- Tuesday, April 3, 2012, 7:27
- வாசகர் கடிதம்
- 0 views
சித்திரை சிங்கர்சென்னை.
வங்கிகளில் அடுத்தடுத்து கொள்ளை நடந்தது உண்மை என்றாலும், அந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட வடநாட்டு வாலிபர்கள் வாடகை வீட்டில் இருந்தார்கள் என்ற ஒரே காரணத்தால் வாடகை வீட்டில் இருப்பவர்களை எல்லாம் சந்தேகப்படுவது நியாயமாகப்படவில்லை. பெரும்பாலான வீட்டு உரிமையாளர்களும் / வாடகைதாரர்களும் சரி தங்களைப் பற்றிய விபரங்களை காவல் நிலையத்தில் பதிவு செய்யபப்டுவதை விரும்புவதில்லை. சொந்த வீடு என்றாலும் வாடகை வீடு என்றாலும் குடும்ப அட்டை / புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை / பாண் கார்டு மற்றும் இப்போது புதியதாக முளைத்துள்ள ஆதர்ஷ் அடையாள அட்டை ...
Full story
- Monday, April 2, 2012, 15:08
- வாசகர் கடிதம்
- 0 views
சித்திரை சிங்கர்சென்னை02.04.2012
இன்றைய இந்தியா எங்கு நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது யாராலும் யூகிக்க முடியவில்லை.மத்தியில் ஒரு கட்சி ஆட்சி இல்லாத நிலைமையினால் அரசியலில் கூட்டணிக் கட்சிகள் எல்லாம் தங்களின் தகுதிக்குத் தக்கவாறு இன்றைய பிரதம மந்திரியை ஒவ்வொரு விசயத்திலும் சுயமாக செயல்படுத்த விடாதவாறு மிரட்டி அவரவர்களின் தேவையினை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறார்கள் மேலும், இன்றைய அரசியல்வாதிகள் அனைவரும் அவரவர்கள் கட்சித் தலைமைக்கு கட்டுப்பட்டவர்களே என்பது சமீபத்தில் நடந்த இரயில் கட்டண உயர்வு ரத்து, ரயில்வே மந்திரி மாற்றம் போன்றவைகள் அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இப்படி ...
Full story
- Tuesday, February 21, 2012, 11:17
- வாசகர் கடிதம்
- 0 views
சித்திரை சிங்கர்
மின்சாரம் வழங்குவது பற்றி.... அரசின் அறிவிப்புகள் ஆச்சரியமாகவே உள்ளது. தேர்தலுக்கு முன், தடையில்லா மின்சாரம் வழங்குவோம் என்றார்கள் வெற்றிபெற்று ஆட்சியினை பிடித்தவுடன் தினமும் எட்டு மணிநேரம் பவர் கட் ஆனால் சென்னைக்கு மட்டும் தினமும் இரண்டு மணி நேரம் என்ற பாரபட்சமான அறிவிப்பு. சென்னையில் உள்ளவர்கள் மட்டுமா ஆட்சியை தேர்ந்தெடுத்தார்கள் தமிழகம் முழுவதுமுள்ள மக்கள்தானே...! சரி... அது போகட்டும் மின் கட்டண உயர்வு பற்றிய கலந்தாலோசனைக் கூட்டம் தமிழகத்தில் சில பகுதிகளில் நடந்த நிலையில் ஒவ்வொரு கூட்டத்திலும் இந்த "விவசாயிகளுக்கு இலவச ...
Full story
- Monday, February 20, 2012, 15:52
- வாசகர் கடிதம்
- 0 views
சித்திரை சிங்கர்
சென்னை.
சென்னையைச் சுற்றியுள்ள சில பகுதிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைத்தால், இணைந்தபின், இணைக்கப்பட்ட பகுதிகளின் வளர்ச்சிப் பணிகள் கட்டாயமாக பாதிக்கப்படும் எனவே அந்தந்த பகுதிகளை இணைத்து புதிதாக ஒரு தனி மாநகராட்சிதனை உருவாக்கலாம் என்று சொன்னவர்கள் வாயில் சர்க்கரையைத்தான் போட வேண்டும். சென்னையில் இப்போது புதிதாக மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் குறிப்பாக அம்பத்தூர் நகரில், அதன் உள்பகுதியாகட்டும் மெயின் ரோடுகள் ஆகட்டும் நிலைமை சொல்லிக் கொள்ளும்படியாகாவா இருக்கிறது. இதனால் இப்பகுதியில் இருசக்கர வாகன "ஸ்பேர் பார்ட்ஸ்" விற்பனை செய்யும் கடைகளில்தான் ...
