Author Archive

பெண்ணிலக்கியவாதிகளின் இலக்கிய ஆய்வரங்கம் – அழைப்பிதழ்

பெண்ணிலக்கியவாதிகளின் இலக்கிய ஆய்வரங்கம் - அழைப்பிதழ்
    Full story

சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில் கமலாதேவி அரவிந்தனின் நேர்காணல்

செவ்வி: அண்.சிவ.குணாளன் (சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில் 27.03.2011, 03.04.2011 ஆகிய தேதிகளில் சிங்கப்பூரின் முன்னணி எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன் அவர்களின் நேர்காணல் வெளியானது. அண்.சிவ.குணாளன், நல்ல கேள்விகளை எழுப்பி, கமலம் அவர்களிடமிருந்து நல்ல பதில்களைப் பெற்றிருந்தார். அச்சில் வெளியான இந்த நேர்முகம், முதல் முறையாக இணையத்தில், வல்லமை மின்னிதழில் வெளியாகிறது.) சிறுகதைகள், நாடகங்கள், விமர்சனக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் எனப் பல்வேறு துறைகளில் 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழுலகுக்குப் படைப்புகளைத் தந்து வருபவர் எழுத்தாளர் ... Full story

கமலாதேவி அரவிந்தன் உடன் குரல் நேர்முகம்

செவ்வி: அண்ணாகண்ணன் சிங்கப்பூரில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர், திருமதி கமலாதேவி அரவிந்தன். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர். எனினும் தமிழ் பால் தணியாத காதல் கொண்டவர். தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் இலக்கியம் படைக்கும் வித்தகர். சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை, கவிதை, ஆய்வு... என இவர் கைத்திறம் காட்டிய துறைகள் பல. மிக இளம் வயதிலேயே எழுதத் தொடங்கி, பல பத்தாண்டுகளாகத் தொடர்ச்சியான படைப்பியக்கம் கொண்டவர்.  தமிழுக்குக் கிட்டிய தவச்செல்வி எனத் தமிழவேள் கோ. சாரங்கபாணி, இவரைப் பாராட்டியுள்ளார். தன் தாய்மொழியான மலையாளத்திலும் ... Full story

“எம் பேர் மாச்சாப்பு”

கமலாதேவி அரவிந்தன் துப்பட்டாவைக் கழுத்தைச் சுற்றிப் போட்டுக்கொண்டு, வேகம் வேகமாய் நடந்தவளை, "ஹலோ! அண்டி! நல்லாயிருக்கீங்களா?" என்று பின்னாலிருந்து வந்த குரல் தடுத்தி நிறுத்தியது. நீலக்கலர் டீ ஷர்ட்டும், முக்கால் பெமுடாவுமாய், கையில் கோக், முகமெல்லாம் புன்னகையாய், ஒரு இளைஞன் நின்றுகொண்டிருந்தான். மிஞ்சி மிஞ்சிப் போனால் 23 அல்லது 25 வயதிருக்கலாம். திகைத்துப் போய் நிற்க, "வாங்க அண்டி, இப்படி உட்கார்ந்து பேசலாம்," என்று எதிரே நின்ற இளைஞன் அழைத்தான். "நான் பெண்கள் வார்டுக்குப் போயிட்டிருக்கேன். ஏற்கனவே நேரமாயிடிச்சு, சீக்கிரம் போயிட்டு வந்திடறேன். பிறகு உட்கார்ந்து ... Full story

நம்பியும் நங்கையும்

கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர் ஆவி பறக்கும் மணிப்பிட்டில், நெய் பெய்து, சர்க்கரையும் கனிந்த கதலிப் பழமும் பிசைந்து, ரசித்து ருசித்து, கணவர் பசியாறிக்கொண்டிருக்க, கணவருக்காக ”சூடுசாய”யை ஆற்றிக்கொண்டிருந்தபோதுதான் வாசல் மணி அடித்தது. திறந்தால் ஜோசப் நின்றுகொண்டிருந்தான். அட, மூன்று வருடங்களாவது இருக்காது இவனைப் பார்த்து!! மேடை நாடக எழுத்து, இயக்கம், எனப் பொறி பறக்க எழுதிக்கொண்டிருந்தபோது, டெக்னிஷியனாக வந்து சேர்ந்தவன் ஜோசப். ஆனால் ஸ்டேஜ் மேனேஜ்மெண்டிலிருந்து, ஏன் அவசரத்துக்கு, ப்ரொப்ம்டிங் வரை, எல்லா நிலைகளிலும் உதவி செய்யும் ஆற்றல் ஜோசப்புக்கு இருந்தது. பொறியியலாரான கணவரிடம் அவ்வளவு பவ்யமாக ... Full story
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.