Author Archive

Page 1 of 41234

‘வல்லமை’யின் ஃப்ளிக்கர் குழுமம்

'வல்லமை'யின் ஃப்ளிக்கர் குழுமம்
அன்பு நண்பர்களே, ஆயிரம் வார்த்தைகளால் சொல்லிப் புரிய வைக்க வேண்டிய ஒரு விஷயத்தை ஒரு புகைப்படம் எளிதில் சொல்லி விடும். புகைப்படம் எடுத்தலென்பது ஓர் கலை மட்டுமல்ல, இனியதொரு பொழுதுபோக்குமாகும். நம்மைக் கவர்ந்த காட்சிகளைப் பதிவு செய்யவும், ஆவணப்படுத்தவும் இக்கலையை விட மிகச் சிறந்தது ஏதுமில்லை. புகைப்படக்கலையில் ஆர்வமிக்க நண்பர்கள் ஒன்று கூடி, தத்தமது புகைப்படங்களைப் பார்வைக்கு வைத்து நிறை குறைகளை அலசிக்கொள்ளும் புகைப்படக்குழுமங்கள் இணையத்தில் நிறையவே உண்டு. இவற்றில் பங்கேற்பதன் மூலம் நம் ... Full story
Tags:

சமர்க்களம்

சமர்க்களம்
சாந்தி மாரியப்பன் வீடெங்கும்ஒழுங்கற்றிருப்பதாக நினைத்துஅடுக்கிட முனையும் போதுதான்பரபரக்க ஆரம்பிக்கிறது அதுவும்.'நானும்..நானும்..' என்றபடிப் பாய்ந்தோடி வந்துஒழுங்குபடுத்திடுவதாய் எண்ணிக்கலைத்து விடுகிறதுபிஞ்சு விரல்களால்.. குழந்தையின் இடுப்பிலேறிக்கொண்டகுழந்தைப்பொம்மையை நோக்கியபடிஒவ்வொரு பொம்மையும்விடை பெற்றுச் சென்று கொண்டிருக்கின்றனசற்றே பொறாமையுடனும்,மறுபடியும் விளையாட வருவதாய்வாக்குறுதிகளுடனும்.. குதிரைச்சவாரி செய்ய நேர்ந்த யானையும்வண்டியிலேறிய ஓடமும்முன்வினைத்தவத்தால்தெய்வஸ்பரிசம் பெற்றுப்புனிதம் பெற்ற சமர்க்களத்தைஒழுங்குபடுத்தியதாய் நினைத்துஒதுக்கி நிமிர்ந்த பின்னர்அழகாகவே இருக்கின்றன,மறுபடியும் இறைந்து கிடக்கும் ... Full story

வாழ்தலின் ருசி

வாழ்தலின் ருசி
சாந்தி மாரியப்பன் எதையாவது பேச வேண்டுமென்பதற்காக எதையோ பேசிக் கடுப்படைய வைப்பதைக் காட்டிலும் எதுவுமே பேசாமல் மௌனம் காப்பதே மேல். நிமிடத்தின் கடைசித்துளிகள் சொட்டித்தீரும் வரைக்கும் அந்த நிமிடத்தின் மதிப்புப் புரிவதில்லை. நிகழ்காலத்தில் என்ன கனவு காண்கிறோம் என்பதே நாம் வருங்காலத்தில் என்னவாக ஆகப்போகிறோம் என்பதற்கு அடிப்படையான முதல் விஷயம். அஸ்திவாரத்தைப் பலப்படுத்தினால் அன்றோ கட்டிடத்தின் ஆயுள் கூடும்.. வாழ்வின் இறுதிக்கணம் வரை தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருப்பதில்தான் வாழ்தலின் ருசி ... Full story

பரஸ்பரம்

பரஸ்பரம்
சாந்தி மாரியப்பன் மதுபானக் கடையினின்றும்கசிந்த கோடி சூரிய ஒளிவெள்ளம்குளிப்பாட்டி விட்டது,அருகிருக்கும் கோவிலையும்கொஞ்சம்,போனால் போகிறதென்று.. இருண்டிருந்த கோயிலில்நிவேதனத்துக்கும் வழியின்றி,வெகு நாட்களாய்ச்சோர்ந்தமர்ந்திருந்த கடவுள்,நிதானம் தப்பிய நிலையிலேனும்எவரேனும் வருவரோவென்றுவிழி பூத்துக் காத்திருக்கிறார்நம்பிக்கையுடன்..பரஸ்பரம் குறைகளைச் சொல்லியழ.. Full story

வந்தாள் சித்திரை மகள்..

