- Wednesday, May 2, 2012, 4:50
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
ஜெ.ராஜ்குமார்
எங்கோ ஓடுகிறேன்...
எதையோ பார்க்கிறேன்...என்னமோ செய்கிறேன்...!ஏற்றம் வருமென கனவில் நினைக்கிறேன்..!
பழகும் மனிதரெல்லாம் புதிதாய் இருந்தாலும்...பழகிய மனிதரைபோல் பழக்கம் வரவில்லை..!பாழ்மனம் ஏனோஅமைதி பெறவில்லை...!
படித்ததையெல்லாம்பார்த்ததையெல்லாம்ஏட்டில் வடித்தேன்...!ஒரு பாமரன் போலே அதை ரசித்தேன்...!
எந்த பாமரனும் வாசிக்கவே இன்னும் எழுதுகிறேன்எழுத்தாளனாய் நூறு நூல்களைத் தாண்டி...!
படத்திற்கு நன்றி
http://human-3d.com/3d-picture/3d-person---puppet-carrying-a-pile-of-books-000012166739 Full story
- Wednesday, April 25, 2012, 10:14
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
ஜெ.ராஜ்குமார்
மூன்றெழுத்து மந்திரமாய் 'அம்மா' மூச்சுக் கொடுத்து ஈன்றெடுப்பாள் பிள்ளையை !பிள்ளைப்பேறு பெறுவாள் -பேர் சொல்லும் பிள்ளை என ஊர் சொல்லும் போது...!
ஈன்றெடுத்த காரணத்தால் தன் மகனைக் காத்தருள்வாள்...தனக்கெனத் துயர் வந்தாலும் மனக்கதவில் புதைத்து விட்டு மனம் திறந்து செயல்படுவாள் -மகன் வளரத் தன் உயிரைப் பணயம் வைப்பாள்...!
வரமென கிடைத்ததாய் 'அப்பா'வாழ்க்கைத் தரம் கூட்டவந்த ஓர் கடவுள்!
தன் பிள்ளை படித்திடவே தன் உழைப்பைத் ...
Full story
- Monday, March 26, 2012, 15:40
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
ஜெ.ராஜ்குமார்
வெட்டி வெட்டிஎடுத்த நிலவுஒருநாள்-முழுதும் காணாமல் போகும்!அமாவாசை அன்று.
அது போல்
மனிதன் வளர வளரஒரு நாள்திடீரென்று காணாமல் போகிறான்!மரணத்தின் பிடியில்.
நிலவு காணாமல் போனஇருளை விடமனிதன் காணாமல் போனமரணம் கொடியது !
படத்திற்கு நன்றி:
http://www.free-hdwallpapers.com/wallpaper/space/half-moon/49336 Full story
- Sunday, March 18, 2012, 0:56
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
ஜெ.ராஜ்குமார்
இரண்டு தீபங்கள் ஏற்றச் செய்தேன்இதயச் சுமையை இறக்கி வைத்தேன்இன்னொரு மகளைப்பெற்றெடுத்தாலும்-அவளையும்ஒரு தீபம் ஏற்றச் செய்வேன் !
பெண்ணே உன் புகழ் பாட வேண்டும்பூமிக்கு உன் அருமை உணர்த்த வேண்டும்
பெண் குழந்தையெனப் பிறப்பாய்கொஞ்சும் மொழியில் எல்லோரையும் ஈர்ப்பாய்கொஞ்சம் வளர்ந்து - சிறுமியெனப்பேர் எடுப்பாய்சில்மிஷங்களைப் புரிந்து பயமுறுத்துவாய்துடுக்காய் இருந்து ஆச்சர்யப்படுத்துவாய்
பெண்ணென உண்மையில் - உலா வருவாய்பலப் பல சாதனைகள் புரிந்து -'ஆணுக்கு நிகர் பெண்'ணென உரைப்பாய்...
Full story
- Monday, February 27, 2012, 16:02
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
ஜெ.ராஜ்குமார்
தத்தித் தவழும் காலங்களில்
நடை பயிலக் கற்றுக் கொடுத்தாள் அம்மா!
என்
கண்களினின்றும் கண்ணீர் வந்தால் - எனை
மடியில் போட்டுக்
கண்ணீர் துடைப்பாள்!
