Posts Tagged ‘ரா. பார்த்தசாரதி’

Page 1 of 912345...Last »

அன்பின் பரிமாணம்

  ரா. பார்த்தசாரதி   மண்ணின் காதல்,  மழை துளியே விண்ணின் காதல், அழகிய மதியே மலையின் காதல்,  மேகம்  அன்றோ பூவின் காதல், வீசும்  தென்றலன்றோ !   காதல்,  இது இல்லாத இடம்  ஏது ? காகிதமும் காதலிக்கும்,தன் மேல் மேவும் எழுதுகோலை காதல் ஒன்றையொன்று சார்ந்து நிற்குமே ஊருக்குள்  அவை அடையாளம் காட்டுமே !   காதல் என்பது  அன்பின் பரிமாணமன்றோ! இரு இதயங்களின்   சங்கமம் அன்றோ காதல் என்பது இரு விழிகளின்  நேசமே அதுவே  அவர்களின் காதல் தேசமே !   உன்னை என் உள்ளத்தில் அள்ளித் தெளித்தேன் இரவில் கனவில் விளையாடி, உறவில் கலந்தேன் உன்னிடத்தில் என் நினைவு,என்னிடத்தில் உன் நினைவு நம்  அன்பின்  அளவிற்கு  எல்லையில்லா  முடிவு !   இதுதான் காதலோ? ... Full story

மழையே தாகம் தீர்த்துவிடு

 ரா.பார்த்தசாரதி   மழையே உன்னை நினைத்து ஏங்காதவர்கள் எவருமில்லை பயிர்கள்  உன் வரவுகண்டு மகிழ்ச்சி  கொள்ளாமல் இல்லை விட்ட குறை, தொட்ட குறையாய் வந்து செல்கின்றாய், ஏனோ சில மணித்துளி பெய்து வாசல்கோலங்களை அழிக்கின்றாய் !   உன்னை நினைக்காத நாளில்லை தண்ணீர் பஞ்சம் வந்தபோது நிலத்தடி நீரையும் பல ஆழ்கிணற்றால்  சுரண்டப்பட்டபோது நீரின்றி உலகம் அமையாது என்று மக்கள் நினைத்தபோது மனிதன் இயற்கையை எதிர்த்து நீரைப் பெற நினைக்கும்போது!   அருவிகளும், மலைகளும் இருகைகொண்டு உன்னை வரவேற்கும் மலைகளும், உன்னை அருவியாய் பிரித்து மக்களை நனைக்கும் அருவிகளும் நடனமாடி அழகுடன் மக்கள் மனதில் கலக்கும் கடலே உன்னை அணைத்து மீண்டும் மேகமாய் உருவெடுக்கும்   உன்னை வரவேற்க நான்மட்டும்மல்லா, என் தாய்நாடும்தான் நானில்லாத ... Full story

உலக யோகா தினம் – ஜூன் 21ம் தேதி

  ஆய கலைகள் அறுபத்து நான்கு கலையே யோகாவும் இதனில் அடங்கும் கலையே யோகிகளும், துறவிகளும் தொன்றுதொட்டு வளர்த்த கலையே நமது நாட்டினில் தோன்றிய பழம் பெரும் கலையே !     உடலும்,மனதும் ஒன்று கூடி, உணர்ச்சிகளை அடக்கும் மூச்சு பயிற்சியினால் பலவித நோய்கள் அடங்கும் யோகப் பயிற்சியும் , நடை பயிற்சியும் அனுதினம் செய்யுங்கள், அது இளமை என்னும் ரகசியம் தோன்றும் இடமாகும் !     யோகாசனங்களில் பல வகைகள் உண்டு சில யோகாசனங்களுக்கு மிகுந்த சிறப்புண்டு... Full story

ஆசையே அலைபோலே

    ஆசையின் போக்கில் செல்லும் மனிதனே ஆபத்தை விலைக்கும் வாங்கும் மானிடனே அடைவது எல்லாம் துன்பமே அறிந்திடுவாயா ஆசையை அடக்க மார்க்கத்தினை அறிந்தாயா !     துடுப்பிலா படகில் சென்றால் இலக்கை அடையமுடியுமா பொறுப்பில்லாமல் வாழ்வதாலே பலன் பெறமுடியுமா மனிதனின் மனதினில் அலைபோல ஆசைகள் எழுமே ஆசையை கடிவாளமிட்டு அடக்கி ஆள வேண்டுமே!     எதை எடுத்தாலும் சந்தேகிப்பவன் வாழ்க்கை துயரமாகும் தன்னை நம்பாதவன், கற்பனை செய்து தவிப்பவனாகும் மதிப்பினை தருவது நிறை வேற்றப்படும் நற்செயலாகும்... Full story

