Author Archive

Page 1 of 41234

இரக்கமற்ற ராம்னி

இரக்கமற்ற ராம்னி
  நாகேஸ்வரி அண்ணாமலை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க நடந்த குடியரசுக் கட்சி வேட்பாளர்களின் முதல்நிலைத் தேர்தல் ஒரு வழியாக முடிவிற்கு வந்திருப்பது போல் தெரிகிறது.  ஜனவரியில் களத்தில் எட்டுப் பேர் இருந்தனர்.  அது படிப்படியாகக் குறைந்து மிட் ராம்னி (Mitt Romney) என்ற வேட்பாளர் மட்டும் களத்தில் இருக்கிறார்.  இவர்தான் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்தெடுக்கப்படுவார் போல் தெரிகிறது.  இவர் அறிவிலும் ... Full story

பெண்ணுக்கு ஏன் தனி நீதி?

பெண்ணுக்கு ஏன் தனி  நீதி?
    நாகேஸ்வரி அண்ணாமலை கற்பு என்பதற்கு ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு சமூகத்திலும் ஒவ்வொரு விதமாக விளக்கம் தரப்படுகிறது. தமிழ்க் கலாச்சாரத்தைப் பொறுத்த வரை கற்பு என்பது பெண்களுக்காக மட்டும் வரையறுக்கப்பட்டது போல் இருக்கிறது. தமிழ் இலக்கியத்தில் பெண்களின் கற்பை மூன்று விதமாகப் பிரித்தனர். கணவன் இறந்த உடனே மனைவியும் உயிர் துறத்தலைத் தலையாய கற்பு என்றனர். அவன் இறந்த பிறகு அவன் சிதையோடு உடன்கட்டை ஏறியதை இரண்டாவது வகைக் கற்பு என்றனர். கணவன் இறந்த பிறகு உடனேயே உயிர் ... Full story

இன்னும் எல்லோரும் ஓரினம் இல்லை

இன்னும் எல்லோரும் ஓரினம் இல்லை
    நாகேஸ்வரி அண்ணாமலை       இன்னும் அமெரிக்காவில் இனத்துவேஷம் இருக்கிறது என்பதற்குப் பல சான்றுகள் கிடைத்துக்கொண்டே  இருக்கின்றன. ஜனாதிபதி ஒபாமா கருப்பர் என்பதற்காகவே அவர் இரண்டாவது தடவையும் ஜெயித்து ஜனாதிபதி ஆகிவிடக் கூடாதென்று குடியரசுக் கட்சியில் பலர் தீவிரமாக முயன்று வருகிறார்கள். ஒபாமாவின் பொருளாதாரக் கொள்கைகள் சரி இல்லையாதலால் அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சி அடையவில்லை, அதனால் அவர் இன்னொரு முறை தேர்ந்தெடுக்கப்படாமல் ... Full story

அப்பாவிகளைத் துன்புறுத்தாதீர்கள்

அப்பாவிகளைத் துன்புறுத்தாதீர்கள்
நாகேஸ்வரி அண்ணாமலை  நான் சிறுமியாக இருந்த போதே எளியவர்களையும் பலவீனமானவர்களையும் வலியவர்கள் துன்புறுத்தியதைப் பார்த்து மிகவும் மனம் நொந்து போயிருக்கிறேன். எங்கள் உறவினர்களில் ஒருவருக்குத் தாயும், தகப்பனும் இல்லை. அவருடைய தந்தையும் அவருக்காக விட்டுப்போன செல்வமும் அப்படியொன்றும் பெரிதில்லை. அவர் அவருடைய தாய் வழிப்பாட்டியால் வளர்க்கப்பட்டார். பள்ளியிலும் அவர் சரியாகப் படிக்கவில்லை. மொத்தத்தில் அவர் ஒரு பலவீனமான நபர். அவர் அவருடைய சொந்த உறவினர்களாலேயே – அதாவது அவருடைய சொந்தச் சித்தியின் பையன்களாலேயே - ... Full story

