Posts Tagged ‘Peer Reviewed’

(Peer Reviewed) பாலக்காடு வட்டார முடுகர் இன மக்களின் மொழி மற்றும் வாழ்வியலில் பழந்தமிழ் மரபுகள்

முனைவர் த. கவிதா, உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை மற்றும் ஆய்வு மையம், அரசுக் கல்லூரி, சித்தூர், பாலக்காடு, கேரளா - 678104. மின்னஞ்சல்: kavithavictoria@gmail.com பாலக்காடு வட்டார முடுகர் இன மக்களின் மொழி மற்றும் வாழ்வியலில் பழந்தமிழ் மரபுகள் உலக நாகரிகங்களுள் பழைமை மிக்க நாகரிகமாக விளங்குவது,  தமிழ் நாகரிகம். அந்த நாகரிகத்திற்குரிய  மக்கட் தொகுதியினர்  ஒரு காலத்தில் பாரதம் முழுக்கப் பரந்து வாழ்ந்திருந்தனர்  என்பது அறிஞர்களின் கணிப்பு. உலக மொழிக் குடும்பங்களில் ஒன்றாக விளங்கும் திராவிட மொழிக் குடும்பத்தில், தலைமை சான்ற ... Full story

(Peer Reviewed) பொடுகு உருவாதல் அறிவியல் விளக்கம்

(Peer Reviewed) பொடுகு உருவாதல் அறிவியல் விளக்கம்
நடராஜன் ஸ்ரீதர், பேராசிரியர் சந்திரமோகன் ரெத்தினம், முதுஅறிவியல் மற்றும் இயற்பியல் ஆய்வுத் துறை, ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவகோட்டை, தமிழ்நாடு மின்னஞ்சல்: natarajangravity@gmail.comrathinam.chandramohan@gmail.com ============================================================================ பொடுகு உருவாதல் அறிவியல் விளக்கம் முன்னுரை நம் அனைவருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது தலையில் பொடுகு உருவாகுதல்.  இரண்டில் ஒருவருக்கு இப்பிரச்சினை இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பொடுகைப் பற்றிய அறிவியல் விளக்கத்தைஇக்கட்டுரையில் காணலாம். பொடுகு - வரலாறு வெயில் காலமோ, மழைக் காலமோபெரும்பாலோருக்கு ஏற்படும் கஷ்டமான விஷயம் தலையில் பொடுகு என்பது உருவாவது. இதற்கான ... Full story

(Peer Reviewed) இராமநாதபுரம் வட்டாரக் கல்வெட்டுகள் காட்டும் வணிகம்

(Peer Reviewed) இராமநாதபுரம் வட்டாரக் கல்வெட்டுகள் காட்டும் வணிகம்
முனைவர் ஆ.ராஜா, அருங்காட்சியகத் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 10 இராமநாதபுரம் வட்டாரக் கடற்கரைப் பகுதியில் சங்க காலம் முதல் இடைக்காலம் வரை கடல்சார் வணிகமும் உள்நாட்டு வணிகமும் சிறந்து விளங்கின. இவ்வணிகம் கி.பி.12-14ஆம் நூற்றாண்டுகளில் பிற்காலப் பாண்டியர்களின் எழுச்சியின் காரணமாகச் சிறந்த வளர்ச்சியை அடைந்தது.  இக்காலக் கட்டத்தில் பல்வேறு வணிகக் குழுக்கள் அயல்நாட்டு, உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தன. இராமநாதபுரம் கடற்கரைப் பகுதி, நிலவியல் அடிப்படையில் அதிகமான ஆற்று முகத்துவாரங்களைக் கொண்ட பகுதியாக அமைந்திருப்பதால் கடல்சார் வணிகச் செயல்பாடுகளுக்குப் பெரிதும் துணை புரிந்தன. அந்த வகையில் ... Full story

