Author Archive

ஒரு உதவாக்கரையின் உலகம்

 ஒரு உதவாக்கரையின் உலகம்
அருண் காந்தி ஊரே உறங்கிக் கொண்டிருக்கும் சாமம் அது. நிலவு உச்சந் தலைக்கு நேரே நகர்ந்த வேளையில் சமரன் மெல்ல சாரட்டை வீட்டின் பின்பக்கம் மதிலுக்கு வெளியே அவளது அறைக்கு நேரே நிறுத்துகிறான். நளாயினி ஜன்னலைப் பார்த்துக் கொண்டே மெல்லிய விளக்கின் வெளிச்சத்தில் அசையாது அமர்ந்திருக்கிறாள். அவன் அவளைப் பார்க்கிறான். அறையில் விளக்கு அணைக்கப்படுகிறது. மாடத்தில் வந்து நின்று பார்க்கிறாள். அந்த இடம் அமைதியின் உச்சமாகத் திகழ்கிறது. அவனது இதயப் படபடப்பு மட்டுமே அவனுக்குக் கேட்டுக் கொண்டிருந்த வேளையில் குதிரையொன்று ... Full story

அவள் ஒரு அஞரின்பக்காரி

அவள் ஒரு அஞரின்பக்காரி
அருண் காந்தி நில நடுக்கத்தை நிறுத்தவோ நிரை நிரலென உந்திப் பாய்கின்றன அவ்வூர்திகள்?   கண் இமைக்கும் நொடியில் காற்றில் பறக்கும் கருவண்டுகளாய்க் காணாமல் போயின அம்மகிழ்வுந்துகள்   பழகிப்போனப் பந்தயக் குதிரைகளாய்ப் பக்கவாட்டில் எனைக் கடந்து சென்றன பல பேருந்துகள்   'முடிந்தால் எனை முட்டிப்பார்' என்ற மூர்க்கத்துடன் முன்னேறிய சுமையேற்றிகள் திமிருடன் எனைத் தொடத் துணிந்தன   அடித்துச் செல்லப்படும் ஆற்றுவெள்ளத் துரும்புகளாய் பலவகையில் எனை எதிர்கொள்ளும் மனித முகங்கள்   அந்த மயங்கும் மசண்டையில் சிவனின் நெற்றிக் கண்ணாய்த் திடும்மெனத் திறக்கின்றன வாகன விளக்குகள்   மூளையில் நிதானத்தை மட்டுமே நிரப்பிக் கொண்டு செலுத்துகிறேன் என் வாகனத்தை-விதி வலியது!   சில மணித்துளிகளாய் என்னுடனே ஒத்தியங்கி எனைச் சீர்குலைத்த அழகிய நிலவவளை அருகில் வாவென அழைக்கிறேன்.   மறுத்தவளிடம் ஊர்தி சமிஞ்ஞை நிறுத்தத்தில் எல்லாம் சமிஞ்ஞை செய்து அழைக்கிறேன்   கள்ளியவள் நொடிப்பொழுதில் ... Full story

அவள் ஒரு மாதிரி

அவள் ஒரு மாதிரி
அருண் காந்தி வெட்டிப் பேச்சு தெரியாது வீண் அரட்டை பிடிக்காது அவளுக்கு. நால்வர் கூடிப் பேசினாலும் தெரியாது தன்னை சாடிப் பேசினாலும் புரியாது. கடகடவென பேசத் தெரியும் கலகலவென சிரிக்கத் தெரியும். விறுவிறுவென நடக்கத் தெரியும் துருதுருவென இருக்கத் தெரியும். உறுதியாய் இருக்கத் தெரியும் உண்மையாய் வாழத் தெரியும். கனவேதுமின்றி கண் தூங்குகிறாள்-அவள் துணையேதுமின்றி கண் தூங்குகிறாள். தானாகவே பசித்து வாழ்கிறாள் தனக்காகவே புசித்து வாழ்கிறாள். தன்னந் தனியே தனித்து வாழ்கிறாள்-அவள் சிலருக்கு முன்மாதிரியாய் முயன்று வாழ்கிறாள்... ஆனால் ஊருக்குள் பேசிக் கொள்கிறார்கள் 'அவள் ஒரு மாதிரியாம்'...!   படத்திற்கு நன்றி Full story

