Posts Tagged ‘வல்லமையாளர்’

Page 1 of 612345...Last »

இந்த வார வல்லமையாளர் (274)

இந்த வார வல்லமையாளர் (274)
இந்த வார வல்லமையாளராகக் கலைஞர் மு. கருணாநிதி (1924-2018) அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. எளிய இசை வேளாளர் குடும்பத்தில், திருக்குவளை என்னும் சிற்றூரில் பிறந்த கலைஞர் மு.க. தமிழக அரசியலை 60 ஆண்டுகளாக வழிநடத்திய மாபெரும் சக்திகளில் ஒருவராக இருந்தார். எப்பொழுதும் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவராகவும், வன்முறைப் பாதையைத் தூண்டும் அரசியலைக் கையில் எடுக்காதவர் ஆகவும் அண்ணா வழியில் திராவிட இயக்கத்தை அமைத்தார். சமூக நீதியை அனைவர்க்கும் பரப்பிய கருணாநிதி, மத்திய அரசுக்கு நிகரான சம்பளம் என்று மாநில அரசில் பணிபுரிவோருக்கும் செய்தார். பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் வருமானத்தை வெகுவாகக் கூட்டினார், ரிக்‌ஷா ... Full story

இந்த வார வல்லமையாளர் (273)

இந்த வார வல்லமையாளர் (273)
முனைவர். நா.கணேசன் இந்த வார வல்லமையாளராக ஸ்டான்போர்ட் பல்கலை பேரா.  அக்‌ஷய் வெங்கடேஷ்  அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. "மறைவாக நமக்குள்ளே பழம்கதைகள் சொல்வதில் ஓர் மகிமை இல்லை; திறமான புலமை எனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்" என்றார் பைந்தமிழ்ச் சாரதி பாரதியார். உலகம் புகழும் கணிதவியல் நிபுணர் ஒருவரை இந்த வார வல்லமையாளர் எனத் தெரிவுசெய்கிறோம். ... Full story

இந்த வார வல்லமையாளர்! (231)

இந்த வார வல்லமையாளர்! (231)
செல்வன் இவ்வார வல்லமையாளராக Inter University Centre for Astronomy & Astrophysics (IUCAA),&  Indian Institute of Science Education and Research (IISER) (புனே) ஆகிய அறிவியல் ஆய்வு மையங்களை சேர்ந்த இந்திய வானவியல் விஞ்ஞானிகள் டீமை தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவர்கள் பெயர்: ஜாய்தீப் பாக்சி சிஷிர் சங்காயன் பிரகாஷ் சர்க்கார் சோமக் ராய்சவுத்ரி ஜோ ஜேக்கப் ப்ரதிக் ... Full story

வல்லமையாளர் விருது!

வல்லமையாளர்களுக்குப் பாராட்டுகள்!!! தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!! ராமலக்ஷ்மி மறவன்புலவு சச்சிதானந்தம் அவ்வை மகள் ஷைலஜா வெ. சா நித்தி ஆனந்த் ... Full story

இந்த வார வல்லமையாளர்!

இந்த வார வல்லமையாளர்!
திவாகர் இந்த வாரம் வல்லமையில் வந்த கட்டுரைகளில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது எழுத்தாளர் தி.சுபாஷிணியின் ‘வாசிப்புகளின் வாசல்’ கட்டுரை என்று சொல்லவேண்டும்தான். வித்தியாசத்துக்குக் காரணம் எழுத்தாளர் கோவை ஞானியின் ஒரு புத்தகத்தைக் குறிப்பிடும்போது - ”(கோவை ஞானி) தமிழ் நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம்’ என்னும் அவரது புத்தகத்தை அளித்தார். வாங்கி வந்து விட்டேனேயொழிய படிக்கக் காலதாமதமாகிவிட்டது. முதற்காரணம் என் அருமைப் பேரன். இரண்டாவது அவர் மார்க்ஸிஸ்ட். அந்த ... Full story

இந்த வார வல்லமையாளர்!

திவாகர் உலகத்திலேயே மிகப் பெரிய வரத்தைப் பெற்றவர் யாரென்றால் உறக்கம் தேவைப்படும்போது அதை எளிதாக வரவழைத்துக்கொண்டு ஆனந்தமாக அனுபவித்து உறங்குபவர்தாம். உறக்கம் பெரியதொரு சுகம்தான். உறக்கத்தில் மட்டுமே நாம், நம்மை மறக்கமுடியும். உறக்கம் இறைவன் உயிரினத்துக்குத் தந்த பரிசு.அதை சத்விநியோகம் செய்து கொள்வது கூட பெருங்கலைதான். ஏனெனில் மனிதகுலம் பெரும்பாலும் இந்தக் கலையைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல்தான் தவிக்கிறது. அதற்கேற்றாற்போலத்தான் இந்த நவீன காலமும் காலத்தின் மாற்றத்தில் தோன்றிய வசதிகளும் மனித குலத்தை உறக்கத்தின் பக்கம் போகாமல் அலைக்கழிக்கிறது. இயற்கை ... Full story

இந்த வார வல்லமையாளர்!

