- Friday, May 4, 2012, 5:20
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
பாஸ்கர பாரதி
மாயையைப் பழித்தல் (வேதாந்தப் பாடல்)
'சிரிப்பு பாதி அழுகை பாதி; சேர்ந்ததல்லவோ மனித ஜாதி?' (நன்றி - கண்ணதாசன்) இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் வாழ்க்கை எத்தனை இனிமையாக மாறி விடும்? ஆனால், இதை உணர விடாமல் மறைப்பதும், தடுப்பதும் எது?
நீர்க்குமிழி போல் தோன்றி மறைவதே வாழ்க்கை. இங்கே நிரந்தரமானது எதுவுமே இல்லை. நிலையாமை மட்டுமே நிலையானது. ஆனாலும், இந்த ஜகம் மொத்தமும் நிலையற்றதின் பின்னால் நில்லாமல் ஓடிக் ...
Full story
- Friday, April 27, 2012, 5:05
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
பாஸ்கரபாரதி
புதிய பாரதம் உதயமாயிற்று. பார்க்கெலாம் திலகமாய் பாரதம் உயர்ந்தாயிற்று. காமன்வெல்த் அமைப்பு, அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பு, ஐக்கிய நாடுகள் சபை என்று சர்வதேச அரங்குகளில் இந்தியாவின் குரல் ஓங்கி ஒலிக்கிற போதெல்லாம் நெஞ்சம் இறுமாப்பு கொள்கிறது. இந்தியாவின் கருத்து என்னவாக இருக்கும் என்று உலக நாடுகள் கூர்மையாய் உற்று நோக்கும் போதெல்லாம் உள்ளுக்குள் ஓர் ஆனந்தப் பெருமிதம் பெருக்கெடுத்து ஓடுகிறது. உலகின் உச்சியை நாம் எட்டிப் பிடிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. முந்திக் கொண்டிருக்கிறோம்; ...
Full story
- Friday, April 20, 2012, 9:45
- இலக்கியம், பத்திகள்
- 0 views
பாஸ்கர பாரதி
நாடு - மனிதன் வகுத்துக் கொண்ட பூகோளக் கோடு.
கோட்டுக்கு அந்தப் பக்கமும் மனிதர்கள்தாம்.
நம் போலவேதாம்-
பசிக்கும், வலிக்கும், இனிக்கும், கசக்கும். ஆனாலும்.. ஒவ்வொருவருக்கும் தாய் தந்தை போல, தனக்கே தனதான மொழியுண்டு; ஊருண்டு; இவ்விரண்டும் அடங்கிய நாடுண்டு.
எல்லாரும் உறவினரே; நாடு கடந்தும் நண்பர்களே;
ஆயிரந்தான் இருந்தாலும், அன்னை தந்தை போலாகுமா..?
உயிர் கொடுத்தோரும் உடன் பழகியோரும் ஒன்றாகுமா?...
Full story
- Thursday, April 12, 2012, 5:04
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
பாஸ்கர பாரதி
உலகெங்கும் பல நூறு மொழிகள். பல்லாயிரமும் இருக்குமோ? கால வெள்ளத்தில் சிக்குண்டு சிதைந்து போயின சில. கல்வி வளர்ந்ததில் தானும் வளர்ந்து சிறந்தன சில. இளைத்தன சில; முளைத்தன சில; கிளைத்தன சில. முன்னதற்கும் முன்னதாய்த் தோன்றி, வேரூன்றி, விழுது விட்டு, விண் முட்ட உயர்ந்து நின்று உண்மையாய் உறுதியாய் நின்றது ஒன்றுண்டு. -தமிழ்-
காலங்கடந்தும் கட்டுக்கலையாக் கவின்மிகு கோயிலது;
மாற்றார் பகைவர் யார்க்கும் யார்க்கும் அடங்கா வண்திமிர் காளையது;ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆயினும் ...
Full story
- Thursday, April 5, 2012, 9:43
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
பாஸ்கர பாரதி
விண்ணையும் மண்ணையும் அடக்கியாளும், விள்ளுதற்கரிய மஹாசக்தியிடம் விண்ணப்பம் அளிப்பதெனில், பெரும்பாலோனோர் பதிவு செய்யும் கோரிக்கைகள் என்னவாக இருக்கும்?
உண்ண உணவு வேண்டும், உடுக்கப் பல வண்ண உடைகள் வேண்டும், குடியிருக்க மாளிகை வேண்டும், நகைகள் வேண்டும், நன்செய்- புன்செய் ஏராளமாய் வேண்டும், பணத்தில் புரள வேண்டும், ரோகங்கள் நீங்கி போகங்கள் பெருக வேண்டும், தொட்டது துலங்க வேண்டும், பாதம் பட்ட இடம் எல்லாம் பாலும் தேனும் ஆறாய் ஓட வேண்டும் ...