அவளுக்கு யாரும் இணையில்லை

அவளுக்கு  யாரும் இணையில்லை
அருண் காந்தி நாள்:நவம்பர் 5 2010,இடம்:கொலன் நகரம்,ஜெர்மனி. அன்று காலை அலுவலகம் வந்ததும் காலண்டரில் தேதியை நகர்த்தினேன். முன்தினம் இரவு லீவுக்கு வருவது பற்றி அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தது அப்போது நினைவுக்கு வந்தது.அதன்படி வரும் டிசம்பர் இறுதியில் முப்பது நாட்கள் விடுப்பில் அப்படியே பொங்கலையும் சேர்த்துக் கொண்டாடும் நோக்கில் விண்ணப்பப் படிவத்தை நிரப்பிக் கொண்டிருந்தேன். "என்ன சார் காலைலயே பிஸியா? வாங்க கோப்பிக்கு போகலாம்"என்று நாற்காலியின் பின்புறம் ... Full story

மாண்புமிகு தமிழக முதல்வருக்கு ஒரு சீட்டுக் குறிப்பு

அருண் காந்தி ஆண்டுகள் ஐந்து கடந்து ஆட்சி மாற்றம் நடந்திருக்கும் இந்த வேளையில் வாழ்த்துகளுக்கும் விருந்துகளுக்கும் இடையே தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள். 'இந்தத் தேர்தல் வெற்றியானது என்னுடையதோ / எங்களுடையதோ அல்ல மக்களுடையது' என்று கூறிய தங்களின் உணர்தலும் அந்த மனப்பாங்கும் பாராட்டுதலுக்கு உரியது. ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனநிலையை அவர்கள் வாக்குச் சீட்டில் பதிய முற்பட்டு, அது முடியாமல் போக ஒற்றை அழுத்தில் குறியீடாகக் காட்டினர். அவர்கள் பதிய நினைத்தது, சிறு குறிப்புச் சீட்டாக ... Full story

வரலாற்று நாயகர்களும் வண்ணப்பட நாயகர்களும்

அருண் காந்தி இது நம்மைப் பற்றியும் நம் மக்களைப் பற்றியுமான சிறு சிந்தனை ஓட்டத்தில் உருவான கட்டுரை. இன்று நாம் சமுதாயத்தில் எந்த நிலையில் இருக்கிறோம் அல்லது தள்ளப்பட்டிருக்கிறோம் என்று யோசித்துப் பார்க்கையில் என்னுள் எழுந்தவை. அவை ஏற்புடையவையா, இல்லையா என்று தெரியாது இருந்தபோதிலும் பகிர்கிறேன். இவ்வுலக வரலாற்றில் எத்தனையோ நாயகர்கள் தோன்றினர், மறைந்தனர். துறைகள் எல்லாவற்றிலும் நாம் அறிந்த நாயகர்கள் பலர் உண்டு. அவர்களுள் பொது வாழ்க்கையில் தம்மை முழுமையாக அர்ப்பணித்த சிலரை எடுத்துக் காட்டினால், அஹிம்சையின் ... Full story

சௌந்தரம் கிழவியும் இலந்தை மரமும்

அருண் காந்தி நாம் நம் பள்ளி நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு பருவ காலங்களிலும் ஒவ்வொரு விதமான பழங்களைப் பறித்துச் சாப்பிடுவதிலும் வாங்கிச் சாப்பிடுவதிலும் அனுபவித்த சந்தோசத்தைக் கண்டிப்பாக யாராலும் மறக்க முடியாது. மாங்காய், மாம்பழம், நாகப்பழம், கொடுக்காபுளி, நெல்லிக்காய், விளாம்பழம், சீதாப்பழம், நுங்கு, கிழங்கு, முந்திரிப் பழம், வெள்ளரி, இலந்தைப் பழம் என ஒவ்வொன்றுக்கும் ஒரு சீசன் உண்டு. அந்த நாட்களில் நம்முடைய சிந்தனை முழுதும் அதைச் சுற்றியே இருப்பது தவிர்க்க முடியாதது! இவற்றில் ஏதேனும் ஒரு மரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து நாம் கண்டிப்பாகக் ... Full story
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.