இந்த வார வல்லமையாளர்!
திவாகர் ’மனைவி அமைவதெல்லாம் ’ என்று முன்பொருநாள் என்னுடைய வலைப்பகுதியிலே மனைவியைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன் (http://vamsadhara.blogspot.in/2008/06/blog-post_05.html) இந்த விஷயத்தில் . என் எண்ணம் இன்றைக்கும் மாறவில்லை. என்றைக்கும் மாறவும் மாறாது. மனைவி என்பவள் என்றைக்குமே ஒரு ஆச்சரியக் குறி. சுயநலமில்லாதவள். தனக்கென வாழாது குடும்பத்துக்கென வாழும் அவளால்தான் இந்தியாவுக்கு, இந்திய சமூகத்துக்கு இன்றளவும் உலகத்தில் நல்லபெயர். இந்த விஷ்யம் விவாதத்துக்குரியதே இல்லை என்பது கூட என் கணிப்பு. அவ்வப்போது இந்த கல்யாணமே செய்துகொள்ளாமல் பிரமச்சரியமாக இருப்போர் செயலையும் சொல்லையும் பார்க்கும்போதெல்லாம் ... Full story

இந்த வார வல்லமையாளர்!

இந்த வார வல்லமையாளர்!
திவாகர் சென்ற வாரம் உலகெங்கும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு மகிழப்பட்டது. சந்தோஷம்தான். காதலை வாழ்த்திப் போற்றுவோம். இதன் மத்தியில் திருக்குறளைப் பற்றிய விவரணை புத்தகம் ஒன்று எனக்குப் பரிசாக அளிக்கப்பட்டது. இதனை எழுதியவர் திரு சி. ராஜேந்திரன் அவர்கள். இந்திய கலால், சுங்கத்துறை ஆணையர். திரு ராஜேந்திரனுக்கு உயிர்மூச்சு என்பது திருக்குறள்தான். வாழ்நாளில் அதன் உள்ளார்ந்த தத்துவத்தை அப்படியே மனிதர்கள் கடைபிடித்தால் சண்டை சச்சரவு, நிம்மதியின்மை, கொடுமை, எல்லாமே ... Full story

இந்த வார வல்லமையாளர்!

இந்த வார வல்லமையாளர்!
திவாகர் வரும்காலம் பூராவுமே காகிதமில்லா உலகமாக மாற இருக்கிறது என்பதில் எல்லோருக்குமே ஒரு கவலையும், சந்தோஷமும் இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். கவலை என்னவென்றால் பேப்பர் (செய்திகளாகட்டும், புத்தகங்களாகட்டும்) சம்பந்தப்பட்ட தொழிலின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறதோ என்றுதான். அதே சமயத்தில் பேப்பரில்லா காலத்தில் எத்தனை சேமிப்புகள், எத்தனை எளிமைகள், என்பதையும் எண்ணிப்பார்த்து சந்தோஷப்பட வேண்டும்தான். எத்தனைதான் மின்வழிச் சாதனங்கள் மூலம் படித்துப் பார்த்தாலும் புத்தகம் மூலம் பொறுமையாக பார்த்துப் படித்து ரசிப்பது போல வருமா எனக் கேட்ப்போருமுண்டு. பழங்காலத்தில் செவி வழிக் கல்விதான். பின்புதான் ஏட்டுக் கல்வி ... Full story

இந்த வார வல்லமையாளர்!

இந்த வார வல்லமையாளர்!
திவாகர் எண்ணங்களும் வார்த்தைகளும்தான் நம் மனத் திண்மையை அதிகரிப்பதோடு விளைவுகளுக்கு வித்தாகவும் இருக்கின்றன. எண்ணங்களைப் பற்றி கீதையில் கூட செய்தி உண்டு. கடைசிகால கட்டத்தில் என்ன எண்ணங்கள் நம் மனதில் தோன்றுகிறதோ அதுவாகவே மறுபிறவியில் மாறிவிட சாத்தியங்களைப் பற்றியும் கீதை பேசுகிறது. வார்த்தைகள் கூட அப்படித்தான். ரிஷிகளின் சாபங்கள் பற்றி ஏகப்பட்ட கதைகளைப் படித்திருக்கிறோம். வார்த்தைகள் சாபங்களாக மாறும்போது அதன் பலன் என்ன என்பதையும் அகலிகை முதலானதாக நிறையவே படித்திருக்கிறோம். பொதுவாகவே வார்த்தைகளை ... Full story

இந்த வார வல்லமையாளர்!

