Author Archive

Page 1 of 3123

இயேசுவைத் தேடி…

இயேசுவைத் தேடி...
  புதுவை எழில்   இயேசுவைத் தேடியவர் பலர். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு... பெத்லகேம் என்ற சிற்றூருக்கு வெளியே! வயல்வெளிகளில் பனி, குளிரின் கொடுங்கோல் ஆட்சி! நள்ளிரவு நேரத்தில் இறைவன் மாட்சி;! மோனத் தவம் இருந்தது வானம்! ஆட்டுக் கிடைக்குக் காவல் காக்கும் இடையர்கள். திடீரெனக் காரிருளில் பேரொளி. தாவீதின் ஊரிலே மீட்பர் பிறந்துள்ள செய்தியை வானவர் அறிவிக்கிறார். கேட்ட இடையர்கள் ஆட்டுக் கிடையை அப்படியே விட்டுவிட்டு இயேசுவைத் தேடி ஓடினர். இயேசுவைத் தேடுதல்; அன்று தொடங்கியது.... Full story

சாமார்த்தியமான வியாபாரம்- உணர்வுக் கட்டுரை

சாமார்த்தியமான வியாபாரம்- உணர்வுக் கட்டுரை
    பேராசிரியர் பெஞ்சமின் லெபோ பிரான்சு (1996 -ஆம் ஆண்டு 'மங்கையர் மலர்' இதழில் வெளி வந்த கட்டுரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எழுதப்பட்ட கட்டுரை ;ஆனால் இத்திட்டத்துக்கு அந்த இதழும் முழு ஆதரவு தந்ததால் இக்கட்டுரையை அவ்விதழ் வெளியிடவில்லை!)   புதிய அழகு சாதனத்தை அறிமுகம் செய்யும் ஒரு கம்பெனி, புதுவித விற்பனைத் திட்டம் ஒன்றை அறிவித்து இருந்தார்கள் (மங்கையர் மலர் - ஆகஸ்ட் 1996 காண்க). அதாவது 300 ரூபாய் மட்டுமே கட்டி ... Full story

சிலுவைப் பாதையில் சில பாத்திரங்கள்

சிலுவைப் பாதையில் சில பாத்திரங்கள்
பேராசிரியர் பெஞ்சமின் லெபோ சிலுவைப் பாதை என்றால் ...? ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்உரோமைப் பேரரசன் திபெரியுசின் (Tiberius) பிரதிநிதியாக யூதேய நாட்டில் (அக்காலப் பாலத்தீனம்) பணிற்றினான் போஞ்சு பிலாத்து.(Pontius Pilate). அவன் ஆட்சியில், இறை மகன் இயேசுவைச் சிறைப் பிடித்த கயவர் கூட்டம், இல்லாத பொல்லாத குற்றங்களை அவர் மேல் சுமத்தி அவரை அவன் முன் நிறுத்தியது.யூத குருக்களையும் மக்களையும் திருப்திப் படுத்த எண்ணிய பிலாத்து, இயேசுவை அடித்து உதைத்து வதைத்துச் சிவப்பு ஆடையை அணிவித்துக் கொண்டு வந்து ... Full story

முனைவர் மு.வ நூற்றாண்டு விழா

முனைவர் மு.வ  நூற்றாண்டு விழா
  புதுவை எழில் முனைவர் மு.வ - அக்கால இளைஞர் அனைவர் நெஞ்சிலும் இடம் பெற்ற மூத்த தமிழ் அறிஞர்.அவர்தம் நூற்றாண்டு விழாவைப் பல இடங்களில் கொண்டாடி வருகிறார்கள், தாய்த் தமிழகத்தில். ஐரோப்பாவில் அதனை முதலில் கொண்டாடிய பெருமை பிரான்சு கம்பன் கழகத்தையே சாரும். தமிழறிஞர்கள், தமிழுக்கு உழைத்தவர்கள், விடுதலை வீரர்கள் எனப் பலருக்கும் நூற்றாண்டு விழா எடுக்கும் நல்ல வழக்கம் இக் கம்பன் கழகத்துக்கு உண்டு. அந்த வரிசையில், 19.02.2012 ஞாயிறு அன்று பிரான்சு கம்பன் கழகம், முனைவர் மு;வ அவர்களுக்கு விழா எடுத்தது. ... Full story

முனைவர் மு.வ. – நினைவலைகள் சில

முனைவர் மு.வ. -  நினைவலைகள் சில
    பேரா. பெஞ்சமின் லெபோ புதுச்சேரியின் புகழ் பெற்ற பள்ளி - பெத்தி செமினரி உயர் நிலைப் பள்ளி.. அதில் மூன்றாம் படிவம் படித்துக்கொண்டிருந்த சமயம். அறிவின் மீது அடங்காத தாகம் ; கண்டதையும் படித்து முடித்துவிடவேண்டும் என்ற வேகம் ; தமிழின் மேல் தணியாத மோகம் - எனக்கு! விளைவு, உண்ணும் போது மட்டுமல்ல கண்ணுறங்கும் போது கூடக் கையில் புத்தகத்தோடுதான் இருப்பேன்.அப்போது, முனைவர் மு.வ அவர்களின் அறிமுகம் ... Full story

பிரான்சு கம்பன் கழகப் பொங்கல், மு.வ. நூற்றாண்டு விழாக்கள்.

