Author Archive

Page 1 of 3123

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 39

  நினைவு கூரல், நினைவு கூறல் எது சரி? -சிறீதரன் கூரினார் என்று கூறுதல் என்பது சரியன்றுதானே? கூரப்பட்டது என்பது செயப்பாட்டு வினைதானே? ஆனால் சேரப்பட்டது என்னும் செயப்பாட்டு வினை வடிவம் கிடையாதே?-C.R. செல்வக்குமார். கூகுளில் தமிழ்மன்றக் குழுவினரிடம் நடந்த விவாதம் நினைவுகூரல் / கூர்தல் என்பதே வழக்கு. சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியில் ‘கூர்’ என்னும் வினைக்குக் கொடுக்கப்பட்டுள்ள பல பொருள்களில் ‘மிகு’ என்னும் பொருளே இலக்கியத்தில் அதிகமாக வருவது. ஓருயிரிலிருந்து பல்லுயிர் ஆதல் என்னும் பொருளில் கூர்தலறம் ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 38

    கேள்வி : பாரம்பரியம் என்பது சரியா அல்லது பாரம்பரீயம் என்பது சரியா?   பதில் : சொல்லெழுத்தை (spelling) பயிலுதல் எழுத்தறிவு (literacy) பெறுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பேசுவது போலவே எந்த மொழியும் எழுதுவதில்லை. அதனால் எழுத்தறிவில் சொல்லெழுத்தைப் பயிலுவதற்கு அதிகக் கவனம் தரப்படுகிறது. எந்த மொழியிலும் சொல்லின் உச்சரிப்பு மாறும் வேகத்தில் சொல்லின் எழுத்து வடிவம் மாறுவதில்லை. தமிழைப் பொறுத்தவரை பேச்சில் உச்சரிப்பு மிகவும் மாறியிருக்கிறது. ஆனால் சொல்லெழுத்து மாறியது மற்ற மொழிகளில் மாறியதை விட மிகவும் குறைவு. சங்ககாலக் குரீஇ என்னும் ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 37

கேள்வி தற்காலத் தமிழ் - மலையாளத்துக்கு இடையே இயந்திர மொழிபெயர்ப்பு முயற்சி செய்யும் போது இலக்கண மாற்றமும் நிகழவேண்டும். அவ்வாறெனில் இலக்கணத்தில் எவ்வெக்கூறுகள் மாற்றப்பட வேண்டும்? மலையாளம் தமிழ் மொழியோடு மிகவும் ஒன்றுபட்டு இருப்பதால், தற்காலத்தமிழ் இலக்கணத்திற்கு எழுதப்பட்ட நூல்களை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் இலக்கண அமைப்பின் கண்ணோட்டத்தோடு மலையாள மொழியைப் பார்க்கலாமா? எல்லா மலையாள இலக்கணக் கூறுகளையும் தமிழை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஒப்பிட்டு நோக்கலாமா? விஜயராஜேஸ்வரி, கேரளப் பல்கலைக்கழகம் பதில் இயந்திர மொழிபெயர்ப்பைப் பற்றிப் பேசும்போது, சில உண்மைகளை மனதில் கொள்ள வேண்டும். மனிதத் தலையீடு இல்லாமல் ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 36

  கேள்வி : இத்தனை காலமாக இந்தியாவின் ஒரே செம்மொழி என்று கூத்தாடப்பட்டு வந்த வடமொழிக்கு இல்லாத, அதேபோது தமிழுக்கு மட்டுமே இருப்பதாக, நிறுவப்பட்ட சிறப்புகள் எவை? அவை நிறுவப்பட்ட பின்தான் - வேறுவழியின்றி - நம்மை மைய அரசு 'கண்டு' கொண்டதாக அறிகிறேன். தொன்மை, முன்மை, எண்மை, ஒண்மை, இனிமை தனிமை, இளமை, வளமை, இறைமை, மறைமை, தாய்மை, தூய்மை, அம்மை, செம்மை, இயன்மை, வியன்மை ஆகிய பதினாறும் செம்மொழிக்கு இலக்கணம் என்று படித்தேன். இவற்றில் வடமொழி பெறத் தவறிய தகுதிகள் ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 35