(Peer Reviewed) சிலம்பில் பெண்களின் அவல நிலை

(Peer Reviewed) சிலம்பில் பெண்களின் அவல நிலை
கு.வளா்மதி, உதவிப் பேராசிரியா், தமிழ்த் துறை, தி ஸ்டாண்டா்டு ஃபயா்ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி சிலம்பில் பெண்களின் அவல நிலை முன்னுரை           ஐம்பெருங்காப்பியங்களுள் முதன்மையானது, ‘சிலப்பதிகாரம்’ ஆகும். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஒற்றுமைப் பண்புகளால் ‘இரட்டைக் காப்பியங்கள்’ என்று போற்றப்படுகின்றன. இன்பமும் துன்பமும் நிறைந்த மனித வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை மையப்படுத்தியே இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. இலக்கியங்களில் கதைமாந்தா் படுகின்ற துன்ப நிலையைக் கண்டு வாசகா்கள் இரக்கம் கொள்கின்றனா். இந்தத் துன்ப நிலையே ‘அவலம்’ என்று கூறப்படுகின்றது. குடிமக்கள் காப்பியமான சிலப்பதிகாரத்தில் பெரும்பான்மையும் ... Full story

[நூல் அறிமுகம்] (Peer Reviewed) ஆனந்த் நீலகண்டனின் ”Vanara: The Legend of Baali, Sugreeva and Tara”: மாற்றி யோசிக்கப்படும் பழைய கதையின் யதார்த்தம்

[நூல் அறிமுகம்] (Peer Reviewed) ஆனந்த் நீலகண்டனின் ''Vanara: The Legend of Baali, Sugreeva and Tara'': மாற்றி யோசிக்கப்படும் பழைய கதையின் யதார்த்தம்
முனைவர் ம.பிரபாகரன், இளநிலை ஆய்வாளர், பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் (EFEO), புதுச்சேரி. ஆனந்த் நீலகண்டனின் '' Vanara: The Legend of Baali, Sugreeva and Tara '': மாற்றி யோசிக்கப்படும் பழைய  கதையின் யதார்த்தம் சென்ற ஆண்டு(2018)  வெளியான ஆனந்த் நீலகண்டனின்  '' Vanara: The Legend of Baali, Sugreeva and Tara '' ( 304 pages, Published November 14th 2018 by Penguin Random House) என்ற ஆங்கில நாவலைச் சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. அதனை ஆய்வு நோக்கில் அறிமுகப்படுத்த ... Full story

(Peer Reviewed) ஆயரினக்குடி மரபில் குரவையாடுதல் – ஒரு பார்வை

(Peer Reviewed) ஆயரினக்குடி மரபில் குரவையாடுதல் - ஒரு பார்வை
முனைவர் இரா.வீரபத்திரன் உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை, கற்பகம் உயர்கல்வி கலைக் கழகம், கோவை. ஆயரினக்குடி மரபில் குரவையாடுதல் - ஒரு பார்வை அன்று தொட்டு இன்றுவரை அழியாத நாகரிகத்தையும் பண்பாட்டையும் உடைய நன்மக்கள், நம் தமிழ் மக்களே. இந்தப் பரந்த உலகிற்கே நாகரிகத்தையும் பண்பாட்டையும் கற்றுத் தந்த பெருமை, நம் முன்னோர்களையே சாரும். தமிழ்ப் பாரம்பரியத்தில் உதித்த மரபு வழிப்பட்ட நெறிமுறைகள், இன்று நமது வாழ்க்கைப் பாடமாகவும் ஒரு படிப்பினையாகவும் விளங்குவதை நாம் அறிய முடிகிறது.  அதில் கலையின் ஒரு கூறாகக் ... Full story

(Peer Reviewed) நாட்டார் வழிபாட்டு மரபிலிருந்து மக்களை மடைமாற்றம் செய்த சமணம்

(Peer Reviewed) நாட்டார் வழிபாட்டு மரபிலிருந்து மக்களை மடைமாற்றம் செய்த சமணம்
முனைவா் பு.பிரபுராம் முதுமுனைவா் பட்ட ஆய்வாளா், தமிழ்த் துறை, காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகம், திண்டுக்கல்            நாட்டார் வழிபாட்டு மரபிலிருந்து மக்களை மடைமாற்றம் செய்த சமணம் யசோதர காவியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சண்டமாரி (நாட்டார் தெய்வம்) வழிபாட்டு மரபுகளையும் சமண தத்துவங்களையும் ஒப்பிட்டு ஆராய்வது, இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும். “நிறுவன மயமாக்கப்பட்ட சமயமான சமணம் தன் தத்துவத்தின் துணைகொண்டு நாட்டார் தெய்வ வழிபாட்டைக் கீழ்நிலைக்குத் தள்ளி, நாட்டாரைச் சமணச் சார்புடையோராக மாற்றியது” என்ற கருதுகோள் இவ்வாய்வில் கையாளப்பட்டுள்ளது. இக்கட்டுரைக்கான முதன்மைச் சான்றாதாரம், ... Full story

