Posts Tagged ‘ஸ்ரீஜா வெங்கடேஷ்’

படித்தேன், ரசித்தேன் …

படித்தேன், ரசித்தேன் ...
--உமாஸ்ரீ. சமீபத்தில் எழுத்தாளர் திருமதி. ஸ்ரீஜா வெங்கடேஷ் எழுதி வெளிவந்த ”பாண்டியன் நெடுங்காவியம்“ என்ற சரித்திர நாவலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படித்தவுடன் உண்டான மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கேன்மின் ! கேன்மின் ! ஸ்ரீஜா வல்லமையில் எழுதிக் கொண்டிருப்பவர்; வல்லமைக்குப் பரிச்சியமான எழுத்தாளர் மட்டுமல்ல ; மிகச் சிறந்த எழுத்தாளரும் கூட . இந்த நாவலின் மூலம் தமிழில் வரலாற்றுப் புதினம் ... Full story

நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-16)

நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-16)
ஸ்ரீஜா வெங்கடேஷ் நிகில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று பி.ஈ பரீட்சையில் தேறி விட்டான். அமெரிக்காவுக்கு செல்லத் தேவைப்படும் தேர்வுகளான ஜி.ஆர்.ஈ, டோஃபில் இவற்றிலும் நல்ல மார்க்குகள் எடுத்துப் பாஸ் செய்திருந்தான். மூன்று புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களிலிருந்து அவனுக்கு அட்மிஷன் கிடைத்து விட்டது. அதில் மிகச் சிறந்ததான டெக்சாஸ் பல்கலைக் கழகத்தைத் தேர்ந்தெடுத்து அதில் சேர்வதாக முடிவெடுத்திருந்தான் நிகில். அங்கு படிப்பதற்குரிய ஸ்காலர்ஷிப்பும் அவனுக்குக் கிடைத்து விட்டது. சுந்தரத்துக்கும் கல்யாணிக்கும் பெருமை தாங்கவில்லை. ... Full story

ஒரு முடிவின் மறு பக்கம்

ஸ்ரீஜா வெங்கடேஷ் நேற்றுவரை பிரபல கிரிமினல் வக்கீலாக இருந்த சத்தியமூர்த்தி இன்று நீதிபதி ஆகிவிட்டார். வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. அவர் நீதிபதியானதில் அவருடைய பெற்றோருக்குத்தான் மிகவும் மகிழ்ச்சி. வருவோர் போவோரிடத்தில் எல்லாம் சொல்லிச் சொல்லிப் பெருமைப் பட்டனர். சத்திய மூர்த்திக்கு வயது ஐம்பத்து எட்டு. 65 வயது வரை நீதிபதி பதவியில் இருக்கலாம் என்பது சட்டம். அதனால் அவருக்கு இன்னும் ஏழு வருட சர்வீஸ் இருக்கிறது. சத்திய மூர்த்தியை நீதிபதியாக நியமித்ததை எதிர்த்து மற்றொரு வக்கீலான சங்கரன் கோர்ட்டில் ஸ்டே வாங்க ... Full story

நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-15)

நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-15)
ஸ்ரீஜா வெங்கடேஷ் சுந்தரத்தின் ஆபீசில் பரபரப்பாகப் பல நிகழ்ச்சிகள் அரங்கேறின. சுந்தரத்தைச் சந்தேகப்பட்டு அவனிடம் பேசிய பிறகு மேனேஜருக்கு விஜிலன்ஸ் டிபார்ட்மெண்ட் ஆசாமி ஒருவரிடமிருந்து ஃபோன் வந்தது. அவர் சொன்ன செய்தியைக் கேட்டு மேனேஜருக்கு ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் தேவையில்லாமல் சுந்தரத்தைச் சந்தேகித்தோமே என்று தோன்றியது. விஷயம் இது தான். சுந்தரம் பெயருக்குக் கெட்ட பெயர் உண்டு பண்ணும் நோக்கத்தோடு வந்த மொட்டை லெட்டர்களைப் பற்றி மேனேஜரிடம் விஜிலன்ஸ் டிபார்ட்மெண்ட்காரர்கள் சொன்ன ... Full story

நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-14)

நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-14)
ஸ்ரீஜா வெங்கடேஷ் சுந்தரம் ஆபீசில் என்ன நடந்தது என்பதே கல்யாணிக்குத் தெரியாது. அவள் பாட்டுக்கு டிவியை, கம்ப்யூட்டரை தூசி தட்டிக் கொண்டிருந்தாள். சுந்தரம் வரும்போதா அவள் சரியாகக் கம்ப்யூட்டரிடம் நிற்க வேண்டும்? எல்லாம் விதி! அன்று வழக்கத்துக்கு மாறாகப் பல முறை காலிங்பெல்லை அமுக்கினான் சுந்தரம். யாரோ என்று கதவைத் திறந்தவளுக்கு சுந்தரத்தின் கோபாவேசம் பயத்தை அளித்தது. ஒன்றும் பேசாமல் தான் செய்து கொண்டிருந்த வேலையைத் தொடர்ந்தாள். அதைப் பார்க்கப்பார்க்க அவள் வேண்டுமென்றே ... Full story

நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-13)

நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-13)
ஸ்ரீஜா வெங்கடேஷ் சுந்தரத்தின் ஆபீசில் ஜாடை மாடையாக எல்லாரும் அவனைப் பார்த்துப் பேசுவது போலப் பட்டது அவனுக்கு. ஆனால் காரணம் புரியவில்லை. ஒரு நாள் எதேச்சையாக கேஷியரும், பியூனும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்தது. "ஏன் கேஷியர் சார்? வேலுமணி, கணேசன் கேஸ் எந்த நிலமையில இருக்கு?" "அதை ஏன் கேக்கற போ! இப்போ அதுல ஒரு புது டர்னிங்க் பாயிண்ட் வந்திருக்கே உனக்குத் தெரியாதா?" கணேசன், வேலுமணி கேஸில் புதிய ... Full story

நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-12)

நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-12)
ஸ்ரீஜா வெங்கடேஷ் சுமதி அக்காவிடமிருந்து வந்த தகவல் கல்யாணியை மிகவும் கவலையுறச் செய்தது. அந்தத் தகவல் வரும் வரை எப்படியும் தான் அனுப்பிய பணம் தன் கைக்கு வந்து விடும் என்ற சிறு நம்பிக்கை அவளுள் இழையோடியது. இப்போது அதுவும் இல்லை. சுந்தரத்திடம் இன்னமும் அவள் எதுவும் சொல்லவில்லை. அவனும் எங்கே முன் போல இருக்கிறான்? எந்நேரமும் ஏதோ சிந்தனை. சாதாரணமாக இருந்திருந்தால் கல்யாணியிடம் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு பிடித்துக் கேட்டிருப்பான். ஆனால் இப்போது ... Full story

நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-11)

நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-11)
ஸ்ரீஜா வெங்கடேஷ் கல்யாணி இருப்புக் கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தாள். அவள் பணம் அனுப்பிய முதல் வாரம் அவர்களிடமிருந்து தகவல் வரும் என்று தைரியமாக இருந்தாள். ஒரு வாரம் என்பது பத்து நாட்களாக நீண்டு விட்டது இன்னமும் அவர்களிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை என்பது மட்டுமில்லை, இவள் அக்கவுண்டில் ஒரு ரூபாய் கூட அவர்களால் டெபாசிட் செய்யப் படவில்லை. கவலை பிடித்துக் கொண்டது கல்யாணியை. முதல் முறையாக தான் ஏமாற்றப் பட்டு விட்டோமோ என்ற எண்ணம் ... Full story

நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-10)

நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-10)
ஸ்ரீஜா வெங்கடேஷ் வேலுமணியும், கணேசனும் திட்டமிட்டபடி மேலிடத்துக்கும் அந்த ஆபீஸ் மேனேஜருக்கும் மொட்டை லெட்டர் எழுதிப் போட்டார்கள். லெட்டரின் சாராம்சம் இது தான். "உங்கள் அலுவலகத்தில் நேர்மையின் சின்னம் என்று நீங்கள் நினைத்திருக்கும் திரு.சுந்தரம் அவர்கள் பல முறை லஞ்சம் வாங்கியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் லோன் கேட்டுத் தன்னிடம் வரும் பொது மக்களிடம் தனக்கு இத்தனை சதவிகிதம் பங்கு கொடுத்தால் தான் லோன் கொடுப்பேன் என்று பேரம் பேசுகிறார். அவருக்கு உங்கள் ஆபீசிலேயே ... Full story

நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-9)

நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-9)
ஸ்ரீஜா வெங்கடேஷ் கல்யாணி இப்போதெல்லாம் அதிகமாக வேலை செய்கிறாள். மற்ற நேரங்களில் நண்பர்களோடு சேட் செய்கிறாள். நிறைய மெயில் அனுப்புகிறாள். சுந்தரமும், நிகிலும் எதுவும் சொல்ல முடியாமல் பொறுத்துப் போய்க்கொண்டிருந்தனர். அன்று வழக்கத்தை விடக் கூடுதலாக மகிழ்ச்சி, இல்லையில்லை.. துள்ளலோடு காணப்பட்டாள் கல்யாணி. இன்று காலையில் அவளுக்கு ஒரு மெயில் வந்திருந்தது. சவுத் ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு கம்பெனி கல்யாணியை இந்த ஆண்டின் மிகச் சிறந்த இண்டெர்னெட் பயன்படுத்துபவர் என்று அவார்டு கொடுத்து ... Full story

நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-8)

நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-8)
ஸ்ரீஜா வெங்கடேஷ் ஆபீசில் சுந்தரம் பரபரவென இயங்கிக் கொண்டிருந்தான். வேலுமணியும்,கணேசனும் வழக்கம் போல அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள். ஆடிட்டிங் நெருங்குவதால் பார்க்க வேண்டிய ஃபைல்கள் குவிந்து கிடந்தன. அதோடு சரியாக மாதத் தவணை கட்டாதவர்களுடைய விவரங்கள் அடங்கிய ஃபைல் ஒன்றும் தயார் செய்யச் சொல்லி மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருந்தது. அது ஒரு ரகசியமான உத்தரவு. ஆனால் அதை எப்படியோ வேலுமணி மோப்பம் பிடித்து விட்டான். "டேய் கணேசா! தெரியுமா? நமக்கு ஆப்பு வெக்கத்தான் சார் ... Full story

நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-7)

நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-7)
ஸ்ரீஜா வெங்கடேஷ் சுந்தரம் சில விஷயங்களை வீட்டில் சொல்லவில்லை. இப்போதெல்லாம் அவன் அலுவலகத்தில் வேலை நெருக்கடி மிக அதிகமாக இருக்கிறது. வேலை எவ்வளவு அதிகமிருந்தாலும் சுந்தரத்தால் சமாளிக்க முடியும். அது அல்ல பிரச்சனை. அவன் கீழ் வேலை செய்யும் வேலுமணியும், கணேசனும் லஞ்சம் வாங்கிக் கொண்டு தகுதியற்றவர்களுக்கெல்லாம் கடனைக் கண்டமேனிக்குக் கொடுத்து வைத்திருக்கிறார்கள். அப்படிக் கொடுக்கப் பட்டவர்களில் ஒருவர் கூட மாதத் தவணை ஒழுங்காகச் செலுத்தவில்லை. இதையெல்லாம் மேனேஜர் கவனத்துக்குக் கொண்டு செல்லுமுன் வேறு ... Full story

நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-6)

நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-6)
ஸ்ரீஜா வெங்கடேஷ் கல்யாணி கம்ப்யூட்டரில் மூழ்கியிருந்தாள். பக்கத்தில் ஏதோ ஒரு ஃபைல் திறந்து கிடந்தது. கண்கள் சிவந்து தூக்கமின்மை தெரிந்தது கண்களில். அன்று ஞாயிற்றுக் கிழமை ஆதலால் லேட்டாக எழுந்து வந்த சுந்தரம் கல்யாணி வேலையில் மூழ்கியிருப்பதைப் பார்த்தான். அவள் கண்களைப் பார்த்தவனுக்குச் சட்டென்று கோபம் வந்தது. "என்ன பண்றே? கல்யாணி?" வேலையில் ஆழ்ந்திருந்தவள் பதறி நிமிர்ந்து, "நீங்க தானா? நான் பயந்தே போயிட்டேன்" என்று சொல்லி விட்டு மீண்டும் கம்ப்யூட்டரில் ... Full story

நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-5)

நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-5)
ஸ்ரீஜா வெங்கடேஷ் கல்யாணி கம்ப்யூட்டர் படிப்பை முடித்து விட்டாள். நிறைய மார்க்குகள் வாங்கி முதல் வகுப்பில் பாஸ் செய்திருந்தாள். அதில் அவளுக்கு மட்டுமல்ல சுந்தரத்துக்கும், நிகிலுக்கும் பெருமைதான். ஆனால் அவள் அடுத்துச் சொன்ன திட்டம்தான் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. "நல்லபடியாக் கம்ப்யூட்டர் கிளாஸ் முடிச்சுட்டேன். இனிமே சம்பாதிக்க வேண்டியதுதான்" "என்ன சொல்றே? இந்த வயசுக்கு மேல வேலைல சேரப் போறியா?" "இல்லைங்க! என் ஃப்ரெண்ட் சுஜாதா இருக்காள்ல அவ ஒரு ஆபீஸ்ல ... Full story

நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-4)

நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-4)
ஸ்ரீஜா வெங்கடேஷ் கல்யாணி ஒரு கம்ப்யூட்டர் செண்டரை வீட்டுப் பக்கத்திலேயே தேர்ந்தெடுத்து அதில் சேர்ந்தும் விட்டாள். அவளுக்குக் கம்ப்யூட்டர் பற்றி ஒன்றும் தெரியாது என்பதால் அடிப்படையிலிருந்து ஆரம்பித்துக் கற்றுக் கொடுக்கும் கோர்சில் சேர்ந்த்தாள். முதலில் அவளுக்குக் கூச்சமாய் இருந்தது. இத்தனை வயதுக்கப்புறம் போய்ப் படிக்கிறோமே என்று. ஆனால் செண்டரில் கற்பிக்கும் ஆசிரியர்களும் சரி மற்ற மாணவர்களும் சரி அவளைக் கேலி செய்யும் நோக்கத்தோடு பார்க்கவில்லை. அவளுக்குச் சொல்லிக் கொடுக்கும் இன்ஸ்ட்ரக்டர் ஒரு இளைஞன். அப்போதுதான் ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.