உன்னதமான வாழ்க்கை

  சும்மாவே இருந்திருந்து, சோம்பித் திரிந்திடுவார் வாழ்க்கை வெறுத்துவிட்டது என புலம்புவார் தன் கையில் எல்லாம் வரவேண்டுமென எதிர்ப்பார்ப்பார் இருப்பிடம் விட்டு நகர்வதற்கும் காலதாமதம் செய்வார் !     உடம்பை சுமையாய், மனசை பாலைவனமாய் வாழ்க்கை வறண்டதாய் என்றும் நினைத்துடுவார் இதுவா வாழ்க்கை என உள்ளுக்குளே புலம்பிடுவார் வீணாய் போன, நாட்கள் ஆயுள் பகுதியால் மறைத்துடுவார் !     வெந்த சோற்றை தின்று விதிவசத்தால் இறப்பாயா வாழ்வின் ஓவ்வொரு கணமும் சுவைக்க பழக மாட்டாயா ஓவ்வொரு விடியலும்,தனக்காகவே ... Full story

நினைக்கத் தெரிந்த மனம்

 ரா.பார்த்தசாரதி செய்தித் தாளை பிரித்தால் தினம் ஒரு சாலை விபத்து, நினைத்தாலே  பதை  பதைக்கிறது நம் மனம்  இரக்கமில்லாமல் கலப்படம் செய்யும் அரக்கர்களை கண்டு எதிர்க்க முடியாமல் கொதிக்கின்றது நம்  மனம்!   ஜாதி,மத சண்டைகளை செய்யும் மத வெறியர்களை கண்டால்  சமாதானப்படுத்துவதா, பரிதாபப்படுவதா என நினைக்கும் நம் மனம்  நாடுகள் வேறாக இருந்தாலும்,அப்பாவிகளை கொல்லும்  தீவிரவாதிகளை கண்டால் வெறிக்கிறது நம் மனம் !   சஞ்சலமின்றி சிறை செல்லும் அரசியல்வாதிகளை கண்டால்  காறித் துப்ப நமது மனம் எண்ணுகின்றது ! கோடி,கோடியாக பணம் செலவழித்து திரைப்படம் எடுப்பதை கண்டால்! காதலுக்காக உயிர் விடுவது கண்டு நம் மனம் சிரிக்கின்றது!   மக்களின் அறியாமையை மூலதனமாக்கி பணம் சேர்க்கும்  ஆன்மிகவாதிகளை கண்டால் நம் ... Full story

இறைவனின் விளையாட்டு

          ரா.பார்த்தசாரதி   இறைவனே ஏன் என்னை படைத்தாய் என நினைக்கும்போது என் கண்ணெதிரே  கைகால் இழந்தவன்  காட்சியளிக்கின்றான் ஊன்று கோல் துணையுடன் அருகில் வந்து கைநீட்டுகின்றான் உனக்கும் கீழே பல கோடி  என இறைவன் அறிவுறுத்துகின்றான் !   தள்ளாத வயதில் கீரை விற்கும் கிழவியின் தன்னம்பிக்கை சாலையோரத்தில்  காலணி தைக்கும் தொழிலாளியின் நம்பிக்கை சாலையில் குப்பை கூட்டுபவர்களின் அன்றாட வாழ்க்கை மூட்டை சுமந்து கஷ்டப்பட்டு கூலிக்காக வாழும் வாழ்க்கை !   வெய்யில் மழை பாராமல் கூவி கூவி விற்கும் பூக்காரி நடை பாதையில் பழரசம் தேநீர் விற்கும் வியாபாரி , பாதையோரத்தில், சிறு பொருட்களை விற்கும் வியாபாரி, நொண்டியானாலும், பேனா விற்கும் ஒரு  சிறு வியாபாரி ... Full story