வந்தாள் சித்திரை மகள்..
சாந்தி மாரியப்பன் இதோ, இன்னுமொரு புத்தாண்டு. வாழ்வின் கணக்கில் இன்னுமொரு பக்கம். கர வருடத்தை வழியனுப்பி விட்டு நந்தன வருடம் பிறந்திருக்கிறது. இந்தச் சித்திரை மாதம் முதல் தினத்தை நாம் தமிழ்ப்புத்தாண்டு தினமாகக் கொண்டாடுகிறோம். என்னதான் தமிழ்ப்புத்தாண்டு என்றாலும் இது தமிழகத்தின் தென் மாவட்டமான கன்னியாகுமரியில், முக்கியமாக எங்கள் நாஞ்சில் நாட்டுப்பகுதியில் இன்றும் கேரளச் சாயலுடன் விஷூக்கனி கண்டே கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டத்தின் தாக்கத்தில் தமிழகத்தின் ஒரு ... Full story

எவரெஸ்டும் தொட்டு விடும் தூரம்தான்

எவரெஸ்டும் தொட்டு விடும் தூரம்தான்
சாந்தி மாரியப்பன் நறுக்.. துணுக் (22) நேபாள-திபெத்திய எல்லையிலிருக்கும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிச் சாதனை புரிய வேண்டுமென்று ஆசைப்படாத மலையேறுபவர்களே இருக்க முடியாது. அவர்கள் தம் வாழ்நாளில் ஒரு முறையாவது இம்முயற்சியில் இறங்காமல் இருக்க மாட்டார்கள். அவர்களைத்தவிர உலகிலேயே மிக உயர்ந்த அந்தச் சிகரத்தைக் கண்ணால் கண்டு திருப்திப் பட்டுக்கொள்ளும் நம்மைப் போன்ற சாமானியர்களும் இனிமேல் எவரெஸ்டைத் தொடலாம். தொடுவதென்ன?.. நம் கையிலும் எளிதாக எடுத்துச் செல்லலாம். ஆம்,.. எவரெஸ்டிலிருந்து எடுத்து வரப்பட்ட ... Full story

வேரிலும் பூக்கலாம் வசந்தங்கள்

வேரிலும் பூக்கலாம் வசந்தங்கள்
சாந்தி மாரியப்பன்   பெருவெளியெங்கும் பரந்து விரிந்திருந்தகூட்டுக்குடும்ப விழுதுகள்அற்றும் இற்றும் போன பின்தனிமை கொன்று கொண்டிருக்கும்அந்த ஒற்றை மரத்தில்மிச்சமிருக்கிறது பசுமை.. இன்னும்,மனித நேயத்தைப் போலவே.  சென்றவர்களெல்லாம் மீண்டும் வரக்கூடுமென்றமீதமிருந்த நம்பிக்கையுடன்ஆகாயத்துடன் உரையாடியபடிமேகங்களை எதிர் நோக்கும் பொழுதுகளிலும்ஊமையாகி விடாமல் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறதுபறவைகளின் தாலாட்டுக்குரல்,இன்னும் வெட்டப்படாத கிளைகளில்.  தனிமைக்கடத்தியாய்ஏகாந்தம் கலைத்த தென்றலோவனமெங்கும் பூச்சொரிகிறதுஏக்கம் சுமந்த வேர்களில்.. கானல் நீருக்காய்க் காத்திருந்த ஏக்கத்தில்வேரடி வசந்தத்தை மறந்ததையெண்ணி... Full story

