Author Archive

Page 1 of 512345

தணிக்கைத்துறையின் தணியா வேகம்

தணிக்கைத்துறையின் தணியா வேகம்
  இன்னம்பூரான் நான் இந்த இழையை ஒரு பாடாக தணித்து அணைத்து விட்டேன், யாருக்கும் விழிப்புணர்ச்சி ஏற்பட்டதாக அறிகுறிகள் இல்லாததால். ஆனால், தற்குறிகள் நாடாளத்தொடங்கினால், இறைவன் கூட ஓடி ஒளிவான். இன்றைய தணிக்கைத் தகவல் நம்மை தடுமாற வைக்கிறது. சில அரசியலார் தகிடுதத்தம் செய்வதும், சில உயர் அதிகாரிகள் மட்டமான தகாத செயல்களில் ஈடுபடுவதும் அன்றாட செய்தி. விஞ்ஞானிகளும் அஞ்ஞானிகளாக மாறி, ஆடிட்டர் ஜெனெரல் சொன்ன மாதிரி, ‘அரசு ... Full story

சுக்குமி, ளகுதி, ப்பிலி… -2

சுக்குமி, ளகுதி, ப்பிலி... -2
  இன்னம்பூரான் ‘கிச்சா! மந்தமாயிருக்கு என்றாயே. கஷாயம் போட்டுத்தருகிறேன். கொஞ்சம் கோமுட்டிக்கடையில் சுக்கு, மிளகு, திப்பிலி வாங்கிண்டு வா.’ போறான். ‘கொஞ்சம் தரேளா? சுக்குமி, ளகுதி, ப்பிலி’ (நம்ம உலக்கைக் கொழுந்து) கோமுட்டிக்குக் காது கொஞ்சம் மந்தம். ‘சூரத்தாவரை இலவசமா தாரேன். ஆமணக்கெண்ணாயா கேட்டே?’ இவன் காதிலெ இலவசம் தான் விழுந்தது. கை நிறைய... ஹூம். பாட்டிக்குக் கண் பார்வை மந்தம். கஷாயம் காய்ச்சி வாயில் ஊத்திவிட்டாள். கிச்சாவுக்கு பிச்சுண்டுடுத்து -பேதியும், பீதியும். அந்த மாதிரி இருக்கு இன்றைய ... Full story

‘சுக்குமி, ளகுதி, ப்பிலி…’ (1)

‘சுக்குமி, ளகுதி, ப்பிலி...’ (1)
    இன்னம்பூரான் எங்கே போகிறோம்? உலகெங்கும் இதழ்கள் இந்தியாவை கேலி செய்கின்றன. சர்வதேச சந்தையில் உரைகல் தேய்க்கும் Standard & Poor போன்றோர் இந்தியாவை நிதி நிலை மதிப்பீட்டில் ‘அம்போ’ என்று இறக்கிவிடுகிறார்கள். இந்திய ரூபாய் அதலபாதாளம். புள்ளி விவரங்கள் எல்லாம் தகாலடி என்று பெரிசுகள் பேசுகின்றன. ரிசர்வ் வங்கி பரமபத சோபான மயக்கத்தில். ஆடிட்டர் ஜெனெரலோ 2ஜி, ரிலையன்ஸ் எரிவாயு, நிலக்கரியையே காசை கரியாக்குவது என்றெல்லாம் கிடுக்கிப்பிடி போட்றார். உச்ச நீதி மன்றத்தில் ... Full story

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்….?

