Posts Tagged ‘விசாலம்’

கல்யாணமோ கார்த்திகையோ!

விசாலம் "நீலா! நீலா! என்ன செய்யறே! எப்போ பாத்தாலும்  செல் தானா கையில.  இங்க வா!  இந்த அகல் விளக்கெல்லாம்  அலம்பி  துடைச்சு வை. கொஞ்சமாவது எனக்கு உதவப்படாதா என்ன?'" "இதோ வரேம்மா... எதுக்கு இப்ப  இத்தனை அகல் விளக்கு வாங்கியிருக்கே!" "நீயே யோசிச்சு பதில் சொல்லு. தீபாவளிக்கப்பறம்  விசேஷமா என்ன பண்டிகை வரும்? " "தெரியலேயே அம்மா" "இதெல்லாம் எங்க இந்தக்கால பெண்ணுக்கு தெரியறது? வேலண்டின் டேன்னா மட்டும் ஒரு மாசம் முன்னாடியே ஆட ஆரம்பிசுடறதுகள்." "அதுல என்ன தப்பு ... Full story

பித்துக்குளி முருகதாஸ்!

பித்துக்குளி முருகதாஸ்!
http://www.vallamai.com/?p=32897 மனிதர் இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். அப்படி இன்று மறைந்த நம் பித்துக்குளி முருகதாஸ் ஐயா அவர்களுடன், இந்த அருமையான இடுகையை நமக்கு 2013ம் ஆண்டில் வழங்கிய அமரர் விசாலம் அம்மையார் அவர்களையும் நினைவுகூர்வதில் எம் உள்ளம் பெருமிதம் கொள்கிறது. விசாலம் அம்மையார் மனிதாபிமானம் மிக்க நல்ல உள்ளம் படைத்த ஆத்மா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்.. அவசியம் வாசிக்க வேண்டிய இடுகை! Full story

இறைவனடி சேர்ந்தார் விசாலம் அம்மையார்

இறைவனடி சேர்ந்தார் விசாலம் அம்மையார்
நம் வல்லமையின் நீண்ட கால படைப்பாளரும், வாசகருமான அன்புத் தோழி திருமதி விசாலம் இராமன் அவர்கள் நேற்று (ஜனவரி 26, 2015) இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது பிரிவால் வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு நம் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். அம்மையாரின் ஆன்மா சாந்தியடைய மனமாரப் பிரார்த்திக்கிறோம். என்னைப் பற்றி: விசாலம் http://www.sify.com/sifyimagine/fullstory.php?id=14607928 நான் பிறந்ததிலிருந்து பம்பாய் வாசி. திருமணம் ஆன பின் தில்லிவாசி. ... Full story

“நம் நாட்டைக் காப்போம்”

--விசாலம் பதினாறாம் நூற்றாண்டு........ பாரத தேசம் முழுவதிலும் முஸ்லிம்களும், பட்டானியர்களும் பல இடங்களை ஆக்கிரமித்த காலம் அது. அந்நேரம் ராஜஸ்தானில் பல மன்னர்கள் மிகவும் சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தனர். அவர்களிடம் தேச பக்தி மிகுந்து காணப்பட்டது. தில்லியில் ஆள வந்த பல முஸ்லிம் மன்னர்களுக்கு ராஜஸ்தான் மேல் கண் இருந்தது. தவிர ராஜ்புத் பெண்கள் மிகவும் அழகாக இருந்தமையால் அவர்களைத் தங்கள் அடிமைகளாக்கிக்கொள்ள பல மன்னர்கள் துடித்தனர். அடிக்கடி அந்த ராஜ்ஜியத்தின் மேல் மோத இதனால் போர் அடிக்கடி ஏற்பட்டது. அப்போது ஆண்ட பாபரின் ... Full story

ஓம் பானுவே நம:

ஓம் பானுவே நம:
--விசாலம் மார்கழி மாதப்பனி விலகிவிடும் காலம் வந்துவிட்டது. அதாவது தட்சியாயணக்காலம் முடிந்து உத்தராயணக்காலம் ஆரம்பமாகும் காலம். இன்னும் விளக்கமாகச் சொன்னால் சூரியன் தனுர் ராசியிலிருந்து நகர்ந்து மகர ராசிக்குப் பெயரும் நேரம். இதனால் தான் சபரிமலையில் வரும் ஜோதியை மகர ஜோதி என்கிறார்கள். மேலும் இந்நாளை மகரசங்கராந்தி என்றும் அழைப்பார்கள். அன்று சூரியனுக்கு பொங்கல் பிரசாதம் படைத்து நன்றியைத்தெரிவிக்கும் வழக்கம் தொன்றுதொட்டு இருக்கிறது. பொங்கிவரும் பாலும், அரிசியைப்பொங்குவதாலும் 'பொங்கல்' என்ற பெயருடன் திருவிழா ஆனது. ... Full story

வந்தது போகி!