  இ.அண்ணாமலை   கேள்வி: பேச்சுத் தமிழுக்கும் இலக்கியத் தமிழுக்கும் உள்ள வேறுபாடுகளை இலக்கணக் கூறுகளைக் கொண்டு நிறுவ இயலுமா? காலப்போக்கில் இவ்வேறுபாடுகள் வளர்ந்திருக்கின்றனவா? -- விஜயலக்ஷ்மி   பதில்: இலக்கிய மொழி நடைக்கும், முக்கியமாகக் கவிதை மொழி நடைக்கும், பேச்சு மொழி நடைக்கும் எந்த மொழியிலும் வேறுபாடுகள் இருக்கும். தொல்காப்பியர் துவங்கி நம் இலக்கண ஆசிரியர்கள் செய்யுள் வழக்கையும் உலக வழக்கையும் வேறாகப் பார்க்கிறார்கள். கவிதை மொழி நடை எழுத்து மொழி ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 34

இ. அண்ணாமலை கேள்வி:அல்ல என்ற சொல்லைப் பன்மையில் மட்டுமின்றி, ஒருமையிலும் பலர் பயன்படுத்துகிறார்கள் (அப்படி அல்ல, நான் சொல்வது அது அல்ல); இல்லை, அல்ல, அன்று ஆகிய சொற்கள், எந்தெந்த இடங்களில் இடம் பெற வேண்டும்? - அண்ணாகண்ணன் பதில்: தமிழ் வாழும் மொழி. உயிருள்ள எதுவும் வளரும்; மாறும். மொழியில் தோன்றும் மாற்றங்களும் வளர்ச்சியின் வெளிப்பாடுகளே. நம் வீட்டுப் பையனுக்கு மீசை வளருவது தடுக்க முடியாத இயற்கையான வளர்ச்சி. மீசை வளர வேண்டாம் என்று மனிதன் விதி ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 33

சிகாகோ பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி: ஒன்று என்ற சொல்லைக் கொச்சை வழக்கில் எழுதும்போது, ஒன்னு / ஒண்ணு என இரு வகையாக எழுதுகிறார்கள். இது போன்றே மூன்று என்பதை மூனு / மூணு என்றும் தோன்றுகிறது என்பதை தோனுது / தோணுது என்றும் எழுதுகிறார்கள். இவற்றில் எது சரி? –அண்ணாகண்ணன் பதில்: பேச்சுத் தமிழைக் கொச்சை வழக்கு என்னும்போது அது தரமற்றது என்னும் பொருள் தொனிக்கிறது. கொச்சை வழக்கு ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 32

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 32
சிகாகோ பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:   திரு தமிழன்பன் அவர்கள் எழுப்பிய கேள்வி : செம்மொழியின்  இன்றைய பயன் அதிலமைந்த  செவ்விலக்கியம் இன்றைய இலக்கியத்திற்கு  ஆதர்சமாக இருக்கலாம் என்பது மட்டும்தானா? பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்: ஒரு சமூகத்தின் பண்பாட்டுச் செயல்களில் செம்மொழியின் ஆதர்சம் முக்கிய  பங்கு வகிக்கிறது. ஆதர்சம்  வெளிப்பட இலக்கியம் ஒரு  இடம். தமிழின் செவ்விலக்கியத்தின் சிறப்பால் ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 31

சிகாகோ பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:   செம்மொழி இளம் அறிஞரும் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியருமான முனைவர் வா.மு.சே. ஆண்டவர் எழுப்பிய கேள்வி – 5: செம்மொழித் திட்டத்தின் கீழ் செய்யக்கூடிய பணிகளைப் பற்றி உங்கள் கருத்துகள் என்ன? பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்: ஒரு செம்மொழிக்குச் செவ்விலக்கியம் இருக்கும். தமிழ் எழுதப்படுவதற்கு முன்னால் எழுதப்பட்ட சில மேற்காசிய மொழிகள் செம்மொழிகள் என்று கருதப்படுவதில்லை. இவற்றில் செவ்விலக்கியம் இல்லாததும் ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 30