அமெரிக்கப் பெண்களின் நிலை

அமெரிக்கப் பெண்களின் நிலை
நாகேஸ்வரி அண்ணாமலை அமெரிக்கப் பெண்களின் நிலையையும் இந்த மகளிர் தினத்தன்று பார்ப்போம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலேயே பெண்களுக்கு ஓட்டுரிமை வேண்டும் என்று பல பெண்கள் குரல் எழுப்பினாலும் அமெரிக்கப் பெண்களுக்கு 1919-ஆம் ஆண்டில்தான் ஓட்டுரிமை கிடைத்தது. அப்போதும் எல்லாப் பெண்களுக்கும் கிடைக்கவில்லை. ஓரளவாவது படித்திருக்க வேண்டும், சொத்து இருக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள் இருந்தன. எந்த வித நிபந்தனையும் இல்லாமல் எல்லோருக்கும் ஓட்டுரிமை கிடைக்க பல தசாப்தங்கள் பிடித்தன. அதே மாதிரிச் சொத்து ... Full story

மகளிர் வாரம் – பெண்கள் முன்னேற்றம்

மகளிர் வாரம் - பெண்கள் முன்னேற்றம்
நாகேஸ்வரி அண்ணாமலை “மாதராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்று பாடிவிட்டுப் போய்விட்டார் ஒரு தமிழ்க் கவி. நான் கவியாக இருந்தால் மாதராய்ப் பிறப்பதை விட பிறவாமல் இருப்பதே மேல் என்று பாடியிருப்பேன். ஏனெனில் மாதராய்ப் பிறந்தவர்கள் பட்ட பாடு, படும் பாடு சொல்லி மாளாது. எனக்கு விபரம் தெரிந்த நாட்களிலிருந்து எத்தனையோ பெண்கள் படும் பாட்டைப் பார்த்து அதிர்ந்திருக்கிறேன்; அழுதிருக்கிறேன்; அங்கலாய்த்திருக்கிறேன்; என்ன இந்தக் கவி இப்படிப் பாடிவிட்டார் என்று காரணத்தை ... Full story

ஓரினச் சேர்க்கையில் இந்திய அரசின் நிலை

ஓரினச் சேர்க்கையில் இந்திய அரசின் நிலை
நாகேஸ்வரி அண்ணாமலை அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையில் நாட்டமுடையவர்கள் படும் பாட்டைப் பற்றி எழுதிய கையோடு இப்போது இந்தியாவில் இது பற்றிய கோர்ட் வழக்குகளும் இந்திய அரசின் வழ வழ கொழா கொழா நிலையும் செய்தியாக வெளி வந்திருக்கின்றன. அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சில பழமைவாதிகள் வாதிடுவது போலவே மத்திய அரசைச் சேர்ந்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் “மற்ற நாடுகளின் கலாசாரத்திலிருந்து நம் நாட்டுக் கலாச்சாரம் வேறுபட்டது. சில நாடுகளில் ஓரினச் சேர்க்கையை அங்கீகரிக்கின்றனர் ... Full story

ஓரினச் சேர்க்கையில் நாட்டம் உடையவர்களிடையே திருமணம்

ஓரினச் சேர்க்கையில் நாட்டம் உடையவர்களிடையே திருமணம்
  நாகேஸ்வரி அண்ணாமலை இந்தியாவில் திருமணம் என்றாலே அது ஒரு பெண்ணிற்கும் ஆணிற்கும் இடையே நடக்கும் ஒரு ஒப்பந்தம் என்றுதான் வழங்கி வருகிறது. இந்தியாவில் ஓரினச் சேர்க்கையில் நாட்டமுடையவர்கள் இருந்தாலும் இன்னும் அதற்கு சமூக அங்கீகாரம் இல்லையாதலால் பலர் அதை வெளியில் காட்டிக் கொள்வதில்லை என்கிறார்கள். அதனால்தான் அதற்குரிய புள்ளி விபரங்கள் நம் நாட்டில் கிடைக்கவில்லை. வெளிப்படையாக ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் பகிரங்கமாகத் திருமணம் செய்துகொண்டதாகச் செய்தி எதுவும் இல்லை. அமெரிக்காவில் திருமணம் என்ற ... Full story