-விசாலம் வந்ததுப் போகிப் பண்டிகை , சூழ்ந்துக் கொண்டது ஒரேப் புகை வீட்டின் குப்பைகள் வெளியே வர, வெளிக் குப்பைகள் அதனுடன்  சேர தெருவுக்குத் தெருஅதுவும் எரிய, சுற்றுச் சூழ்நிலை வெகுவாய்க் கரிய, அளவிலா மாசில் மூச்சும்  அடைக்க, இது தேவையா என்று மனமும்  கேட்க யார் சொல்லுவார் பதில் ?... Full story

சுகி ரங்கா ரங்கான்னு சொல்லு

விசாலம் "தந்தையே இங்கே வாருங்கள். அழகான ஒன்றை நான் காட்டப்போகிறேன்." "இதோ வருகிறேன் கோதை. அந்த அழகான ஒன்று எது?" "இதோ என் தோள் மேல் பாருங்கள்.  அழகான கிளி! நந்தவனத்தில் பறந்து என் தோளில்  வந்து அமர்ந்துவிட்டது." "ஆமாம் மிக அழகான கிளிதான். தோளை அசக்கிவிடு  பறந்து போய்விடும்." "இல்லை தந்தையே அது பறக்காமல் இருக்க வேண்டும் என்று நான் சிலைப்போல் அமர்ந்திருக்கிறேன். அன்பு தந்தையே இந்தக் கிளியை நானே வைத்துக்கொள்கிறேனே! ஆசையாக வளர்க்க விரும்புகிறேன்." "சரி. அப்படியே செய். ஆனால் கூண்டில் அதைப்போட்டு ... Full story

நாகர்கள் 3

விசாலம் "நாகரின் அகாமி பிரிவில் இருக்கும் ஆண்மகனின்  திருமணம் நிச்சயமானவுடன் பெண்வீட்டில் விருந்து தடபுடலாக இருக்குமாம். அன்று மாலை மணமகன் வீட்டிற்கு பெண் செல்வாள். அங்கு படுத்தாலும் தனித்தனியான அறையில் தான் இருப்பார்கள். மூன்று நாட்கள் இது போல் கழியும் மறு நாள் அவர்கள் வயலுக்கு சேர்ந்து போக வேண்டும். இதே போல் ஒரு பத்து நாட்கள் போகும். பின் அவர்களது பூஜாரி அவர்கள் விருப்பத்தைக்கேட்டு அவர்கள் சேர அனுமதிப்பார். ஆனால் எங்களது இன்னொரு பிரிவான ஆவோஸில் இது கொஞ்சம் மாறுபடும். நிச்சயதார்த்தம் பிறகு அவர்கள் ... Full story

நாகர்கள் 2

விசாலம் ரீமா தான் ஒரு வாரம் லீவு கேட்டபடி தன் ஊர் சென்றாள். பின் அவள் திரும்பி வர இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன.  மறு நாள் அவள் வந்தாள். அவள் தாமதமாக வந்ததற்கான காரணம் கேட்டேன். நாகாலாந்தில்    எல்லா வேலைகளும் பெண்களே செய்யும் நிலைமை. ஆகையினால் வருவதில் தாமதமாகிவிட்டது என்றாள். "ஏன் ரீமா? அப்படி என்னென்ன  வேலைகள் நீங்கள் செய்யவேண்டும்?" "காலையில் எழுந்ததும் தண்ணீர் கொண்டு வர குடங்களுடன் வெகு தூரம் நடக்க வேண்டும். காட்டுப்பக்கம் போய் மரங்களிலிருந்து சுள்ளிகள், ... Full story

நாகர்கள் 1

விசாலம் என் பள்ளியில் வருடாந்திர பரிசு விழாவின் போது ஓரு வித்தியாசமான நடனம் வைக்க எண்ணி மூங்கில் நடனம்  ஒன்றைத்தயாரிக்க முயற்சித்தோம்  {bamboo dance}. இதற்காக நாகாலாந்து பெண்மணியை அழைத்தோம். அவள் தில்லியில் இருந்ததால் எங்கள் பள்ளிக்கு வர ஒப்புத்துக்கொண்டு நடனம் சொல்லிக்கொடுக்கவும் ஆரம்பித்தாள். அவளிடம் பழகியதில் நாகாலாந்தின் மக்கள், கலாச்சாரம் பற்றி பல விஷயங்கள் தெரிந்துக்கொண்டேன்.  அவள் எனக்கு நல்ல தோழியும் ஆனாள். அவள் சொன்னதில் சில பகுதிகளை இங்கு எழுதுகிறேன். அவளது பெயர் என் வாயில் நுழையவில்லை. ஆதலால் அவளை ரீமா என்று பெயரிட்டு ... Full story