மராட்டியப் புத்தாண்டு – குடி பாட்வா

மராட்டியப் புத்தாண்டு - குடி பாட்வா
சாந்தி மாரியப்பன் தமிழ்நாட்டில் விஷூ என்றும், ஆந்திராவில் யுகாதி என்றும் கொண்டாடப்படுவது போல் மஹாராஷ்டிராவில் “குடி பாட்வா” என்ற பெயரில் புது வருஷம் கொண்டாடப்படுகிறது. மராட்டியர்களும் வருடத்தின் முதல் மாதத்தை 'சைத்ர' என்றே அழைக்கிறார்கள். குடிபாட்வா(Gudi Padwa) இங்கே வசந்தத்தின் முதல் தினத்தைக் குறிக்கிறது. ராவணனை அழித்தபின் ராமன் அயோத்திக்கு வந்த நாள்தான் இது என்று சிலர் சொல்கிறார்கள். இல்லை.. இன்றைய தினம் ராமன் முடி சூட்டிய நாள் என்று சிலர் சொல்கிறார்கள். ... Full story

பிழைத்துக் கிடக்கிறோம்

பிழைத்துக் கிடக்கிறோம்
சாந்தி மாரியப்பன் மனிதம் விற்று நடத்தியசுயநல வியாபாரத்தில்மிஞ்சியவைமனிதனின் கணக்கில் லாபமாகவும்இயற்கையின் கணக்கில் நட்டமாகவும்வரவு வைக்கப்பட்டு விட. கதிர்வீச்சு அழித்திட்டஎங்கள் குழந்தைகளின் நினைவுகளைச்சுமந்து கொண்டு..சோலைகளிலும் வீட்டு முற்றங்களிலும்விட்டு விடுதலையாய்த்திரிந்தநாட்களை அசை போட்டபடிஅலைந்து திரிகின்றோம் அங்குமிங்கும்பகடைகளாய்,நீங்கள் ஆடும் சதுரங்கத்தில்.. சொந்த மண்ணிலேயே அகதிகளானஎங்கள் அபயக்குரல்கள்எதிரொலிக்க வழியின்றிஎங்கள் அலகினுள்ளேயேஉங்கள் செவிகளை எட்டாவண்ணம்.உறைந்து போய் விட எங்களுக்கான வாழ்வாதாரங்கள்கலைக்கப்பட்டு விட்ட பின்னும்பிழைத்துக் ... Full story

சின்னஞ்சிறு உலகம்

சின்னஞ்சிறு உலகம்
சாந்தி மாரியப்பன் உலகிலுள்ள உயிர்களின் மொத்த எண்ணிக்கையில் பூச்சிகள் மட்டுமே எண்பது விழுக்காடுகளுக்கு மேல் இருக்கின்றன. அந்த சின்னஞ்சிறு உலகத்தின் சில பிரதிநிதிகள் இங்கே பார்வைக்கு வந்திருக்கிறார்கள். Full story

ஹோலிப்பண்டிகை

ஹோலிப்பண்டிகை
சாந்தி மாரியப்பன் ஹோலி வடநாட்டுப் பண்டிகையா??.. இருக்கலாம்.. இல்லாமலும் இருக்கலாம். ஏனென்றால் தமிழ்நாட்டிலும் கொண்டாடப் படுகிறதே! சமீப காலங்களில் கொண்டாடப் படுவதைச் சொல்லவில்லை. நாம் காமன் பண்டிகை என்று கொண்டாடுகிறோமே. அந்தப் பண்டிகைதான் நம்மூர் ஹோலி. ஹோலி என்ற சொல்லுக்கு எரித்தல் என்று அர்த்தமாம். இதுதான் இந்த இரண்டு பண்டிகைகளுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை. வடக்கே ஹோலிகா எரிக்கப்பட்டதைக் குறிக்கும் ஹோலிப்பண்டிகை தெற்கே மன்மதன் எரிக்கப்பட்டதைக் குறிக்கிறது. திரிபுரம் எரித்த ... Full story

