Posts Tagged ‘ம.இல.நடராசன்’

அன்பின் தற்கொலை

#ம.இல.நடராசன் தற்கொலை செய்து கொள்ள வைத்துவிட்டீர்கள் என் அன்பை... மீண்டும் மீண்டும் உங்களைச் சேர அது முற்பட்ட போதும் உங்களின் சொற்கள், துரோகம், சைகை, மௌனம் முதலியவற்றுள் ஏதோ ஒரு ஆயுதத்தால் அதை (தற்)கொலை செய்து விட்டீர்கள், திரும்ப அது பிறக்க முடியாதபடி. Full story

என் கவிதை

#ம.இல.நடராசன் "பரபரப்பற்ற சாந்தமான ஞாயிறின் அதிகாலையில் எழுந்து, திங்களோடு வெள்ளி இருக்கும் நீல வானின் மையை எடுத்து அந்நாளுக்கான என் கவிதையை எழுத கவிதையைத் தேடினேன். எங்கெங்கோ தேடியும் என் கவிதை அகப்படவில்லை. என் கவிதை குட்டைப் பாவாடை அணிந்திருந்ததால் ஆடையின் கவர்ச்சியால் இழுக்கப்பட்டு, மாறி மாறி பதினெட்டு பேரால் வன்புணர்ச்சி செய்யப்பட்டு, உயிரோடு எரிக்கப்பட்டதாக நாளிதழில் பின்பு படித்தேன். என்ன! என் கவிதைக்கு அப்போது ஐந்து வயது இருக்கும். மீண்டும் மறுபிறவியிலும் என் கவிதை பெண்ணாக பிறந்து, பேதை, பெதும்பை, மங்கை கடந்து, மடந்தையில் மடம் செல்லும்போது குருக்கள் மற்றும் சீடர்களால் Sexual harassment செய்யப்பட்டது. பின்னர் அதிலிருந்து மீண்டு ஆண்டுகள் கழித்து என் கவிதை பூப்பெய்ததும், காதலன் படுக்கைக்கு அழைக்க அதை என் கவிதை மறுக்க, அவன் ஆசிட் வீசிவிட்டான். நல்லவேளை அது நீர்த்துப் போன அமிலமாக இருக்கப் பெருத்த சேதமின்றி என் கவிதையின் முகம் தப்பித்தது பிடிக்காமல், கோபத்தில் என் கவிதையின் முகத்தை நீலப்படங்களாக்கி அவன் Morphing ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.