகூர்; ஆங்கில வடிவின் தமிழாக்கம்: மீனாட்சி பாலகணேஷ் ***************** தொடர்ச்சி: காட்சி- 8 அர்ஜுனன்: ஒரு கொள்ளைக்காரர்கள் கூட்டம் சமவெளியை வந்தடைந்துள்ளது என அறிகிறேன். என் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு சென்று பயந்திருக்கும் கிராமமக்களை நான் காக்க வேண்டும். சித்ரா: நீங்கள் அவர்களைப்பற்றிப் பயப்பட வேண்டாம். தீர்த்த யாத்திரைக்குச் செல்லும்முன் இளவரசி ... Full story

சித்ரா – 4

சித்ரா - 4
             (காதலின் புதியதொரு பரிமாணம்)             மூலம்: வங்கமொழி: ரவீந்திரநாத் தாகூர்; ஆங்கில வடிவின் தமிழாக்கம்: மீனாட்சி பாலகணேஷ்                              *****************                            தொடர்ச்சி: காட்சி- 5             வசந்தன்: உன் வேகத்திற்கு என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை, நண்பா! எனக்குக் களைப்பாக இருக்கிறது. உன்னால் மூட்டப்பட்ட இந்த நெருப்பினைத் தொடர்ந்து எரிய வைப்பதென்பது பெரும் சோதனையாக உள்ளது. உறக்கம் என் கண்களைத் தழுவுகிறது, கையிலுள்ள ... Full story

குறிஞ்சிவாழ் பசுமா மயிலா!

குறிஞ்சிவாழ் பசுமா மயிலா!
-மீனாட்சி பாலகணேஷ் பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் தமிழுக்கே உரிய ஐவகை நிலங்களின்  செழிப்பையும் அழகையும் புகழ்ந்து இயற்றப்பட்ட பல பாடல்களை அனைத்துப் பருவங்களிலும் இயற்றிய புலவர்களின் கற்பனைக்கேற்பக் கொண்டமைந்து விளங்குகின்றன. இலக்கியச் சுவையையும் மேம்படுத்துகின்றன. பாட்டுடைத்தலைவன் அல்லது தலைவியின் நாட்டின் வளம் இந்த ஐவகை நிலங்களின் செழிப்பாலும் உணரப்படும். முருகப்பெருமான் மீதான பிள்ளைத்தமிழ் நூல்களில் இந்த நயங்கள் மிகச்சிறப்பாகப் பாடப்படும். ஏனெனில் குறிஞ்சிநிலத்திற்குக் கடவுள் குமரப்பெருமானல்லவா? இந்தவரிசையில் நாம் முதலில் காண்பது திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்ப் பாடலொன்றினையே! திருச்செந்தூரானது கடல்சார்ந்த நெய்தல் ... Full story

சித்ரா – 3

சித்ரா - 3
-மீனாட்சி பாலகணேஷ்   (காதலின் புதியதொரு பரிமாணம்)           மூலம்: வங்கமொழி: ரவீந்திரநாத் தாகூர்; ஆங்கில வடிவின் தமிழாக்கம்: மீனாட்சி பாலகணேஷ்                               *****************                         தொடர்ச்சி: காட்சி - 3           சித்ரா: அது முடியாத செயல். தணியாத ஆர்வத்துடன் என்னை எதிர்கொள்ளும் அவருடைய பார்வை தாபமிகுந்த ஆன்மா தனது கரங்களால் அணைத்துக்கொள்வது போலுள்ளதே! ... Full story

சித்ரா -2 (காதலின் புதியதொரு பரிமாணம்)

சித்ரா -2    (காதலின் புதியதொரு பரிமாணம்)
 மூலம்: வங்கமொழி: ரவீந்திரநாத் தாகூர்; ஆங்கில வடிவின் தமிழாக்கம்: மீனாட்சி பாலகணேஷ்                               ***************** தொடர்ச்சி: காட்சி... Full story

சித்ரா – 1

(காதலின் புதியதொரு பரிமாணம்)           மூலம்: வங்கமொழி: ரவீந்திரநாத் தாகூர் ஆங்கில வடிவின் தமிழாக்கம்: மீனாட்சி பாலகணேஷ்  முன்னுரை:           இந்தச் சொற்களாலான நாடகம் தாகூரால் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது.          ஒரு பிராயச்சித்தத்தின் காரணமாக அலைந்து திரிந்த அர்ஜுனன், மணிப்பூரை வந்தடைகிறான். அந்நாட்டு அரசனான சித்ரவாஹனனின் அழகான மகள் சித்ராங்கதாவைக் காண்கிறான். அவள் அழகால் கவரப்பட்டு அவளைத் தனக்கு மணமுடித்துத் தருமாறு அரசனிடம் கேட்கிறான். அர்ஜுனனை யாரெனக் கேட்கும் சித்ரவாஹனன் அவன் பாண்டவர்களில் ஒருவன் என அறிந்ததும் அவனிடம் தன் ... Full story

