- Monday, December 26, 2011, 15:05
- Featured, கட்டுரைகள்
- 0 views
அண்ணாமலை சுகுமாரன்
நல்லதொரு புத்தகத்தை ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கும் போது, எத்தனை வேண்டிய நண்பரோ, அல்லது மகளோ, மனைவியோ எதிரில் வந்து எத்தனைக் கூவிழைத்தும், காதுகளிரண்டும் திறந்தே இருக்கும் போதும் காதில் விழுவதில்லை.
எத்தனையோ முறை கண்கள் இரண்டும் திறந்திருக்கும் போதிலும், ஆழ்ந்த ஒரு சிந்தனையில் தீவிரமாக இருக்கும் போது எதிரில் வந்து நிற்கும் எவரும் கண்ணில் தெரிவதில்லை.
புலன்களுக்கும் மனதிற்கும் தொடர்பில்லாது, புலன்கள் வேலை செய்வதில்லை, மனம் செயல் படவோ ஆன்மாவின் ஒளி அதன் மேல் ...
Full story
- Saturday, December 10, 2011, 2:31
- இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
அண்ணாமலை சுகுமாரன்
இளமையில் கல் என்றால் இளமையில் "கல்" போல இருக்கவேண்டும் என்றா பொருள் கொள்வோம் "கல்" என்றால் கல்வி பெறு என்றுதானே பொருள் கொள்வோம் .
ஆனால் இளமையில் கல் போல் இருந்த நம்மை நல்ல ஒரு மனிதனாக ,தேர்ந்த ஒரு கலைப் பண்புடைய அழகிய சிற்பம் போல் நம் வாழ்க்கையை அமைப்பதற்கு ,அந்தக் கல்லிலே இருந்த வேண்டாத கல்லின் பகுதியை காலம் என்னும் சிற்பி சிறிது சிறிதுசிறிதாக செதுக்கி ,சிறந்ததொரு வாழ்வியல் சிற்பமாக நமது ...
Full story
- Thursday, December 8, 2011, 11:08
- home-lit, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
அண்ணாமலை சுகுமாரன்
'பிரக்ஞானம் பிரமம்' என்கிறது ரிக் வேதம்.
"மெய்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
அஞ்ஞானந்தனை அகல்விக்கும் நல்லறிவே"
என்கிறார் சிவபுராணத்தில் மாணிக்கவாசகர். இத்தகைய ஆதியும் அந்தமும் இல்லாத, எல்லையற்ற அறிவுக்கு அறிவான, பேரறிவின் பேருவமே இறைவனின் இயல்பு.
எந்த வாக்கினாலும், எத்தகைய விரிவுரையாலும், பிற பொருள்களைப் போல் அத்துணை எளிதாக அறிய முடியாத அறிவின் மூலப்பொருளே இறையாகிய பரம்பொருள். அத்தகைய அறிவு, எவ்வாறு உணர்வாகப் பரிமளிக்கிறது என ஓரளவு விரிவாகச் சென்ற ...
Full story
- Thursday, November 24, 2011, 14:08
- இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
அண்ணாமலை சுகுமாரன்
"ஊனில் உயிரில் உணர்வினில்
நின்ற ஒன்றை உணர்ந்தேனே "
என்று நம்மாழ்வார் புகல்வது போல் ஊனில் உயிரில் மட்டும் இல்லாமல் உணர்வினும் இறையின் இருப்பை உணர்வதே உடம்பைப் பெற்ற பெரும் பயன் என்று முந்தையக் குறளில் பார்த்தோம் .
இந்த உணர்வு என்பது உணர்ச்சி இல்லை. நாம் இனிப்பை உணர்கிறோம், குளிரை உணர்கிறோம், அன்பை உணர்கிறோம், கோபத்தை உணர்கிறோம். ...
Full story
- Sunday, November 13, 2011, 9:43
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
அண்ணாமலை சுகுமாரன்
வீட்டு நெறிப் பால், அதிகாரம் 2 – உடம்பின் பயன்
உணர்வாவ வெல்லா முடம்பின் பயனே
யுணர்க உணர்வுடையார்
உடம்பினால் ஏற்பட்ட பயனெல்லாம் அறிவினை உண்டு பண்ணுவதற்கே ஆகும். இதை அறிவுள்ளவர்கள் அறிந்து கொள்வார்கள். என்கிறது இந்தக் குறள். உடம்பில் பல உணர்வு உண்டு. அழியும் உணர்வெது, அறிவுடன் கூடிய அழியா உணர்வெது என உணர்வதே அறிவாகும்.
உடம்பின் பயன், உடம்பினுள் ...
