Posts Tagged ‘முனைவர் இரா.வெங்கடேசன்’

மலையாளப் பனுவலில் சங்ககால வாழ்க்கை

முனைவர் இரா.வெங்கடேசன் “நாம் படிக்கும் புத்தகம், முஷ்டியால் மண்டையோட்டை இடித்து நம்மை விழிக்கச் செய்யாதபட்சத்தில் நாம் ஏன் அதை வாசிக்க வேண்டும். அது நம்மை மகிழ்விக்கிறது என்பதாலா? அட கடவுளே, நாம் புத்தகங்களே இல்லாமல்கூட சந்தோசமாக இருக்க முடியும். நம்மை மகிழ்விக்கும் அப்படியான புத்தகங்களை, தேவைப்பட்டால், நாமே கூட எழுதிக்கொள்ளலாம். ஆனால் ஒரு துரதிர்ஷ்டத்தைப்போல நம்மை வந்தடைகிற, நம்மைவிடவும் நாம் அதிகம் நேசிக்கிற ஒருவரின் மரணத்தைப் போலவோ, தற்கொலையைப் போலவோ ஆழ்ந்த துயரம் விளைவிக்கக்கூடிய புத்தகங்களே நமக்குத் தேவை. நமக்குள் படிந்திருக்கும் உறைபனிப் பாறையைப் பனிக் கோடாரியால் ... Full story

சீனவேதம் அல்லது சகத்தின் சூட்சமம்

முனைவர் இரா.வெங்கடேசன் உதவிப் பேராசிரியர் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கிய பள்ளி தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் – 10                 சீனநாட்டை நெப்போலியன் உறங்கும் யானை என்றான் இது உண்மையே. மங்கோலிய இனத்தைச் சேர்ந்த சீனர்களின் உயர்வுக்குக் காரணமாக இருப்பவை உழைப்பு, இலக்கியம், மதநம்பிக்கை என்று சொன்னால் அது மிகையாகாது என்று எண்ணுகின்றேன். உலகில் தொன்மையான நாகரிகத்தைக் கொண்ட சீனா தொன்மையான இலக்கிய வளத்தை தன்னகத்தே கொண்டதாகும். சீனச் சமுதாயம் தொடக்க காலத்தில் அறிஞர்கள், ... Full story

தமிழில் முதல் சமையல்கலை நூல்

தமிழில் முதல் சமையல்கலை நூல்
-முனைவர் இரா.வெங்கடேசன் தமிழில் சமையல்கலை தொடர்பான பல நூல்கள் இன்று வெளிவந்துகொண்டிருக்கின்றன. சைவம், அசைவம், குழம்பு, பருப்பு வகைகள், சிற்றுண்டி, காய்கறி உணவு, அசைவத்தில் சிக்கன், மீன், ஆடு, கடல் உணவுகள் என்று தனித்தனியாக பல நூல்கள் விதவிதமான சமையல் நுணுக்கங்களை மையமிட்டு எழுதப்பட்டுள்ளன. இவ்வளவு உணவு வகைகளை சமைப்பதற்குத் தனித்தனியாக நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில், இதற்கெல்லாம் அடிப்படை நூலாக இருக்கும் நூல் இந்துபாக சாஸ்திரம் எனும் நூலாகும். முதற்பதிப்பு 1891ஆம் ஆண்டு வெளிவந்து ... Full story

கவனம் பெறாத அகராதி

கவனம் பெறாத அகராதி
-முனைவர் இரா.வெங்கடேசன் எந்த மொழிகளிலும் அகராதிகளின் பணி முக்கியமானதாகும். சமூகத்தையும் இலக்கியத்தையும் புரிந்துகொள்வதற்கும் நுட்பமான மையங்களைக் கணிப்பதற்கும் அகராதிகள் தேவைப்படுகின்றன. அகராதிகள் மொழியின் வளத்தைச் சொல்லும் கருவியாக உள்ளன. அகராதிகள் இல்லையென்றால் மொழியின் வளர்ச்சியை கவனத்திற் கொள்ளமுடியாது. தமிழ்மொழியின் செழுமையை எடுத்துரைப்பதற்குத் தமிழில் தோன்றிய அகராதிகள் முக்கியக் காரணிகளாக உள்ளன. தமிழில் தொல்காப்பியத்தில் சுட்டிக்காட்டப்பட்ட அகராதிக்கான முன்னெடுப்புகள் இன்று பரந்து விரிந்து வளர்ந்துள்ளன. தமிழில் ஏராளனமான அகராதிகள் இருப்பதைப் பெருமையாகக் கொண்டாலும் சில அகராதிகள் கவனம் பெறாமல் போனது துரதிர்ஷ்டமானதாகும். 1911ஆம் ஆண்டு ஏ.சி.கிலேற்றன் ஐயர் அவர்கள் உருவாக்கிய வேத ... Full story

இந்துமத நூல்கள் பாடிய இசுலாமியப் புலவர்கள்

-முனைவர் இரா.வெங்கடேசன் இந்திய வரலாறு என்பதே கட்டமைக்கப்பட்டதாகும். திட்டமிட்டே இங்கே வரலாறு தொகுக்கப்பட்டிருக்கிறது. ஒருநாட்டின் மேலாண்மை, சமூக அமைப்பு, பண்பாடு, பொருளியல் சார்ந்த நிகழ்வுகளின் தொகுப்பாக உள்ள வரலாறு ஒருபக்கச் சார்பு அடையாங்களைத் தாங்கியே நிற்கின்றது. இந்திய வரலாறு என்பது வட இந்திய வரலாற்றையும் தமிழக வரலாறு என்பது உயர்நிலையில் இருப்போரின் வரலாற்றையும் மட்டுமே பேசுவதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கிய வரலாற்றை நூற்றாண்டு வாரியாக எழுதிய மு. அருணாசலம் பிள்ளை, சமண நூல்களைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘குண்டலகேசி, நீலகேசி கதைகளும் பின்னால் வந்த யசோதர காவியக் கதைகளும் கதைகள் என்ற ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.