- Friday, April 6, 2012, 14:33
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
கவிநயா
அப்படின்னா என்னன்னு இப்பதான் இலேசா புரிய ஆரம்பிச்ச மாதிரி இருக்கு!
கோபப்பட வேண்டிய விஷயத்துக்கு சரியான நேரத்தில் கோபப்படறதும், தேவையில்லாத விஷயத்தை உடனடியா விட்டுத் தள்ளறதும் மிகவும் அவசியம். ஒருத்தர் நம்மை கேவலமா நடத்தும் போது கோபப்படுவதுதானே நியாயம்? கண் முன்னாடி அநீதி நடக்கும் போது அதை எதிர்ப்பதுதானே தர்மம்? அந்த மாதிரி சமயங்களில் அமைதியா இருந்தா அது கோழைத்தனம்தானே? அதைத்தான் ‘ரௌத்திரம் பழகு’ன்னு சொல்றான், பாரதி.
இதுவே நம்ம தினசரி வாழ்க்கைக்கு எப்படிப் பொருந்துதுன்னு பார்ப்போம்.
கோபம் என்பது இயல்பான உணர்வு மட்டுமில்லை; ...
Full story
- Friday, March 23, 2012, 7:55
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
கவிநயா
மூடி மூடி வைத்தாலும், மல்லிகைப் பூவின் இருப்பைஅதன் வாசனை காட்டிக் கொடுத்து விடுவதைப் போல…
பனிக் கட்டியின் இருப்பைபாத்திரம் காட்டிக் கொடுத்து விடுவதைப் போல…
கதிரவனின் இருப்பைஅவன் கதிரொளி காட்டிக் கொடுத்து விடுவதைப் போல…
என் மனதில் உன் இருப்பைதிடீர் பகற் கனவுகளும்,ரகசியப் புன்னகைகளும்,கன்னத்தின் கனிச் சிவப்பும்,காட்டிக் கொடுத்து விடுகின்றன!
படத்திற்கு நன்றி:
http://www.thehavenhealingcentre.co.uk/blushing.htm Full story
- Sunday, March 11, 2012, 18:57
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
கவிநயா
ஒரு குடும்பம். அதில் தாய், தந்தை, அக்கா, மற்றும் ஒரு குழந்தை இருக்கிறார்கள். ஒரு நாள், அப்பா வீட்டுக்கு வரும்போது நிறைய இனிப்புகள் வாங்கி வருகிறார். அவருக்கு சம்பள நாள் போல இருக்கிறது!
ஜாங்கிரி என்றால் அந்தக் குழந்தைக்கு ரொம்பப் பிடிக்குமாம். அதனால் முதலில் ஒரு ஜாங்கிரியை எடுத்து அந்தக் குழந்தை கையில் தருகிறார்கள். சிறு பிள்ளைகளிடம் ஏதாவது இருந்தால், விளையாட்டாக நாம் அதைக் கேட்போமில்லையா, அது நமக்குக் கொடுக்கிறதா இல்லையா ...
Full story
கவிநயா
சின்ன வயதிலிருந்தே நடனமென்றால் பிடிக்கும் எனக்கு. பள்ளி விழாக்களில் கண்டிப்பாகக் கலந்து கொள்வேன். கல்லூரியில் அவ்வளவாக வாய்ப்பில்லை. தொலைக் காட்சி வந்த பிறகு பரத நாட்டிய நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்பேன். இப்படித்தான் தொடங்கியது என்னுடைய நாட்டியக் காதல். ஆனால் நடன நிகழ்ச்சி எதுவும் நேரில் பார்த்ததில்லை, பரதம் கற்றுக் கொள்வேன் என்று கனவிலும் நினைத்ததும் இல்லை.
அமெரிக்கா வந்த பிறகுதான் நடனத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பே கிடைத்தது. நான் பார்த்த முதல் நடன நிகழ்ச்சி ஒரு பரதக் கலைஞரும், ஒரு குச்சுப்புடிக் ...
Full story
கவிநயா
சக்தி நீயின்றி எதுவும் இல்லை!
சக்தி நீதானே உலகின் எல்லை!
அன்னை தன் வடிவாய் உன்னைப் படைத்தாள்!அன்பின் வடிவாய் உன்னை வடித்தாள்!உயிரைத் தாங்கும் உரிமை தந்தாள்!அகிலம் ஆக்கும் ஆற்றல் தந்தாள்!அம்மா என்றுனை அழைக்கச் செய்தாள்!அன்பால் உலகுனைத் துதிக்கச் செய்தாள்!