Full story
- Saturday, October 15, 2011, 2:18
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
அண்ணாமலை சுகுமாரன்
வீட்டு நெறிப் பால்
அதிகாரம் 2 - உடம்பின் பயன்
சிறிய இடைவெளி இந்தத் தொடரில் விழுந்து விட்டதால், சிறியதொரு முகவுரையுடனேயே மீண்டும் ஆரம்பிப்பதே உசிதம் என நினைக்கிறேன்.
சற்று ஆழச் சிந்தித்துப் பார்க்கும் போதே, நாம் வாழும் இந்தப் பிரம்மாண்டப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியான மனித உடலைக் கொண்டு நாம் வாழும் வாழ்க்கை என்பதன் பொருள்தான் என்ன ? என்ற எண்ணம் ...
Full story
- Thursday, August 4, 2011, 21:49
- பொது
- 0 views
அண்ணாமலை சுகுமாரன்
8 ) தொக்குதிரத் தொடுன் மூளைநிணமென்பு
சுக்கிலந் தாதுகளெழு
தொக்கு = தோலால் போர்த்த
தேகம் உதிரம் = குருதி, ரத்தம்
ஊண் = தசை
மூளை = மூளை
நிணம் = கொழுப்பு
என்பு = எலும்பு
சுக்கிலம் = உயிர்சத்தி ,சுக்கிலம் அல்லது சுரோணிதம்
தாதுக்கள் ஏழு = ஆகியவை ஏழு தாதுககளாகும்
இந்த தேகமானது தோலும் ,இரத்தமும் ,ஊனும் ,மூளையும் கொழுப்பும் ,எழும்பும் ,சுக்கிலமும் ஆகிய ஏழு தாதுக்களால் ஆகியது .
9) மண்ணோடு நீரங்கி மதியோடு காற்றிரவி
விண்ணெச்ச மூர்த்தியோடெட்டு
மண் = நிலம் எனும் பிருத்வி
நீர் = தண்ணீர் எனும் அப்பு
அங்கி = தீ எனும் தேயு
மதி ...
Full story
- Monday, July 25, 2011, 9:17
- கட்டுரைகள்
- 0 views
அண்ணாமலை சுகுமாரன்
5) நிலமைந்து நீர்நாங்கு நீடங்கி மூன்றே
யுலவையிரண் டொன்று விண்
நிலம் = பிருத்துவி எனும் நிலம்
ஐந்து = ஐந்து பகுதி ஆகவும்
நீர் = அப்பு எனும் நீர்
நான்கு = நான்கு பகுதியாகவும்
நீடு = நீண்ட
அங்கி = தேயு எனும் நெருப்பு
மூன்று = மூன்று பகுதியாகவும்
உலகை = வாயு எனும் பூதம்
இரண்டு = இரண்டு பகுதியாகவும்
விண் = ஆகாயம் எனும் பூதம்
ஒன்று = ஒரு பகுதியாகவும்
பஞ்ச பூதங்களான நிலம் ...
Full story
- Friday, July 8, 2011, 11:37
- பொது
- 0 views
அண்ணாமலை சுகுமாரன்
முதல் பால் ---வீட்டுநெறிப் பால்
அதிகாரம் ௧ ( 1 ) பிறப்பின் நிலை
உடலின் 96 தத்துவங்களில் ஐந்து தன்மாத்திரைகள் ஆசையுடன் கூடி, புலன்களுடன் செயல்படும் போது வாழ்வு குழப்பமடைகிறது என்பதை முந்தையக் குறளில் கண்டோம்.
அதைப் படித்த சிலர் என்னிடம் தொலைபேசியில் பேசி சில வினாக்களை எழுப்பினார்கள். ஆசையில்லாத மந்த நிலை தான் வேதாந்தத்தின் லட்சியமா? வாழ்வை அப்படித்தான் ...
Full story
- Saturday, June 25, 2011, 20:33
- பத்திகள்
- 0 views
அண்ணாமலை சுகுமாரன்
முதல் பால் ---வீட்டுநெறிப் பால்
-------------------—————————————
அதிகாரம் ௧ ( 1 ) பிறப்பின் நிலை
============================
இதுவரை ஔவையின் ஞானக் குரலில் முதல் இரண்டு குறள்களைப் பார்த்தோம் .முதல் குறள் அனைத்து அற நூல்களைப் படிப்பதின் பயன் 'ஆதியாக நின்ற அறிவை உணர்வதே' என்றது .இரண்டாவது குறள் பரம்பொருளின் சக்தியுடன் கூடிய அனைத்துப் பிறப்புக்களும் ஐம்பூதங்களையும் ,அது பல விகிதத்தில் மாறி மாறி 'தரமாறிடில்', பஞ்சீகரணம் எனும் வினை கொண்டு பிறப்பு அமைகிறது என்றது .
நூல்கள் படித்ததின் பலன்கள் ...