(Peer Reviewed) கொடுமணல் அகழாய்வுகளும் தொல்பொருட்களும்

(Peer Reviewed) கொடுமணல் அகழாய்வுகளும் தொல்பொருட்களும்
முனைவர் ஆ.ராஜா அருங்காட்சியகத் துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்-10 கொடுமணல் அகழாய்வுகளும் தொல்பொருட்களும் (தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகச் சான்றுகளின் அடிப்படையில்) கொடுமணல் என்ற ஊர், ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் காவிரியாற்றின் கிளை ஆறான நொய்யல் ஆற்றின் வடகரையில் சென்னிமலைக்கு மேற்கே 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து, இவ்வூரைக் ‘‘கொடுமணம்’’ என்று குறிப்பிடுகிறது. இத்தகைய சங்க கால இலக்கியங்களில் சிறப்பாகக் குறிப்பிடப்படும் கொடுமணலில் 1985-1986ஆம் ஆண்டுகளில் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையினரால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அத்தகைய அகழாய்வில் கண்டறியப்பட்ட பெருங்கற்காலத்தைச் சார்ந்த  ... Full story

(Peer Reviewed) புறநானூற்றில் பாடாண் திணை சுட்டும் தோற்றார் நிலை

(Peer Reviewed) புறநானூற்றில் பாடாண் திணை சுட்டும் தோற்றார் நிலை
முனைவா் பா. உமாராணி இணைப் பேராசிரியர், கற்பகம் உயா்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூா் புறநானூற்றில் பாடாண் திணை சுட்டும் தோற்றார் நிலை ஒரு படைப்பு தான் தோன்றிய சமூகத்தின் ஆகச் சிறந்த கூறுகளைத் தன்னுள்ளே கொண்டிருக்கும் என்பது இயல்பான ஒன்று. இதுவரை தோன்றிய இலக்கியங்களும், அவை சார்ந்த பின்னூட்டங்களும் நமக்கு இதையே மொழிகின்றன. ஒரு சமூகத்தின்  சிறந்த பண்பாட்டுக் கூறுகளை மட்டும் ஒரு இலக்கியம் தக்கவைத்துக் கொள்வதில்லை. அச்சமூகத்தில் மறைமுகமாகவும் எதிரிடையாகவும் தோன்றிய கருத்துகளையும் செயல்களையும் அவை பதிவு செய்து வருகின்றன என்பது அனைவரும் அறிந்த உண்மையே.... Full story

(Peer Reviewed) ஐந்திணையில்  பாலை நில உருவாக்கம்

(Peer Reviewed) ஐந்திணையில்  பாலை நில உருவாக்கம்
முதுமுனைவா் இரா. சங்கர் உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூா், வேலூா் மாவட்டம் ஐந்திணையில்  பாலை நில உருவாக்கம் சங்க இலக்கியம் ஐந்திணையை அடிப்படையாகக் கொண்டு அக்கால மக்களின் வாழ்க்கை முறையினைக் கூறும் வாழ்க்கைக் களஞ்சியமாகும்.  சங்க இலக்கியத்திற்கு முதன்மைப் பொருளாக விளங்குவது நிலமும் பொழுதுமே.  முதன்மைப் பொருளாக விளங்கும் நிலத்தினைச் சான்றோர்கள் நான்கு வகையாகப் பிரித்து ‘நானிலமென’ முறையாகக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தலெனப் பெயா் வைத்திருந்தனா்.  இருப்பினும், சங்க இலக்கியங்களில் ‘பாலை’ என்கின்ற ஒருவகை ... Full story