Full story
- Thursday, March 29, 2012, 22:34
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
பாஸ்கர பாரதி
மேற்கே பகலவன் மறையும் நேரம். ஒரு சிறிய மேடை. அதன் மீது நான். எதிரே..
நீண்டு நீண்டு விரிந்து விரிந்து செல்லும் நீலக் கடல்; அதன் முடிவில், கரலை முத்தமிடக்
கீழிறங்கி வரும் பரந்து பட்ட நீல வானம்; காணுதற்கரிய கவின்மிகு காட்சி. கண்களில் உறைந்துவிட்ட,
கருத்தில் நிலைத்துவிட்ட காட்சியில் லயிட்துவிட்ட போழ்தில் நேரம் நகர்வதே தெரிவதில்லைதான்.
தன்னை மறந்த நிலையில் ஒருவனுக்கு காலமும் இடமும் என் பொருட்டு? ...
Full story
- Thursday, March 22, 2012, 12:07
- home-lit, இலக்கியம், பத்திகள்
- 0 views
பாஸ்கர பாரதி
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே! மனிதன் ஆயிரம் பேசட்டுமே!
எந்த மனிதனையும் இந்த உலகம் சிவப்புக் கம்பளம் விரித்து வா வா என்று வரவேற்பதில்லை. நாம்தான் உழைத்து உழைத்து உழைத்து, தடைகளை உடைத்து உடைத்து உடைத்து, எதிர்த்து எதிர்த்து எதிர்த்து முன்னேற வேண்டியதிருக்கிறது. இதுதான் ஒவ்வொரு மனிதனுக்கும் இடப்பட்டிருக்கிற விதி.
இதிலே அச்சப்பட ஏதுமில்லை. இந்த வையத்து மாந்தர் எல்லோரும் ஒருமித்து எதிர்த்து நிற்பினும் அச்சம் கொள்ள அவசியமில்லை. ஊர் ...
Full story
- Thursday, March 15, 2012, 10:34
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
பாஸ்கர பாரதி
என்ன படித்து என்ன பயன்? 'உழைத்தால் உயரலாம். உழை.. உழை. மேலும் மேலும் உழை.' என்று சொல்பவர்கள் சரியாகத்தான் சொல்கிறார்கள். அவர்களை நொந்து கொள்வதில் நியாயமில்லைதான்.
ஆனால் 'உழைப்பதற்கு' ஒரு வாய்ப்பு? மோட்டு வளையை வெறித்தபடி கயிற்றுக்கட்டிலில் படுத்துக் கிடப்பதில் சுகம் உண்டு என்றா எண்னுகிறீர்கள்? 'தண்டச்சோறு' உண்பதில் பசி ஆறலாம். படுகிற அவமானங்கள்..?
வசவு வார்த்தைகளும் சுடு சொற்களும் கண்ணீரில் கரைந்து விடுவதில்லை. மாறாகக் கனன்று கொண்டுதான் ...
Full story
- Thursday, March 8, 2012, 19:57
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
பாஸ்கர பாரதி
முத்துமாரி - உள்ளத்தில் கள்ளமில்லா கிராமத்து மக்களின் காவல் தேவதையாய் இருந்து மறம் அழித்து அறம் வளர்க்கும் கலியுக தெய்வம். காசு பணம் செலவில்லை. கையெடுத்துக் கும்பிட்டாலே போதும். ஆசார அனுஷ்டானங்கள் எதுவும் அவள் கேட்பதில்லை.
பாமரர்கள் கேட்பதெல்லாம் அவள் தருவாள். அவளை வழிபடுவதில்தான் எவ்வளவு ஆனந்தம்! ஆடல், பாடல், கொண்டாட்டம்! உலகத்து நாயகியான முத்துமாரி, உலகில் உண்மை நிலை பெற, தேச முத்து மாரியாய் நின்று அருள்மழை பொழிவதை ...
Full story
- Thursday, March 1, 2012, 11:12
- home-lit, இலக்கியம், பத்திகள்
- 5 views
பாஸ்கர பாரதி
சென்ற பல நூற்றாண்டுகளில் மனித இனம் எதிர் நோக்கியிராத மிகப் பெரிய ஆபத்து இன்று நம் கண்முன் விரிகிறது. உலகின் பல்வேறு பாகங்களிலும் வன்முறை கோர தாண்டவம் ஆடுவதை வேதனையுடன் கண்டு கொண்டு இருக்கிறோம்.
மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், ஜாதி, மொழி, நிறம் மற்றும் அரசியல் அதிகாரம் என்கிற பெயரால் - மதம் பிடித்த யானையாய் வன்முறை வெறியாட்டம் விலை மதிப்பற்ற மனித உயிர்களைச் சகட்டு மேனிக்குச் சவக் ...