Full story
- Tuesday, December 13, 2011, 16:39
- வாசகர் கடிதம்
- 0 views
சித்திரை சிங்கர்
பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டுக்குள் வந்ததன் விளைவாகத்தான் நமது சென்னை மாநகரில் உள்ள கிண்டி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டைகள் இப்போது கண் கொள்ளாக் காட்சியாக புதிய புதிய கட்டிடங்களுடன் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரையில் இங்கு சிறு சிறு தொழிற்கூடங்கள் வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தவர்களின் நிலை என்ன என்பதை எதாவது பத்திரிக்கைகள் கண்டுபிடித்து எழுத வேணும். சாதாரண +2 முடித்த பெண்கள் எல்லாம் இன்று இப்பகுதிகளில் பத்தாயிரம் ரூபாய் வரை சம்பளம் பெரும் வகையில் இயங்கும் அந்நியநாட்டு நிறுவனங்களை நாம் அனுமதிப்பதில் என்ன தவறு...? ...
Full story
- Friday, October 14, 2011, 22:12
- கட்டுரைகள்
- 0 views
சித்திரை சிங்கர்
நாம் தினமும் பார்க்கும் தொலைக்காட்சிகளில் செய்தி அறிவிப்பவராக இருக்கட்டும். இல்லை நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குபவராக இருக்கட்டும். மணமானவர்கள் என்றால், அவர்கள் தங்களது தாலியினை மறைப்பதில் காட்டும் அக்கறை எதற்காக என்று புரியவில்லை. இந்தியாவின் திருமண வாழ்க்கை வெளிநாடுகளில் இன்னமும் பிரமாதமாக பேசப்படுகிறது, அவர்களினால் விரும்பப்படுகிறது என்றால் அதற்கு நமது நாட்டின் திருமணச் சடங்குகள் அதனை ஒட்டிய இந்த தாலி கட்டி வாழும் குடும்ப வாழ்க்கைதான். உன் குழந்தையும் என் குழந்தையும் நம் ...
Full story
- Saturday, September 17, 2011, 22:15
- வாசகர் கடிதம்
- 0 views
நமது நாடு ஒரு ஜனநாயக நாடு என்று வெளிநாட்டவர்கள் எல்லோரும் இன்றுவரை போற்றுகிறார்கள். இந்த போற்றுதல்கள் நிலைத்து நிற்க வேண்டுமென்றால், பதவியில் இருப்பவர்கள், பதவியில் இல்லாதவர்கள், பணக்காரர்கள், பணமில்லாதவர்கள், அரசியல்வாதிகள் முதல் ஆண்டிகள் வரை சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சட்ட வரிகள் உண்மையென்றால், நமது நாடு அந்நியரிடம் இருந்து சுதந்திரம் பெற்றாலும் இன்றுவரை நம்மை ஆண்டு கொண்டிருக்கின்ற அரசியல்வாதிகளிடமிருந்து சுதந்திரம் கிடைக்கவில்லை என்ற உண்மையான நிலை அகல வேண்டுமானால், லோக்பால் சட்ட மசோதா வரம்புக்குள் பிரதமர், நீதிபதிகள் மட்டுமல்ல ஜனாதிபதியைக் கூட கொண்டு வர வேண்டும் ...
Full story
- Monday, September 12, 2011, 17:13
- வாசகர் கடிதம்
- 0 views
டு
ஆசிரியர் குழு,
வல்லமை மின்னிதழ்,
இந்தியா.
தூக்குதண்டனையினை ஒழிக்க வேண்டும் என்று கூறுபவர்கள் நியாயமான நிகழ்வுகளை யோசித்து இதை சொல்கிறார்களா என்பது எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது.
குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பது என்பது காலங்காலமாக எல்லா நாடுகளிலும் நடந்துவருகின்ற செயல்கள்தான். விசாரிக்கும் முறையும், கொடுக்கப்படும் தண்டனைகளும் குற்றங்களுக்கு தகுந்தவாறும், நாடுகளுக்கு தகுந்தவாறும் வேறுபடும் என்பது மட்டுமே உண்மை. இதில் அரபு தேசங்களில் தண்டனைகள் கொஞ்சம் கடுமையாக இருக்கும் என்பது நாம் படித்தறிந்த... கண்டறிந்த உண்மைகள்தான். இதில் மரண /தூக்கு தண்டணைகளும் அடங்கும். இந்த தண்டனையினை மேல் நாடுகளில் விஷ ஊசி மூலம் நிறைவேற்றுபவர்களும் ...
Full story
- Sunday, September 4, 2011, 22:42
- வாசகர் கடிதம்
- 0 views
பெறுநர்
வல்லமை ஆசிரியர் குழு,
வணக்கம். எனக்கு அலுவலக வேலையாக பல அரசு இயந்த்திரங்களில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் இருந்திருக்கின்றன. ஆனால், இதுவரையில் அங்கெல்லாம் நான் எடுத்துச் சென்ற கோப்புகளில் உள்ள விவரங்கள் சரியாக இருக்கின்ற பட்சத்தில் ஒரு பிரச்சனையும் வந்ததில்லை. அது போல செல்லும் இடங்களில் நாம் நமது "பந்தா"வினை காட்டாமல் கொஞ்சம் அடக்கி வாசித்தாலே போதும். எல்லா அதிகாரிகளும் எல்லோரிடமும் லஞ்சம் கேட்பதில்லை. அதற்குரிய சூழ்நிலைதனை உருவாக்கிக் கொடுப்பது பொதுமக்களாகிய நாம்தான். எதையும் ...