மருதத்தச்சன்

மருதத்தச்சன்
மீனாட்சி பாலகணேஷ் பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் தமிழின் பலசுவைகளையும் இலக்கியநயங்களையும் கொண்டமைந்து படிப்போருக்கு இன்பமூட்டுகின்றன. இவற்றுள் ஒன்றே ஐவகை நிலங்களின் செழிப்பினை விளக்குவது. பாட்டுடைத்தலைவன் அல்லது தலைவியின் நாட்டின் வளப்பத்தைக் கூறுங்கால் ஐவகை நிலங்களின் செழிப்பையும் அழகுற உவமைநயங்களுடன் பாடுவது புலவர்களின் வழக்கம். இவை புலவரின் கற்பனைக்கேற்ப எப்பருவத்தில் வேண்டுமாயினும் அமையும். அலைமகளையும் கலைமகளையும் மருதநிலத்தில் வாழ்பவர்களாகச் சித்தரிப்பது வழக்கு. ஏனெனில் இருவரும் பங்கயத்தில் உறைபவர்கள். பங்கயமெனும் தாமரை மலரானது மருதநிலத்துக்குரிய மலராகும். இதில் செந்தாமரையில் அலைமகளெனும் இலக்குமியும், வெண்தாமரை மலரில் கலைமகளாம் சரசுவதியும் உறைகின்றனர்.... Full story

ஆறு முகமான பொருள்!

ஆறு முகமான பொருள்!
மீனாட்சி பாலகணேஷ் குழந்தை முருகனின் பன்னிரு திருக்கரங்களின் பெருமையைச் சென்ற கட்டுரையில் கண்டோம். ஆறுமுகங்களின் அருமைபெருமைகளையும் கண்டுமகிழலாமே! முருகனைப்பாடுவோர் அனைவரும் தமது கற்பனைக்கேற்றவண்ணம் அவனுடைய திருமுகங்கள் செய்வதனைக் கூறிமகிழ்ந்தனர். அவர்களுடைய விளக்கங்கள் ஒன்றுக்கொன்று சளைக்காமல் அனைத்துமே அழகுறப் பல பொருள்களை விளக்கியருளுகின்றன. முதலில் ஐங்கரன், முருகன் இருவரின் ஒரு சிறு விளையாட்டைக் கண்டு ரசிக்கலாம். ஐங்கரனான கணேசன் தன் தந்தையான அரனிடத்தில் வந்து, "ஐய! என் செவியை முருகன் ... Full story

இனி என்னைப் புதிய உயிராக்கி – 17

இனி என்னைப் புதிய உயிராக்கி – 17
மீனாட்சி பாலகணேஷ் ‘நீயே எனக்கு எல்லாமாக இருக்கிறாய் என நான் கூறிக் கொள்ளும் வகையில் ‘என்’னுடைய ஒரு சிறு பகுதி மட்டும் என்னிடம் எஞ்சியிருக்கட்டும்’ – தாகூர் (கீதாஞ்சலி). ******************************** ஆடலரசு பணிபுரியும் மருத்துவமனை. அவனுடைய கன்ஸல்டிங் ரூமில் ஜிம், கீதா இருவரும் அமர்ந்து கொண்டு கவலை தோய்ந்த முகத்துடன் ஆடலரசு கூறுவதைக் ... Full story

44. ஓராறு முகமும் ஈராறு கரமும்…!

44. ஓராறு முகமும் ஈராறு கரமும்...!
மீனாட்சி பாலகணேஷ் பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் குழந்தைகளைப் போற்றுவன. பெரும்பாலும் தெய்வங்களே குழந்தைகளாகப் போற்றப்படுவதனால் அத்தெய்வங்களின் சிறப்பையும் புகழையும் குழந்தைக்குமாக்கிப் பாடுவது பிள்ளைத்தமிழின் மரபாகின்றது. ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்கள் பெரும்பாலும் முருகப்பெருமான் மீதானவையே. அவனுடைய வேல், மயில், அரக்கர்களையழித்த வீரச்செயல்கள், தேவர்களைக் காத்த வரலாறெனப் பற்பல கருத்துக்களைக் கொண்டமைந்த பாடல்கள் பலவாகும். அருணகிரிநாதரின் திருப்புகழ், கச்சியப்பச் சிவாச்சாரியாரின் கந்தபுராணம் ஆகியவற்றில் காணும் நிகழ்ச்சிகள், மக்களிடையே வழக்கிலிருந்து வரும் சிறுபுனைகதைகள் ஆகியன பிள்ளைத்தமிழ் நூல்களின் புலவர்களால் பொருத்தமான பருவங்களில் அழகுற எடுத்தாளப்பட்டுள்ளன.... Full story

இனி என்னைப் புதிய உயிராக்கி – 16

-மீனாட்சி பாலகணேஷ் உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன் உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டானென்று உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே – திருமூலர் * * * * * சிவப்பழமான ஒரு முதியவர், திறந்த மார்பு, நெற்றி எங்கும் பட்டை பட்டையாகத் திருநீறு அணிந்தவர், அதிக மனித சந்தடி இல்லாத அந்த வேளையில் சுவாமிசந்நிதியின் பிராகாரத்திலமர்ந்து திருமுறைகளிலிருந்து பாடல்களை கணீரென்ற உரத்த குரலில், ஆனால் உள்ளம் நெகிழும் வண்ணம் பாடிக் கொண்டிருந்தார். புடவைத் தலைப்பால் நன்கு போர்த்தி மூடியவாறு தலைகுனிந்து, ... Full story
Page 1 of 612345...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.