துள்ளிக் குதித்த காலங்களில்
பள்ளி செல்லும் -
பக்குவம் கற்றுக் கொடுத்தாள்!
சொல்லில் சிறந்தவனாய் -
வெல்லும் தனித்திறமை
நாளும் கற்பித்தாள் -
நலமுடன் நான் வாழவே -
நல்ல உளமுடன் எனை அரவணைத்தாள்!
தெளிவுடன் நான் நடக்கும் - என் பாதை
தெரிந்தவர் பின்பற்றவே - எனை
உயிருடன் உருவாக்கினாள் - எனை
உயரத்தில் வைத்துப் பார்த்தாள்!
சிகரத்தைத் தொட்டு விடும் தைரியம் எனக்கிருக்கு!
விந்தை பல புரியும் சக்தியுமிருக்கு!
தந்தையும் தாயும் பெற்றெடுத்த செல்வன் நான்
சந்தனத் தேரிலே ஊர்வலம் ...
Full story
- Tuesday, February 21, 2012, 10:37
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
ஜெ.ராஜ்குமார்
கண் உறங்கிக்
கண் விழிக்கிறோம் தினம்
கடவுளின் கருணையினால்!
உன் பிறப்பு
உன் இறப்பு தெரியாமல்
நீ வந்தாய் இவ்வுலகில்!
உன்னுடையதென்று எதுவும் இல்லை
என்பதே உண்மை!
உனக்கென வரலாறு நீ படைத்துச் சென்றாலும்...
எடுத்து செல்ல முடியாதே...!
உன்னோடு கடைசியில்.
எவரேனும் அதைக் கெடுத்து விடவும்
அனுமதி கிடையாது...!
உன் உயிரில்
ஒவ்வொரு உயிரையும் பார்த்தாலே
ஒரு துயரமும் வாராதே!
உண்மையான உறவுகளால்
ஒரு தொந்தரவும் வாய்க்காதே!
நன்மை செய் மனமே...!
உயிர் இருக்கும் வரையில்
உண்மை சொல் மனமே!
வன்மை ஒழித்திட்ட நாடு செய் மனமே!
கண் இமை போல் காத்தருள்வாய்
உன்னையே நம்பி இருக்கும் சொந்தங்களை...!
சோர்வு வேண்டாம்
சுறுசுறுப்பை மணந்து கொள்!
சிரிப்போடு
சிந்திப்பதையும் கற்றுக்கொள்!
சற்றும் தளரா
மனதாய் மாற்றிக்கொள்!
சருகாய் விழும் முன்
சரித்திரம் ...
Full story
- Tuesday, February 14, 2012, 4:36
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
ஜெ.ராஜ்குமார்
அள்ளி முடித்த கூந்தலைப்போல
ஆசை வருதடி உன்னை அள்ளிக் கொள்ளஇனிமையான உன் குரல் கேட்டுஈர்ப்பு வருதடி என் மனதுக்குள்ளஉண்மையான பெண்ணே உன்னைக் கண்டால்ஊமையாகி விடுதடி என் மொழிகளெல்லாம்எத்தனை நாள் உன்னைப் பார்த்தாலும் - என்ஏக்கம் மட்டும் குறையாதடி!ஐக்கியம் ஆகிவிட்டேன் - உன்னை நினைத்துஒரு பைத்தியமாய் அலைந்திருந்தேன்ஓடி வருவாயா எனைத் தேடிவருவாயா?
படத்திற்கு நன்றி :
http://www.ehow.com/how_4464628_impress-beautiful-indian-girl.html
Full story
- Friday, February 10, 2012, 10:00
- Featured, கட்டுரைகள்
- 0 views
ஜெ.ராஜ்குமார்
ஏ! மானிடா, உன் பூத உடலாக நான் இருப்பதற்குப் பதிலாக, விலங்கினங்களாகவோ, பறவை இனங்களாகவோ பிறவி எடுத்திருக்கலாம். எத்தனையோ நன்மை புரிவதும்,கட்டுப்பாடோடும் இருக்கும் மனிதர்களுக்கிடையில் தீய மனிதர்களாக ஏன் நீங்களும் பிறவி எடுத்துள்ளீர்கள்.
