Posts Tagged ‘முனைவர் கல்பனா சேக்கிழார்’

திருக்குறள் பரிதியார் உரை

முனைவர் சே.கல்பனா உதவிப்பேராசிரியர் தமிழியல்துறை அண்ணாமலைப் பல்கலைக்கழகம்  தமிழ் சூழலில் இடையறவு படாமல் வாசிக்கப்பட்டு, ஆய்வுகள் செய்யப்பட்ட/ செய்யப்படும் பிரதியாக விளங்குவது திருக்குறள். இடைக்காலமாகிய 9 ஆம் நூற்றாண்டிலிருந்து 13 ஆம் நூற்றாண்டு வரை தமிழ்ப் பனுவல்களுக்கு உரைகள் பல தோன்றின. இடைக்காலத்தை உரையெனும் கயிற்றால் பிணிக்கப்பட்ட காலம் என்பர் வ.சுப. மாணிக்கனார். திருக்குறளுக்கு எழுந்த முதலுரை/கிடைத்த உரை மணக்குடவர் உரை. இருப்பினும் பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டுகளில் பல பதிப்புகளைக் கண்டதும் மிகுதியாக வாசிக்கப்பட்டதும், உரைக்கே பல உரை தோன்றியதும் பரிமேலழகர் உரை. பரிமேலழகருக்கு முந்தைய ... Full story

இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்களில் சங்க இலக்கியத் தாக்கம் – ஒரு திறனாய்வு

-முனைவர் கல்பனா சேக்கிழார் உதவிப்பேராசிரியர், இவ்வாய்வேட்டின் திறனாய்வாளர் தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் திறனாய்வுக்கான ஆய்வேட்டின் தலைப்பு: இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்களில்   சங்க இலக்கியத் தாக்கம்  ஆய்வாளர்: கோ. வாசுகி, தமிழியல்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம். முனைவர் பட்டத்திற்காக அளிக்கப்பெற்ற  ஆய்வேடு இது. ***** சங்க இலக்கியங்கள் முன்வைக்கும் அகம் புறம் மரபுகளின் தாக்கம் இல்லாமல் பிற்கால இலக்கியங்கள் தோன்றவில்லை. தமிழ் இலக்கிய வரலாற்றில்  இலக்கிய வடிவங்களில் மாற்றம் நிகழ்ந்திருந்தாலும் உள்ளடக்கத்தில் பெரும் மாறுதல்கள் நிகழவில்லை என்றே கூறலாம். பாரதியுடன் தொடங்கும் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக் காலகட்ட  இலக்கியங்களிலும் அகம் புறம் மரபின் தாக்கம் தொடர்வதை அவதானிக்கலாம். அரசியல் பொருளாதாரம், அறிவியல் மற்றும் ... Full story

செம்பதிப்பு வரிசையில் ஐங்குறுநூறு

கல்பனா சேக்கிழார் உதவிப்பேராசிரியர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் காலத்தை வென்று நிற்பவை சங்கப் பனுவல்கள். அவை தமிழ் மொழியின் அடையாளமாய், பண்பாட்டுக் கருவூலமாய்த் திகழ்வதால் காலம் தோறும் வெவ்வேறு வாசிப்புக்கு உட்பட்டுள்ளன. சுவடியில் இருந்தவை, அச்சு ஊடக வருகைக்குப் பிறகு மூலமாகவும், உரையோடு இணைத்தும் பல்வேறு பதிப்புகள் வெளிவந்துள்ளன. இருப்பினும்  செம்பதிப்பு (மூலப்பாடத் திறனாய்வு) அடிப்படையில் பதிப்பிக்கும் நோக்கில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் திட்டத்தினை வகுத்து, தமிழ் அறிஞர் பெருமக்களிடம் அப்பணியை ஒப்படைத்தது. அந்த வரிசையில் ... Full story

தொல்காப்பியப் பொருளதிகாரம் – தொடக்க கால ஆய்வுகளும் போக்குகளும் (1902 – 1950)

-முனைவர் கல்பனா சேக்கிழார் தொடக்க கால ஆய்வுகளும் போக்குகளும் (1902 – 1950) பத்தொன்பதாம் நூற்றாண்டில் அறிமுக நிலையில் அறியப்பட்ட தொல்காப்பியம் பொருளதிகாரம், 20ஆம் நூற்றாண்டில் தமிழ்ச்  சமூகத்தின் வரலாற்றுப் பிரதியாக, பண்பாட்டுப் பிரதியாக, மொழிப் பிரதியாக, தமிழிரின் அடையாளத்தைக் கொண்டுள்ள தொல்பழம் பிரதியாக உருப்பெறுகிறது. அதன் காரணமாகத் தொல்காப்பியம் தேடித்தேடி மூலப் பதிப்புகளும், உரையோடு கூடிய பதிப்புகளும் பெருமளவு பதிப்பிக்கப்படுகிறன. அதன் தொடர்ச்சியாகப் பதிப்பித்த பிரதியின் மீதான விவாதங்களும் தொடங்குகின்றன. இதனை மூன்று வகையாக நாம் பிரித்து நோக்கலாம். இதழ்களில் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் தொல்காப்பியம் குறித்த ஆய்வு நூல்கள் தொல்காப்பியம் ... Full story

அற இலக்கியங்கள் கட்டமைக்கும் பெண்ணும் பெண்சார் மதிப்பீடுகளும்

-முனைவர் கல்பனா சேக்கிழார் பெண்ணை ஒடுக்குதல் என்பது நம் நாட்டில் மட்டும் நடந்த நிகழ்வு அன்று. உலகம் முழுதும் நடைபெற்ற நிகழ்வு. ஆதியில் பெண்வழி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருந்தது. குடும்பம் என்னும் அமைப்பு உருவாகாத காலத்தில் பெண்கள் தலைமையேற்று  அனைத்தையும்   நிர்வகிப்பவர்களாக இருந்தனர். காலப்போக்கில் உடைமைச் சமூகமும் அதன்வழி உருவான வாரிசுமையும் தோன்றியவுடன், பெண்களை அடிமைப்படுத்துதல் என்பது தொடங்கிவிட்டது. அத்துடன் மட்டுமல்லாமல் பெண்கள், வைசியர், சூத்திரர் பாவ யோனியில் பிறந்தவர்கள் (பக.கீதை:அத்.9, சுலோகம்.32) என அவர்களை இரண்டாம் தரமான சமூக மதிப்பீட்டையும் உருவாக்கியது. இதனை இது வலுக்கட்டாயமாக நிகழ்த்தப்பட்டதன்று, அதாவது வெற்றி ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.