Posts Tagged ‘​சி. ஜெயபாரதன்’

Page 1 of 1912345...10...Last »

இனிய பொங்கல் வைப்போம்

இனிய பொங்கல் வைப்போம்
சி. ஜெயபாரதன், கனடா பொங்கல் வைப்போம் புத்தரிசிப் பொங்கல் வைப்போம் சர்க்கரைப் பொங்கல் வைப்போம் வீட்டு முற்றத்தில் மாட்டுப் பொங்கல் வைப்போம் முன் வாசலில் கோல மிட்டு, பெண்டிர் கும்மி அடித்து செங்கரும்புப் பந்த லிட்டு சீராய்த் தோரணம் கட்டிப் பால் பொங்கல்வைப்போம் ! புத்தாடை அணிந்து பூரிப்போடு பொங்கல் வைப்போம். பொழுது புலர்ந்ததும் விடி வெள்ளி விழித்ததும் வெண் பொங்கல் வைப்போம். கூட்டாகத் தமிழர் கொண்டாடும் அறுவடைத் திருவிழா ! கோலகலமாய்ப் பொங்கலோ பொங்கல் என்று மங்கையர் ஒன்றாய் முழங்கப் பொங்கல் வைப்போம். இனிய தைப் பொங்கல் வைப்போம்.   Full story

துணைவியின் இறுதிப் பயணம் – 8

-சி. ஜெயபாரதன், கனடா என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை ++++++++++++++ தீ வைப்பு ஈழத்தில் இட்டதீ சீதைக்கு ! எழில்மதுரை சூழத்தீ இட்டது கண்ணகிக்கு ! - காலவெடி மாய்த்த துணைவிக்கு கானடா தீவைப்பாம் ! ஆயுள் முடிந்த கதை. +++++++++++++++ தனிமை கொடிது கொடிது இளமையில் வறுமை ! அதனினும் கொடிது நடுமையில் ஊழிய வருவாய் இன்மை ! அதனினும் கொடிது முதுமையில் நோய்மை ! அதனினும் கொடுமை மண விலக்கு, இல்லற உடைப்பு, புறக்கணிப்பு ! அனைத்திலும் பெரும் கொடுமை மனத்துக் கினிய மனைவியோ, கணவனோ சட்டெனத் தவறி மனிதப் பிறவி நொந்திடும் தனிமை ! தவிக்கும் தனிமை. ++++++++++++++++ இட்ட கட்டளை முதலில் கண் மூடுவது தானோ ... Full story

துணைவியின் இறுதிப் பயணம் – 7

-சி. ஜெயபாரதன், கனடா என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை ! ++++++++++++++   தங்க ரதம் தங்க ரதம் போல் வீட்டில் தினம் உலாவி வருவாள் ! மங்கா ஒளி முகத்தோடு வீட்டில் தினம் விளக்கை ஏற்றுவாள். தகதகக்கும் அந்தத் தங்க மேனியாளை திருமணத்தில் கைப் பற்றிய நான், இறுதியாக என்னிரு கைகளால் எரியும் நெருப்பிலே தள்ளினேனே! நான் தள்ளினேனே! +++++++++ மரணம் மானுட இனத்துக்கு மரணம் என்பது புதிதல்ல ! மரணத்தின் கூரிய பற்கள் பொல்லாதவை! மரணம் என்பது விதியல்ல என்று நீ சொல்லாதே ! மதியால் நீ விதியை வெல்லலாம் என்று சொல்லிக் கொள்ளலாம்! ஆனால் மரணத்தை வெல்ல முடியுமா ! பிறப்பும், இறப்பும் உயிரின வாழ்க்கையின் இருதுருவங்கள். பிறந்தவர் ஒருநாள் இறப்பவர் தான்! இறப்பவர் மீண்டும் பிறப்பர் என்பது தெரியாது! மரணம் புதிதல்ல ... Full story