சிகாகோ பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:   செம்மொழி இளம் அறிஞரும் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியருமான முனைவர் வா.மு.சே. ஆண்டவர் எழுப்பிய கேள்வி - 4: உலக நாடுகளில் தாய்மொழி வழிக் கல்வியினால் ஏற்பட்ட ஆராய்ச்சி வளர்ச்சி நிலைகளைத் தமிழ்நாட்டின் தமிழ்வழிக் கல்வியோடு ஒப்பிட்டுக் கருத்துரைக்க வேண்டுகிறேன். பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்: ஆராய்ச்சி வளர்ச்சி ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 29

சிகாகோ பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி: செம்மொழி இளம் அறிஞரும் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியருமான முனைவர் வா.மு.சே. ஆண்டவர் எழுப்பிய கேள்வி - 3: உலகளாவிய நிலையில் ஒப்பியல் துறைகளில் நடைபெறும் தமிழ் ஆய்வுகள் குறித்துத் தங்கள் மதிப்பீடு என்ன? பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்: ஒப்பியல் இலக்கியத் துறையை மட்டும் இந்தப் பதிலில் எடுத்துக்கொள்கிறேன். இலக்கிய ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 28

சிகாகோ பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி: செம்மொழி இளம் அறிஞரும் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியருமான முனைவர் வா.மு.சே. ஆண்டவர் எழுப்பிய கேள்வி - 2: அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் Area Studies வழியாக நடைபெற்ற மொழிசார் ஆராய்ச்சி வளர்ச்சி நிலைகளை மதிப்பிட வேண்டுகிறேன். பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்: காலனிய காலத்தில் தங்கள் ஆதிக்கத்தில் இருந்த காலனிகளின் சமூகம், ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 27

பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி: செம்மொழி இளம் அறிஞரும் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியருமான முனைவர் வா.மு.சே. ஆண்டவர் எழுப்பிய கேள்வி -1: தமிழகப் பல்கலைக்கழகங்களில் நிகழும் தமிழியல் ஆய்வுகளையும் அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் நிகழும் தமிழியல் ஆய்வுகளையும் ஒப்பிட முடியுமா? பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்: ஐரோப்பிய அரசுகள் இந்தியாவோடு கொண்ட ஆதிக்க உறவின் ஒரு விளைவு, இந்தியவியல் (Indology) என்னும் ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 26

பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி: அண்ணாகண்ணன் எழுப்பிய கேள்வி: ஆங்கில ஒலிபெயர்ப்பில் ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் பெரும் வேறுபாடு உள்ளது. முக்கியமாக T, D ஆகியவற்றை ர, ற என்ற எழுத்துகளால் ஈழத் தமிழர்கள் ஒலிபெயர்க்கின்றனர். நெடிலைக் குறிலாக எழுதுகின்றனர். http://tamilcnn.com தளத்திலிருந்து 2011 மார்ச்சு 29 அன்றைய தேதியில் எடுத்த சில சான்றுகள்: ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 25

பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி: அண்ணாகண்ணன் எழுப்பிய கேள்வி: அண்மையில் மறவன்புலவு க.சச்சிதானந்தன், பா.சசிரேகா ஆகியோருடன் உரையாடுகையில் சென்னை என்பதை ஆங்கிலத்தில் CHENNAI என எழுதுவது தவறு என்றும் ‘ச்செ‘ என்ற ஒலி, தமிழில் மொழிமுதலில் வராது என்றும் குறிப்பிட்டனர். இதே திசையில் சிந்தித்தபோது, சேப்பாக்கம் என்பதை Chepauk என்றும் சித்தூர் என்பதை  Chittoor என்றும் எழுதுவது நினைவுக்கு வந்தது. ஆனால், செம்பனார்கோவில் என்பதை ... Full story
Page 1 of 3123
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.