Full story
- Saturday, June 18, 2011, 16:32
- பத்திகள்
- 0 views
அண்ணாமலை சுகுமாரன்
முதல் பால் ---வீட்டுநெறிப் பால்
-------------------—————————————
அதிகாரம் ௧ ( 1 ) பிறப்பின் நிலை
============================
ஔவையின் முதல் குறள்
நூல்கள் கற்பதன் பயன் "ஆதியாய் நின்ற அறிவினை " உணர்வதே என்று இயம்பி தொடங்கியது . திருவள்ளுவரின் திருக்குறள் போல் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து என்பதற்காக பத்துக்குறள்கள் எனப் பரவாமல் பிறப்பின் நிலைஎனும் பொருளுக்கு ...
Full story
- Saturday, June 11, 2011, 9:13
- பத்திகள்
- 0 views
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
--- அண்ணாமலை சுகுமாரன்
அதிகாரம் 1 =வீட்டுநெறிப் பால்
---------------------------------------
பிறப்பின் நிலை
============================
1 ) ஆதியாய் நின்ற வறிவு முதலெழுத்
தோதிய நூலின் பயன் .-----
இறைவனைப் பாடும் பாடலொன்று' ஓசை ஒலி எல்லாம் ஆனாய் நீயே ' என்கிறது .' நாதபிந்து 'என்கிறார் அருணகிரி நாதர்
இந்த உலகம் தோன்றும் முன்பே ஓசை இருந்தது .
இந்த ஒலியில் இருந்துதான் உலகம் படைக்கப்பட்டது என சாஸ்திரங்கள் ...
Full story
- Sunday, June 5, 2011, 0:06
- பத்திகள்
- 0 views
அண்ணாமலை சுகுமாரன்
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - பகுதி 1
முகப்புரை
குறள் என்றதும் பலருக்கும் குறளுக்கு முன்னால் திரு என்பது போடாவிட்டாலும் திருக்குறளையும் அதை எழுதிய திருவள்ளுவருமே நினைவுக்கு வரும் .
ஆனாலும் ஔவை பிராட்டி இயற்றிய குறள் மற்றும் விநாயகர் அகவல்,சித்தர் இலக்கியத்தில் மிகத்தொன்மையானவைகளாக மதிக்கப்பட்டு ஞானப் பொக்கிஷம் என ஞானத்தைத் தேடும் சாதகர்களால் போற்றப்பட்டு வருகிறது . ஆனால் போற்றப்படவேண்டிய பல விஷயங்கள் இன்னமும் சற்று மறைவாகவே இருக்கிறது .பொது மக்களிடையே பரவலாக்கப்படவில்லை.
திருவள்ளுவரைப்போலவே ஔவைப் பிராட்டியும் ...
Full story
- Friday, May 27, 2011, 12:35
- பத்திகள்
- 0 views
அண்ணாமலை சுகுமாரன்
சித்தர்கள் என்றாலே இப்போதெல்லாம் பெரும்பாலோரின் மனச் சித்திரிப்பு, உண்மைக்கு மாறான புரிதலுடன் கூடியதாகத்தான் இருக்கிறது. தாடி வைத்து, சுலபத்தில் புரியாமல் பேசினால் அவரைச் சித்தர் என ஒரு பொதுப் பெயர் சூட்டிப் பாராட்டிவிடுவது, இப்போது புழக்கத்தில் வந்துவிட்டது.
சித்தர்களில் தலை சிறந்த திருமூலர், "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" என்கிறார். சித்தர்கள் என்போர் அமுதூறும் தமிழில் பெரும் வித்தைகள் படைத்தோர். அரிய பல வாழ்வியல் கலைகளை நடைமுறைப்படுத்தும் முறை ...
Full story
- Friday, May 13, 2011, 14:08
- சிறுகதைகள்
- 0 views
அண்ணாமலை சுகுமாரன்
"நீங்களே சொல்லுங்க, நான் என்ன அப்படிப்பட்ட பெரிய தவறு செய்துவிட்டேன்? வலது பக்கம் கழுத்தைத் திருப்புவதற்குப் பதில், இடது பக்கம் கழுத்தைத் திருப்பியதற்கு இத்தனை பெரிய தண்டனையா?"
இதுதான் மெதுவாகக் கண்ணைத் திறந்த பின் தன்னைச் சுற்றிலும் தெரிந்த ஆஸ்பித்திரி உபகரணங்களையும் காற்றால் இழுத்து உயரே கட்டப்படிருந்த தனது காலையும் கையில் அந்தக் காலத்து கலவடை போல் பிருணை பிருணையாகச் சுற்றி இருந்த வெள்ளைத் துணிக் குவியலையும் கண்டபோது எனக்கு எழுந்த முதல் ...
Full story