கைத்தடி…

கைத்தடி...
-விசாலம் (ஒரு திருமணத்தில் மாப்பிள்ளை காசி யாத்திரை போகும் காட்சி. கையில் அவர் ஒரு தடி வைத்துக் கொள்ள வேண்டும். அதை எங்கேயோ தவறி வைத்துவிட்டு அதைத் தேட பெண்வீட்டாருக்கு ஒரே டென்சன். இதைப் பார்த்த சம்பவத்தால் இந்தக் கவிதை  பிறந்தது.) கைத்தடி எங்கே ? கைத்தடி எங்கே ? ஒரே பரபரப்பு! திருமண வீட்டில்                                                   மாப்பிள்ளை நின்றார், காசி யாத்திரைக் கோலம் கையில் ... Full story

முக்தி தலம் சுப்பிரமண்யா – 3

முக்தி தலம் சுப்பிரமண்யா – 3
– விசாலம்.     அருள்மிகு குக்கி சுப்ரமண்யா திருக்கோயில் (தொடர்ச்சி...) தலபுராணத்தில் இந்தக்கோயிலின் சிறப்பைப் படித்தேன். ஒரு சமயம் வாசுகியை மஹாவிஷ்ணுவின் வாகனமான கருடன் பார்த்துவிட்டு துரத்த ஆரம்பித்தது. வாசுகி பயந்தபடி குமார பர்வதத்தினுள் இருக்கும் ஒரு குகையில் போய் ஒளிந்து கொண்டு சிவபெருமானைக்குறித்து தவம் இருந்தது. பரமேஸ்வரனும் வாசுகி முன் தோன்றி “நீ இங்கேயே இரு. சுப்பிரமண்யன் உன்னை அருள் பாலிப்பான். அவனருளால் உனக்கு கருடனிடமிருந்து ஒரு ஆபத்தும் இருக்காது நீ ... Full story

முக்தி தலம் சுப்பிரமண்யா – 2

முக்தி தலம் சுப்பிரமண்யா – 2
-- விசாலம்.     நாங்கள் இப்போது பெரிய கோயில் வாசலில் வந்து விட்டோம். அப்போது ஒரு அர்ச்சகர் உள்ளே போய்க்கொண்டிருந்தார். அவரை அழைத்து "குருக்களே! உள்ளே முறையாகத் தரிசிப்பது எப்படி எதை முக்கியமாகப் பார்க்க வேண்டும் என்று கொஞ்சம் விளக்குங்கள். அதன்படி செய்தால் சரியான நேரத்தில் நாங்கள் எல்லாம் பார்த்து முடிக்க முடியும்" என்றேன். "பேஷா சொல்றேன். உள்ளே கிழக்கு ... Full story

முக்தி தலம் சுப்பிரமண்யா – 1

முக்தி தலம் சுப்பிரமண்யா - 1
-- விசாலம். நான் சிருங்கேரி போவதாக இருக்கிறேன் என்று என் தோழிகளிடம் சொன்னவுடனேயே "கண்டிப்பாகக் கட்டில் துர்க்கையைப்பார்த்து வா" என்றும் "சுப்பிரமண்யாவைப் பார்த்து வேண்டினால் வியாதிகள் எல்லாம் போய்விடும்" என்றும் பலர் பல கோயில்களைச் சொன்னார்கள். நாங்கள் மங்களூர் போய் இறங்கியவுடன் நாங்கள் அமர்த்திக்கொண்ட டாக்ஸி ஓட்டுனரும் வரிசையாக பார்க்க வேண்டிய தலங்களை மிக அழகாக விளக்கினார். இதை நம்பியே வாழ்வதால் எல்லாம் அவர் மனதில் பாடமாகிவிட்டது போலும். நாங்களும் முதலில் துர்க்கையம்மனைப்பார்த்து வணங்கியப்பின் பல கோயில்களைப் பார்த்து முடித்தோம் ஒரு வாரம் தங்கியதால் எல்லாம் நிதானமாக, களைப்பில்லாமல் ... Full story

தீபாவளி மருந்து

தீபாவளி மருந்து
--விசாலம்.   தீபாவளி அன்று பட்சணங்களுக்குப் பிறகு கொடுக்கப்படும் தீபாவளி லேகியம். ஆஹா, அருமை அதன் மணமும் அதன் பலனும் சொல்ல அளவில்லை. அந்த மருந்துக்காக ஒரு கவிதை ... மருந்து அது அருமருந்து, தீபாவளியில் ஒரு தனி மருந்து , ஆயுர்வேதக் கடைச் சரக்காம், அதற்கென்று ஒரு தனி சிறப்பாம் சுக்கு மிளகு திப்பிலியாம் ஆயுர்வேத மூவேந்தர்களாம் , ஓமமும் கூடச் சேர்ந்துவிடும் அம்மியில் எல்லாம் அரைந்துவிடும் உருளியில் கிளற பட்டுவிடும் வெல்லமும் சேர்ந்து கலந்துவிடும் வெண்ணெய் சேர்ந்து பளபளக்கும் கிளறக் கிளற மணம் பரப்பும் ஆஹா அருமை லேகியம் தயார் நெய்யும் மேலே வருவதைப்பார் தீபாவளி லேகியம் நம் கைவசம் ஏன் ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.