Author Archive

Page 1 of 212

கடனாளி!

கடனாளி!
வேலைக்குப் போவதால் கையில் வேண்டிய பணம் விளையாடுகிறது.  ஆண்டாண்டு காலமாய் அப்பாவும்,அம்மாவும் சிரமப்பட்டதை நான் குறைத்துவிட்டேன் என்கிற நினைப்பில், அம்மாவிடம் வாய் ஓயாமல் அரற்றிக் கொண்டிருந்தேன்"ஏதேனும் கடன் இருந்தால், சொல்தீர்த்துவிடுகிறேன் விரைவில்"அம்மா சிரித்துக் கொண்டே சொன்னாள், "பிறந்ததிலிருந்து உனக்கு நினைவு தெரியும் வரை,  அளித்த முத்தங்களின் கணக்கைத் தீர்க்க முடியுமா? "என் கண்களில் வழிந்த கண்ணீரால், அவள் பாதத்தை அலம்பியபின், ... Full story

அம்மாவின் முகம்!

அம்மாவின் முகம்!
  பாகம்பிரியாள் வாய் திறந்து பேசாமலே அனைத்தையும் சொல்லும் அம்மாவின் அழகு முகம்! அப்பா வருகிறாரென்றால், அவளின் விழிகள் தாழ்ந்து விடும்.சந்தோஷமென்றால், அவளின் சிவந்த கன்னக் கதுப்பும் சிரிக்கும். அவள் வருந்திக் கொண்டிருக்கையில்,அவளின் வட்ட முகம் வாட்டத்தில் நீண்டு கிடக்கும் பாய் போல். சிந்தனைக் களத்தில் அவள் இருக்கிறாளென்பதைஏறிக்கிடக்கும் புருவம் காட்டிக் கொடுக்கும்.   பிள்ளைகளாய் நாங்கள் தவறு செய்கையில், பேசாமல் அவள் விழிகள் ... Full story

என் புருஷா மிருகம்!

என் புருஷா மிருகம்!
அலுவலகத்திலிருந்து வரும் போதே அரற்றலுமாய், அலறலுமாய்  வந்தது.மூச்சு வாங்க வந்ததை, இன்முகம் காட்டி,முகம் கழுவ வைத்ததில் மறைந்தது மூடி வைத்திருந்த அழுக்குகள். கோபத்தோடு, தொந்தரவு தந்த மீசையையும் நறுவிசாய் நறுக்கியதில், மெல்ல வெளிப்பட்டது அப்பா எனும் அழகு முகம், மகன் கட்டிக் கொள்ள! இருந்தாலும் ஏதோ வலியின் சாயல் தெரிந்ததால், இரவெல்லாம், தைத்த வார்த்தை முட்களைப் பிடுங்கி, களிம்பிட்டதில் மகிழ்ந்து , கணவனாய் எனைச் சீராட்டியது! ... Full story

வினோதக் கலவை!

வினோதக் கலவை!
வினோதக் கலவை! பாகம்பிரியாள்  நீ சொன்ன வேலையெல்லாம் முடித்து, இடுப்பொடிய, மருதாணிக் கோலத்தை   உன் கை, கால் விரல்களுக்கு போட்டு நான்உறங்கப் போகும் போது நடுநிசி! தூங்கலாமென்றாலோ, நீ பிரள்கையில், என் வயிறு, முதுகு, மணிக் கட்டெல்லாம், மருதாணியின் ஜில்லிப்பை உணர்ந்து,மௌனமாய் விழித்துக் கொண்டிருக்கும். கண்களில் தங்கியிருக்கும் தூக்கத்தின் மிச்சத்தை, நீ தந்த தேனீர் விரட்டும். மேனியில் மருதாணியின் தீற்றலை வருடிக் கொண்டே ... Full story

ஒற்றைச் சிறகு!

ஒற்றைச் சிறகு!
பாகம்பிரியாள்  ஒற்றைச் சிறகு! என்றோ ஓர் நாள் விழிகள் கலந்து விளைந்த காதலையும், அது தந்த நினைவுகளையும் நேச நெஞ்சம்நேர்த்தியாய் கோர்த்து வைத்திருந்தது  நேரம் தெரியாமல்  நெஞ்சம் புண்பட்டு  விசிறிய வார்த்தைகள்  சூறாவளியாய்   வாரி இறைத்து விட்டது நினைவுகளை ஆனாலும், நெஞ்சப் பெட்டகத்தில்ஒதுங்கிய ஓர் நினவு, ஒற்றைச் சிறகாய் எதிர்பாராமல்  மெல்ல வந்திறங்கியது. பகலெல்லாம், சின்னச்  சிறகின் பட்டு முனை வருடிக் கொடுத்தது.இருள் கவிந்த பின்னோ, ... Full story

செல்ல சண்டை !

