Posts Tagged ‘முனைவர் அரங்க.மணிமாறன்’

கலிங்கத்துப் பரணியில் சோழர் வரலாறு

-முனைவர் அரங்க.மணிமாறன் வாழ்வின் உறுதிப்பொருட்கள் நான்கு. அவை அறம் பொருள் இன்பம்  வீடு ஆகியவை. இவை இலக்கியங்களுக்கும் பொருந்தும். அந்நான்கு உறுதிப்பொருட்களும் பெற்றவை பேரிலக்கியங்கள் என்றும் ஒன்றிரண்டு குறைந்து வருபவை சிற்றிலக்கியங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.தொண்ணூற்றாறு வகையான சிற்றிலக்கியங்கள் தமிழ்மொழியில் அணிசெய்கின்றன. அவற்றுள் பரணி என்பதும் ஒன்று. ‘ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி’1 என்று இலக்கண விளக்கம் பரணிக்கு விளக்கம் அளிக்கிறது. தொல்காப்பியம் குறிப்பிடும் வாண்மங்கலம், களவேள்வி துறைகளின் வளர்ச்சியே இச்சிற்றிலக்கியம் மலர ஏதுவாகிறது. போர்க்களத்தில் ஆயிரம் யானைகளை வென்ற வீரனைப் பாடுவது பரணி எனும் புறத்திணைச் ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.