எந்த ஒரு மிருகமும் தனக்குச் சோகம், அல்லது நிறையச் சந்தோஷம் வந்து விட்டதென்று மது அருந்துவதில்லை. மனிதன் மட்டும் தான் தனக்குச் சிந்தனை வரவில்லை எனவும், ஒரு ஸ்டைலுக்காகவும், தனிமையில் இருக்கும் போதும், சிகரெட் பிடித்துக் கொண்டு ...
Full story
- Monday, January 23, 2012, 0:33
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
ஜெ.ராஜ்குமார்
மனிதருக்குள் வெவ்வேறு முகம் இருக்கலாம்வெவ்வேறு மனம் இருக்கலாம்...
ஆனால் 'மதம்' என்ற பெயரில் மனிதன்கடவுளையே பிரித்துள்ளானே அந்தந்தச் சமயத்துக்கு ஏற்றாற்போல்!
கடவுள் என்ன பிரிக்கக் கூடிய சக்தியா?!இல்லை - ஒவ்வொரு மதத்தைச் சார்ந்த மக்களை...அம்மதத்தின் கடவுள்தான் தனித்தனியே படைத்தாரோ?!
மதி கெட்ட மனிதனே மதத்தை தவிர்த்து கடவுள் ஒன்றுதான் என உணரு...!உன் ஆன்மா தூய்மையாகும் உனக்கு இந்த பூமி ...
Full story
- Friday, January 13, 2012, 12:07
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
ஜெ.ராஜ்குமார்
பூக்கள் மிதக்கும் குளங்கள்!
ஊஞ்சல் விழுதுகள்!
காக்கை , அணில், குருவிக் கூடுகள்!
நிழல் தரும்; கனி தரும்; குடை தரும்
மா பலா தென்னை மேகங்கள்!
நெல் முளைத்த தரைத் தளங்கள்!
கடந்து செல்லும் காடுகள்!
மலை இறங்கும் அருவி அற்புதம்!
மலை அருகே வீசும் இதமான தென்றல்!
மண்ணை முகர்ந்தால் மணக்கும் சந்தனம்!
மனை உள்ளே இருக்கும் மகிழ்ச்சியெனும் பொக்கிஷம்!
மனதுள்ளே நிம்மதி பெருமூச்சின் லப்டப்!
லப்டப் கிராமத்தைத் தேடி வாருங்கள்
பட படவென இதயம்
பட்டாம்பூச்சியாய்ப்
பறப்பதை உணருங்கள்...!
Full story
- Monday, January 2, 2012, 12:54
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
ஜெ.ராஜ்குமார்
மனிதர்கள் யாரும் இல்லா வீட்டுக்குப் போடுகிறோம் பூட்டு!
கெட்ட எண்ணங்களையும் சேர்த்துப் போடுகிறோம் மனதில் பூட்டு!
உனது எனது என அபகரித்ததைக் கணக்கில் காட்டாது போடுகிறோம் கருப்புப் பூட்டு!
ஆணும் பெண்ணும் இணைய சமுதாயம் போடும் திருமணப் பூட்டு!
ஆண்டவன் பெயரில் சந்நியாசி போடும் காவி பூட்டு!
இன்னும் பலப்பல பூட்டு இருந்தும் - இன்றோ என்றோ பிரிய இருக்கும் உயிர்க்கு இல்லையே ஒரு பூட்டு?
படத்திற்கு நன்றி:
http://www.yenra.com/security/word-lock.html Full story
- Wednesday, December 28, 2011, 16:56
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
ஜெ.ராஜ்குமார்
பெற்றெடுத்த அன்னையும்கற்றுத் தந்த தந்தையும்காதல் சொல்லும் தோழியும்ஊற்றெடுக்கும் அருவியும்பொங்கிடும் கங்கையும்காலைச் சூரியனும்நிலவு வெளிச்சமும்அந்தி மழையும்பனித் துளியும்பரந்திருக்கும் பூமியும்பார்க்க முடியாமல் செய்துவிட்டான் - என்கண்ணின் மணியில் - கடவுள்குற்றம் இழைத்து விட்டான்...!