செல்ல சண்டை !
  பாகம்பிரியாள் கனிவுதான் நம் காதலை வளர்க்கும் என்றெண்ணிய எனக்கு , நீதான் செல்ல சண்டையும் அதில் சேரும் என்று சொல்லாமல் சொன்னாய். சின்ன விஷயங்களுக்கு மோதுகையில்,வார்த்தைகள் சூடு பிடித்து, இறுதியில்.மௌனமே பெரிய சுவராய் நிற்கும். உனை வம்புக்கு இழுக்க, பழைய கதையை நான் சொல்ல,வேகமாய் அருகில் வரும் உன் கோபம், என் வெப்பக் காற்று பட்டதும் உருகி, ஒளிந்திருந்த காதல், தலை காட்ட, ... Full story

முந்திரிக் கொட்டை

முந்திரிக் கொட்டை
பாகம்பிரியாள் நமக்குள் முகிழ்த்த காதலை,மூன்றாம் பேருக்குத் தெரியாமல்,மறைக்க வேண்டும் என்ற தவிப்பில் முன்னூறு வழிகளை நாம் தேட,முளை விட்ட நினைவுகள், பிறர் கண் பட்டதாலும்நம் கை பட்டதாலும் முதிர்ந்து போய்முந்திரிக் கொட்டை போல், முன்னால் காதலைக் காட்டிக்கொடுத்த பின், மெல்ல உதிர்கின்றன கவிதைச் சருகுகளாய்,மேலும் நம் காதலுக்கு உரமாகி வலுவேற்ற!   படத்திற்கு நன்றி:http://www.orkutlover.com/2009/09/love-romance-orkut-scraps.html Full story

காதல் வ(வே)லை!

காதல் வ(வே)லை!
பாகம்பிரியாள் கண்களால் எனைச் சிறை பிடித்த நீ, காதல் வலையில் உருட்டி விட்டாய். வலையின் வாய் திறந்தே கிடந்தது,"வெளியில் வந்து விடுவேன்" இது நான். சிறிதும், பெரிதுமாய் வலையின் கண்கள். சிறிய கண் வழியே நினைவுகள் போகின்றன என்கிற மகிழ்ச்சியில்பருத்து அவை பின் தங்கி விடுகின்றன. பெரிய கண்ணைப் பற்றி நின்ற நினவுகள்வருந்தி உழலும் வேகத்தில், கூடவேவலையின் கண்ணும்சுருங்கி விடுவதால், நினைவுகள் முட்டித் தவிக்கின்றன. ... Full story

கனம்

கனம்
பாகம்பிரியாள்கங்காருக் குட்டி போல்,இடுப்பைக் கவ்வியிருந்த மடிக் கணினிக்கு விடுதலை. அலுவலகத்திற்கென்றே வைக்கப்பட்டிருக்கும் அலங்கார உடைகளையும்மாற்றியாகி விட்டது. கைப்பேசிகள்,கணக்கெழுதும் குறிப்பேடுகள் கச்சிதமான இடத்திற்குப் போய் சேர்ந்தது. ஆனாலும்ஏதோ ஒன்றை மறந்ததாய் மனம் முணுமுணுப்பாய் சொல்லிக் கொண்டிருந்தது. கால் சராயில்விரல்களால் நெருடுகையில், கட்டாயம் அப்பா வாங்கி வருவார் என்ற நம்பிக்கையில்மகன் கிறுக்கிப் போட்ட கோணல் மாணலான 'பந்து' ... Full story

காதலும், நாய்க்குட்டியும்

காதலும், நாய்க்குட்டியும்
பாகம்பிரியாள் விழி கவர் விளம்பரத்தில் மயங்கிய நீவிசுக்கென்று நம் காதலை நாய்க்குட்டியாக்கிமடி மீது வைத்ததோடு அல்லாமல், அணைத்தும் கொண்டாய் மெத்தென்று இருப்பதால்.நாம் தூக்கிப்போடும் நினைவுகளைஅது கவ்விக்கொண்டு திரும்பத் திரும்ப வருவதில் உனக்கு ஓர் ஆர்வம். சொடக்குப் போடும் போதெல்லாம்,அது சிலிர்த்து நிற்பதைக் கண்டுநீ வியந்து போகிறாய்! நாம் போகும் இடமெல்லாம்,அதுவும் குடுகுடுவென்று ஓடி வருவது தனி அழகுதான். ஆனால், ... Full story

தாயும், மகளும்!