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்....?
  இன்னம்பூரான் தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை -25   இன்றைய கட்டுரைக்கும், தணிக்கைத் துறைக்கும் நேரடி தொடர்பு இல்லை. எனினும், அத்துறை மட்டுமே அரசு நிதி நிலையை, இடைவிடாமல் ஆராய்வதால், இன்றைய செல்வ நிலை தீர்மானங்களின் திசையைப் பற்றி (RBI’s Monetary policy), இங்கு தொடர்கிறேன். தற்காலம், பல விஷயங்களில், இந்தியா முன் நிலையில் உள்ளது. உலகின் மேலாவாக மேய்ந்து வரும் நாடுகளும் உன்னிப்பாக நம் நாட்டு நடப்புகளை - செல்வ நிலை தீர்மானங்களிலிருந்து, தணிக்கை அறிவிப்புகள் வரை, 2ஜி, எண்ணை, ... Full story

கனம் கோர்ட்டார் அவர்களே! ~(8)

கனம் கோர்ட்டார் அவர்களே! ~(8)
  இன்னம்பூரான் ‘மாதம் மும்மாரி பெய்கிறதா?’ என்று அமைச்சரை வினவிய அரசனை அரியணையிலிருந்து இறக்கி விடவேண்டும். நிரந்தரமாக, அந்தப்புரத்துப் பள்ளியறை வாசியாக இருக்கும் மன்னனுக்குத் தான் இந்த அளவு நாட்டு நடப்பு பற்றிய அறியாமை இருக்க முடியும். அவனால் மக்களுக்கு பயன் யாதும் இல்லை. கெட் அவுட். டில்லி முனிசிபாலிட்டி அத்தகைய கண்மூடி ராஜாங்கம் போல. இல்லாவிடின், கிட்டத்தட்ட 5 லக்ஷம் சைக்கிள்-ரிக்க்ஷாக்கள் ஓடும் டில்லி நகரில், ஏதோ ஒரு குருட்டாம்போக்குக் கணக்கில் 99 ஆயிரம் வண்டிகளுக்குத் ... Full story

பட்ஜெட் ஃப்ஃட்ஃப்டி! ~2

பட்ஜெட் ஃப்ஃட்ஃப்டி! ~2
  இன்னம்பூரான் இரு கருத்துக்கள் வந்தன. 1. ‘... அதையும் இந்த உலகம் நம்புதே?அதைச் சொல்லணும்...’ 2.’... பொருளாதாரத்தின் அடிப்படைக் கூறுகளை – அதன் விழுமிய சாராம்சங்களை அறியாத பாமரர்கள் இருக்கும் வரை –...’ என்ற ஆதங்கம். இருவரும் என்னுடைய ‘மனச்சுமையும், மானப் பிரச்சினையும்’ புரிந்து கொண்டது நல்வரவே. நான் அடித்துப்பிடித்துக் கொண்டு எழுதியதை நியாயப்படுத்துகிறது. முதலில் தெனாலிராமனின் குதிரைக்கதை. ‘All progress is not ... Full story

பட்ஜெட் ஃபட்ஃபட்டி!

பட்ஜெட் ஃபட்ஃபட்டி!
  இன்னம்பூரான் என்னது இது? இந்த வருட இந்திய பட்ஜெட் இந்தக் கேள்வியை தான் எழுப்புகிறது. 21 வருடங்கள் முன்னால், அன்றைய நிதி அமைச்சர் (இன்றைய பிரதமர்) ஒரு சூரியோதய பட்ஜெட் அருளினார். இந்திய பொருளாதாரம் ஒளி வீசிற்று. இன்றைய பட்ஜெட்டோ ஆட்டம் கண்ட நாற்காலியாக (ஆம். அரசு நாற்காலி, காலொடிந்த முக்காலி போல் ஆடியது.) தடுமாறுகிறது. சூரிய அஸ்தமனம் போல் தோன்றுகிறது. ‘9’ என்ற இலக்கிலிருந்து ஜி.டி.பி. தலைகீழாய் போய் ‘6’ ஆகி விட்டது. மார்ச் 31, ... Full story

வாசகர்களின் பதில் வேண்டி…….

