- Thursday, August 25, 2011, 14:58
- கட்டுரைகள், பொது
- 0 views
கவிதாயினி. மதுமிதா
தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருவுருவச் சிலை கடந்த 2009 -ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதியன்று, பெங்களூருவிலும், கன்னடக் கவிஞர் சர்வக்ஞரின் திருவுருவச் சிலை அதே மாதத்தில் 13 -ஆம் தேதியன்று சென்னை அயனாவரம் ஜீவா பூங்காவிலும், அப்போதைய தமிழ்நாடு, மற்றும் கர்நாடகா மாநிலங்களின் முதல்வர்களால் திறந்து வைக்கப்பட்டது.
சர்வக்ஞரும் திருவள்ளுவரைப் போலவே ஒரு ஒப்பில்லா புலவராவார். கர்நாடக மாநிலத்தின் ஹவேரி மாவட்டத்தில் ஹிரேகெரூர் தாலுக்காவின் அபலூர் என்ற இடத்தைச் சேர்ந்தவராவார். மூன்று அடிகளைக் கொண்ட 'திரிபதி' எனப்படும் இவர் இயற்றிய செய்யுட்கள் 'வசனா' என வழங்கப்பட்டன. ஏறத்தாழ இரண்டாயிரம் செய்யுட்கள் இது வரையில் கிடைத்துள்ளன.
இந்த சிலை திறப்பு நிகழ்ச்சிகள் நிச்சயமாக இரு மாநில மக்களின் இதயங்களை ஒன்றிணைத்து, ஒற்றுமையை வளர்ப்பதாகவே அமைந்தன. இதைப் பாராட்டும் விதமாக கடந்த 2010 - ஆம் வருடம் ஆகஸ்ட் 13- ஆம் தேதி 'அகில இந்திய மொழி நல்லிணக்க நாள்' கன்னட மற்றும் கலாச்சாரத் துறையால் கொண்டாடப்பட்டது.
Full story
- Wednesday, August 11, 2010, 13:05
- ஒலி வெளி, கவிதைகள்
- 0 views
கவிதாயினி மதுமிதாவின் ‘கையில் வந்த வெண்ணிலவு’ என்ற பாடலுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார், கனடாவைச் சேர்ந்த ஆர்.எஸ். மணி.
அன்புடன் குழுமத்தின் இசைப் பாடல் போட்டியில் சிறப்புப் பரிசினைப் பெற்ற இந்தப் பாடலை இங்கே கேட்டு மகிழுங்கள்.
இந்தப் பாடலின் வரி வடிவம் இங்கே:
கையில் வந்த வெண்ணிலவு
கையில் வந்த வெண்ணிலவு - உன்
கனவில் வந்த பெண்ணிலவு
காலம் கொடுத்தது உன்னிடமே
காப்பாய் நீயும் கண்ணெனவே (கையில் வந்த)
காற்றில் கரைந்து சென்றாலும்
கனிவாய் நான் காதலாய் - என்
இதழ் பதிப்பேன்
கண்கள் மயங்கும் வேளையில் - உன்
மேனியில் முத்தக் கவிதைகள் நான்
வரைந்து வைப்பேன் ...
Full story
- Thursday, July 29, 2010, 14:21
- ஒலி வெளி, கவிதைகள்
- 0 views
கவிதாயினி மதுமிதாவின் 'தனிமை ஒரு வரமே' என்ற பாடலுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார், கனடாவைச் சேர்ந்த ஆர்.எஸ். மணி.
மிக உருக்கமான அந்த இனிய பாடலை இங்கே கேட்டு மகிழுங்கள்.
இந்தப் பாடலின் வரி வடிவம் இங்கே:
தனிமை ஒரு வரமே
தனிமை ஒரு வரமே - மனமே
தனிமை ஒரு வரமே
இனிமை அது தருமே - உனக்கு
இனிமை அது தருமே
தன்னையே அறிந்து கொள்ள
தன்னிலை உணர்ந்து கொள்ள
தண்ணென்ற அமைதியும் சேர
தானாய் அமையும் அந்த தனிமை (தனிமை )
ஆயாசம் துடைத்துப் போக்க
அகிலம் முழுவதும் அணைக்க
அன்பும் உள்ளத்தில் ...
Full story