சக்தியும் நீயே! சகலமும் நீயே!வித்தும் நீயே! விளைவும் நீயே!
அச்சமே யின்றி அநீதி எதிர்ப்பாய்!துச்சம் நீயென எதிரியை அழிப்பாய்!நல்ல சக்திகளை வளர்ப்பதுன் கடமை!தீய சக்திகளை தீர்ப்பதுன் திறமை!சக்தியை உணர்ந்து ...
Full story
- Wednesday, February 22, 2012, 11:24
- home-lit, இலக்கியம், கவிதைகள்
- 0 views
கவிநயா
கண்ணூறச் செய்யும் பாசம் போல
கவியூறச் செய்கின்றது,
உன் நேசம்.
என் இதய வானத்தை
நிரந்தர பௌர்ணமியாக்குகிறது,
உன் மதி வதனம்.
என் எண்ணக் கூரையில்
இடைவெளியில்லாமல் வேயப் பட்டிருக்கின்றன,
உன் நினைவு நட்சத்திரங்கள்.
உன் அருட்பார்வைப் பொழிவிற்கென
ஆவலாய்க் காத்திருக்கிறது,
இந்தப் பாவை வனம்.
படத்திற்கு நன்றி:
http://www.innocentenglish.com/funny-amazing-pictures-videos/optical-illusions-3d/optical-illusion-pictures.html
Full story
- Wednesday, February 15, 2012, 5:15
- home-lit, இலக்கியம், கவிதைகள்
- 0 views
கவிநயா
கயிலாய நாதனுக்கு கல்யாணமாம்
கயிலாய மலையெங்கும் கொண்டாட்டமாம்எயிலெ ல்லாம் நீறாக முறுவலித்த சிவனுக்கு,அயி லேந்தும் அரனுக்கு கல்யாணமாம்! நந்திதேவர் மேளங் கொட்டிச் சொல்லநாரதர் கீதத்தில் சேதி சொல்லவாயுதேவன் தென்றல் வீசிச் சொல்லவானவர் எல்லோரும் கூடினராம்! தடாதகைப் பிராட்டிக்கு கல்யாணமாம்தரணியில் எங்கெங்கும் கொண்டாட்டமாம்திக்குகள் அத்தனையும் தனியளாய் வென்றிட்டதென்னவளாம் தேவிக்கு கல்யாணமாம்! மதுரையில் எங்கிலும் முரசொலிக்க, அதுமாநில மெங்கிலும் எதிரொலிக்க...
Full story
- Friday, February 10, 2012, 5:00
- நறுக்..துணுக்...
- 0 views
கவிநயா
நறுக்... துணுக்......(13)
சில நாட்களுக்கு முன்னால் வெளியூர் போக வேண்டியிருந்தது. வழக்கமாகப் போகிற ஊர் இல்லை, அதனால் வழி எல்லாம் புதுசாக இருந்தது. போகும் போது பரவாயில்லை, ஆனா வரும்போது இருட்டு; எக்கச்சக்க போக்குவரவு; கூடவே மழை வேறே. அதனால வண்டி சாரத்தியம் அத்தனை சுலபமாக இருக்கலை. வழி சொல்கிறவங்க (அதாங்க GPS) அவங்களே தொலைஞ்சு போயிட்டாங்க. அதனால சில சமயம் வழியில் நிறுத்திக்கிட்டு, வரைபடத்தை வச்சு பார்த்துக்கிட்டு, இப்படியே மெதுவா வர வேண்டியதாயிடுச்சு.
இந்த ...
Full story
- Friday, February 3, 2012, 16:20
- Featured, இலக்கியம், கவிதைகள்
- 0 views
எழுதுவதிலும், வாசிப்பதிலும் பேரார்வம் கொண்டுள்ள கவிதாயினி கவிநயா, அமெரிக்க நாட்டில் வசிக்கும் ஒரு நாட்டியக் கலைஞர். இளமை விகடன், திண்ணை, திசைகள், போன்ற இணையப் பத்திரிக்கைகள் மூலம் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்
அம்மன் பாட்டு என்ற குழுமத்திலும் தொடர்ந்து தன் முத்திரையைப் பதித்து வருபவர் கவிநயா.
நினைவின் விளிம்பில் என்ற வலைப்பூவும் வைத்திருக்கிறார். நம் வல்லமையின் நலம் விரும்பியும் , ஆலோசகருமான திரு திவாகர் மூலமாக நம் வல்லமையிலும் தொடர்ந்து தம் ...
Full story