துணைவியின் இறுதிப் பயணம் – 6

-சி. ஜெயபாரதன், கனடா என் இழப்பை நினை; ஆனால் போகவிடு எனை ++++++++++++++ என்னருமை மனைவி தசரதி ஜெயபாரதன் தோற்றம் : அக்டோபர் 24, 1934. மறைவு : நவம்பர் 18, 2018 ++++++++++++++++++ ஓய்வு ஊதியம் பெறுவதற்கு ஓவ்வோர் ஆண்டும் ஆயுள் நீடிப்புச் சான்றிதழ் அவசியம். இந்திய அரசாங்க ஆணையர் நவம்பர் மாதம் முதல் வாரம் அளிப்பார் முத்திரை குத்தி ! தம்பதிகள் புறப்பட்டோம். இறுதிப் பயணம். பாதி வழியில் இருளும் மாலை நேரத்தில், திடீரெனத் துணைவி இரத்தக் குழல் குமிழி கிழிந்து நேரும் பெரு வெடிப்பு ! உடம்பில் பூகம்பம் ! நாள் காட்டியில் காலன் என்றோ குறித்து வைத்த நவம்பர் ஒன்பதாம் நாள் ... Full story

துணைவியின் இறுதிப் பயணம் – 5

சி. ஜெயபாரதன், கனடா என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை ! ++++++++++++++ என்னருமை மனைவி தசரதி ஜெயபாரதன் தோற்றம் : அக்டோபர் 24, 1934 மறைவு : நவம்பர் 18, 2018 ++++++++++++++++++   எழுதிச் சென்ற ஊழியின் கை ! முடிந்தது அவள் ஆயுள் என விதி மொழிந்தால் நான் ஏற்க மாட்டேன் ! முடிந்தது அவள் வினைகள் எல்லாம் என் வீட்டில் எனக் காலன் ஓலமிட்டால் நான் காதில் கேட்க மாட்டேன் ! முடிந்தது அவள் கடமை யாவும் இந்த உலகில் ... Full story

துணைவியின் இறுதிப் பயணம் – 3

துணைவியின் இறுதிப் பயணம் - 3
அமர கீதங்கள் சி. ஜெயபாரதன், கனடா என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை ! ++++++++++++++ என்னருமை மனைவி  தசரதி ஜெயபாரதன் தோற்றம் :  அக்டோபர்  24, 1934 மறைவு : நவம்பர் 18, 2018 ++++++++++++++++++   இறுதிப் பயணம்  முப்பதாவது நாளின்று ! போன மாதம் இதே நேரம், இதே நாளில், ஓடும் காரில் பேரதிர்ச்சியில் அவள் இரத்தக் குமிழ் உடைந்து உரத்த குரல் எழுந்தது என்னருகே ! ஃபோனில் 911 எண்ணை அடித்தேன் ! அபாய மருத்துவ வாகனம் அலறி வந்தது உடனே ! காலன் துணைவியைத்  தூக்க கால நேரம் குறித்தான் ! ஏக்கத்தில் தவிப்பது நான் ! நவம்பர் 9 ஆம் நாள், இதுவுமோர் 9/11 ஆபத்துதான்  மாலை மணி 6 ... Full story