வாசகர்களின் பதில் வேண்டி.......
  அன்பு நண்பர்களே, வல்லமை வாசகர்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமாயிருக்கும் திரு.இன்னம்பூரான் அவர்கள் நமக்கு வரைந்த மடலை, அவர் வேண்டுகோளுக்கிணங்க வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.   ஆசிரியர் அன்பார்ந்த வல்லமை வாசகர்களே, திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர் அருளிய சிவஞானபோதம் என்ற ஆன்மீக நூலின் அவையடக்கம், ‘ தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்/எம்மை உடைமை எமை இகழார்/ தம்மை உணரார் உணரார் உடங்குஇயைந்து தம்மில்/புணராமை கேளாம் புறன்’ என்று ... Full story

கனம் கோர்ட்டார் அவர்களே – (7)

கனம் கோர்ட்டார் அவர்களே - (7)
இன்னம்பூரான் இருதலைக்கொள்ளித் தவிப்பு இந்திய மத்திய அமைச்சரகத்திற்கு! இந்தத் தொடரின் ஆறாவது பகுதியில், 2ஜி உரிமங்களை ரத்து செய்து, வரலாறு படைத்த உச்சநீதி மன்ற தீர்வை அலசும்போது,, ‘சட்டம் ஒரு கழுதை தான். மற்றவர்களின் அழுக்குப் பொதியையும் சுமக்கிறது அல்லவா!’ என்று நான் எழுதியதை உறுதி படுத்தும் வகையில், ஒரு செய்தி சில நிமிடங்கள் முன்னால் கிடைத்தது. அந்தத் தீர்வை உதட்டளவில் ஏற்று, மனதில் அதை கொள்ளாத மத்திய அமைச்சரகம் தேடிய ... Full story

பெண்ணின் பெருமை

பெண்ணின் பெருமை
இன்னம்பூரான் உங்களுக்கு ஒன்று தெரியுமா? ‘சக்தி’ மகத்தான ஆற்றல் படைத்த பெண் தெய்வம் என்று ஹிந்து மத வழிபாடு தெரிவிக்கிறது. மனித உருவில் அதனுடைய சாதனையை கேளுங்கள். முதல் உலக யுத்தத்தின் போது சோற்று பஞ்சமும், நிம்மதியற்ற வாழ்க்கையும் ரஷ்ய பெண்ணுலகத்தை பெரிதும் பாதித்தது. இன்னலும், கொடுமையும் தாங்கமுடியாமல் பெண்ணினமே போர்க்கோலம் பூண்டது; கொதித்தெழுந்தார்கள்; புரட்சி செய்தார்கள். இது நடந்த தினம்: பிப்ரவரி மாத இறுதி ஞாயிற்றுக்கிழமை. (கிரகேரியம் நாட்காட்டி படி, மார்ச் 8, 1917) நாலே நாட்களில் ஜார்ஜ் மன்னன் முடி துறந்தான். புரட்சியில் வாகை சூடி ... Full story

தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை -24

தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை -24
இன்னம்பூரான் பழங்கதை அகில உலக நாடுகளின் தணிக்கைச் சங்கமொன்று உண்டு. INTOSAI என்று அதற்குப் பெயர். அம்மாதிரியே, ஆசிய அமைப்பு ஒன்று உண்டு. அதன் பெயர்: ASOSAI. அதற்கு இந்த வருடம் இந்தியா தலைமை ஏற்றுள்ளது. இந்தியாவின் தணிக்கைத்துறையைப் பற்றி அறிய மக்களிடையே ஆர்வம் கூடி வரும் வேளையில், உலகளவில் அத்துறையின் பணியைப் பற்றி எழுத நினைத்தேன். கண் முன் வந்து நிற்பதோ, ஒரு பழங்கதை. ஆம். தனது நாற்பது வருட அனுபவத்தின் ... Full story

தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை – 23

தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை – 23
இன்னம்பூரான் வாசகர் ஒருவர், ஏலம் பிடிப்பதில் கூட்டுக்களவாணித்தனத்தை பற்றி, இத்தொடரின் பின்னூட்டத்தில், கேள்வி எழுப்பியிருந்தார். இன்றைய (11 02 2012) ஊடகச்செய்தி அதற்கு பிரமாணத்துடன் பதில் அளிக்கிறது. அதை படித்தவுடன் நினைவில் வந்தது, 1956/57ல் அக்காலத்து சென்னை மாகாண அரசாணை ஒன்றை தணிக்கை செய்தது. அந்த அரசாணை குறிப்பிட்ட நபரின் பெயர் நன்றாக நினைவில் இருக்கிறது. அவருடைய சந்ததியின் மனம் புண் படலாகாது என்று அதைச் சொல்ல வில்லை. அவர் ஒரு உயர் போலீஸ் அதிகாரி. மக்களிடையே ... Full story

இந்த நறுக்கும்.. !!!

  நறுக்.. துணுக்..... (14) இன்னம்பூரான் மதுரை மாவட்டத்தின் ஊமச்சிக்குளம் போலீஸ், கணவனை அடித்துக் கொன்ற மனைவியை, இ.பி.கோ. 100 என்ற ஷரத்தின் கீழ் , தற்காப்பு - கொலை என்று சொல்லி, விடுவித்தனர். குடும்பத்தினரை தொந்திரவு செய்பவன் என்று போலீஸ் ஆவணங்கள் கூறும் ஜ்யோதி பாசுவுக்கும், அவன் மனைவி உஷா ராணிக்கும் 1995 லிருந்து பிரச்சனைகள் - கிட்டத்தட்ட 20 வருடங்கள். 10.02.2012 அன்று அவன் வீட்டில் புகுந்து, மனைவியை அடித்தான். தன்னுடைய பெண்ணையே கற்பழிக்க முயன்றான். மனைவி அவனை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றாள். கிரிக்கெட் மட்டை வாழ்க. சட்டரீதியான ... Full story

ககன சாரிகை-6

ககன சாரிகை-6
 இன்னம்பூரான்   1.16: இனி ஸன் ட்ஸு பேசுவார். முதல் பகுதி: திட்டம் வகுப்பது:  1.17: சமர்க்கலை நாடாளுவதற்கு இன்றியமையாதது. 1.18: வாகை சூடினால் வாழ்வு. தோல்வி தழுவினால் சாவு. அரண் (இருந்தால்) காக்கும். (எதிரி) அகழ் கடந்தால் எல்லாம் இழந்தோம். எனவே, தீவிரமான ஆய்ந்து அறிதல் வேண்டும். சூழல் அறிய வேண்டும், அரசே. 1.19: தமிழிலக்கியம் கூறுவது என்ன? ஐயனாரிதனார் என்ற புலவரின் புறப்பொருள் வெண்பா மாலை ... Full story

கனம் கோர்ட்டார் அவர்களே-6

கனம் கோர்ட்டார் அவர்களே-6
இன்னம்பூரான் நாற்பது வருடங்களுக்கு முன்னால் உச்சநீதி மன்றத்தின் கேசவானந்த பாரதி வழக்குத் தீர்வு (AIR 1973 SC 1461) எனப்படுவது பெரிதும் பேசப்பட்டது. அரசியல் சாஸனத்தை நிலை நிறுத்தி வைத்து, அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், சொத்து சுதந்திரம் பறி போகாத வகையில், நாடாளுமன்றத்தின் எல்லையை நிர்ணயித்த வகையில் அமைந்தது அந்தத் தீர்ப்பு. சட்டத்தின் மேலாண்மையை (தி ரூல் ஆஃப் லா) உறுதிப் படுத்த நீதித்துறை, இவ்வாறு நீதியின் வாய்மையை (ஜுடீஷியல் ஆக்டிவிசம்) ராஜபேரிகையென ... Full story
Page 1 of 512345
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.