பிரான்சு கம்பன் கழகப் பொங்கல், மு.வ. நூற்றாண்டு விழாக்கள்.
                        கம்பன் கழகம் பிரான்சு நடத்தும் முனைவர் மு. வரதராசனார்  நூற்றாண்டு விழா தமிழப் புத்தாண்டுப் பொங்கல் விழாஅழைப்பிதழ் நாள் திருவள்ளுவர் ஆண்டு 2043-கும்பம்(மாசி)-0719-02-2012 ஞாயிறு பிற்பகல் 14-00 மணி முதல் 20-00 மணி ... Full story

கிறித்துப் பிறப்பு விழா!

கிறித்துப் பிறப்பு விழா!
பேரா. பெஞ்சமின் லெபோ வெள்ளம்! கள்ளமில்லா மக்களின் உள்ளங்களில் மகிழ்ச்சி வெள்ளம்! வீடு தோறும் வந்து நிறையும் இன்ப வெள்ளம்! ஊர் தோறும் ஒளி வெள்ளம்! உலகம் எங்கும் உவகை வெள்ளம்! இத்தனை வெள்ளப் பெருக்குக்கும் காரண ஊற்று - அவர் பிறப்பு! அவர்? 'ஒருமொழி வைத்து' உலகாண்ட பெரு நிலப் பேரரசர்களும் மன்னாதி மன்னர் யாவரும் மண்ணோடு மண்ணாகிப் ... Full story

தவறின்றித் தமிழ் எழுதுவோமே!

தவறின்றித் தமிழ் எழுதுவோமே!
பகுதி 10-ஊ : அதுவா? இதுவா? இரண்டுமா? பேராசிரியர் பெஞ்சமின் லெபோ அப்பாடா... ஒரு வழியாக, இத்துடன் இப்பகுதியை மூட்டை கட்டி விடலாம்.பலரும் பெரு மூச்சு விடுவது கேட்கிறது.... சிலர் சுறுசுறுப்பாக (சுருசுருப்பாக?) விடுவது மகிழ்ச்சிப் பெருமூச்சு!(அப்பாடா, ஆளை விடுங்க!) சிலர் விறுவிறுப்பாக (விருவிருப்பாக ) விடுவது ஏக்கப் பெரு மூச்சு (ஐயோ, இனி தொடராதா?) இத்தொடரைத் தொடங்கியதின் நோக்கம் : இணையதளத்தில் பரவலாகப் ... Full story

தவறின்றித் தமிழ் எழுதுவோமே!

தவறின்றித் தமிழ் எழுதுவோமே!
பேராசிரியர் பெஞ்சமின் லெபோ  பகுதி 10-உ  : அதுவா? இதுவா? - இயக்குநர் ? இயக்குனர்? இப்போது நினைத்தால் வேடிக்கையாக உள்ளது. வியப்பாகவும் இருக்கிறது. உங்களிடம் சொல்வதில் என்ன!  படிக்கின்ற காலத்தில், படி வேப்பெண்ணை குடிப்பதற்கு ஒப்பான வகுப்பு எது தெரியுமா எனக்கு? 'கணக்கு வகுப்பு'  என நீங்கள் சொன்னால் '0' மதிப்பெண் தான் தர வேண்டி  இருக்கும். இருந்ததிலேயே மிகக் கடுப்பான வகுப்பு.'கட்டுரை'வகுப்புதான்ஆங்கிலமாகட்டும் தமிழாகட்டும் ... ஒருமணி ... Full story

தவறின்றித் தமிழ் எழுதுவோமே!

தவறின்றித் தமிழ் எழுதுவோமே!
பேரா. பெஞ்சமின் லெபோ பகுதி 10-ஈ : அதுவா? இதுவா - ஐயா? அய்யா? ஔவை? அவ்வை? சென்ற பகுதியில், 'தொல்காப்பியர் கருத்துப்படி, 'ஐ' என்பது 'அய்' ஆகலாம் என்று' எழுதி  இருந்தேன். தொல்காப்பியர் 'அய்' என்ற வடிவத்துக்குப் பச்சைக் கொடி காட்டி இருந்தாலும் பழந்தமிழ் இலக்கியத்தில், 'ஐ'வடிவே புழங்கி  வந்திருப்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அகநானூறு 143,  ஆலம்பேறிச் சாத்தனார், பாலைத் திணை – தோழி கூற்றாக வரும் பாடலில்,... Full story

தவறின்றித் தமிழ் எழுதுவோமே!