மகளிர் வாரம் – குடத்திலிட்ட தீபம்-சாவித்திரிபாய் ஃபுலே

மகளிர் வாரம் - குடத்திலிட்ட தீபம்-சாவித்திரிபாய் ஃபுலே
சாந்தி மாரியப்பன் “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்எட்டுமறிவினில் ஆணுக்கிங்கேபெண்இளைப்பில்லை காண்”என்று பெண் விடுதலைக்கும்மி பாடிய பாரதியின் வாக்கிற்கேற்பப் பெண்கள் இன்று எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். ஆணுக்குப்பெண் சமமாக, ஏன்! ஒரு படி மேலாகவே இன்று முன்னேறியுள்ளனர். விண்வெளிக்குச் சென்று சாதனை புரிந்த கல்பனா சாவ்லா முதல் இந்தியாவின் உயர்பதவியை அலங்கரிக்கும் பிரதீபா பாட்டில் ... Full story

மகளிர் வாரம் – குடத்திலிட்ட தீபம்

மகளிர் வாரம் - குடத்திலிட்ட தீபம்
சாந்தி மாரியப்பன் “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்எட்டுமறிவினில் ஆணுக்கிங்கேபெண் இளைப்பில்லை காண்” என்று பெண் விடுதலைக்கும்மி பாடிய பாரதியின் வாக்கிற்கேற்பப் பெண்கள் இன்று எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். ஆணுக்குப்பெண் சமமாக, ஏன்! ஒரு படி மேலாகவே இன்று முன்னேறியுள்ளனர். விண்வெளிக்குச் சென்று சாதனை புரிந்த கல்பனா சாவ்லா முதல் இந்தியாவின் உயர்பதவியை ... Full story

வருமுன் காப்போம்

வருமுன் காப்போம்
சாந்தி மாரியப்பன் நறுக்.. துணுக் (18) கான்சர் எனும் கொடிய நோயை உண்டாக்குவதில் முக்கியப்பங்கை புகையிலையும் புகையிலையைப் பயன்படுத்திச் செய்யப்படும் போதைப்பொருட்களும் வகிக்கின்றன. உடல்ரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் கெடுதல் விளைவித்துப் பெண்களைக் கண்ணீர்க் கடலில் தள்ளும் இந்தப் பழக்கத்தை ஒழிக்க அரசு தன்னாலான முயற்சிகளை எடுத்து வந்தாலும் முழுவதுமாக ஒழிக்க முடியாததாகவே இருக்கிறது. அதிலும் 2009-ம் வருடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பதின்மூன்றிலிருந்து பதினைந்து வயதுக்குட்பட்ட சின்னஞ்சிறார்களில் 19% சிறுவர்களுக்கும் 8.3% சிறுமிகளுக்கும் புகைக்கும் பழக்கம் ... Full story

உலகிலேயே மிகக் குள்ளமான மனிதர்- கின்னஸில் இடம் பெற்ற சந்திர பகதூர்

உலகிலேயே மிகக் குள்ளமான மனிதர்- கின்னஸில் இடம் பெற்ற சந்திர பகதூர்
சாந்தி மாரியப்பன் நறுக் துணுக்.. (17) உலகிலேயே உயரம் குறைந்த மனிதராக நேபாள நாட்டைச் சேர்ந்த சந்திர பகதூர் டாங்கி என்பவர் அறிவிக்கப்பட்டு கின்னஸ் சாதனை வரலாற்றில் இடம் பெற்றுள்ளார். இவரது உயரம் 21.5 அங்குலங்களேயாகும் (54.6 செ.மீ). இதன் மூலம் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 59.9 செ.மீ உயரம் கொண்ட ஜுன்ரே பாலாவிங் என்பவரின் சாதனை முறியடிக்கப் பட்டுள்ளது. 72 வயதான சந்திர பகதூர் காட்மண்டுவிலிருந்து ... Full story
Page 1 of 41234
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.