பெண்ணடிமை

    தலையாட்டி பொம்மைகளா நினைக்கும் நிலைமையா ? தாய்க்குலத்தின் வாய் பேசா வனிதையா ? சாவி கொடுத்தால் சலங்கை ஒலி தாலமிடத் தாவி ஓடும் பாவைகளா!   தன் ஆசைகளை, புதைத்து வைத்து வெளியிடமுடியாத ஊமை பணம் இருந்தும், அதனை செலவு செய்ய முடியாத நிலைமை திரைப்படங்களில் வரும் தேனிலவு , வானிலவுத் தேவதைகளா !   தொப்புள் கொடி அறுந்ததும் அப்பனுக்கு அடிமை, தாலிக்கொடி யேறியதும் கணவனுக்கு அடிமை, வேலைக்கு போன ஊழியத்தில் மேலதிரிகாரிக்கு அடிமை,... Full story

சுமைகளும், சுகங்களும்

    மனிதா, வாழ்க்கையை சுமையானதாய் எண்ணிவிடாதே சுகங்களும் தேடி வரும் என்பதை நீ மறந்துவிடாதே குடும்பத்தலைவனுக்கோ என்றும் வாழ்வில் சுமைதான் சுமைகளையும், சுகங்களாக கருதுபவனே சிறந்தவன் ! நெஞ்சினில் உரம் கொண்டு சுமைகளை தாங்கிடுவாய் சுகமான சுமைகளும் உண்டு என்பதை அறிந்திடுவாய் மயிலிறகு அதிகமாய் ஏற்றினாலும், அச்சு முறியும் , மனதில் சுமைகள் அதிகமானாலும் மனம் இறுகும் ! வீட்டிற்கு முதல்வனே என்றும் ஓர் சுமைதாங்கி எல்லா இன்ப, துன்பங்களுக்கும் அவன் ஒரு இடிதாங்கி, எல்லாவற்றையும், ... Full story

அம்மாவும் மகனும்

    ரா.பார்த்தசாரதி     வாசலில் காகம் கரைந்தால் உன் வரவை என் கண்கள் வாசலை எட்டிப் பார்கின்றதே, நான் கண்ணாடியை பார்க்கும்போது உன் முகம்தான் எனக்கு தெரிகின்றது, ஏன் எனில் நீ என் சாயல்தான் என் பழைய சேலையில் உன் வாசம்தான் வாழ்கிறது அருமை மகனே அதனுடனே  என் பொழுதும் போகிறது ! உன்னை விழிமேல் வழி வைத்து உன் வரவுக்காக  ஏங்குகிறேன் காலம் தாமதித்து வந்தாலும் மனதால்  பேதலிக்கின்றேன்!     அழைப்பு மணி அடித்ததும் என் கால் வாசல் நோக்கி விரையுமே உன்முகம்  கண்டதும்  தாயின் கண்கள் மலர்ந்து வரவேற்குமே ! பணம் பக்கத்தில் நிற்கும், பாசம் உயிரோடு கொல்லும் உனக்காக சேர்த்து சாப்பிட்டாலும், என் மனப்பசி ... Full story

உலக புத்தக தின விழா

    காகிதத்திற்கு இரு பெருமை உண்டு ஒன்று பணமாகவும், பு த்தகமாவும் மாறுவதுண்டு , புத்தகத்தை கொண்டு ஆசிரியர் பாடம் நடத்துவதுண்டு அதன் வாயிலாக மாணவர்கள் அறிவை பெருக்குவதுண்டு!     புத்தகம் படிப்பினால் அறிவு பெற்றோர் ஆயிரமுண்டு படிக்காத மேதைகளும் இவ்வுலகில் உண்டு அறிவை விரிவாக்கும் கருவியே புத்தகம் மனிதனை தனிமை படுத்தாத நண்பனே புத்தகம்!     சமுதாயத்தில் மக்கள் வாழ்க்கையை உயர்த்துவதும் புத்தகமே அதிக புத்தகம் படிப்போரை அறிவாளியாக உலகம் கருதுமே நமது கலாசாரத்தின் தொன்மையை பறைசாற்றியது ... Full story