துணைவியின் இறுதிப் பயணம் – 2

துணைவியின் இறுதிப் பயணம் - 2
-சி. ஜெயபாரதன், கனடா அமர கீதங்கள் என் இழப்பை உணர், ஆனால் போக விடு என்னை ! என்னருமை மனைவி  தசரதி ஜெயபாரதன் தோற்றம் :  அக்டோபர்  24, 1934 மறைவு : நவம்பர் 18, 2018 உயிர்த்தெழுவாள் ! விழித்தெழுக என் தேசம் என்னும் கவிதை நூல் எழுதி வெளியிட்டேன். ஆனால் என் துணைவி, அறுவை சிகிட்சையில் விழிதெழ வில்லையே என வேதனைப் பட்டேன். இந்துவாய் வாழ்ந்து பைபிள் பயின்று கிறித்துவை நம்பும் உன் துணைவி உயிர்த் தெழுவாள் என்று ஓர் அசரீரிக் குரல் ஒலித்தது உடனே வெளி வானில் ! படமாகி ! நேற்று ஒளிகாட்டி நடமாடிய தீபம் புயல் காற்றில் அணைந்து,\ வீட்டுச் சுவரில் படமாகித் தொங்குகிறது இன்று மாலையோடு ! பெருங் காயம் ! உயிர்மெய்க் காயம் பொய்யாம் ! மண்ணிலே தோன்றிய பெண்மணிக்கு எத்தனை, எத்தனை அணிகள் ! ஜரிகைப் பட்டு ஆடைகள் ! ஒப்பனைச் சாதனம் ... Full story

துணைவியின் இறுதிப் பயணம்

துணைவியின் இறுதிப் பயணம்
  சி. ஜெயபாரதன், கனடா அமர கீதங்கள் என் இழப்பை உணர், ஆனால் போக விடு என்னை ! ++++++++++++++   என்னருமை மனைவி தசரதி ஜெயபாரதன் தோற்றம் : அக்டோபர் 24, 1934 மறைவு : நவம்பர் 18, 2018 ++++++++++++++++++ தமிழ்வலை உலக நண்பர்களே, எண்ணற்ற வலை உலகத் தமிழ் நண்பர்கள் அன்புடன், ஆழ்ந்து, கனிவோடு எழுதி அனுப்பிய ... Full story

துடித்துப் பிரிந்த துணைப் பறவை – 4 &5

  ஒருவரி ஒருவரி எழுதினால் எழுதென ஒன்பது வரிகள் வாசலில் வரிசையாய் காத்திருக்கும், கண்ணீரோடு ! புண்பட்ட வரிகள் ! வரிசை கலைந்து முதலில் என்னை எழுது, என்னை எழுது என்று கெஞ்சும் ! என் டைரியில் உன் கையெழுத்தை இடுவென முந்தும் ! எழுதி, எழுதி, எழுதி என் மனம் தினம் ... Full story

துடித்துப் பிரிந்த துணைப் பறவை

தமிழ்வலை உலக நண்பர்களே, எண்ணற்ற வலை உலகத் தமிழ் நண்பர்கள் அன்புடன், ஆழ்ந்து, கனிவோடு எழுதி அனுப்பிய இரங்கல் மடல்கள் என்னை நெகிழச் செய்தன. உங்கள் அனைவருக்கும் என் கனிவான நன்றிகள். என் அருமை மனைவியின் இறுதிப் பயணத்தை நான் உங்களுடன் பகிர்ந்ர்து கொள்ள விழைகிறேன். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர், வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். மனைக்கு விளக்கு மடவாள். நெருநல் உள ஒருத்தி இன்றில்லை என்னும் பெருமை ... Full story

மனம் ஒடிந்து போச்சு!

மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா நீ பொய் சொல்வது எனக்குத் தெரியா தென்றா நினைக்கிறாய் ? உன்னால் அழ முடியாது ! காரணம் நீ என்னைப் பார்த்து நகைக்கிறாய் . மனம் உடைந்து போச்சு. மெய்யாக எனக்கு எப்படிச் சிரிக்க முடியு துனக்கு ? உன்னால் தான் குப்புற வீழ்ந்து கிடக்கிறேன், தெளிவாய் நீ அதைத் தெரிந்து கொண்டுள்ளாய் ! காதலன் வாங்கிப் போட்ட மோதி ரத்தை மாது நீ, தூக்கி எறிந்தாய் ! நாளொரு பொழுதும் நடக்கும் வேடிக்கை இது ! தனித்தனி யாய் வாழ்கிறோம் எவரும் இல்லை நமது அருகில் ! “தொடாதே” என்று தடுக்கிறாய் முணுமுணுத்து ! என் மனம் உடைந்து போச்சு மாதே ! எப்படிச் சிரிப்பு வருது உனக்கு  ?   Full story