தாயும், மகளும்!
  பாகம்பிரியாள் காலை எழுந்ததிலிருந்து இரவு வரை பம்பரமாய்,ஓடியாடி அம்மா சுற்றுவதை அறியாத மகள், அவள் ஓய்ந்து ஓய்வு எடுப்பதைக்கண்டு,அலுப்பாய்ச் சொல்கிறாள், எவரிடமோ,"அம்மா, வீட்ல சும்மாத்தாங்க இருக்காங்க! * * * *தாய் செய்யும் வேலை அனைத்தையும் , பகுதியாய் பிரித்துக் கொண்டு , வாரம் முழுக்கச் செய்கிறாள் மகள், மீத வேலை, மூட்டையாய், தாயின் முதுகுக்கே வந்தாலும், அம்மா அதனை சுமந்து கொண்டே ... Full story

காதல் வீடு!

காதல் வீடு!
பாகம்பிரியாள் தொலைவில் அலுவலகம், எல்லா நாளும்,ஓடுதலும், துரத்துதலுமாய் முடியும். சுவரெங்கும், நாம் போட்ட யுத்தக் கணக்கும்,பெற்ற முத்தக் கணக்கும் சிதறிக் கிடக்கும். அடுக்களைக்குள் உதவி செய்கிறேன் என்கிற சாக்கில் நம் காதலை நான் புதுப்பித்துக் கொள்கிறேன். அலுவலகக் கணினியைச் சீர் செய்வதாகச் சொல்லி,அகன்ற விழிகளால், எனை நீ சிறை பிடிப்பாய். ஓராயிரம் நாட்களுக்கு நம்மை அலுவலகத்திற்கு அனுப்பிய பெருமை கடிகார முட்களுக்குத்தான்! செல்லச் சண்டை எட்டிப்பார்க்கும் நாளெல்லாம்,சிவப்பு ரோஜாவும் வந்து சேரும், சமாதானத்திற்காக. அருமை மனைவியாய் நீ அணிந்து செல்லும் ... Full story

வேரா(றா)ன காதல்!

வேரா(றா)ன   காதல்!
பாகம்பிரியாள் நம் காதல் உலகின் விதையாய் இரு என்று கேட்ட போது, இரு முளையாய் வரும் வரை காத்திருக்க முடியாது என்றாய். இலையாய் இருக்க சம்மதமா என்ற போது, என்னை உதிரச் சொல்கிறாயா என்று அழுதாய்! மலராய் இருப்பாயா என்ற போது, மாலைக்குப் பின் மங்கிப் போவதில் மகிழ்ச்சியா உனக்கு என்று அங்கலாய்த்தாய். கனியாய் இரு என்ற போது, காலம் தாண்டி விட்டால், ... Full story

தூண்டில்!

தூண்டில்!
பாகம்பிரியாள் தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொள்ளட்டும் என்கிற தைரியத்தில் தலை நிமிர்ந்து நடக்கும் அவன்  தன்னையறியாமல் அனுப்புகிறான், விழி மூலம் செய்திகளை !  தேடல் இருந்தால்தான் எதுவுமே  ருசிக்கும் என்பதில்  தெளிவாக இருக்கும் அவளும்  தேடிக் கொண்டிருக்கிறாள் தன் இனிய வாழ்க்கைத்  துணையாக வருபவரை!  இருவரையும் எங்கு எப்படி இணைக்க வேண்டும்  என்பதற்காகத் தன் வியூகங்களைத்  தயார் செய்து, அமைதியாய்க் காத்திருக்கிறது நதிக்கரையில் காதல், அன்பு என்னும் தூண்டிலைப் போட்டபடி!   படத்திற்கு நன்றி: http://romanticlovepictures.com/love-pic-Love_eyes.php Full story

கோடாலிக் கொண்டையும் , காதலும்!

கோடாலிக் கொண்டையும் , காதலும்!
பாகம்பிரியாள் பந்தாய் முடிந்த கொண்டையை, பாங்காய்க் கட்டி வைக்க, நீ பயன்படுத்துவது  ஒற்றைக் கற்றையான   கூந்தல் மட்டுமே ! அதிலேயே அது ஒய்யாரமாய் நிற்கிறது.  இதைப் போன்றே நம் காதல் பந்தை , இலகுவாய்க் கட்டி வைக்க நீ பயன்படுத்துவது உறுதியான ஓரிழை அன்பு மட்டுமே ! நீ தைரியமாகத்தான் இருக்கிறாய் , நான் தான் பயம் உந்த  அடிக்கடி  அதைத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!   படத்திற்கு நன்றி: http://digitaljournal.com/article/271661 Full story
Page 1 of 212
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.