அனைத்துலகக் காலக்கோடு

அனைத்துலகக் காலக்கோடு
 நாகேஸ்வரி அண்ணாமலை பூமி உருண்டையாக இருப்பதால் சூரியன் பூமியின் எந்தப் பாகத்தில் முதலில் உதிக்கிறது என்ற சர்ச்சை எப்போதாவது எழுந்ததா என்று தெரியவில்லை.  ஆனால் ஜப்பான் போன்ற நாடுகளில்தான் முதலில் சூரியன் உதிப்பதாக இப்போது எல்லோரும் ஒப்புக் கொள்கிறார்கள்.  ஜப்பான் என்பதற்கு அவர்கள் மொழியில் சூரியன் உதிக்கும் நாடு என்று பெயர். 1884-இல் முதல் முதலாக உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து பசிபிக் கடலில் அனைத்துலகக் காலக்கோடு, என்ற கற்பனையான ஒரு கோட்டை உருவாக்கினார்கள்.  ... Full story

அமெரிக்க நீதிமன்றங்கள்

அமெரிக்க நீதிமன்றங்கள்
நாகேஸ்வரி அண்ணாமலை அமெரிக்க நீதிமன்றங்கள் செயல்படும் முறையைக் கண்டு நான் பல முறை வியந்திருக்கிறேன்.  எந்த வழக்கை எடுத்துக் கொண்டாலும் அதைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுகிறார்கள்.  எந்தப் பக்கத்து வழக்கறிஞர் வாய்தா கேட்டாலும் நீதிபதிகள் கொடுப்பதில்லை.  ஒரு வழக்கில் தலைமை வழக்கறிஞருக்கு இதய நோய் ஏற்பட்டது.  அவர் தவணை கேட்பதற்குப் பதில் தன்னுடைய ஜூனியர் ஒருவரை அனுப்பி வைத்தார்.  சாட்சியங்களைச் சேகரித்த பிறகு வழக்கை ஆரம்பித்து ஒரு ... Full story

எதற்குத்தான் தலை குனிவது?

எதற்குத்தான் தலை குனிவது?
நாகேஸ்வரி அண்ணாமலை இந்தியா வளர்ந்து வருகிறது, அதன் பொருளாதாரம் மிகவும் சிறப்பாக இருக்கிறது என்று அமெரிக்கப் பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிடுகின்றன.  தகவல் தொழில் நுட்பத் துறையில் இந்தியா முன்னேறிக் கொண்டு இருக்கிறது, பல வெளிநாட்டுக் கம்பெனிகள், குறிப்பாக அமெரிக்கக் கம்பெனிகள் இந்தியாவில் தங்கள் கிளைகளை ஆரம்பித்து இந்தியாவில் பல கணினி வல்லுனர்களுக்கு வேலை வாய்ப்பையும் நல்ல ஊதியத்தையும் கொடுக்கின்றன என்பது உண்மைதான்.  இப்படிச் சிலருக்கு வருமானம் கூடியிருப்பதால் அதனால் ஏற்படும் நன்மைகள் கீழ் மட்டத்தில் ... Full story

அமெரிக்கத் தேர்தல் 2012

அமெரிக்கத் தேர்தல் 2012
நாகேஸ்வரி அண்ணாமலை 2012-இல் நடக்கவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு இப்போதே தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பித்து விட்டன.  சாதாரணமாக பதவியில் இருக்கும் ஜனாதிபதியை எதிர்த்து அவர் கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரும் போட்டியிடுவதில்லை.  ஜனாதிபதி பதவியில் இல்லாத இன்னொரு கட்சியில் (அமெரிக்காவில் இரண்டே கட்சிகள்தான்.  தேர்தல் சமயத்தில் மிகவும் சிறிய ஓரிரு கட்சிகள் போட்டியிடுவதுண்டு.  ஆனால் இது பெயரளவில் மட்டுமே.)  பலர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்குத் தங்களைத் தேர்ந்தெடுக்கும்படிப் பிரச்சாரம் செய்ய ... Full story