2022 ஆண்டுக்குள் 100,000 மெகாவாட் சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் நிறுவ இந்திய மத்திய அரசு திட்டமிடுகிறது

2022 ஆண்டுக்குள் 100,000 மெகாவாட் சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் நிறுவ இந்திய மத்திய அரசு திட்டமிடுகிறது
Posted on October 20, 2018 Trina Solar Company Supplies Solar Power Modules to Ukraine’s Largest Solar Power Plant     சி. ஜெயபாரதன் ... Full story

குருச்சேத்திரப் போரில் ! 

சி. ஜெயபாரதன், கனடா செக்கு மாடுகளை வாங்கித்   தேரில் மாட்டினேன்!  திக்குத் தெரியாமல் வட்ட மிட்டுச் சுற்றிச் சுற்றி வந்தது என் தேர் கொடை ராட்டினம் போல்!  தலை சுற்றி வீழ்ந்தேன்! கீதையை உபதேசிக்க தேரோட்டி கிடைக்க வில்லை! திணறித் தேடினேன்  மனமுடைந்து! சினமுற்று விரட்டிய எனது செக்கு மாடுகளை எண்ணிக் கண்ணீர் விடுகிறேன்! இப்போது செக்கு மாடுகளைப் பயிற்றுவிக்க குப்பை வண்டிக் காரனை நியமித்தேன்! போருக்குப் போகையில் துடித்தேன்! நேராகப் போனது தேரானது,   நின்று நின்று! Full story

சூரியன் பின் தொடர்வேன்  !

மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++ ஒருநாள் தெரியும் உன் கண்ணுக்கு ஓடிப் போனேன் நானென்று ! ஆனால் நாளை மழை தூவலாம் ! நானும் சூரியன் பின் போகலாம் ! ஒருநாள் அறிவாய் நீ உனக்கு ஏற்றவன் நானென்று ! ஆனால் நாளை மழை தூவலாம் ! நானும் சூரியன் பின் போகலாம் ! நேரம் வந்து விட்டது, ஆருயிர்க் காதலி ! பிரிய வேண்டும் நானும் ! இறுதியாய் காதலி ஒருத்தியை நான் இழந்து போவதை அறிவாய் நீயும் முடிவில் ! ஒருநாள் தெரியும் உன் கண்ணுக்கு ஓடிப் போனேன் நானென்று ! ஆனால் நாளை மழை தூவலாம் ! நானும் சூரியன் பின் போகலாம் ... Full story

நானோர் இழப்பாளி

நானோர் இழப்பாளி
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++ நானோர் இழப்பாளி !  நானோர் இழப்பாளி ! வெளிப்புறம் தெரிவது போல் நானில்லை ! நேசித்த பெண்டிரில் நான்  வென்றது, நேசித்த வனிதரில் நான் இழந்தது, எல்லோரிலும் ஒருத்தியை மட்டும் இழந்தி ருக்கக் கூடாது நான் ! கோடியில் ஒருத்தி அவள் ! எனக்குத் தெரிந்திருக்க வேண்டும், இறுதியில் அவளே  வென்றாள். தோற்றது நான் ! நானோர் இழப்பாளி ! ஒட்டி இருந்தவளை இழந்தேன் ! நானோர் இழப்பாளி ! வெளிப்புறம் தெரிவது போல் நானில்லை ! நான் சிரித்து வந்தாலும் நகைச்சுவை நாயகன் இல்லை ! முகமூடிக்குக் கீழே அழுது கொண்டிருக்கிறேன் ! வானிருந்து மழை பொழிவது போல் வீழும் என் கண்ணீர்த் துளிகள் ... Full story
Page 1 of 1912345...10...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.