தவறின்றித் தமிழ் எழுதுவோமே!
பகுதி 10-இ : அதுவா? இதுவா - ஐயா? அய்யா? ஔவை? அவ்வை? பேரா. பெஞ்சமின் லெபோ. சில காலத்துக்கு முன், அரபு நாட்டில் இருந்து தனி மின்மடலில் தமிழ்ச் சகோதரி ஒருவர் ஓர் ஐயம் எழுப்பி இருந்தார் :'ஐயம்', 'அய்யம்' ; 'ஐயா', 'அய்யா'  - இவற்றுள் எது சரி? என்பது அவர் விடுத்த வினா. உடனடியாக அவருக்குச் சுருக்கமாகப் பதில் எழுதிவிட்டேன். இது பற்றி நம் தொடரில் எழுதுவதாகச் சொல்லி இருந்தேன்.இதே கேள்வியைச் சிங்கப்பூரில் இருந்து ... Full story

தவறின்றித் தமிழ் எழுதுவோமே!

தவறின்றித் தமிழ் எழுதுவோமே!
பேரா. பெஞ்சமின் லெபோ   பகுதி 10-ஆ : அதுவா? இதுவா - பொருத்து? பொறுத்து? கடந்த பகுதியில், இறுதிப் பத்திக்கு முன், 'என்னைப் பொருத்தவரை இதுதான் முடிவு! உங்களைப் பொருத்தவரை?' என்று கேட்டிருந்தேன். இப்போது நாம் அலசப் போகும் அடுத்த சிக்கல் இதுதான். இங்கும் கொஞ்சம் ஆங்கிலத்தைத் துணைக்கு அழைப்போம் : 'as far as i'm 'you are, he, she is...) concerned' என்ற பொருளில் ... Full story

தவறின்றித் தமிழ் எழுதுவோமே!

தவறின்றித் தமிழ் எழுதுவோமே!
பகுதி 10-அ    : அதுவா? இதுவா? பேரா. பெஞ்சமின் லெபோ என் கட்டுரைத் தொடர் பகுதி -9 இ   : 'கள் ' போடலாமா? - வாழ்த்துகளா? வாழ்த்துக்களா  ?  -இல் _'ஏற்கனவே என்  கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது போல, கட்டடம் கட்டுவோர் செங்கற்களை அடுக்கி இடையே இணைப்பியை (cement) அப்புவது போல, இரு சொற்களை இணைக்க அச் சொற்களுக்கு இடையில் எழுத்துகள் சில ... Full story

தவறின்றித் தமிழ் எழுதுவோமே!

தவறின்றித் தமிழ் எழுதுவோமே!
பகுதி -9 இ : ‘கள் ‘ போடலாமா? – நாட்களா? நாள்களா? பேரா. பெஞ்சமின் லெபோ சென்ற பகுதியின்  இறுதியில், ‘கள்’-ஐப் பற்றி இத்தனை  தூரம்/ நேரம்  சொல்லிய பிறகும் நாட்களா? நாள்களா? என்னும் சிக்கலைக் காண அடுத்த பகுதி வரை காத்திருக்க வேண்டும். ஆகக் ‘கள்’ -இன் மகிமை இன்னும் தொடர்கிறது. என நிறுத்தி இருந்தேன் . இப்போது இந்தச் சிக்கலைக்  கொஞ்சம் அலசுவோம். 'நாள் கணக்கு நாட்கணக்கு ஆகுமென்றால், நாள் கழிவு நாட்கழிவு ஆகுமென்றால், நாள்கள் தாராளமாக நாட்கள் ஆகலாம்.' என ... Full story

தவறின்றித் தமிழ் எழுதுவோமே!

தவறின்றித் தமிழ் எழுதுவோமே!
பேரா.பெஞ்சமின் லெபோ பகுதி-9 இ. 'கள் ' போடலாமா? - வாழ்த்துகளா? வாழ்த்துக்களா  ? ஓங்கி ஒளிர வேண்டிய தீப ஒளித் திருநாள் மழையும் காற்றுமாய் வந்து போனது. வாங்கிய வெடிகளை வெடிக்க இயலாமையால் சிறுவர் மனம் வெந்து போனது. ஆனாலும் நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் நல் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டதில் உள்ளம் மகிழ்ந்து  சிந்து பாடியது. சிலர் வாழ்த்தில் 'வாத்தும்' வந்து சேர்ந்தது வேறு கதை. சென்ற பகுதியில், 'நெடுங் காலமாகவே ... Full story
Page 1 of 3123
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.