இந்த வார வல்லமையாளர்!
திவாகர் தமிழ்மொழி தேனினும் இனிய மொழி. பல்வகை சிறப்புகளைத் தன்னுள்ளே அடக்கிக்கொண்டும், காலத்துக்கேற்ற மாறுதல்களையும் தனக்கெனத் தனியாக உள்வாங்கிக் கொண்டும் எக்காலத்துக்கும் சிறந்த மொழியாகத் திகழ்கிறது என்பதில் கருத்து வேற்றுமையே கிடையாதுதான். அதே சமயத்தில் தமிழ் மொழியின் சிறப்பு அதன் பழைய இலக்கியங்களிலேயே அடங்கிக் கிடப்பதும், புத்தம் புதிய இலக்கியங்கள் என வரும்போது அதன் தன்மை இன்னமும் அதிகமாக வெளிப்படவில்லையென்றுதான் தற்சமயம் நமக்குப் படுகின்றது. எதிர்காலத்தில் இன்றைய தமிழ் உலகம் தமிழுக்குக் கொடுத்த சிறப்புகள் என்னென்ன என்பதை வாழ்வாங்கு வாழ்விக்குமா என்பதும் நமக்கு இப்போதைக்குத் ... Full story

இந்த வார வல்லமையாளர்

இந்த வார வல்லமையாளர்
திவாகர் தை மாதம் வந்தாயிற்று.. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். ஏனெனில் தைமாதம் புதுநெல் அறுவடையில் கிடைக்கும் உழவர் பெருமக்கள் யாவரும் புதுநெல்லைத் தந்து ஆண்டு முழுவதற்குமான தங்கள் வயிற்றுச் சோறைப் பெறும் மாதம். உழவர்கள் மனதில் மகிழ்ச்சி பொங்க, அந்தப் பொங்கும் மகிழ்ச்சியை மங்கலமாகக் கொண்டாட வழி வகுத்த மாதம். தாம் மட்டுமல்லாமல் தம்மால் ஆதரிக்கப்பட்டுவரும் கால்நடைகளையும் சிங்காரித்து அழகுபார்த்து ஆராதனை செய்து சந்தோஷத்தை அனைத்து ஜீவராசிகளுக்கும் பகிரும் மாதம். உழவர்களின் பொன்னான மாதம். இப்படித்தான் ஒரு காலத்தில் இருந்தது. ... Full story

இந்த வார வல்லமையாளர்!

இந்த வார வல்லமையாளர்!
திவாகர் மௌனமே மிகச் சிறந்த தவச்செயல் என்பதற்கு நிறையக் காரணம் சொல்லலாம் போல. பிரச்சனைக்குத் தீர்வு காணும்போது கூட மௌனத்தை விட சிறந்த பதில் ஏதுமில்லை. அது போல மௌனத்தை விட கடினமான செயலும் ஏதுமில்லை. சும்மா இரு, சொல்லற’ என்று சும்மாவா சொல்லிச் சென்றார்கள் பெரியவர்கள்? மௌனமாக இருப்பது என்பது மனிதனால் அவ்வளவு எளிதான செயலாக எப்போதும் இருந்ததில்லை. மனிதனுக்கு ஆதியில் எப்போது பேசும் சக்தி கிடைத்ததோ அப்போதிலிருந்து தன் பிராண சக்தியில் பாதி பலம் இழந்துவிட்டானோ என்றும் படுகிறது. எல்லோருக்கும் பேசத் தெரியுமென்பதால் ... Full story

இந்த வார வல்லமையாளர்

இந்த வார வல்லமையாளர்
திவாகர் இன்னொரு புதிய ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற வகையில் இந்த புதிய ஆண்டையும் புதுமையாகவே எதிர்கொள்வோம். புது விஷயங்களையும் தெரிந்து கொள்வோம். அப்படி ஒரு புது விஷயத்தை பழைய கால நிகழ்விலிருந்து இன்றுதான் படிக்க நேர்ந்தது. உங்களுடன் அந்த புதிய விஷயத்தை புதுமையாக இந்தப் புது வருட ஆரம்பத்தில் பகிர்ந்துகொள்வது கூட எனக்கு என்னவோ புதுமையாகத்தான் படுகின்றது. இறைவன் மீது காவியம் பாடுவோர் பலர், மனிதனை மையமாக வைத்து காவியம் பாடுவோர் பலர். சின்னஞ்சிறு குயிலையும் கூட பாடுபொருளாக்கி காவியம் ... Full story

இந்த வார வல்லமையாளர்

இந்த வார வல்லமையாளர்
சென்னை ராமகிருஷ்ணா பள்ளியில் என்னுடன் படித்த மாணவ நண்பனை சமீபத்தில் நான் பார்க்க நேர்ந்தது. நரை திரையாக பெரிய மீசை வைத்து பயங்கரமாக என் கண்களுக்குக் காட்சியளித்தான். இத்தனைக்கும் நான் அவனை ஐந்து வருடங்களுக்கு முன்பு கூட சந்தித்திருந்தேன். என்னடா உனக்கு இப்படி வயசாகிவிட்டதே என்று அவனை கிண்டலடித்ததற்கு, ஆமாம்.. இவர் என்றும் மார்க்கண்டேயராக்கும்’ என்று பதிலடி கொடுத்தான்.. கூடவே என்னை அருகேயே இருந்த அவன் வீட்டுக்கும் அழைத்துப்போய் தூசி தட்டப்பட்டு அலமாரியில் வைத்திருந்த என் ... Full story
Page 1 of 612345...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.