Full story
- Thursday, February 23, 2012, 12:02
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
பாஸ்கர பாரதி
ஒரு கணம். கண்களை இறுக மூடினேன். கண்களுக்கு எதுவும், எதுவும் புலப்படவில்லை.
இப்போது என் முன் இருப்பவை யாவும் ஒன்றே. வடிவங்கள் வேறாய், வண்ணங்கள் வேறாய், அளவுகளில் வேறாய், அழகழகாய், அழகற்றதாய்.. எதுவும் இல்லை.
கண்களைத் திறந்து பார்த்தால்..? கண்கவர் காட்சிகள்! காடுகள், மலைகள், கவின்மிகு சோலைகள், மரங்கள், செடிகள், கொடிகள், பூக்கள், காய்கள், கனிகள், சிறியதாய், பெரியதாய்க் கட்டிடங்கள், ஊர்திகள், ஆபரணங்கள், ஆரணங்குகள்..
இரு கண்களில் ...
Full story
- Thursday, February 16, 2012, 4:32
- home-lit, இலக்கியம், பத்திகள்
- 0 views
பாஸ்கர பாரதி
'என்னங்க.. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி, வாடகை வீட்டுலயே காலத்தை கழிக்கப் போறோம்?' - மனைவியின் குரல்.
'ஏன்டா.. இப்பத்தான் அப்பாவோட ரிடையர்மென்ட் பணம் இருக்கே.. அது அப்படியே செலவாறதுக்குள்ளே ஏதாவது நெலமோ ஃப்ளாட்டோ வாங்கிப் போட்டா நல்லா இருக்கும் இல்லே..?- இது அம்மாவின் ஆதங்கம்.
'இதோ பாருடா.., 'ஹிண்டு'வுல இன்னைக்கி ஒரு 'அட்வர்டைஸ்மென்ட்' வந்திருக்கு, 'ஸ்டேஷன்'ல இருந்து அரை கி. மீ. தானாம். எப்படியும் அம்பதாயிரத்துக்கு ...
Full story
- Thursday, February 9, 2012, 9:14
- இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
பாஸ்கர பாரதி
நேற்று நடந்தது. அதற்கு முதல் நாள். அல்லது, அதற்கும் முன்னர் நடந்தது. என்றோ எப்போதோ எப்படியோ நிகழ்ந்து விட்டதை எண்ணியெண்ணி, மாளாமல் மனத்துயரம் கொள்வோர் ஏராளம். நடந்திருக்கக் கூடாதுதான். ஆனாலும் நடந்தேறி விட்டது. அடிமனதில் வெகு ஆழமாக அழுத்தமாக இடம் பிடித்து விட்டத் துயர சம்பவம், கொடிய நிகழ்ச்சி.
இன்னும் எத்தனை நாட்களுக்கு உள்ளுக்குள்ளே புகைந்து கொண்டிருக்க அனுமதிக்கலாம்?. கவலை - ஒரு அதி பயங்கர நோய். தனக்குப் புகலிடம் ...
Full story
- Thursday, February 2, 2012, 13:48
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
பாஸ்கர பாரதி
வெற்றி முரசு கொட்டுவது அப்படியொன்றும் கடினமான பணி அல்லதான். ஒரு முரசும், கொட்டுவதற்குக் கரங்களும் இருந்தாலே போதும்தான். 'வெற்றி' 'வெற்றி' என்று விண்ணதிர முழங்குவதும் வீர முரசு கொட்டுவதும் யாருக்குமே சாத்தியமாகிற சங்கதிதான். ஆனால், பெற்றிருக்கிற 'வெற்றி', ஈட்டியிருக்கிற 'ஜெயம்' எத்தன்மையது? ஆற்றி முடித்த அலுவல், பன்னிப்பன்னி மாய்ந்து மாய்ந்து செய்து முடித்த பணி என்ன?
முரசு கொட்டி ஊருக்கும் உலகுக்கும் பறை சாற்றுகிற வகையில் கத்தானதாய் மகோன்னதமானதாய் நற்காரியம் ...
Full story
- Tuesday, January 24, 2012, 18:46
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
அன்பு நண்பர்களே!
திரு பாஸ்கர பாரதி, கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகங்கள் கொண்ட நாயகர் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணை நல்லூரைச் சேர்ந்தவர். சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் வருமானவரி அலுவலர் பதவியில் உள்ளவர். இவர் திருக்குறள் 1330 குறள்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வல்லுநர். ”வல்லமை தாராயோ” என்ற இவருடைய மேடை நாடகம் , தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய அகில இந்திய நாடக விழாவில் , ‘வித்தியாசமான ...
Full story