(Peer Reviewed) குதித்தெழும் பிரபஞ்சம் ஒப்புரு

ஸ்ரீ.நடராஜன் , முனைவர் ரெ.சந்திரமோகன் முதுஅறிவியல் மற்றும் ஆய்வு இயற்பியல் துறை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவகோட்டை மின்னஞ்சல்: natarajangravity@gmail.com, rathinam.chandramohan@gmail.com ==================================================== குதித்தெழும் பிரபஞ்சம் ஒப்புரு பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றியும் , பிரபஞ்சத்தின் மூலநிலை மற்றும் அதன் இயக்கத்தைப் பற்றியும், பெருவெடிப்புத் தத்துவத்தில் மாற்றங்களையும் இக்கட்டுரை வாயிலாகக் காணலாம். மேலும் பிரபஞ்சமானது குதித்தெழும் ஒப்புருவாக ஆய்வு செய்யப்படுவதையும் இக்கட்டுரையில் காண்போம். பிரபஞ்சத்தின் இயக்கத்தைப் பற்றிக் கணித முறையில் விளக்குவதற்குப் பல்வேறு ஒப்புருக்கள் இருந்தாலும், இயற்பியல் ரீதியிலான பெருவெடிப்புத் தத்துவமானது வெற்றிகரமான ஒப்புருவாக ... Full story

(Peer Reviewed) தமிழில் வினைப்பெயர்கள் – ஒரு தொடரியல் ஆய்வு

(Peer Reviewed) தமிழில் வினைப்பெயர்கள் - ஒரு தொடரியல் ஆய்வு
தி.மோகன்ராஜ் (முனைவர்ப் பட்ட ஆய்வாளர், இலக்கியத் துறை,  தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-613 010) (கட்டுரையாளர், தொல்காப்பியத் தொடரியல் நோக்கில் ஐங்குறுநூறு என்ற தலைப்பில் முனைவர்ப் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். இவரது மின் அஞ்சல் : mohr_d12@yahoo.co.in; கைப்பேசி : +91 99947 81727) ================================= தமிழில் வினைப்பெயர்கள் - ஒரு தொடரியல் ஆய்வு பெயர்ச்சொற்கள் தோற்றங்கொள்ளும் முறை ஒரு மொழியில் பெயர்ச்சொற்கள் நான்கு வகைகளில் புதியனவாக ஆக்கிக் ... Full story

(Peer Reviewed) ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பு மீட்டுருவாக்கம் (நற்றிணை 11-ஆவது பாடலை முன்வைத்து)

(Peer Reviewed) ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பு மீட்டுருவாக்கம் (நற்றிணை 11-ஆவது பாடலை முன்வைத்து)
(Peer Reviewed) ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பு மீட்டுருவாக்கம் (நற்றிணை 11-ஆவது பாடலை முன்வைத்து) முனைவர் ப. வேல்முருகன் தலைவர் & பேராசிரியர், தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் திருவாரூர் – 610 005. மின்னஞ்சல்: pdrvelmurugan@gmail.com; செல்பேசி    : 9488264166 இர. ஆனந்தகுமார் முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர் – 610 ... Full story

(Peer Reviewed) பிரபஞ்சம் ஒன்றுமில்லாத ஒன்றிலிருந்து உருவானதா? – இயற்பியல் ஆய்வு

நடராஜன் ஸ்ரீதர், சந்திரமோகன் இரத்தினம் முது அறிவியல் மற்றும் ஆய்வு இயற்பியல் துறை, ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி , தேவகோட்டை  natarajangravity@gmail.com, rathinam.chandramohan@gmail.com =========================================== இயற்பியல் ஆய்வுகள், அவ்வப்போது பல வியத்தகு முடிவுகளை தருகின்றன. இயற்பியல் ஆய்வுகளில் கணித அளவீடுகளின் தாக்கம் பல புதுமையான விளக்கங்களை, தீர்க்கமுடியாத சிக்கல்களுக்கு வழங்குகின்றன. இயற்பியலின் மிகப் பெரிய கேள்வி இப்பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்பதாகும். பிரபஞ்ச இயக்கவியலுக்குப் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் ஒரு வியத்தகு மாதிரியான, ஒன்றுமில்லாத ஒன்றிலிருந்து பிரபஞ்சம் எனும் கோட்பாட்டினைப் ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.