Posts Tagged ‘முனைவர் இரா. மதன் குமார்’

அப்பர் திருத்தாண்டகத்தில் காஞ்சித் திருக்கோயில் தொன்மங்கள்

சு. கோப்பெருந்தேவி1*, முனைவர் இரா. மதன் குமார்2*., தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர்-21. ------------------------------------- முன்னுரை சான்றோர்களால் சிறப்புப்பெற்றது, தொண்டைநாடு. அந்நாட்டின் காஞ்சிநகரமானது, ‘உலகுயிர்கள், பெருமானை வழிபட்டு உய்வதற்குரிய பெருஞ்சிறப்புடையது’ எனக் காஞ்சிப்புராணம் கூறுகின்றது. ‘க’ என்பது, பரம்பொருளாகிய பெருமானைக் குறிக்கும். ‘அஞ்சித்தல்’ என்பது, ‘வழிபடுதல்’ எனப் பொருள் தரும். அதன்வழி, ‘ஆருயிர்கள், பெருமானை வழிபட்டுய்வதற்கு உகந்த திருத்தலம்’ என்கின்ற குறிப்பில், ‘காஞ்சி’ என அந்நகரம் போற்றப்படுகிறது. புறத்திணையில், ‘காஞ்சி’ என்பது, நிலையாமையைக் குறிக்கும். நாம் அனைவரும், உடலின் நிலையாமையை உணர்ந்து, திருவருளாகிய அம்மையின் துணையுடன், பெருமானைப் பற்றி உய்வதற்கு ... Full story

தொண்டர்க்கும் தொண்டராகிய புண்ணியர்கள்

-முனைவர் இரா. மதன் குமார் இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர் - 21. முன்னுரை சைவசமயத்தில், சரியை முதலான நால்வகைநெறிகளும் பெருமானைப் பெற்றுய்வதற்கான படிநிலைகளாகின்றன. அவ்வரிசையில், சமயக்குரவர் நால்வர்தம் அணுகுமுறைகளையும் முறையே மகன்மைநெறி, தொண்டுநெறி, தோழமைநெறி மற்றும் ஞானநெறி எனப் போற்றுதல் மரபு. நால்வகைநெறிகளுள், பூவுலகின்கண் ‘தொண்டுநெறியை நிலைநிறுத்தத் திருவவதாரம் செய்தருளியவர், ‘திருநாவுக்கரசு நாயனார்’. அவரை, ஞானகுருவாக்கி, ’தொண்டுநெறிக்கோர் தூமணி’ எனச் சிறப்புற்றவர், ‘அப்பூதியடிகள்’. திலகவதியாரை முதலாக உடைய இத் திருத்தொண்டர் மரபு, எளியராகிய அடியவர்கள், அரும்பொருளாகிய இறைவனை அடைவதற்குத் ‘தொண்டுநெறியே துணையாகும்’ என விளக்கிநிற்பது; ‘பொய்யன்பிலா தொண்டர்க்கும் தொண்டராம் புண்ணியமே’ ... Full story

பெருகும் அன்பின் பேரன்பர் இருவர்  

-முனைவர் இரா. மதன் குமார்  முன்னுரை திருஞானசம்பந்தப்பெருமான், மொழியே மலராக, பதிகமே பாமாலையாக, ஞானமே மணமாகச் சொல்மாலை சூட்டிச் சிறந்தவர்; அரனடியை அடைதற்குரிய நன்னெறிகளைத் திருக்கடைக்காப்பாக அருளிச்செய்தவர்; அவர், ‘அன்பு நிறைந்த சிந்தையராவர்’ என அடியவர்களை ஏற்றிப் போற்றியவர்; அடியார்களின் மண்ணுலக மயக்கம் நீக்கிப் பிறவிப்பிணி தீர்க்கின்ற ஞானத்துணைவராகவும் வந்தருளியவர். அவரை நேரில் கண்டறிந்திராத நிலையிலும், அவர் மீதான அடிமைத்திறத்தில் சிறந்திருந்தவர், திருமயிலைச் சிவநேசர். அவரது அன்பின்மேன்மை, பிள்ளையாரின் செயற்கரிய சாதனைக்குக் கருவியாகின்ற தனித்தகுதியாக விளக்கம்பெற்றிருந்தது. ஆளுடைய பிள்ளையார், அதனை உலகறியச் செய்வதற்குப் பூம்பாவையை உயிருடன்  மீட்டருளிய அற்புதத்தைப் பெரியபுராணம் விளக்கியுரைக்கிறது. ... Full story

தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

                                                 தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் முனைவர் இரா. மதன் குமார்., இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,                                           கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர் - 21.   முன்னுரை                            ‘பெருமானைப் பேசாத நாளெல்லாம், பிறவாத நாளே’ என்பது, அறுபத்துமூவர் கொண்ட வாழ்வியல்நெறியாகும். ஆனால், ‘முற்பிறப்பில் செய்த அவ்வினையால், இப்பிறப்பில் இவ்வினையைச் செய்து இளைக்கின்றோம்’ என்பதே நமது அன்றாட வாழ்வியல் அவலமாக விளங்குகிறது. இவ்வவலத்தை மாற்ற, திருநீலகண்டத்தின் மீது மாறத பற்றுடன், கைவினையாகிய தொண்டுநெறியால், இறைவனைப் பணிந்துய்வதற்கு, திருஞானசம்பந்தர் ... Full story