அமெரிக்கச் செல்லப் பிராணிகள் – 3

அமெரிக்கச் செல்லப் பிராணிகள் - 3
நாகேஸ்வரி அண்ணாமலை அமெரிக்காவில் பல வகையான செல்லப் பிராணிகள் வளர்க்கிறார்கள்.  பன்றி மாமிசத்தை இங்கு பலரும் மிகவும் விரும்பிச் சாப்பிட்டாலும் சிலர் பன்றிகளைக் கூட செல்லப் பிராணியாக வளர்க்கிறார்கள்.  அவை மிகவும் புத்திசாலியான பிராணி என்றும் கூறுகிறார்கள். மிருகங்களுக்கான ஒரு தொலைக்காட்சிச் சேனலில் எப்படி தான் வளர்க்கும் ஒரு பன்றி தன் உயிரைக் காப்பாற்றியது என்று ஒரு பெண் கூறியது ஒளிபரப்பட்டது.  பல நாய்கள் எப்படித் தங்கள் எஜமானர்களைக் காப்பாற்றியிருக்கின்றன என்ற செய்திகள் வரும். ... Full story

அமெரிக்க செல்லப் பிராணிகள் – 2

அமெரிக்க செல்லப் பிராணிகள் – 2
நாகேஸ்வரி அண்ணாமலை செல்லப் பிராணிகள் வளர்க்கும் அமெரிக்கர்களில் ஜேசன் டுபின் என்பவரும் ஒருவர்.  எம்மி என்னும் ஜெர்மன் ஷெப்பர்ட் என்னும் வகையைச் சேர்ந்த நாய் ஒன்றை க்ரேஃப்ட்வெர்க் கே9 என்னும் கம்பெனியிடமிருந்து இன்டெர்நெட் மூலம் 7500 டாலருக்கு அவர் வாங்கியிருந்தார்.  ஆன்லைனில் சாமான்கள் வாங்குவது போல் செல்லப் பிராணிகளையும் அமெரிக்கர்கள் வாங்குகிறார்கள்.  இந்தக் கம்பெனி இருப்பது அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் இருக்கும் ராசெஸ்டர் என்னும் ஊரில்.  ஜேசன் வசிப்பது கிழக்குப் பகுதியில் ... Full story

அமெரிக்காவில் செல்லப் பிராணிகள்(பகுதி-1)

அமெரிக்காவில் செல்லப் பிராணிகள்(பகுதி-1)
நாகேஸ்வரி அண்ணாமலை அமெரிக்காவில் பலர் செல்லப் பிராணிகள் வளர்க்கிறார்கள்.  திருமணம் செய்து கொள்ளாதவர்கள் கூட பெற்றோரோடு சேர்ந்து வாழ்வதில்லை.  தங்களுக்கும் தங்கள் பெற்றோர்களுக்கும் தனிமை (privacy),  தங்களுக்கென்று தனியிடம் (private space)  வேண்டுமென்று நினைக்கிறார்கள்.  நினைத்த நேரத்தில் யார் வீட்டிற்கும் போய்விட முடியாது.  முன்கூட்டியே சொல்லி விட்டுத்தான் நண்பர்கள் வீட்டிற்கும் போக வேண்டும்.  இதனால் செல்லப் பிராணிகள் வைத்துக் கொள்வது அமெரிக்காவில் மட்டும் அல்ல பல மேல்நாடுகளில் மிகவும் பரவலாகக் காணப்படுகிறது.  மற்ற நாடுகளில் ... Full story
Page 1 of 41234
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.