Author Archive

நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’- தொடர்-9

நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’- தொடர்-9
பெருவை பார்த்தசாரதி நூல்கள் கண்ணில் காண்பெதெல்லாம் கனிவாகத்தோன்றும், ‘சிந்தனை செய் மனமே’ என்று கட்டளை இடும், ‘நாமும் ஒரு நாள் மாற வேண்டும்’ என்று நினைக்கச் சொல்லும், என்னைப் பூஜை அறையிலே வைத்து பிறகு புத்தக அலமாரிக்கு மாற்று, என்று கூட அதிகாரம் செய்யும், என்னுடன் பழகி விட்டால் ‘உன்னை விட்டு நான் பிரிய மாட்டேன்’ என்பது போல உறுதிமொழி எடுக்கச் சொல்லும், ‘நானும் உங்களில் ஒருவர்’ என்று எப்போதும் ... Full story

நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’- தொடர்-8

நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’- தொடர்-8
பெருவை பார்த்தசாரதி சென்ற இதழ் தொடர்ச்சி “கல்வியின் மிக்கதாம் செல்வமொன்றில்லையே கண்மணீ கேளடா நீயென்றன் சொல்லையே” என்று கல்வியின் சிறப்பை மாணவர்களுக்கும் அதைப் போதிக்கின்ற குருவுக்கும், புத்துணர்ச்சி தரும் கவிதை வரிகளின் மூலம் உணர்த்துகின்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். ஆசிரியப் பணி என்பது, வகுப்பறையில் பாடம் நடத்துவதோடு முடிவடைந்து விடுவதில்லை. ஒரு மாணவனின் கல்வித்திறனை மற்ற மாணவர்களோடு ஒப்பிடுகையில் எவ்வாறு வேறுபடுகிறது, ... Full story

தங்கத் திரிதியை

தங்கத் திரிதியை
பெருவை பார்த்தசாரதி நந்தன வருஷம் சித்திரை 12 (24-04-2012) அட்சய திரிதியை என்று குறிப்பிட்டு, அந்த நாளும் பண்டிகை நாளில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவோம். இந்த அட்சய திரிதியை அன்று கொண்டாடப்படும் நியதிகளை விமரிசிப்பவர்கள் அனேகர். இது விஷயமாகப் பல புத்தகங்களை அலசியபோது, குறிப்பாக இதிகாசங்களிலும், புராணங்களிலும் “அட்சய திரிதியை” அன்று என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. “அட்சய” என்ற சொல்லுக்கு ‘வளருதல்’, ‘குறையாத’ என்று ... Full story

நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’- தொடர்-7

நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’- தொடர்-7
பெருவை பார்த்தசாரதி ‘ஆசு’ என்றால் அய்யம், குற்றம் என்ற பொருள்படும். ‘இரியன்’ என்ற சொல்லுக்கு அகற்றுதல், நீக்குதல் என்ற பொருள். மாணவர்களின் மனதில் தோன்றும் சந்தேகங்களுக்கு விடையளித்து, அறியாமையைப் போக்குகின்றவர் “ஆசிரியர்” ஆவார். “மாணவன்” என்ற சொல்லுக்கு மாண்பு பொருந்தியவன், மாட்சிமை அமைந்தவன் என்ற அர்த்தம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடம் என்று சொன்னாலே, அழுது அடம் பிடிக்கக்கூடாது. விருப்பத்துடனும் மகிழ்ச்சியுடனும் பள்ளிக்குச் செல்லுகின்ற சூழ்நிலையை, அந்தப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் உருவாக்கித் ... Full story

நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’ – 6

நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’ - 6
பெருவை பார்த்தசாரதி கல்வி கற்பிப்பதில் ஆர்வம் மிகுந்து இருக்கும் ஒரு ஆசிரியருக்குக் கல்வி பயில்வதில் மாணவனின் ஈடுபாடு எந்த அளவுக்கு அமைந்துள்ளது என்பது பற்றிய சிந்தனை, அவர் மனதில் எந்த நேரத்திலும் சஞ்சரித்துக் கொண்டே இருக்கும். தொடர்ந்து நல் ஆசிரியராகப் பணிபுரிகின்ற ஒருவர், நல்ல மாணவர்களை உருவாக்குவதில் வெற்றி கண்டு, பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினிடமிருந்து நன்மதிப்பைப் பெற்றுக்கொண்டிருக்கும் போது சில இன்னல்களையும் இன்றைய காலகட்டத்தில் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது என்பதையும், ... Full story

நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’ – தொடர்-5

நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்' - தொடர்-5
பெருவை பார்த்தசாரதி ஆசிரியர்கள்: “எனது பிறப்புக்குக் காரணமான பெற்றோர்களுக்கு நான் முதலில் கடமைப்பட்டிருப்பது போல, நான் முறையாக வாழ்வதற்கு வழிகாட்டிய எனது ஆசிரியர்  அறிஞர் அரிஸ்டாட்டில் அவர்களுக்கு நான் இரண்டாவதாகக் கடமைப் பட்டிருக்கிறேன்" என்றார் மாவீரன் அலெக்சாண்டர். மருத்துவத் தொழில், வக்கீல் தொழில், ஆராய்ச்சி போன்ற பல துறைகளில், ஆசிரியப் பணியும் ஒரு உன்னதமான தொழில்களில் ஒன்று. ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையேயான உறவும், குடும்ப உறவைப் போலவே ஒரு வகையில் உன்னதமானதுதான்.... Full story

நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’ – தொடர்-4

நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’ - தொடர்-4
பெருவை பார்த்தசாரதி பள்ளிக்கூடங்கள்: (சென்ற இதழின் தொடர்ச்சி)  பள்ளிக்கூடங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றியச் செய்திகளைப், படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமோ, யாரையாவது கேட்டு அறிந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமோ யாருக்கும் வராது?. ஏனென்றால் எல்லோரும் இந்த அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள்.           இன்றைய பள்ளிக்கூடங்களில் செயல் படுத்தப்படும் கல்வி முறைகளில் இன்னும் பல மாற்றங்கள் வர வேண்டும் என்பதே ... Full story

நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’ – தொடர்-3

நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’ - தொடர்-3
பெருவை பார்த்தசாரதி பள்ளிக்கூடங்கள் “பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் போது சிறப்பானப் பள்ளிக் கூடங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வையுங்கள். குறைந்த பட்சம் திறமையுள்ள ஆசிரியர்களைத் தேர்ந்தெடுங்கள். அறிவுத் திறம் குறைந்த மோசமான ஆசிரியரிடம் குழந்தையை ஒப்படைக்காதீர்கள்” அனுபவத்தால் வாழ்க்கையில் வெற்றி பெற்ற கவியரசரின் சிந்தனையில் சிதறிய முத்துக்களில் இதுவும் ஒன்று. கல்யாணம் ஆகிக், குழந்தையோடு புது வாழ்க்கையைப் பள்ளிக் கூடங்களிலிருந்து தொடங்கும் ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் பயன்படக் ... Full story

அன்னையும், பிதாவும்…..

அன்னையும், பிதாவும்.....
அன்றாடம் வாழ்க்கை நமக்கு பல்வேறு பாடங்களைக் கற்பித்தாலும், ஒரு குழந்தை பிறந்தது முதல் முதுமைப்பருவம் எய்தி மண்ணிலிருந்து மறையும் வரை ,ஒவ்வொரு காலகட்டத்திலும், ஏதோ ஒரு வழிகாட்டி நம்மை வழிநடத்திக் கொண்டுதான் இருக்கிறது. வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ எத்தனையோ வழிகாட்டிகள் நம் வெற்றிப்பாதையில்! ஞானிகளும், மேதைகளும், மூத்தோரும் , முனிவரும், சித்தரும் மட்டுமே வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நாம் அன்றாடம் சந்திக்கும் தேநீர் கடைக்காரரும், காய்கறி விற்பவரும், சிறார்களும் இப்படி யார் வேண்டுமானாலும் ஏதோ ஒரு வகையில் நமக்கு வழிகாட்டிகளாகலாம். ஒரு சிறு எறும்பு நமக்கு ... Full story

பாத யாத்திரை விரதம்

பாத யாத்திரை விரதம்
பெருவை பார்த்தசாரதி  ‘டேய் சூரி என்னடா இன்னும் வெங்கியக் (வெங்கட்) காணும்.’  ‘அவன் எப்போதுமே இப்படித்தான் கடசீ நேரத்துலே வந்து கழுத்தறுப்பான்’.  ‘ஷார்ப்பா ட்ரெய்ன் வந்துரும். டிக்கெட்டு வேறே அவங்கிட்ட மாட்டிக்கிட்டு இருக்குது’  ‘ஜரா(ஜெராமன்) ஓடிப்போய் ஏறு, அவன் வந்துட்டான் மூடி டைப் வெங்கி. போன வாட்டியும் இதேமாறி ஓடுற வண்டியிலதான் ஏறினான். எந்த நேரத்தில எத செய்வான்னு யாருக்கும் புரியாது’  ‘ட்ரெய்ன விட்டு இறங்கினதும், ஆறு ... Full story

நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள்! – பகுதி – 1

நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள்! - பகுதி - 1
பெருவை பார்த்தசாரதி பழக்கமில்லாத ஒரு புது இடத்திற்குச் செல்லும் போது நாம் யாரிடமாவது வழி கேட்டுக் கொண்டு செல்கிறோம் அது போல எல்லோருடைய வாழ்க்கையிலும் யாராவது ஒருவர் மற்றவருக்கு ஏதாவதொரு விதத்தில் வழி காட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்குச் சரியான உதாரணம் ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், குழந்தைகள் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு கல்லூரிக்கு விண்ணப்பிக்கும்போது, மாணவர்களின் மேற்படிப்புக்கு அனுபவம் மிகுந்த ஒருவரது வழிகாட்டுதல் (guide) அவசியம் என்பதை இங்கே குறிப்பிடலாம். தேர்வு முடிவு ... Full story
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.