முத்திக்கு வித்தாகும், திருவிடைக்கழித் திருப்புகழ்

-முனைவர் இரா. மதன் குமார் முன்னுரை அறுமுகச்சிவமாகிய திருமுருகப்பெருமானுக்கு, ‘மாத்ருகா புஷ்பமாலை’ என்னும் திருப்புகழ்ப் பாமாலை சூட்டிச் சிறந்தவர், ‘திருஅருணகிரிநாத சுவாமிகள்’.  ‘மாத்ருகா புஷ்பமாலை கோலப்ரவாள பாதத்தில் அணிவோனே’ என்பது அவர்தம் அருள்உவகைப் பெருவாக்கு. சுவாமிகள் பாடிப்பணிந்த, திருப்புகழ்த் திருத்தலங்கள் அனைத்திலும் முத்தித்தலமாகவும், திருவடித்தலமாகவும் விளங்குகின்ற சிறப்புடையது, திருவிடைக்கழித் திருத்தலமாகும். ‘எத்தலத்தவரும் மருவ முத்தியைத் தரு திருவிடைக்கழி’ என்று இத்திருத்தலத்தைச் சுவாமிகள் பாடியுள்ளார்.  அவ்வகையில், சுவாமிகள் திருவிடைக்கழியினை எட்டுத் திருப்பாடல்களால் போற்றியுள்ளார். அத்திருப்பாடல்களில், திருமுருகன் திருப்புகழும், சுவாமிகளின் பக்திப்பெருக்கும், மாந்தர்தம் அறியாமைக் குறைகளைத் தமது குறைகளாக ஏறிட்டுக்கொண்டுள்ள கருணையும், நமக்கென, அவர் ... Full story

கலியன் ஒலிமாலை விழா

-முனைவர் இரா. மதன் குமார்  முன்னுரை இறைவன், பரத்துவம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம் மற்றும் அர்ச்சை ஆகிய நிலைகளில் அருள்கின்றான். இவற்றுள், அர்ச்சை என்பது, திவ்யதேசங்களில் பெருமாள், உருவத்திருமேனி கொண்டு விளங்கியருள்கின்ற அருள்நிலையாகும். பிற நிலைகளைக் காட்டிலும், அர்ச்சையில், பெருமாளின் எளிமையும், அடியார்களின் பக்தியாகிய பெருந்திறமும் மிகச்சிறப்பாக வெளிப்படும். அதனாலேயே, திருமங்கையாழ்வார், பெருமாளின் அர்ச்சைநிலையினை மிகவும் விரும்பி, திவ்யதேசங்கள்தொறும் சென்றார்; அங்கு, பெருமாளின் திருஉருவினைக் கண்ணாரக் கண்டு, வாயாரப் பாடி, மனமார, அவனது திருவருளைப்பெற்று இன்புற்றார். அன்று ஆழ்வார், திவ்யதேசங்கள்தொறும் சென்று பாடிப்பெற்ற பேரின்ப அனுபத்தை, இன்றளவும் ... Full story

உறவாகிய யோகமும் போகமும் உயிராளீ

-முனைவர் இரா. மதன் குமார்  முன்னுரை உயிர்கள், சார்ந்ததன் வண்ணமாய் விளங்கவல்லவை. அவை, மும்மலங்களின் தொடர்பால், நிலையில்லாத உடம்பே, தாம் என மயங்குகின்றன; உடம்பின் வழியே  பெண்ணின்பமே பெரிதென அழிகின்றன. உயிர்கள் இவ் அறியாமை நீங்கி, கண்டு, கேட்டு, உண்டு, உய்த்து, உற்று அறிதலாகிய பேரறிவு ஐந்தாலும்,   தலைவனாகிய இறைவனை உணர்ந்து, ‘திருவடி இன்பமே பேரின்பம்’ என்னும் ஞானநிலையினை எய்தவேண்டும். அதற்கு, ‘உள்ளம் பெருங்கோயில்; ஊனுடம்பு ஆலயம்’ என்னும் பெருநிலையில், புலன்இன்பங்களைப் பேரின்ப நெறிக்குரியதாகப் பண்படுத்திக் கொள்ளவேண்டும். அளவுகடந்த புலனின்ப நாட்டத்தை, இறைவன்பால் மடைமாற்றம் செய்கின்ற முயற்சியாகவே, சமயக்குரவர், சந்தானக் குரவர் ... Full story

திருப்பாவையில் அர்த்தபஞ்சக ஞானம்

-முனைவர் இரா. மதன் குமார்  முன்னுரை:  அன்ன வயல் புதுவையாம், திருவில்லிப்புத்தூரின்கண் அவதரித்து, அரங்கநகராள்வாருக்குப் பூமாலையுடன், பாமாலையும் சூட்டிச் சிறந்தவர், ஆண்டாள் நாச்சியார். அவர்,  சீவான்மாக்களை விண்ணேற்ற, பூமிப்பிராட்டியின் அம்சமென, மண்ணில் உதித்தவர்; பாடித் தந்த சொல்மாலையால் அருள்மணம் பரப்பி, அரங்கநகரானைத் தனது பக்திவலையில் அகப்படுத்திக்கொண்டவர்; அவர் அருளிச்செய்த, ‘திருப்பாவை’ப் பாசுரத் தொகுதியானது, நம்மைப் பிறவியாகிய பெருவலையிலிருந்து மீட்டருளவல்லது; ‘அர்த்தபஞ்சக ஞானம்’ என்னும் மதிநலம் விளங்கச்செய்வது; நிறைவுற அருள்நெறி காட்டி, ஆன்ம ஈடேற்றத்துக்கு வகைசெய்வது; அவ்வகையில், இறைநிலையும், உயிர்நிலையும், அருள்வகையும், அருள்வழியும், அருள்வகைக்குரிய ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.