Posts Tagged ‘மேகலா இராமமூர்த்தி’

Page 1 of 2812345...1020...Last »

படக்கவிதைப் போட்டி 148-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 148-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி சோடிப் புறாக்களைத் தேடிப்பிடித்துக் கலைநயத்தோடு படமெடுத்து வந்திருக்கின்றார் திரு. ஆய்மன் பின் முபாரக். இணையற்ற இவ்விணையர் குறித்துக் கவினோடு கவியெழுதுங்கள் என்று இக்காட்சியைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவரும் என் நன்றிக்குரியோர். ”இருநிலா  இணைந்து  பாடி இரையுண்ணும் செவ்வி தழ்கள் விரியாத தாமரை போல் ஓர்இணை  மெல்லி யர்கள் கருங்கொண்டை கட்டி ... Full story

ஒளிரும் ஒற்றை நட்சத்திரம்!

ஒளிரும் ஒற்றை நட்சத்திரம்!
-மேகலா இராமமூர்த்தி சில நட்சத்திரங்கள் புகழ்வானில் அதிக ஒளியோடு பிரகாசிக்கின்றன. ஆனால் அவற்றிற்கு ஈடான ஏன்…அவற்றினும் மேம்பட்ட திறனுடைய பிற நட்சத்திரங்கள் ஒளிமங்கிப் போய்விடுகின்றன. 16ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஆங்கில நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியரை இதற்குச் சான்றாகக் கூறலாம். அவர் திறமையானவர் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை; அவர் திறமையைக் குறைத்து மதிப்பிடுவதும் நம் நோக்கமில்லை. எனினும் அவர் ஒருவரே அக்காலகட்டத்தின் தலைசிறந்த நாடக ஆசிரியர் ... Full story

படக்கவிதைப் போட்டி 147-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 147-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி மலர்களை விற்பனைக்குக் கொட்டிவைத்துவிட்டுக் கடைக்காரர் வேறேதோ கற்பனையில் இருப்பதை அவர் முகக்குறிப்பு அறிவிக்கின்றது. திருமிகு ஷாமினியின் கைவண்ணத்தில் எடுக்கப்பட்ட இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி மலர்களைக் காணிக்கையாக்குகின்றேன். மனங்கவரும்வண்ணம் மணம் பரப்புபவை மலர்கள். எனினும் அவற்றை விற்பனை செய்யும் தொழிலாளரின் வாழ்வு மணத்தோடும், ... Full story

படக்கவிதைப் போட்டி (148)

படக்கவிதைப் போட்டி  (148)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ஆய்மன் பின் முபாரக் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, ... Full story

குறுந்தொகை நறுந்தேன் – 23

குறுந்தொகை நறுந்தேன் – 23
-மேகலா இராமமூர்த்தி “ஒருவர் பொறை இருவர் நட்பு” என்பது  தமிழியம். தமிழ்மகள் அதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்திருக்கின்றாள். தமிழ்ச் சமுதாயம் பெண்குலத்தைப் பொறுமைக்குலமாக அன்று பயிற்றுவித்திருக்கின்றது.  ஆதலின் கணவனின் பரத்தமைக்காக மனைவி ஊடினாலும், அவனைக் கண்டித்தாலும் அவனை முற்றாய் வெறுக்கவில்லை; மனைவாழ்க்கையில் மீண்டும் இடந்தர மறுக்கவில்லை என்பதைச் சங்கப்பாடல்கள் பறைசாற்றுகின்றன. பரத்தைவீடு சென்ற தலைவன் தன் மனை புகவேண்டும்; தலைவியொடு இணைந்து வாழவேண்டும் என்பதே அவளின் வழிகாட்டியாகவும், நலம்விரும்பியாகவும் ... Full story

படக்கவிதைப் போட்டி 146-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 146-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி கம்பீர நடைபயிலும் காளைகளைப் படமெடுத்து வந்திருக்கின்றார்  திரு. நித்தி ஆனந்த். படக்கவிதைப் போட்டிக்கு இதனைத் தேர்வு செய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். படமெடுத்தவர், அதனைத் தேர்ந்தெடுத்தவர் இருவருக்கும் என் நன்றி உரித்தாகுக! மாடே செல்வமென்று மக்கள் வாழ்ந்த காலம் இன்று மலையேறிவிட்டது. அதனால் மாடுகளோடு கூடிவாழ்வோரும் குறைந்துவிட்டனர். இத்தகு சூழலில் சாலையில் மாடுகளை ஓட்டிச் ... Full story

குறுந்தொகை நறுந்தேன் – 22

குறுந்தொகை நறுந்தேன் - 22
-மேகலா இராமமூர்த்தி தலைவனுக்கு வாயில்மறுத்த தலைவியின் உள்ளவுறுதி தோழிக்குப் பிடித்திருந்தாலும் அவனையன்றித் தலைவிக்குப் பற்றுக்கோடு யாது எனும் எண்ணமும் உள்ளத்தின் உள்ளே ஊடாடவே செய்தது. எனினும் தலைவன்பால் தலைவி கொண்டிருந்த ஊடலும் கோபமும் நியாயமானதாய்  இருந்தபடியால் தலைவியின் கருத்துக்கு எதிர்மொழி ஏதும் பகரவில்லை அவள். தலைவியின் மறுமொழியை அறிந்துகொண்டு வீட்டுவாயிலுக்கு வந்த தோழி தலைவனிடம், “ஐய! வேற்றுப்புலம் செல்லாது அண்மையிலிருந்தும் நீர் தலைவிக்குத் தலையளி செய்யாதது அவள் உள்ளத்தை உடைத்துவிட்டது. அவள் அன்பைத் தாழ்போட்டு அடைத்துவிட்டது. ஆகவே அவள் உம்மை ... Full story

மகாத்மாவுக்கு அஞ்சலி!