மண்ணில் சிறந்த -மாமனிதனையும் படைத்து விட்டான்கண்ணைத் தானம் தரும் - கலையை அவனுக்கு வித்திட்டான்!மாமனிதன் ஒருவன் -கண்தானம் செய்ததால் என்வானம் திறந்திருச்சி ...
Full story
- Monday, December 26, 2011, 13:29
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
ஜெ. ராஜ்குமார்
பத்தினிய மணக்க
பணம் ஏன் கேக்கற?
உத்தமியே இல்லாத
பொண்ணு கிட்ட
பணம் ஏன் கொடுக்கற?
ஓர் இரவோடு இல்லை வாழ்க்கை
அதையும் தாண்டி
இதயம் பார்த்து இணைவது வாழ்க்கை
உன் உறவோடு வருவாளே
உன் சுமையெல்லாம் ஏற்பாளே
உனக்காகக் கிடப்பாளே...
துளிர் நெஞ்சம் அவள்தான் -
துள்ளிக் குதித்தோடுவாள் உன்னோடு
பள்ளியறை வாசலில் இருந்து - உன்
வாழ்வு இறுதி வரைக்கும் -
குறையேதும் இல்லாமல் பார்த்துக் கொள்வாள்...!
உன் குழந்தையெல்லாம் - அவள்
குறைகூறாது பெற்றுக் கொள்வாள்
உனக்கே பெருமை சேர்த்திடுவாள்...!
சரியான மனிதனாக நீ இருந்தால் - தினம்
அவளோடு முறையாகத் துணை புரிந்தால் - உன்
இல்வாழ்க்கை இனித்திடும்
இனியேனும் பணம் கேட்டு ...
Full story
- Friday, December 23, 2011, 12:53
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
ஜெ.ராஜ்குமார்
புல்வெளிக் கூட்டங்கள்
புதியதோர் சட்டம் அமைத்தது...!
நெல் விளைவிக்காமல்
நெஞ்சம் சாய்வதில்லையாம்...!
உழவனை உழச் செய்து...
பழமை மறந்தவனைத் திருந்தச் செய்து...
பசி போக்கும் உயிர் நாடி இது - என்று
பலதை ருசிப்போர்க்கும் சொல்லி உணர்த்தும் இது!
கடமை உணர்ந்தவர்களாய்க்
கட்டாந்தரையில்
படர்ந்த நாள்களை ஒழித்து...
கண்காட்சிப் பொருளாய்
கண்டவர் பார்த்து, மிதித்து, அமர்ந்து, படுத்து
விளையாடியதை நிறுத்தி...
வறுமை வழக்கமான - மனித வாழ்க்கையில்
சிறுமை தந்திடும் புல்காடுகளாய்ப் பிறக்காமல் -
வறுமை ஒழித்தோங்கும் - வளமிக்க
நெல் பயிரின் சுவாசங்களாய் -
மனித உழைப்பில் - மலர்ந்திட
முடிவை எடுத்தது...!
படத்திற்கு நன்றி:
http://www.dowagro.com/usag/rice Full story
- Tuesday, December 20, 2011, 9:33
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
ஜெ.ராஜ்குமார்
தினம் ஒரு திருக்குறள் படித்திட வேண்டும்!
திரும்பிய பக்கமெல்லாம்
அதை உணர்த்திட வேண்டும்!
மனம் அதிலே நிலைத்திட வேண்டும்!
மனிதனின் தீய குணத்தினை மாற்றிட வேண்டும்!
வள்ளுவன் வகுத்த அதிகாரமெல்லாம் -
மனிதனை ஆதிக்கம் செய்ய வேண்டும்!
இதைப் போதிக்கும் திறமையில் - அனைவரும்
சாதிக்க வேண்டும்!
இரண்டு வரி வேதவாக்கு - இதை
இறுதி வரைக் கடைப்பிடித்தால் கிடைக்கும் நல்வாழ்வு!
மறதியில் கூட மறக்கக் கூடாத
உயிர்மூச்சு இது!
பிறவியிலே நீ - பிறந்த பயன்
வேண்டுமென்றால்
உறுதியோடு ஒரு துறவி போல -
திருக்குறளை நீ படித்து விடு...!
படித்தபடி நீ - நடந்து கொண்டால்
நீ நினைத்தபடி வாழ்க்கை இருக்கும்!
நீ ...
Full story