அம்மா

  ரா.பார்த்தசாரதி     அ  என்பது  உயிரெழுத்து  ம்   என்பது  மெய்எழுத்து  மா  என்பது  உயிர்மெய் எழுத்து    உனக்கு உயிரும், உடலும் தந்தவள் அம்மா  உனக்கு முகவரி அளித்தவளும்  அம்மா உலகை எனக்கு நீ  காட்டினாய்  உனக்கு என்ன நான் தருவேனோ !   உனக்கு ஆயிரம் கவலைகள் இருப்பதாக தெரியும் இதுவெல்லாம்  என் புன் சிரிப்பாலே  மறையும்  தொப்புள் கொடி  உறவானதே  தொட்டிலில்  ஆரம்பமானதே    அம்மா என் ஆசை  அம்மா  நான் கேட்காமலே முத்தம் கொடுப்பாய் அம்மா  தோளை  தூளியாக்கி உன் இனிய குரலால் தாலாட்டுவாய்  உன் மடியினை தொட்டிலாக்கி என்னை தூங்க வைப்பாய் !   அம்மா  என்றும்  அன்பின்  உருவமானாய்  எனக்கு நிழல் தரும்  குடையானாய்  எனது கண்கண்ட  தெய்வமானாய்  தியாகத்தின்  ... Full story

தமிழ் புத்தாண்டே வருக

தமிழ் புத்தாண்டே வருக
  தமிழ் ஆண்டுகளின் எண்ணிக்கை அறுபதே ஹேமவிளம்பி ஆண்டும் இன்று பிறந்ததே விரும்பியதை பெற தமிழ்ப்புத்தாண்டு மலரட்டும் தீயவை அழிந்து நல்லவை பெருகட்டும் ! நாட்டிலும், மாநிலத்திலும், புதிய திட்டம் உண்டாகட்டும் அரசியல் தலைவர்கள் நன்மனங்கொண்டு நடக்கட்டும் மக்களின் குறைகளை தீர்க்க பாடுபடட்டும் தமிழ்ப் புத்தாண்டால் தமிழகம் நன்மை அடையட்டும் ! ஆறுகள் இணைந்து தண்ணீர் பிரச்சனை தீரட்டும் மாநிலங்கள் கைகோர்த்து ... Full story

இளமையின் கேள்வி

ரா.பார்த்தசாரதி   என் இளமையின் கேள்விக்கு  என்ன பதில் அழகிய காதல் தேவதையே நீயோ என் எதிரில், என் தேவைகள் குறைவாய்  இருந்திடுமே நின் அழகே  என் மனத்தைக் கவர்ந்திடுமே !   நீ ஆயிரத்தில் ஒருத்தி  என்பதை நானறிவேன் என் ஒவ்வொரு அணுவின் உணர்வும் சொல்லிடுதே உன் எழிலை என் மனம்  சொல்லிடாதா காலம் கடந்தாலும், நம்மை வாழ வைத்திடாதா !   காதலிக்கும் போது  அவசரம் ஆகுமா பூத்து குலுங்கும் விழிகள் காத்திருக்குமா, காதல்  என்பது இரு விழிகளின்  நேசமா அதுவே அவர்கள் கண்ட காதல் தேசமா !   காதலுக்கு பொருள் விளங்காமல் தவித்தேனே பூமழை மேனியில்  பொழிவதைக் கண்டேனே காதலின் பார்வை  புதிரா !  புதினமா ! என் நெஞ்சை சுற்றிவரும் ... Full story

பண்பாட்டு மயக்கம்

ரா பார்த்தசாரதி       மேலை நாட்டு   பிசாவும், பெர்கரும்   நாகரிக உணவானதே       நம் சாப்பாட்டு  மேசைக்கு இறங்கியது,  விரும்பியசிற்றுண்டியானதே       உடல்நலம்  கெடுவதை நாம் அறியாமல் இருக்கின்றோமே      இயற்கை உணவு சிறந்தது என அறிந்தும், தவிர்க்கின்றோமே !         ஆணும்,பெண்ணும்,   அறிமுகத்தில்  கைகுலுக்கினர்      பயமின்றி இரவு நேரங்களில் கூடிப் பேசுகின்றனர்      நகரின் மது கடையில் சேர்ந்து கும்மாளமிடுகின்றனர்     இரவு நேர பணிகளில் ஆபாச பேச்சுக்கள் மிளிர்கின்றன !       ஒருவர்க்கொருவர்  மரியாதையின்றி  டா  போடுதல்      ... Full story
Page 1 of 912345...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.