மகாத்மாவுக்கு அஞ்சலி!
-மேகலா இராமமூர்த்தி வெள்ளைப் பரங்கியன் ஆட்சிகூட உம்மைப் பத்திரமாய்ப் பாதுகாத்த தையா! கொள்ளை போனதே உந்தனுயிர் இங்கே இந்துச் சோதரன் கையாலே அந்தோ! பாழ்பட்டு நின்றதேசம் தன்னை வாழ்விக்க நீயிருந்தாய் அன்று ... Full story

படக்கவிதைப் போட்டி 145-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 145-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி ஓலமிடும் கடலலை யோரமாய்க் குடிகொண்டிருக்கும் காலங்காட்டும் கடிகாரத்தைக் கலைநயத்தோடு படம்பிடித்து வந்திருக்கின்றார் திரு. பிரேம்நாத் திருமலைசாமி. வித்தியாசமான இந்தப் படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தகுந்தது என்று தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி! காலமறிந்து செயற்படு என்பதைக் காட்டும் கடிகாரமும், ஓய்தல் இன்றி உழைத்திடு என்பதை உரக்கச் சொல்லும் கடலலையும் மானுடர்க்குத் தருவது ... Full story

படக்கவிதைப் போட்டி (146)

படக்கவிதைப் போட்டி  (146)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல ... Full story

குறுந்தொகை நறுந்தேன் – 21

குறுந்தொகை நறுந்தேன் - 21
-மேகலா இராமமூர்த்தி தலைவனிடம் எதுவும் பேசாமல் சிறிதுநேரம் மௌனமாய்ச் சிந்தனையில் ஆழ்ந்திருந்த தோழி பின்னர்ப் பேசலுற்றாள்… ஐய!  என் தோழியாகிய தலைவி, முன்பெல்லாம் வேம்பின் பச்சைக் காயைத் தந்தால்கூட அதை இனிய மணமுள்ள  வெல்லக்கட்டி என்று பாராட்டிக் கூறினீர். இப்பொழுதோ  பாரியென்னும் வள்ளலின் பறம்பு மலையிலுள்ள சுனையில் ஊறிய தெளிந்தநீரைத் தை மாதத்தில் குளிர்ச்சியாகத் தந்தாலும்கூட, அது வெப்பமாகவும், உவர்ப்புச் சுவை உடையதாகவும் இருக்கின்றது என்கிறீர். உம் அன்பின் தன்மை அத்தகையதாய் உள்ளது!” என்று கூறிப் பெருமூச்செறிந்தாள்.... Full story

படக்கவிதைப் போட்டி 144-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 144-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி இதழ்களில் குமிண் சிரிப்போடு மாலையை உயர்த்திப் பிடித்திருக்கும் இந்தக் காளை அதனைச் சூட்டப்போவது யாருக்கு? ஆண்டாளைப் போல் ஆண்டவனுக்கா? இல்லை தன் மனம் ஆண்டவளுக்கா? இந்தப் புகைப்படத்தை எடுத்த திரு. லோகேஷ்வரன் ராஜேந்திரன், இதனைப் படக்கவிதைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்த திருமதி. சாந்தி மாரியப்பன் இருவருக்கும் என் நன்றிகள் உரித்தாகின்றது! இனி, காளையின் கையிலிருக்கும் மாலை யாருக்கு? என்பது குறித்த ... Full story

படக்கவிதைப் போட்டி (145)

படக்கவிதைப் போட்டி (145)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? பிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக ... Full story

குறுந்தொகை நறுந்தேன் – 20

குறுந்தொகை நறுந்தேன் – 20
-மேகலா இராமமூர்த்தி தலைவன் பரத்தையின் மனையிலேயே தங்கிவிட்டதனால் தலைவிகொண்ட வருத்தத்தையும் வேதனையையும் கண்ட தோழி தலைவனின் கூடா ஒழுக்கத்தைத் தலைவியிடம் கடிந்துபேசத் தொடங்கினாள். ”அழகு மனைவியும் அருமைப் புதல்வனும் அகத்திருக்க, அவர்கள்பால் அன்போ அக்கறையோ சிறிதுமின்றி ஒரு குடும்பத் தலைவன் மனையறம் மறந்து புறத்தொழுக்கம் மேற்கொள்ளும் செயலின் திறத்தை எப்படிப் புகழ்வதென்றே தெரியவில்லை” என்றாள் வஞ்சப் புகழ்ச்சியாய்! அவள் முகம் சினத்தில் சிவந்திருந்தது. இதே தலைவனின் குணநலன்களைப் புகழ்ந்து, இவனுக்காகப் பரிந்துபேசி இவனைக் காதலிக்க வைத்த ... Full story

படக்கவிதைப் போட்டி 143-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 143-இன் முடிவுகள்
**வல்லமை வாசகர்கள் படைப்பாளிகள் அனைவர்க்கும் எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!** -மேகலா இராமமூர்த்தி கடற்கரையோரம் அக்கறையோடு மணல்வீடு கட்டும் மழலையரை அழகிய புகைப்படமாக்கியிருக்கின்றார் திரு. வெங்கட் சிவா. இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவரும் என் நன்றிக்குரியவர்கள். ”ஓடி விளையாடு பாப்பா - நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா” என்றான் மகாகவி. விளையாட்டு, குழந்தைகளின் உடலுக்கு ... Full story
Page 1 of 2812345...1020...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.