Full story
- Wednesday, August 31, 2011, 8:28
- கட்டுரைகள்
- 0 views
சித்திரை சிங்கர்.
தன்னை சரியாக வளர்த்து, ஒரு நல்ல படிப்பு கொடுத்து சமுதாயத்தில் ஒரு நல்ல மனிதனாக உருவாக துணை இருக்கும் பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்குத் தண்டனை என்பது கண்டிப்பாக வழங்கப்பட வேண்டியதுதான். இதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், எத்தனை பெற்றோர்கள் இப்படி தனது கடமையைச் செய்து வழிகாட்டியாக இருக்கிறார்கள் என்றால் விரல் விட்டு எண்ணி விடலாம்.
இப்போது உள்ள பெற்றோர்களில்(முதியவர்கள்) பெரும்பாலானோர் தனது மூதாதையர்களின் சொத்துக்களை வைத்துக் கொண்டு அனுபவித்துக் கொண்டு ...
Full story
- Wednesday, August 24, 2011, 22:23
- வாசகர் கடிதம்
- 0 views
டு,
ஆசிரியர் அவர்கள்,
வல்லமை - மின்னிதழ்,
சென்னை.
"எழுகிறது மகளிர் சக்தி!" - உண்மைதான் அன்றே சொன்னார்கள் ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று. அது எந்த அளவிற்கு உண்மை என்பது எப்போது நாம் உணர்கிறோம்? கடந்த தேர்தலில் மகளிர் அதிக அளவில் வாக்குகள் அளித்திருப்பததற்கு முக்கிய காரணமே "பெண்களது சுய உதவி குழு"க்களின் செயல்பாடுகளும் அதை தொடர்ந்து தருகின்ற மானிய அறிவிப்புகளும் அதோடு பெண்களை கவரும் வகையில் அறிவிக்கப்பட்ட இலவச திட்டங்களும்தான் முதன்மை வகிக்கிறது. மேலும் சமீப காலமாக பெண்கள் அனைத்துத் துறைகளிலும் ஆணுக்கு நிகராக போட்டி போட்டுகொண்டு ...
Full story
- Tuesday, August 23, 2011, 20:16
- வாசகர் கடிதம்
- 0 views
டு,
தி எடிட்டர் ,
வல்லமை - மின்னிதழ்
வணக்கம். சமீபத்தில் புதிய தலைமுறை வார இதழில் "பயணங்கள் துவங்குவதில்லை" என்ற தலைப்பில் ஒரு ரயில் பயணம் பற்றிய ஒரு விழிப்புணர்வு கட்டுரையினை படித்தேன் அதன் விளைவாக என்மனமதில் தோன்றிய கருத்துக்கள் இவை:
`"பயணங்கள் துவங்குவதில்லை."கருத்துகள் அனைத்துமே நியாயமான உண்மைகள்தான். இதில் ரயில்வே நிர்வாகம்தான் தூங்கிக் கொண்டிருக்கிறது என்பதுதான் இப்போதுள்ள நடைமுறை உண்மை. வருமானம் முப்பத்தி ஐந்து லட்ச்த்தில் இருந்து எழுபது லட்சமாக உயர்ந்திருப்பது உண்மைதான் என்றாலும் உயரும் வருமானத்துக்குத் தக்கவாறு ...... பயணிகளுக்கு என்ன வசதி செய்து கொடுத்திருக்கிறது ரயில்வே ...
Full story
- Tuesday, August 23, 2011, 19:20
- வாசகர் கடிதம்
- 0 views
முதியோர்களின் நலன் காக்க வேண்டும்
பரம்பரை சொத்தில் திருமணமாகாத பெண்களுக்கும் சம உரிமை என்ற தீர்ப்பு வரவேற்கப் படவேண்டியதே. என்னதான் பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேறினாலும், அவர்களுக்கு சம உரிமை கொடுத்தாலும் சில பெண்கள் இன்னமும் "கட்டுப்பெட்டி"யாகவே இருப்பது கண்டு பெண்ணைப் பெற்றவர்கள் கலங்குவது என்பது உண்மைதான். படித்த பெண்களில் சிலரே இன்னமும் மணமாகி சென்ற பின்னும் பிள்ளைகள் வளர்ந்து கொண்டிருக்கின்ற போதிலும் இன்னமும் தனது பெற்றோர்களை நம்பியபடி செயல்படுவது கண்டு அந்தந்த பெண்களின் கணவன்மார்கள் அச்சப்படுவதும் அதை வெளிப் படுத்த அந்தக் கணவன்மார்கள் தயங்கியபடி நடைபிணமாக வலம் வருவதும் ...
Full story